Jump to content

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி

January 27, 2021
image2-1-696x392.jpeg

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட (இந்தியா)தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால்  அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

image1-1.jpeg

சமீபத்தில் இலங்கைதீவினை அண்டிய கடற்பரப்பில் தமிழக மீனவர்களது படகொன்று மூழ்கடிக்கப்பட்டிருந்ததோடு, அதில் இருந்த நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எம்மை பெருங்கவலையில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவத்தில் தமது உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த காலங்களிலும் சரி இவ்வாறு தமிழக மீனவர்கள் இலங்கைதீவினை அண்டிய கடற்பரப்பில் இனவெறியர்களால் படுகொலை செய்யப்படுகின்றமையானது  அவர்கள் ‘தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே இலக்கு வைக்கப்படுகின்றார்கள்’ என்பதனை வெளிக்காட்டுகின்றது.

இயற்கையின் சீற்றங்களுக்கும், சவால்களுக்கு முகங்கொடுத்தவாறு கடலில் தமது தொழில்களை மேற்கொள்ளும் மீனவர்கள்,  எல்லை தாண்டுகின்ற சம்பவங்கள் பல்வேறு கடல்பிராந்தியங்களிலும் நடைபெறுகின்றன. குறிப்பாக இலங்கைத்தீவினை அண்டிய கடற்பரப்பில் எல்லைதாண்டும் மீனவர்களிடத்தில், தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும் கடற்படையினரால் இலக்கு வைக்கப்படுகின்ற சம்பவம் இதனை நமக்கு உணர்த்துகின்றது.

image0-1-1.jpeg

குறிப்பாக இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் மாண்புமிகு திரு. ஜெய்சங்கர் அவர்கள் வந்து சென்ற சில நாட்களிலேயே நடந்தேறிய இச்சம்பவம், இந்தியா மீதான சிறிலங்கா அரசின் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக கருத வேண்டியுள்ளது. இந்நிலையில் கடற்படையினரது இந்த அத்துமீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்குழுவினை இந்திய மத்திய அரசு உருவாக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.

image0.jpeg

இதேவேளை, முகங்களை துணிகளால் மூடியவாறு எல்லைதாண்டும் இந்திய மீனவர்கள் நமது தாயக மீனவர்களது வலைகளை அறுக்கின்ற சம்பவங்களும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்பிலும் எழுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமிழ்நாட்டு அரசு கூரிய கவனம் செலுத்த வேண்டுவதோடு, தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், தமிழர் தாயக மீனவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வினை மேன்மைப்படுத்தும் வகையில் வலுவானதொரு உறவுப்பாலமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என நாம் எதிர்பார்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/?p=40469

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

குறிப்பாக இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் மாண்புமிகு திரு. ஜெய்சங்கர் அவர்கள் வந்து சென்ற சில நாட்களிலேயே நடந்தேறிய இச்சம்பவம், இந்தியா மீதான சிறிலங்கா அரசின் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக கருத வேண்டியுள்ளது. இந்நிலையில் கடற்படையினரது இந்த அத்துமீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்குழுவினை இந்திய மத்திய அரசு உருவாக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.

யாழ் பல்கலை மாணவர்கள் படித்து அறிவை தங்களில் வளர்த்து வருவதோடு, மனித அபிமானத்தையும் வளர்த்து வருவது கண்டு உள்ளம் பூரிக்கிறது. ஆனாலும் குரங்கிடம் பூனைகள் நீதிகேட்ட, மற்றும் குருவிகள் அநுதாபப்பட்ட கதைகளையும் அவர்கள் படித்திருப்பார்கள், படித்ததை மறவாதிருக்க வேண்டும். 🤔 

Link to comment
Share on other sites

கடற்பரப்பில் உயிரிழந்த இலங்கைத் தமிழன்! நிர்க்கதியாகியுள்ள மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை

இலங்கைத் தமிழரான சாம்சன் டார்வின் கடந்த 2009ஆம் ஆண்டு தமிழகம் சென்றுள்ள நிலையில் இலங்கை தமிழர்களுக்கான முகாமில் தங்கியிருந்துள்ளார்.இதன்போது அதே முகாமை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் சாம்சன் டார்வினுக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.டார்வின் - விஜயலட்சுமி தம்பதிக்கு 20 நாட்களுக்கு முன்னரே குழந்தை பிறந்துள்ள நிலையில், தமது குழந்தையை முழுமையாகத் தூக்கி கொஞ்ச கூட முடியாத நிலையில் தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக கதறியழுகிறார் விஜயலட்சுமி.இதேவேளை நிர்க்கதியாகியுள்ள சாம்சன் டார்வினின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.நெடுந்தீவு கடலுக்கு அப்பால் உள்ள பகுதியில், கடந்த 18ஆம் திகதி தமிழகத்தின் மண்டபம் முகாமைச் சேர்ந்த சாம்சன் டார்வின், உச்சிப்புளி வட்டான்வலசை பகுதியைச் சேர்ந்த நாகராஜன், தாத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, அவர்களின் படகு இலங்கை கடற்படை கப்பலுடன் மோதியுள்ளது.இதனையடுத்து படகு மூழ்கிய நிலையில் அதிலிருந்த நான்கு மீனவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் போது மீனவர்கள் நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன.தொடர்ந்து சடலங்கள் இந்தியக் கடலோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

-tamilwin.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களிலும் சரி இவ்வாறு தமிழக மீனவர்கள் இலங்கைதீவினை அண்டிய கடற்பரப்பில் இனவெறியர்களால் படுகொலை செய்யப்படுகின்றமையானது  அவர்கள் ‘தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே இலக்கு வைக்கப்படுகின்றார்கள்’ என்பதனை வெளிக்காட்டுகின்றது

தாயகத்திலிருந்து 

டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் விரோதியா இருந்தாலும், அவனது மரணத்துக்கு வருந்த வேண்டும் என்பது மாண்பு.

ஆகவே, ஹர்த்தால் தூண்டப்பட்ட ஒன்று என்னும் எனது கருத்துக்கு, ஈசி ஷேர்காரர்கள் ஒரு மனிதாபிமானம் கூட இல்லாமல் எதிர்க்கருத்து வைத்தார்கள்.  இப்போது அதே யாழ் மண்ணில் இருந்து, படித்த சமூகத்தில் இருந்து வருகிறது மனிதாபிமான போதிப்பு. 🙂

Link to comment
Share on other sites

பல்கலைக்கழக மாணவர்களின் செயல் பாராட்டுக்குரியதும் நல்ல முயற்சியும். இந்த பல்கலைக்கழக மாணவ அமைப்புகள் தமிழ் மீனவர்களின் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

9 minutes ago, Nathamuni said:

ஈசிசெயர்களில் இருந்து கொண்டு பல சங்கங்களின் கூட்டு சங்கமான வடக்கு மீனவ சங்கத்தை முற்றுமுழுதாக  அரசியல் கட்சியால் தூண்டப்பட்டு அவர்களின் போராட்டத்தின் நியாயத்தை கொச்சைப்படுத்துவதை விட அந்த போராட்டத்திற்கான நியாயத்தை புரிந்து கொண்டு ஈசிசெயார்களில் இருந்து கொண்டு ஆதரிப்பது மேலானது.
அத்துடன் நீங்கள் படித்த சமூகம் என்று குறிப்பிடும் போதே மீனவ சமூகத்தை படிப்பறிவற்ற பாமரக் கூட்டம் என்று கேலிபண்ணுவதும் புரிகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நிழலி said:

எதுக்கு, இவரு தொப்பியை தூக்கி தன் தலையில போடுறார்?? 🤔 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது போராட்டம் தவறு என்று யாருமே சொல்லவில்லை.

வீட்டுக்கு திருட வந்தவனை அடித்து, கொலை செய்து விட்டு, திருடர்களுக்கு எதிராக ஹர்த்தால் என்பதில் என்ன மனிதாபிமானம் உள்ளது? தனது குடும்பத்தின் பசியினை பொறுக்காது வந்தவனாகவும் இருக்கலாம்.

முதலில், கொலைகளை அங்கீகாரம் செய்ய முடியாது. இரண்டாவது, ஒரே நாடா இருந்தால், கொலை, ஒரு சட்ட பிரச்சனை.

அடுத்த நாடாக  இருந்தால், ராஜதந்திரம்.

கடலில், பெரும் தவறினை செய்து விட்டு, அதுக்கு வக்காலத்து வாங்கவே, இந்த ஹர்த்தால் கோரிக்கை. மனிதாபிமானம் உள்ள யாராலும் அங்கீகரிக்க முடியாது.

Link to comment
Share on other sites

8 minutes ago, Nathamuni said:

எதுக்கு, இவரு தொப்பியை தூக்கி தன் தலையில போடுறார்?? 🤔 🤦‍♂️

அருமையான பின்னூட்டம்!

Link to comment
Share on other sites

12 minutes ago, Nathamuni said:

அவர்களது போராட்டம் தவறு என்று யாருமே சொல்லவில்லை.

வீட்டுக்கு திருட வந்தவனை அடித்து, கொலை செய்து விட்டு, திருடர்களுக்கு எதிராக ஹர்த்தால் என்பதில் என்ன மனிதாபிமானம் உள்ளது? தனது குடும்பத்தின் பசியினை பொறுக்காது வந்தவனாகவும் இருக்கலாம்.

முதலில், கொலைகளை அங்கீகாரம் செய்ய முடியாது. இரண்டாவது, ஒரே நாடா இருந்தால், கொலை, ஒரு சட்ட பிரச்சனை.

அடுத்த நாடாக  இருந்தால், ராஜதந்திரம்.

கடலில், பெரும் தவறினை செய்து விட்டு, அதுக்கு வக்காலத்து வாங்கவே, இந்த ஹர்த்தால் கோரிக்கை.

நீங்கள் போராட்டம் தவறு என்றுதான் சொன்னீர்கள் நாதம். ஒரு போராட்டத்தினை அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் மட்டுமே நடைபெறுகின்றது என்று தட்டையாக சொல்லும் போது, அந்தப் போராட்டம் தவறு என்றுதான் பொருள்படும். அதே நேரத்தில் இன்று அரசியல் ரீதியில் பலமாக இருக்கும் ஒரு கட்சியை / அரசை நோக்கி தம் பக்கம் இழுக்க வைப்பதில் தவறும் இல்லை.

இந்த மீனவர் சங்கம் எந்த இடத்திலாவது தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி அறிக்கை விட்டுள்ளதா அல்லது அவர்களின் பிரதினிதிகளில் ஒருவராவது அதை நியாயப்படுத்தி வரவேற்று உள்ளார்களா?

இந்தப் போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களின் தொடர்ச்சியாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது.இது தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதானால் அதை வரவேற்று நடக்கவில்லை. அத்துடன் இந்து ஹர்த்தாலும் அல்ல. ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு அவர்கள் மக்களை கோரவும் இல்லை. அடையாள கதவடைப்பும் பேரணிகளும் தான் அவர்கள் கோரியது.

நான் கவனித்த ஒரு விடயம்.

தமிழ் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஹர்த்தால், கதவடைப்பு, பேரணிகள் என்று போராட அழைப்பு விடுக்கும் போது, மீனவன் அதை ஏற்று கடலுக்கு செல்ல மாட்டான். சின்னக் கடை, பாசையூர், கொழும்புத்துறை என்று தான் மீன் விற்கும் சந்தையை மூடி வைப்பான், போராட்டங்களில் தன்னாலான அனைத்து பங்களிப்பையும் கொடுப்பான். ஆனால் அவனுக்கு என்று ஒரு பிரச்சனை வரும் போது இந்த சமூகம் அவனை மட்டுமே போராடச் சொல்லி வேடிக்கை பார்க்கும். இதன் அடிப்படைக் காரணங்களில் சாதிய அடிப்படையில் யாழ் சமூகம் தன்னை கட்டமைத்து இருப்பது காரணமோ என்றும் நான் எண்ணுவதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣படிச்சவங்கோ சொல்லிட்டாங்கோ! வடக்கு மீனவர்களுக்கு கதவடைப்பு நடத்த ஒரு காரணமும் இல்லை! தமிழக மீனவர்களுக்குத் தான் பிரச்சினை!

(நாளைக்கு பட்டமெடுத்தாப் பிறகு "அரச வேலை வேண்டும்!" என்று உண்ணாவிரதம் இருக்கும் போது மீனவர் சங்கங்கள் இவர்களுக்கு தொழில் வாய்ப்புக் கொடுத்து உதவ வேண்டும் என்பது என் அவா!😉)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நிழலி said:

நீங்கள் போராட்டம் தவறு என்றுதான் சொன்னீர்கள் நாதம். ஒரு போராட்டத்தினை அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் மட்டுமே நடைபெறுகின்றது என்று தட்டையாக சொல்லும் போது, அந்தப் போராட்டம் தவறு என்றுதான் பொருள்படும். அதே நேரத்தில் இன்று அரசியல் ரீதியில் பலமாக இருக்கும் ஒரு கட்சியை / அரசை நோக்கி தம் பக்கம் இழுக்க வைப்பதில் தவறும் இல்லை.

இந்த மீனவர் சங்கம் எந்த இடத்திலாவது தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி அறிக்கை விட்டுள்ளதா அல்லது அவர்களின் பிரதினிதிகளில் ஒருவராவது அதை நியாயப்படுத்தி வரவேற்று உள்ளார்களா?

இந்தப் போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களின் தொடர்ச்சியாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது.இது தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதானால் அதை வரவேற்று நடக்கவில்லை. அத்துடன் இந்து ஹர்த்தாலும் அல்ல. ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு அவர்கள் மக்களை கோரவும் இல்லை. அடையாள கதவடைப்பும் பேரணிகளும் தான் அவர்கள் கோரியது.

நான் கவனித்த ஒரு விடயம்.

தமிழ் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஹர்த்தால், கதவடைப்பு, பேரணிகள் என்று போராட அழைப்பு விடுக்கும் போது, மீனவன் அதை ஏற்று கடலுக்கு செல்ல மாட்டான். சின்னக் கடை, பாசையூர், கொழும்புத்துறை என்று தான் மீன் விற்கும் சந்தையை மூடி வைப்பான், போராட்டங்களில் தன்னாலான அனைத்து பங்களிப்பையும் கொடுப்பான். ஆனால் அவனுக்கு என்று ஒரு பிரச்சனை வரும் போது இந்த சமூகம் அவனை மட்டுமே போராடச் சொல்லி வேடிக்கை பார்க்கும். இதன் அடிப்படைக் காரணங்களில் சாதிய அடிப்படையில் யாழ் சமூகம் தன்னை கட்டமைத்து இருப்பது காரணமோ என்றும் நான் எண்ணுவதுண்டு.

நிழலி,

போராட்டம் தவறு என்று எங்கே சொன்னேன்? பின்னால் இருந்து தூண்டப்படும் ஹர்த்தால் தவறு என்றுதானே சொன்னேன்.

நான் மீண்டும் தெளிவாக சொல்கிறேன். யாழ்ப்பாண MP, உதாரணமாக கஜேந்திரகுமார் அல்லது சுமேந்திரன் கேட்பதுக்கும், இன்னுமொரு யாழ்ப்பாண MP கடல்தொழில் அமைச்சர் கேட்பதுக்கும் வித்தியாசம் உண்டு. கடல் தொழில் அமைச்சராக ஒரு சிங்களவர் இருந்தால் கூட, அவரது கவனத்தினை பெற, ஒரு போராட்டம் நியாயமாகலாம்.

இந்த சங்கங்கள், முதலில் அணுக வேண்டியது டக்கியரை. அவர் கடல்தொழில் அமைச்சராக, ராஜதந்திர வேலைகளை, யாழ்ப்பாண, கொழும்பு இந்திய தூதரக அதிகாரிகளுடனும் பேசி, அமைச்சரவையில் பேசி, இந்திய அரசுடன் பேச என்ன நடவடிக்கை எடுத்தார் என்று சொல்லுங்கள்.

இந்த சங்கங்களுக்கு அவர் என்ன உத்தரவாதம் கொடுத்தார் என்றாவது சொல்லுங்கள்?  

அவரின் மீது இந்திய கொலை வழக்கு ஒன்றின் காரணமாக, இந்தியாவுடன், தமிழகத்துடன் முரண்படாமால், தன்னை வெளிப்படுத்தாமல், இந்த போராடங்களை ஊக்குவிக்கிறார் அல்லது கண்டும் காணாமல் இருக்க்கிறார் . 

Link to comment
Share on other sites

2 minutes ago, Nathamuni said:

நிழலி,

நான் மீண்டும் தெளிவாக சொல்கிறேன். யாழ்ப்பாண MP, உதாரணமாக கஜேந்திரகுமார் அல்லது சுமேந்திரன் கேட்பதுக்கும், இன்னுமொரு யாழ்ப்பாண MP கடல்தொழில் அமைச்சர் கேட்பதுக்கும் வித்தியாசம் உண்டு.

இந்த சங்கங்கள், முதலில் அணுக வேண்டியது டக்கியரை. அவர் கடல்தொழில் அமைச்சராக, ராஜதந்திர வேலைகளை, யாழ்ப்பாண, கொழும்பு இந்திய தூதரக அதிகாரிகளுடனும் பேசி, அமைச்சரவையில் பேசி, இந்திய அரசுடன் பேச என்ன நடவடிக்கை எடுத்தார் என்று சொல்லுங்கள்.

இந்த சங்கங்களுக்கு அவர் என்ன உத்தரவாதம் கொடுத்தார் என்றாவது சொல்லுங்கள்?  

டக்கிளஸ் எதுவும் செய்யமாட்டார். அவர் மீனவ பிரதிநிதிகளை இதற்கு முதல் பல தடவை சந்தித்தும் ஒன்றும் ஆகவில்லை. முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மீனவர்கள் போராடி, கதவடைப்பு எல்லாம் செய்து தொடர்ந்து மீன் பிடிக்காமல் இருக்கும் போது டக்கிளஸ் அவர்களை சந்தித்து தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வழி செய்வேன் என்று கூறியிருந்தார். முல்லை மீனவர்களும் தம் போராட்டத்தை கைவிட்டு இருந்தனர். தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு கையகப்படுத்தி இருக்கும் போது அதை ஆதரித்து அறிக்கை விட்டதை தவிர நானறிய டக்கிளஸ் எதுவும் செய்யவில்லை.

இலங்கை அரசும், டக்கிளசும், இந்திய தமிழக அரசுகளும் ஏதாவது உருப்படியாக செய்து இருந்தால் இந்த போராட்டம் மட்டுமல்ல, நான்கு மீனவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்ட நிகழ்வு கூட நடந்து இருக்காது.

அப்படி செய்யவில்லை என்பதால் தான் அவற்றை செய்யும்படி வலியுறுத்தி போராடுகின்றனர். இந்திய தூதரகம் முன் இன்றும் போராடியிருக்கின்றனர். டக்கிளசின் அலுவலகம் முன்பும் பேரணி சென்று இருக்கின்றனர்.
 
Quote

அவரின் மீது இந்திய வழக்கு ஒன்றின் காரணமாக, இந்தியாவுடன், தமிழகத்துடன் முரண்படாமால், தன்னை வெளிப்படுத்தாமல், இந்த போராடங்களை ஊக்குவிக்கிறார் அல்லது கண்டும் காணாமல் இருக்க்கிறார் . 

ஒரு நாட்டில் இடம்பெற்ற பாரதூரமான குற்றம் ஒன்றுக்காக வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கும் ஒருவரை மரியாதையான நாடு ஒன்றின் எந்த அரச பிரதினிதியும் சந்திக்க மாட்டார்கள். ஆனால் இந்தியா சந்திக்கும்.  அதுவும் வெளியுறவு அமைச்சரே வந்து நேராக சந்திப்பார். ஜனவரி 21 இல் டக்கிளசை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து இருந்தார்.  அப்படி இருக்கும் போது டக்கிளஸ் இந்தியாவுடன் முரண்பட வேண்டி இருக்காது என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

என்ன சொல்கிறீர்கள்?

அவர் மகிந்தவுடன் பலமுறை டெல்லி சென்று வந்திருக்கிறார். அமைதியாக இருக்கும் வரை, இந்தியாவும் கவனிக்காது. இன்டர்போல் மூலம் ரெட் அலெர்ட் கொடுத்தால், கதை கந்தல்.

அவரது துறை கடல்தொழில். முடியாவிடில் விட்டு விட்டு போகவேண்டியதுதானே.

சரி.... வேறு ஒரு திரியில்.... நான் சொல்லி இருந்தேன்.... மீன் export யாவாரம் $100M வரை போவதால், பெரும் முதலாளிமாரின் லஞ்ச லாவன்யம் பாயும் தொழில் ஆகியுள்ளது. திமுக பெரும் முதலை பெயர் குறித்து, நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். இந்த லஞ்சம் வடபகுதி கடற்படை வரை பாய்கிறது.

அதுவே, டக்கியர் இயங்கா நிலைக்கு காரணம் என அறிகிறேன். 

மேலும், இத்துறையில் முதலீடு செய்வது குறித்து நண்பர்களுடன், சேர்ந்து, சில ஆய்வுகளை செய்து, டக்ளஸ் வரை போனால்.... பின்னடிப்புகள் நடந்தது.... பல விடயங்களும் புரிந்தது.

மீறி, மேலே போவதானால், கொழும்பில் நின்று சிங்கள அரசியவாதிகளுடன் புகுந்து விளையாட வேணும். கொரோனா வந்ததால்.... கையை விட்டாச்சு.  

Link to comment
Share on other sites

8 minutes ago, Nathamuni said:

என்ன சொல்கிறீர்கள்?

அவர் மகிந்தவுடன் பலமுறை டெல்லி சென்று வந்திருக்கிறார். அமைதியாக இருக்கும் வரை, இந்தியாவும் கவனிக்காது. இன்டர்போல் மூலம் ரெட் அலெர்ட் கொடுத்தால், கதை கந்தல்.

ஓம் ..

இராஜதந்திர அந்தஸ்து இல்லாத நேரங்களில் கூட (அமைச்சராக இல்லாமல்) அவர் இந்தியாவுக்கு சென்று இருக்கின்றார்.

இதற்கும் அப்பால் இன்னொரு விடயத்துக்காகவும் அவர் தமிழ் நாட்டுக்கு அடிக்கடி செல்வதுண்டு. ஆனால் அதை இங்கு எழுதமுடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

இதற்கும் அப்பால் இன்னொரு விடயத்துக்காகவும் அவர் தமிழ் நாட்டுக்கு அடிக்கடி செல்வதுண்டு. ஆனால் அதை இங்கு எழுதமுடியாது. 

தெரியும்... அதுதானே .... உலகத்துக்கே தெரியும்... நீங்கள்... மூடி மறைக்கலாம் எண்டு நிக்கிறியள்... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு பக்கமும் பாதிக்கப்பட்டது தமிழர்கள். இவற்றை செய்தது சிங்கள இனவாத அரசு.
மேலே உள்ள ஒரு சிலரின் கருத்துக்களை பார்த்தால்.........??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிப்பு என்பதை எப்படி வரையறை செய்கிறோம் என்பதையும் பொறுத்தது அல்லவா?

எத்தனை ஆண்டுகளாக இந்த வளத்திருட்டு தமிழ் நாட்டு மீனவர்களால் நடக்கிறது? அப்படியான ஒரு திருட்டில் ஈடு பட்ட வேளையில் தமிழ் நாட்டு மீனவர்களின் உயிர்களும் போய் விட்டன அநியாயமாக.

கொலைகளை எங்களுக்குப் பிடிக்காத சிங்களப் படை செய்தது என்பதற்காக திருட்டு நடவடிக்கையை லேயர் மேல லேயர் போட்டு சர்வதேச பிசினஸ் எல்லாம் கொண்டு வந்து பூசி மெழுகுகிறார்கள்! 😊

எலிக்கு சீவன் போகும் போது பூனைக்கு விளையாட்டுப் போல சிலருக்கு இது தனிப்பட்ட வியாபார விளம்பரமாகப் போயிற்றுது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60 களிலேயே தென்னிந்திய மீனவர்களின் எல்லை மீறல்  ஆரம்பித்து விட்டது. வெடி வைத்து மீன்பிடிப்பதும் இலங்கை தமிழ் மீனவர்களின்  வலைகளை அறுப்பதும் அப்போதும் இருந்தது. இதை  சட்ட பூர்வமாக இலங்கை அரசிற்கு அறிவித்தும் இருக்கின்றார்கள். இந்திய அரசிற்குகூட எம்மை விட அதிகம் தெரியும். இருந்தும் மீனவர் பிரச்சனையை தீர்க்க இரு அரசுகளும் விரும்பவில்லை. காரணம் கிந்திய அரசிற்கு தமிழ்நாட்டு மக்கள் விரோதிகள். சிங்கள அரசிற்கு ஈழத்தமிழர்கள் விரோதிகள். இரு தமிழர்களும் பிரச்சனைப்பட்டால் ஆரிய இனம் குளிர்காய வசதியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

எலிக்கு சீவன் போகும் போது பூனைக்கு விளையாட்டுப் போல சிலருக்கு

இங்குள்ள சிலரின் நியாபடுத்தல்களைபற்றி சரியாகச் சொன்னீர்கள்.

36 minutes ago, நிழலி said:

இராஜதந்திர அந்தஸ்து இல்லாத நேரங்களில் கூட (அமைச்சராக இல்லாமல்) அவர் இந்தியாவுக்கு சென்று இருக்கின்றார்.

அவர் தமிழ் நாட்டுக்கு அடிக்கடி செல்வதுண்டு.

அவர் தமிழ்நாடு செல்ல முடியாது அவருக்காக தமிழ்நாட்டு நீதி துறை காத்து கொண்டிருக்கிறது என்று யாழ்களத்தில் சொல்லபட்டவை எல்லாம் உண்மைகள் இல்லாதவையா 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர் தமிழ்நாடு செல்ல முடியாது அவருக்காக தமிழ்நாட்டு நீதி துறை காத்து கொண்டிருக்கிறது என்று யாழ்களத்தில் சொல்லபட்டவை எல்லாம் உண்மைகள் இல்லாதவையா 😂

முதலில் விடயங்களை ஆராய்ந்து, 'விளங்கி' பேசுங்கள்.

அவர் டெல்லி வரை போய் வருகிறார் என்று நானும், நிழலியும், சென்னைக்கு, ரகசியமாக போய் வருகிறார் என்றும் பேசினோமே, கவனிக்கவில்லையா? 

கோத்தாவுடன்  கூட டெல்லி போய் வந்தாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கொல்லப்பட்ட சக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதில் தப்பில்லை, ஆனால் அவர்கள் செயலை எந்தவித  பரிதாபத்துடனும் நோக்க முடியாது.

பல்கலைகழக மாணவர்கள் உணவு பிரச்சனையும் உணர்வு பிரச்சனையும் கலந்த இந்த சிக்கலான பிரச்சனைகளில் சற்று ஒதுங்கி நிற்பதே சிறந்தது, இல்லையென்றால் தாயக பகுதி மீனவர்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடலாம்.

ஒரே நாட்டுக்குள் எல்லை மீறி சென்று மீன் பிடித்தால்கூட அடித்து விரட்டுகிறார்கள், பிடித்து கட்டி வைக்கிறார்கள் சிறைப்பிடிக்கிறார்கள்.

இது நடப்பது இந்தியாவிற்குள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

இதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

3 hours ago, valavan said:

ஒரே நாட்டுக்குள் எல்லை மீறி சென்று மீன் பிடித்தால்கூட அடித்து விரட்டுகிறார்கள், பிடித்து கட்டி வைக்கிறார்கள் சிறைப்பிடிக்கிறார்கள்.

இது பொதுவான நடைமுறை.

உதாரணத்துக்கு நான் பரம்பரை பரம்பரையாக யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன் என்பதால் சும்மா ஒரு படகை எடுத்துக் கொண்டு யாழில் போய் தொழிலுக்காக மீன் பிடிக்க முடியாது. அந்த பிரதேசத்தை சேர்ந்த மீனவ சங்கத்தின் / சமாஜத்தின் அனுமதி பெற்று இருக்க வேண்டும். இல்லையேல் அத்துமீறி மீன் பிடிப்பதாக அமைந்து விடும். 
இதே போன்றுதான் கற்பிட்டிக்கு போய் மன்னாரை சேர்ந்தவர்கள் மீன் பிடிப்பதாயினும் சரி, நீர்கொழும்பு மீனவர்கள் மாத்தறைக்கு போய் மீன் பிடிப்பதாலும் சரி அதற்கு அந்த பகுதிகளில் உள்ள மீனவ சங்கங்களின் அனுமதி அவசியம். 
தமிழ் பகுதிகளில் வந்து மீன் பிடிக்கும் சிங்கள மீனவர்கள் பலர் இவ்வாறு அனுமதி பெற்றும் உள்ளனர். அதே நேரம் தாம் செய்வதை தமிழன் தட்டிக் கேட்க கூடாது என்று அத்து மீறி வரும் சிங்கள மீனவர்களும் அதிகம் உள்ளனர். அவ்வாறு இடம்பெறும் போதெல்லாம் மீனவ சங்கங்களுக்கிடையே கலந்துரையாடி இரு பகுதிக்கும் சாதகமான முறையில் தீர்த்து வைக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளன. 

ஒரு நாட்டின் எல்லைக்குள் சென்று இன்னொரு நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டுமாயின் அந்தந்த நாடுகளுக்கிடையே  வலுவான ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்றுதான் அறிய முடிகின்றது. அத்திலாந்தி சமுத்திரத்தின் தென்கிழக்கு கடலில் ஜப்பானும் சீனாவும் மீன் பிடிக்க அனுமதிக்கும் ஒப்பந்தம் (டுனா, சமன் போன்ற குறிப்பிட்ட மீன் வகைகளை மாத்திரமே பிடிக்கலாம்) இரு நாடுகளுக்கிடையே இருப்பதை போல. 

இது தொடர்பாக விரிவான விளக்கம் உள்ளவர்கள் எழுதினால் பயனுள்ளதாக அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே மீன்பிடி தொழிலின் வரையறையை மீறும் நாடாக சீனா உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.