Jump to content

ஜோ பைடன் - விளாடிமிர் புதின் உரையாடல்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடன் - விளாடிமிர் புதின் உரையாடல்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

விளாடிமிர் புதின் - ஜோ பைடன்

பட மூலாதாரம், GETTY IMAGES

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான முதல் தொலைபேசி அழைப்பிலேயே ஜோ பைடன் எதிர் தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக புதினிடம் எச்சரிக்கை விடுத்த பைடன், அந்த நாட்டில் நிலவி வரும் எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னிக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும், இருநாடுகளுக்கிடையேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள பைடனுக்கு புதின் வாழ்த்துகள் தெரிவித்தாக ரஷ்ய தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இருநாட்டு அதிபர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.

ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கண்டிப்பான உறவை கொண்டிருக்கவில்லை என்று விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

அதேபோன்று, பராக் ஒபாமா தலைமையிலான நிர்வாகத்தில் துணை அதிபராக பைடன் செயல்பட்டபோதும், ரஷ்யா உடனான உறவு பலவீனமாக இருந்ததாகவும், இதனால் ரஷ்யாவுடன் கிரிமியா இணைக்கப்பட்டது, கிழக்கு உக்ரைன் ஆக்கிரமிக்கப்பட்டது மற்றும் சிரியாவில் கால்பதித்தது உள்ளிட்ட சம்பவங்களில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்ததாகவும் விமர்சனம் இருந்து வந்தது.

இருநாட்டு தலைவர்கள் பேசியது என்ன?

ஜோ பைடன் - விளாடிமிர் புதின் உரையாடல்

பட மூலாதாரம், REUTERS

 
படக்குறிப்பு, கோப்புப்படம்

"எங்களுக்கு அல்லது எங்கள் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக செயல்படும் என்பதை அதிபர் பைடன் தெளிவுபடுத்தினார்" என்று அமெரிக்க அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி ரஷ்யா மீது உலக நாடுகள் தொடர்ந்து முன்வைத்து வரும் இணையவழி தாக்குதல் குறித்தும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினருக்கு எதிரான செயல்பாடு குறித்தும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது குறித்தும் பேசப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பைடன் எழுப்பியதாக வெள்ளை மாளிகையால் குறிப்பிடப்பட்ட எந்த ஒரு விடயமும் குறிப்பிடப்படவில்லை. 

"ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதன் மூலம் இரு நாடுகளின் நலன்களையும் உறுதிசெய்வது குறித்தும், உலக நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதில் இருநாடுகளுக்கும் உள்ள சிறப்பு பொறுப்பு குறித்தும் பேசினர்" என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கோப்புப்படம்

பட மூலாதாரம், GETTY IMAGES

 
படக்குறிப்பு, கோப்புப்படம்

"ஒட்டுமொத்தமாக, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தலைவர்களுக்கிடையேயான உரையாடல் வெளிப்படையாக இருந்தது" என்று கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், இந்த உரையாடலின்போது அமெரிக்க - ரஷ்ய அணு ஆயுத போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணைகளின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒபாமா கால ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்' ஒப்பந்தத்தை புதுப்பிக்க இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. 

அடுத்த மாதம் நிறைவுற உள்ள இந்த ஒப்பந்ததில் கையெழுத்திடுவதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.bbc.com/tamil/global-55821275

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.