யாழ்ப்பாணம் - நெடுந்தூர பயணிகளுக்கான பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.!
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By Kavallur Kanmani · Posted
இந்த கைத்தொலைபேசி இல்லாத காலத்திலும் நாம் வாழ்ந்தோம் என்று நினைக்க எனக்கே வியப்பாயுள்ளது. எப்படி ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டோம்? எப்படி பயணங்களை மேற்கொண்டோம்? எப்படி காரில் றைவிங் செய்தோம்? என்ன விடயத்தை எடுத்தாலும் எம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த தொல்லைபேசி எம்முடன் ஒன்றித்து விட்டது. ஆனாலும் அன்று ஊரில் கிணற்றடி குழாயடி இவற்றில் பரப்பப்படும் செய்கிகளை மறக்காமல் கவி வடித்த பசுவூர் கோபியின் கவிதை அருமை. நோயும் இதுதான் நோய்க்கு மருந்தும் இதுதான் என்பதுபோல் ஆகிவிட்டது இத்தொலைபேசி. -
போதைப்பொருட்களுடன் 3 இலங்கை படகுகள் இந்திய கரையோரப்படையால் கைது (செ.தேன்மொழி) போதைப் பொருட்களை கடத்திச் சென்ற இலங்கை படகுகள் மூன்றை இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளதுடன், படகில் பயணித்த 12 பேரை கைது செய்துள்ளனர். இந்தியாவின் தெற்கு கரையோரப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கரையோர பாதுகாப்பு பிரிவினரால் சந்தேகத்திற்கிடமான படகுகள் மூன்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனை சோதனைச் செய்த பாதுகாப்பு படையினர் படகில் மறைத்து எடுத்துவரப்பட்ட 200கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 60 கிலோ கிராம் ஹசீஸ் ரக போதைப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்திய கரையோர பாதுகாப்பு படையின் வருஷா எனப்படும் கப்பலே இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதுடன், இதன்போது படகில் 19 பேர் வரை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சொந்தமான ஆகர்ஷாதுவ, சதுராணி 3 மற்றும் சதுராணி 8 ஆகிய படகுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது ஆகர்ஷாதுவ படகில் பயணித்தவர்கள், லக்ஷாத் தீவுக்கு 400 கடல் மையில் தொலைவில் பாகிஸ்தானிய கப்பல் ஒன்றினால் இந்த போதைப்பொருள் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களும் , படகும் இந்தியாவின் திருவாந்திரபுரம் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கரையோர பாதுகாப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். போதைப்பொருட்களுடன் 3 இலங்கை படகுகள் இந்திய கரையோரப்படையால் கைது | Virakesari.lk
-
By Kavallur Kanmani · Posted
விரிவான விளக்கத்திற்கு நன்றிகள் . இங்கும் கொரோனா காலமென்றபடியால் வைத்தியரிடம் செல்ல முடியாத நிலையில்தான் உள்ளோம். ஏதாவது பிரச்சினை என்றால் போனில்தான் கதைக்கிறார்கள். பாவிக்கும் மருந்துகளையும் பாமசியில் போய் எடுக்கும்படி போனில் அழைத்து சொல்கிறார்கள். நாம் இந்த நேரத்தில் எமது உணவுகளின் மூலம்தான் எமது நோய் எதிர்ப்புசக்தியை கூட்ட வேண்டி உள்ளது. முருங்கை இலை விற்றமின் டீ காய்கறிகள் நட்ஸ் உடல்பயிற்சி முதலியன எம் உடலுக்கு நன்மை பயக்கும் என நினைக்கிறேன். இது தவிர எமது குடும்ப வரலாறுகளும் எமது உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக இரத்த அழுத்தம் மாரடைப்பு புற்றுநோய் முதலியவை சிலருக்கு பரம்பரையாக வர வாய்ப்பு உள்ளதாக அறிகிறோம். உங்கள் பகிர்வுக்கு நன்றிகள். அம்மா இறையடியில் அமைதியில் இளைப்பாறட்டும். -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
சம்பந்தன் போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதி தெற்காசியாவிலேயே இல்லை என்கிறார் சாணக்கியன்.! இரா.சம்பந்தன் போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதியொருவர் தெற்காசியாவிலேயே இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பு திருகோணமலை அன்புவழிபுரத்தில் இடம்பெற்றது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உணர்வாளர்கள் இணைந்து இந்த சந்திப்பினை மேற்கொண்டனர். இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் அரசியல் இடைவெளிகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளினால் பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டதுடன் அவற்றுக்கான பதில்களும் வழங்கப்பட்டன. அத்துடன் தமிழ் தேசிய அரசியல்போக்கினை மீள கட்டியெழுப்புதல், திருகோணமலையில் தமிழர்களின் இருப்பினை பாதுகாத்தல் உட்பட பல்வேறு செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது எதிர்காலத்தில் கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ் தேசிய அரசியலை இணைந்து முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. தொடர்ந்து சந்திப்புகளை எதிர்காலத்தில் முன்னெடுத்து செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. http://aruvi.com/article/tam/2021/03/08/23450/ டிஸ்கி : ஐஸ் கட்டி என்டா பரவாயில்லை இது ஐஸ் பேக்ரறிடா சாமி..☺️..😊 (அதிலென்ன கஞ்சத்தனம் முழு பிரபஞ்சத்திற்கும் என்டு அடித்து விட வேண்டியான்.👍 ) -
By vanangaamudi · Posted
இந்த செய்தியில் சொல்லப்பட்ட முக்கால் வாசி விடயம் எனக்கு விளங்கலை. சொல்ல வந்ததை பிரட்டி பிரட்டி போட்டல் எப்படி புரியும்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.