Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

0-F959-F8-B-1544-45-DA-B8-FF-EB7-C2696-A
Kurnell சிட்னியில் உள்ள ஒரு புறநகர்.. ஆனால் இது பழங்குடி மற்றும் காலனித்துவ வரலாற்றில்  குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு பிரதேசம். நீங்கள் அங்கே கால்பதித்த கணத்திலேயே பல நூற்றாண்டுகள் பின்னோக்கி போவது போன்ற உணர்வு ஒன்று ஏற்படும், அத்துடன் இந்த நாட்டிற்கும் பழங்குடியினருக்கும் இடையேயான வலுவான பிணைப்பை/ தொடர்பை உணருவீர்கள்...

large.BFC0EA65-0734-42E4-8F6B-864BE8F0B586.jpeg.115d54aa32f160bea60126b6aa5ac449.jpeg
அனேகமான பூர்வீக மக்களின் அடையாளம்/பிணைப்பு  நிலம், நீர், தாவரங்கள் மற்றும் விலங்குகளுடனான அவர்களின் ஆன்மீக தொடர்புகளைப் பொறுத்தது. இவற்றில் ஏதேனும் ஒன்று நாட்டிலிருந்து அகற்றப்பட்டால், மக்களின் அடையாளத்தின் ஒரு பகுதியும் அகற்றப்படும். Kurnellல் இது நிகழ்ந்திருந்தாலும், பழங்குடி மக்கள் எப்போதும் தங்கள் இந்த நிலத்துடனான பிணைப்பை தக்கவைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர்.. 

8-DFAE43-C-41-BB-4-A79-9-C75-A3-BD0159-F
Kurnell, இதுதான் Captain Cook மற்றும் அவரது Endeavour மாலுமிகளும் பழங்குடியின மக்களுக்கும் இடையிலான முதல் தொடர்பின் புள்ளி ..இதிலிருந்தே இன்றைய அவுஸ்ரேலிய வரலாறு தொடங்குகிறது..

E2-F7-D82-D-FE33-4837-BC74-350-C03703-A7

1770 ஆம் ஆண்டில், லெப்டினன்ட் (பின்னர் கேப்டன்) ஜேம்ஸ் குக் மற்றும் அவரது எண்டெவர் குழுவினர் இங்கே கால்பதித்தார்கள்..அவர்களை இந்த நிலத்தின் பாரம்பாரிய உரிமையாளர்களான பழங்குடிகளில் இருவர் ஈட்டியுடன் எதிர்த்தார்கள் என்பதை  இன்று சித்திரமாகவும் கல்வெட்டிலும் பதிந்திருப்பதை காணலாம்.. 

large.05217BC0-9D07-4E96-B355-209E33C5E16E.jpeg.a5ff17dd51cdd724a433a567703aa994.jpeg

 ஜேம்ஸ் குக்குடன் வந்திருந்த இயற்கை ஆர்வலர்/தாவரவியலாளர் ஜோசப் பேங்க்ஸ்( Sir Joseph Banks)  மற்றும் டேனியல் சோலாண்டர்(Daniel Solander) ஆகியோர் முதலில் இந்த இடத்தை 8 நாட்களில் ஆராய்ந்து அறிக்கை தயாரித்து கேப்டன் குக்கிடம் வழங்கினார்கள் என வரலாறு கூறுகிறது.. 

அவர்கள் எட்டு நாட்கள் தங்கியிருந்து ஆராய்ந்ததை, நான் ஒரு சில மணித்தியாலங்கள் மட்டும் தங்கியிருந்து ஆராய/அனுபவிக்க முடியாது ஆனாலும் இயலுமானவரை முயற்சித்தேன்...
அதே போல இந்த வரலாறு மனதை கொஞ்சம் நெருடியது என்பதையும் மறுக்கமுடியாது.. 

Captain Cook Memorial Obelisk 

FAD2-D7-BC-44-E8-4-FF3-9991-75-A4-A31-BC

1870ல் கட்டப்பட்டது.. நான்கு பக்கங்களிலும் அவருடைய வருகைப்பற்றி சிறு குறிப்புகள்.. அதில் ஒன்று..
அவருக்கும் Gweagal என்ற பூர்வீக குடிகள் இரண்டு பேரைபற்றிய குறிப்புகள்.. 


Back Inscription
THE LANDING PLACE
OF CAPTAIN COOK
April 28th, 1770.
The following brief extracts relating to the Landing of Captain Cook and his party on the rock opposite this tablet are taken from the original MS Journal of Sir Joseph Banks, in the Mitchell Library, Sydney : 
The journal records that 
The natives resolutely disputed the landing "although they were by two, and we thirty or forty at least." 
Parleying with these two continued for about a quarter of an hour.  "They remained resolute, so a musket was fired over them, the effect of which was that the youngest of the two dropped a bundle of lances on the rock....  He, however, snatched them up again and both renewed their threats and opposition.  A musket loaded with small shot was now fired at the oldest of the two who was about 40 yards from the boat, it struck him on the legs but he minded it very little, so another was immediately fired at him, on this he ran up to the house about 100 yards distant and soon returned with a shield.  In the meantime we had landed on the rock."
Several "lances" were immediately thrown and fell among the party.  This caused two further discharges of small shot, when, after throwing another lance, the natives fled.”

43-ADFB33-F9-C3-495-A-951-C-E781-E8-C66-

குக்கின் தரையிறக்கம் மற்றும் வரலாற்று ரீதியான காலனித்துவத்தின் 200 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் ஒரு தகடு

The Eyes of the land and the sea

large.B77B7C79-64C9-401F-8C7C-79C0FD611395.jpeg.2f18e3f756beb84cf4d3971fc9af62c2.jpeg
“ HMP Endeavourன் வருகையை/வரலாற்றை இந்த இடத்தில் வாழ்ந்த பூர்வீக குடிகளான Gweagal பிரிவினரின் ஆன்மீக/புனிதமான விலங்கான திமிங்கலத்தின் விலா எலும்புகள் ஒவ்வொன்றிலும் பொறித்துள்ளார்கள்..

097-D4-E39-9711-443-B-9-F3-B-AAF340-CB07

12037273-D2-C7-419-C-8567-E5-A8-C4117-F9

Cook வருகையின் 250வது ஆண்டு நிறைவை ஒட்டி இது வடிவமைக்கப்பட்டது..

Cape Solander look out 

large.279153E5-44AD-444F-8971-56CB85108476.jpeg.98b38fc52abd03c575e058b32e240a47.jpeg
இந்தப்பிரதேசம் வெள்ளைநிற மணல் குன்று மலைகள்..எண்ணெய், எரிவாயு, நிலக்கரி உள்ள இடங்களாக அறியப்படுகிறது.

The Gweagal என்ற பூர்வீக குடிகள் இதன் பாரம்பரிய உரிமையாளர்கள். வெள்ளை களிமண்ணினை தங்களது உடலில் வர்ணங்களாக பூசுவார்கள், அதேபோல தங்களது வள்ளங்களில் நெருப்பை உருவாக்கி மீன்களை ஈர்க்கவும் பயன்படுத்தினார்கள் என அறிய முடிந்தது. 

52-E6270-D-2-E01-4-FEF-A26-A-38-F7076260

Captain Cookஉடன் வந்திருந்த தாவரவியலாளர் ஜோஸ்பே பேங்க்ஸ் மற்றும் டேனியல் சோலாண்டர் இந்த பிரதேசத்தை ஆராய்ந்து அறிக்கையை Captain Cookடம் சமர்பித்தார்கள்.. இவர்களது நினைவாக banksia மற்றும் இந்த Cape Solander drive உள்ளது..
இங்கே June/July மாதங்களில் சூடான நீரலைகளை தேடி வரும் Humpback திமிங்கலங்களை பார்க்கமுடியும்.. 


La Perouseம் Bare Islandம்

large.38BAC033-BDEC-4929-9C3F-ED5A528EB452.jpeg.68288955cfe4f1145596a6e76102456f.jpeg

"ஒரு சிறிய வெற்று தீவு" என்று விவரிக்கப்படும் தீவையே இலகுவான குறிகாட்டியாக கேப்டன் குக் விபரித்திருந்தார், அன்று முதல் இந்த பெயராலேயே இது அழைக்கப்படுகிறது..

5-FC135-F8-573-F-4-F11-8-F03-FF22-FA22-B
Macquarie Watchtower-1820ல் கட்டப்பட்டது.

Captain Cook கண்டுபிடித்து 18 வருடங்களின் பின் Captain Arthur Phillipம் கைதிகளை உள்ளடக்கிய முதலாவது கடற்படையும் 18/01/1788ல் Botany Bayயில் நங்கூரம் இடுகிறார்கள்.

73328823-7-B46-4-D44-B48-E-CC292658511-Bமாலைப்பொழுதில் தூரத்தே தெரியும் Port Botany

large.6830A92A-1631-4BEB-A010-338831A004E3.jpeg.0dfabde96e7b74e2ddbb96bf805c570a.jpeg
சூரிய அஸ்தமனம் - Bare Island 


ஆனால் கேப்டன் ஆர்தர் பிலிப் இடத்தைஆய்வு செய்தபோது, அது பாதுகாப்பான நன்னீர் அல்லது பொருத்தமான நங்கூரம் இல்லாததால் வசிப்பது பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டது, எனவே Port Jacksonற்கு செல்ல முடிவு செய்கிறார்.. முதலாவது காலனித்துவத்திற்கான அடிக்கல் Port Jacksonல் தொடங்கப்பட்டது..

அதேநேரத்தில் இவர்கள் வந்து சில நாட்களின் பின் பிரெஞ்சு மாலுமியான Jean François de Galaup, comte de Lapérouse இரு கடற்கலங்களுடன் நங்கூரமிடுகிறார்.. அவரது நினைவாக இந்த இடத்திற்கு La Perouse என பெயரிடப்பட்டது.. 
இங்கே இருக்கும் பூர்வீக குடிகள் Gooriwal மக்கள் ஆகும்.

large.2B32C59E-8D31-44C9-A07A-B5F3C0C64DE6.jpeg.03d0ef1135996824f91aabee9d182e40.jpeg

E54-A3120-3-F39-4-BA6-8420-4-D04-E2-D48-
La Perouse மஞ்சள், செவ்விளநீர் நிற மணற்குன்றுகளை உடையது.. இங்கே ஒரு சிறிய Bare Islandம் உள்ளது..

99-DFFDAD-26-BE-4-F5-C-BE51-F714-ABC894-

இன்று அவுஸ்திரேலிய தினம் என்பதால் இந்த இடத்தைப்பற்றிய சிறு குறிப்பை பகிர விரும்பினேன்.. 
இந்த இரு வரலாற்று இடங்களுக்கும் பூர்வீக குடிகளின் சந்தை மற்றும் பூர்வீக்குடிகளின் மாயானத்திற்கும் மீண்டும் வர சந்தர்ப்பங்கள் உள்ளதால், இன்னமும் விரிவாக எழுதமுடியும் என நினைக்கிறேன்..

 நன்றி
- பிரபா சிதம்பரநாதன்

large.317EDFDA-419F-4612-B3F2-0A88AD10BBC0.jpeg.e6776fd8fcc4d103b9c850d50cb5d13b.jpeg

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
 • Like 5
 • Thanks 5
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவர், பாடசாலையில் இருந்து இளமையிலேயே விலகி விட்டாலும், பின்னர், மாலை நேர கல்வி மூலம், பட்டப்படிப்பு வரை தொடர்ந்து, றோயல் நேவியில் இணைந்து கொண்டார். கணிதம், வான சாத்திரம் போன்றவைகளில் மிக திறமை கொண்டவராக உள்ளார்.

பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தூரத்தினை அளக்கும் நோக்குடனே, கேப்டன் ஜேம்ஸ் குக் உலகை சுற்றி வர இங்கிலாந்தின் சயின்ஸ் சொசைட்டியினால் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டார்.

இந்த வகையில் உலகினை சுற்றி வந்தபோதே, ஆசியினை கண்டறிந்தார்.

போன ஒவ்வொரு இடத்தில் இருந்தும், சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான, கோணத்தினை கணக்காக அளந்து அறிவதே அவரது முக்கிய வேலை.

இந்த வகையில் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான தூரம் 93 million miles (147.29 million km) என உலகம் அறிந்து கொண்டது.

இவர், பசுபிக் கடலில் தஹீட்டி தீவில், நரபலியொன்றினை தனது முதலாவது பயணத்தின் போது காண நேர்ந்தது.

இரண்டாவது பயணத்தில், காச நோயினையும், பாலியல் நோயினையும் கொண்ட நோயாளிகளை, தனது கப்பலில் இருந்து, சிகிச்சைக்காக தீவுக்கு கொண்டு வந்து சேர்த்தார், அதனால் தீவில் பெரும் நோய் பரவ, அவர் காரணமாக இருந்தார் என்றே அவரும், அவரது சகாக்களும் கொலை செய்யப்பட்டார் என ஒரு காரணமும் சொல்லப்படுகின்றது.

How the foolish rumour that Hawaiians ate Cook began | NITV

How the foolish rumour that Hawaiians ate Cook began | NITV

பிப்ரவரி 14ம் திகதி, தீமை நீங்கிய ஒரு முக்கிய நாளாக, தீவு மக்களால், இன்றும் கொண்டாடப்படுகின்றது.

Death of Captain Cook stock image | Look and Learn

வட கிழக்கு இங்கிலாந்தின் இவர் வாழ்ந்த வீட்டினை, அவுஸ்திரேலிய அரசு விலைக்கு வாங்கி, ஒவ்வொரு கல்லாக பெயர்த்து, உள்ளே இருந்த தளபாடங்களுடன் மெல்போன் நகருக்கு கொண்டு போய், அப்படியே வைத்து உள்ளனர். 

Cooks' Cottage - WikipediaCaptain Cook's Cottage, is located in the Fitzroy Gardens, Melbourne, Australia. The cottage was constructed in 1755 in the English village of Great Ayton, North Yorkshire, by the parents of Captain James Cook, James and Grace Cook, and was brought to Melbourne in 1934.

Cooks' Cottage Inside 01.jpg

Cooks' Cottage Inside 03.jpg

Cooks' Cottage Inside 04.jpg

Cooks' Cottage Inside 05.jpg

Edited by Nathamuni
 • Like 4
 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விரிவான படங்களுடன் கூடிய தகவல்களுக்கு நன்றி பிரபா,நாதம்.

குக் குக் என்று பெயர் வர 70களில் வெளிநாடு வந்தவர்கள் தோமஸ் குக் இன் ரவலேஸ் செக் தான் எடுத்துக் கொண்டு வெளிக்கிடுவார்கள்.அது தான் ஞாபகத்துக்கு வந்தது.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

 

 

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

 

 

47 minutes ago, நிலாமதி said:

 

மிக்க நன்றி. 

இன்று Australia Day/Invasion Day/Survival Day.. இந்த நிலத்திற்கு உரிமையானவர்களுக்காகவே இந்த சிறுகுறிப்பு. 

பூர்வீக குடிகள் எவ்வாறு இந்த நிலம், கடல், தாவரம் மற்றும் விலங்குகளுடன் பிணைப்பை ஏற்படுத்தி வாழ்ந்தார்கள் என்பதை அறியும் ஆவல் எப்பொழுதும் உண்டு.. ஆகையால்தான் அவற்றை தேடி போவதுண்டு..

அவர்களுக்கு நடந்தவற்றில் சிலவே வரலாறாக பதியப்பட்டுள்ளது, பல விடயங்கள் இன்னமும் வெளியே தெரியாது..

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

 

மிக்க நன்றி. 

இன்று Australia Day/Invasion Day/Survival Day.. இந்த நிலத்திற்கு உரிமையானவர்களுக்காகவே இந்த சிறுகுறிப்பு. 

பூர்வீக குடிகள் எவ்வாறு இந்த நிலம், கடல், தாவரம் மற்றும் விலங்குகளுடன் பிணைப்பை ஏற்படுத்தி வாழ்ந்தார்கள் என்பதை அறியும் ஆவல் எப்பொழுதும் உண்டு.. ஆகையால்தான் அவற்றை தேடி போவதுண்டு..

அவர்களுக்கு நடந்தவற்றில் சிலவே வரலாறாக பதியப்பட்டுள்ளது, பல விடயங்கள் இன்னமும் வெளியே தெரியாது..

இந்த சரித்திரத்தின் பின்னால் பழங்குடிகள் மேல் வெள்ளையின வந்தேறுகுடிகளால் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு இருக்கிறது. இன்றுவரை தணியாத நெருப்பாக பழங்குடிகள் மனதில் எரியும் இந்தத் தீயினை அணைப்பதற்கு வெள்ளையினத்தவர்கள் காட்டும் அக்கறை போதியதல்ல என்பதே பலரின் கணிப்பு. 

உங்களின் பகிர்வுக்கு நன்றிகள். உங்களின் இடம்பார்க்கும் ஆவல் உங்களின் எழுத்துக்களிலும் படங்களிலும் சொல்லிச் செல்கிறது!!!

 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகோதரி......!  உள்ளூர ஒரு வேதனை, இவர்கள் கால் வைத்த இடங்களில் எல்லாம் அங்கு வாழ்ந்த இனங்களை எல்லாம் அழித்து வளங்களை சுரண்டிக்கொண்டு வாழ்ந்து வருவதுதான் வரலாறு. அன்று நாகரீகமற்றவர்களாக இருந்தவர்களுக்கு துப்பாக்கியின் வரவும் வெடிமருந்து பாவனையும் அவர்களுக்கு கிடைத்த வரம். இன்று இவர்கள் கலாசாரங்களுடன் நாகரீகமாகவும் வாழ்ந்த இனங்களுக்கு பாடம் எடுப்பதைப் பார்த்தால் "சாத்தான் வேதம் ஓதுவது" போலத்தான் நினைக்கத் தோன்றுகின்றது.....!  🤔

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

பூர்வீக குடிகள் எவ்வாறு இந்த நிலம், கடல், தாவரம் மற்றும் விலங்குகளுடன் பிணைப்பை ஏற்படுத்தி வாழ்ந்தார்கள் என்பதை அறியும் ஆவல் எப்பொழுதும் உண்டு.. ஆகையால்தான் அவற்றை தேடி போவதுண்டு..

தகவல்களுக்கும், படங்களுக்கும் நன்றி பிரபா. 

எனக்கும் இதே தேடலில் மிக்க ஆர்வம் உண்டு. ஆதியை நோக்கிய தேடல் எப்போதும் சுவாரசியமானது. கூடவே இன்னோர் உலகத்துக்குச் செல்லும் உணர்வைத் தர வல்லது.

ஆகவே இந்தத் தேடலில் உள்ள இன்னொருவரைக் கண்டதில் மகிழ்ச்சி! தொடர்ந்தும் தேடுங்கள், சொல்லுங்கள்; அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வோம். 

 

 • Thanks 1
Link to post
Share on other sites

விளக்கமாக படங்களுடன் தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி பிரபா. மேலதிகமாக தகவல்களை பகிர்ந்த நாதத்துக்கும் நன்றி. 

 • Thanks 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.