Jump to content

பலவந்தமாக சடலங்களை தகனம் செய்வதை இலங்கை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஐ.நா. அதிரடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வசீம்)

 

கொவிட் வைரஸ் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதே இலங்கை அரசாங்கத்தின் தீர்மானமாக இருப்பது மனித உரிமையை மீறும் செயலாகும். இதனை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செயற்படுத்தக்கூடாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

ஐ.நா., ஆலோசனை குழு உறுப்பினராக இந்திய துாதர் விதிஷா மைத்ரா நியமனம் |  Dinamalar Tamil News

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட நிபுணர் குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட்19 தொற்றில் மரணிக்கும் நபர்களின் சடலங்களை கட்டாய தகனம் செய்வதன் மூலம் இலங்கையில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படுவதுடன் வன்முறைகள் ஏற்படுவதற்கு இடமிருக்கின்றது.

தகனம் செய்வது ஒரே தீர்மானமாக ஏற்றுக்கொள்வது மனித உரிமை மீறலாகும். கொவிட் தொற்றுக்குள்ளாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதனூடாக வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கையிலோ வேறு நாடுகளிலோ மருத்துவ ரீதியில் அல்லது விஞ்ஞான ரீதியிலான எந்த ஆதாரமும் இலலை. 

மேலும் இலங்கையில் கொவிட்டி மரணித்தவர்களில் குறிப்பிடத்தக்க அளவானவர்கள் முஸ்லிகளாகும். அவர்களின் பூதவுடல்கள் உள்நாட்டு சுகாதார வழிகாட்டலுக்கமைய தகனம் செய்யப்பட்டிருக்கின்றன.

தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானியின் நிலைப்பாட்டுக்கமைய கொவிட் சடலங்களை தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பது, சடலம் அடக்கம் செய்வதால் நிலத்தடி நீரினுடாக தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதனாலாகும். 

என்றாலும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து சுட்டிக்காட்டி இருப்பது, சடலங்களை தகனம் செய்வது தொற்று பரவலை தடுக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாகும்.

இலங்கை வைத்தியர் சங்கம் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையிலும் இதனை உறுதி செய்திருக்கின்றது. தொற்று நோய் நிலைமையின்போது மரணித்தவரின் கெளரவத்துக்கும் அதேபோன்று அவர்களின் உறவினர்களின் உணர்வுகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது.

இந்த நிலையில் இலங்கையில் முஸ்லிம் மக்கள் மற்றும் வேறு சிறுபான்மை மக்கள் குழுவை பிரித்து செயற்படுவது இனவாத வன்முறை நிலைமை ஏற்படுத்துவதற்கு மற்றும் வர்க்க பேதத்தை வெளிப்படுத்தி காட்டுவதற்கு காரணமாகும் வகையில் தீர்மானங்களுக்கு வருவதை கண்டிக்கின்றோம். 

மேலும் கொவிட் 19 தொடர்பான இறுதி அறிக்கையை உறவினர்களால் பரிசோதித்து பார்ப்பதற்கு முன்னரே சில சடலங்கள் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றன.

கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா என ஆராய்ந்து பார்க்குமாறு இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சுக்கு ஆலாேசனை வழங்கிய பின்னர், சுகாதார ராஜாங்க அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்குழு , அதுதொடர்பான ஆலாேசனைகளை வழங்கி இருந்தும் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றது.

எனவே பலவந்தமாக கொவிட் சடலங்களை தகனம் செய்வதை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும். அத்துடன் முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்ட தகனங்களுக்காக எந்தமுறையிலாவது நிவாரண முறைமையொன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்

பலவந்தமாக சடலங்களை தகனம் செய்வதை இலங்கை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஐ.நா. அதிரடி | Virakesari.lk

உடல் தகனம் செய்வதை மாற்ற முடியாது – கெஹெலிய

தற்போதைய நிலையில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இன்று (26) தெரிவித்துள்ளார்.

கட்டாய உடல் தகனத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஐ.நா வலியுறுத்து!

கட்டாய உடல் தகனத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா நிபுணர்கள் நேற்று இலங்கையை வலியுறுத்தியது.

இந்நிலையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

வைத்திய நிபுணர்களினால் பரிந்துரைக்கப்பட்ட தற்போதைய முறைகளில் இருந்து விலகி செல்ல முடியாது. நாங்கள் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

உடல் தகனம் செய்வதை மாற்ற முடியாது – கெஹெலிய – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bAQIfIS1j1DfIQhA2NymVMzRTyeg6_ttJGWBHQ7e

சனம் கொத்து கொத்தா சாகும் போது நவ துவாரங்களையும் மூடி கொண்டு இருந்தவயள் ..

இப்போ புத்தர் சிலை வைக்கும் போதெல்லாம் மூடி கொண்டு இருப்பவயள் ..

அவயளுக்கு ஒன்டு என்டா மட்டும் எங்கிருந்துதான் குதித்து கொண்டு வருபவையோ தெரியாது..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா அறிக்கைக்கு பன்னாட்டு இராஜதந்திரிகளும்  டுவிட்டரில் ஆதரவு

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை வரவேற்பதாகவும் இவ்விவகாரத்திற்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் பன்னாட்டு இராஜதந்திரிகள் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளனர் .

கட்டாயத்தகனம் தொடர்பான ஐ.நா அறிக்கையை மேற்கோள்காட்டி இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், 'ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களிடமிருந்து மிகத்தெளிவான செய்தியொன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை சர்வதேச சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையிலும், தத்தமது மதநம்பிக்கைகளின் பிரகாரமும் அடக்கம் செய்வதற்கு அவர்களது குடும்பத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேவேளை 'இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டாயத்தகனம் தொடர்பில் மிகவும் வலுவானதொரு அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்திற்கு உடனடியாகத் தீர்வுகாணப்பட வேண்டும்' என்று இலங்கைக்கான கனேடியத்தூதுவர் டேவிட் மக்கினொன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மிகமுக்கிய அமர்வு விரைவில் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது ஒருமித்த தீர்வொன்றை அடையமுடியும் என்று நம்புகின்றோம்' என்று ஜேர்மனியத்தூதுவர் ஹோல்கர் சீபர்ட் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களைக் கட்டாயத்தகனம் செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மிகவும் முக்கியமானது என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

'தேசியவாதம், பாகுபாடு, ஆக்கிரமிப்புக்கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் பொதுச்சுகாதாரத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதை ஐ.நா அறிக்கை கண்டித்துள்ளது' என்றும் அதன் பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா அறிக்கைக்கு பன்னாட்டு இராஜதந்திரிகளும்  டுவிட்டரில் ஆதரவு | Virakesari.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.