Jump to content

வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் இன்னும் இராணுவப் பிடியிலிருந்து மீளவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் இன்னும் இராணுவப் பிடியிலிருந்து மீளவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன்

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது, இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும்  எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வகையில் அமைய வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

spacer.png

அவர்  மேலும் தெரிவிக்கையில், 1958 ஆண்டுகளில் ஆரம்பித்த தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு அடக்கு முறை 2009 இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இராணுவபிடிக்குள்  அடிமைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.   

நடைபெற இருக்கின்ற ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது, இலங்கை வாழ் தமிழ்மக்கள் மீது அரசும் இராணுவமும்  எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்றார்.

அத்தோடு, போர்க்குற்றங்கள் தொடர்பான குழு நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு எந்த விதமான தகுதிகளும் இல்லை. கோத்தாபாய ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தான் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது. போர்க் குற்றம் புரிந்தவர்களே போர்க்குற்றத்தை விசாரிப்பதற்கு குழு நியமிப்பது ஒரு கேலிக்கூத்தான விடயம்.

 இந்த குழுவை சர்வதேசமோ ஐ.நா மனித உரிமைப் பேரவையோ எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார். 

 மேலும், அவர்களும் இதை ஒரு கேலிக்கை விடயமாகவே பார்ப்பார்கள். தொடர்ச்சியாக தமிழ் மக்களை இராணுவப்பிடிக்குள் வைத்து தமிழர்களின் நில அபகரிப்பு மத அடையாளங்கள் அழிப்பு கலாச்சாரங்கள் அழிப்புக்கள் தொர்ந்து கொண்டிருக்கின்றது.

 அத்தோடு, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு உயர் பதவிகளும் அமைச்சின் செயலாளர்களாகவும் வெளிநாட்டு தூதுவர்களாகவும் நியமிக்கப்பட்டு வருவதானது, அரசாங்கமே போர்க்குற்றங்களை செய்துள்ளது வெளிப்படையாக தெரிகின்றது.

கொரோனா மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இவற்றை காரணம் காட்டி இராணுவ சோதனை சாவடிகள் அதிகரிக்கப்பட்டு வடக்கு கிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் தள்ளப்பட்டுள்ளது. 2009 இறுதி யுதத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட  மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.  யுத்த குற்றம் தொடர்பான உண்மை நிலை  என்ன ? என்பது அனைத்து உலத்திற்கும் வெளிப்படையாக தெரிய வேண்டும். என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.
 
https://www.virakesari.lk/article/99176

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கொரோனா மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இவற்றை காரணம் காட்டி இராணுவ சோதனை சாவடிகள் அதிகரிக்கப்பட்டு வடக்கு கிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் தள்ளப்பட்டுள்ளது. 2009 இறுதி யுதத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட  மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.  யுத்த குற்றம் தொடர்பான உண்மை நிலை  என்ன ? என்பது அனைத்து உலத்திற்கும் வெளிப்படையாக தெரிய வேண்டும். என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.

பத்து வருடங்களுக்கு முன் தமிழ் மக்கள் கச்டப்பட்டுவிட்டார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் நடுநிலை வாதிகள் பெண்ணியவாதிகள் தற்போது நடக்கும் ராணுவ அடக்குமுறைகளை பற்றி மூச்சு விடமாட்டினம் காரணம் அவர்களின் உண்மையான எதிர்ப்பு தமிழ் தேசியமும் புலிகளும் தான் .

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் இன்னும் இராணுவப் பிடியிலிருந்து மீளவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன்

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது, இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும்  எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வகையில் அமைய வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

spacer.png

அவர்  மேலும் தெரிவிக்கையில், 1958 ஆண்டுகளில் ஆரம்பித்த தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு அடக்கு முறை 2009 இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இராணுவபிடிக்குள்  அடிமைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.   

நடைபெற இருக்கின்ற ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது, இலங்கை வாழ் தமிழ்மக்கள் மீது அரசும் இராணுவமும்  எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்றார்.

அத்தோடு, போர்க்குற்றங்கள் தொடர்பான குழு நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு எந்த விதமான தகுதிகளும் இல்லை. கோத்தாபாய ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தான் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது. போர்க் குற்றம் புரிந்தவர்களே போர்க்குற்றத்தை விசாரிப்பதற்கு குழு நியமிப்பது ஒரு கேலிக்கூத்தான விடயம்.

 இந்த குழுவை சர்வதேசமோ ஐ.நா மனித உரிமைப் பேரவையோ எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார். 

 மேலும், அவர்களும் இதை ஒரு கேலிக்கை விடயமாகவே பார்ப்பார்கள். தொடர்ச்சியாக தமிழ் மக்களை இராணுவப்பிடிக்குள் வைத்து தமிழர்களின் நில அபகரிப்பு மத அடையாளங்கள் அழிப்பு கலாச்சாரங்கள் அழிப்புக்கள் தொர்ந்து கொண்டிருக்கின்றது.

 அத்தோடு, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு உயர் பதவிகளும் அமைச்சின் செயலாளர்களாகவும் வெளிநாட்டு தூதுவர்களாகவும் நியமிக்கப்பட்டு வருவதானது, அரசாங்கமே போர்க்குற்றங்களை செய்துள்ளது வெளிப்படையாக தெரிகின்றது.

கொரோனா மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இவற்றை காரணம் காட்டி இராணுவ சோதனை சாவடிகள் அதிகரிக்கப்பட்டு வடக்கு கிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் தள்ளப்பட்டுள்ளது. 2009 இறுதி யுதத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட  மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.  யுத்த குற்றம் தொடர்பான உண்மை நிலை  என்ன ? என்பது அனைத்து உலத்திற்கும் வெளிப்படையாக தெரிய வேண்டும். என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.
 
https://www.virakesari.lk/article/99176

சாள்சும் , அடைக்கலமும் இடைக்கிடை தங்கள் இருக்கிறோம் என்பதட்காக அறிக்கை விடுவார்கள். மற்றப்படி இவர்களால் ஐந்து சாதத்துக்கும் பிரயோசனம் இல்லை. அடைக்கலம் அண்மையில் சொல்லி இருந்தார் தான் TNA இல் இருந்து விலகி தனியாக கேட்கப்போவதாக. அப்படி இருக்குமாயின் வன்னி மக்களுக்கு அதைப்போன்ற மகிழ்ச்சியான செய்தி எதுவும் இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.