Jump to content

ஏசு கிறிஸ்து: ஓர் ஏகபோக ஏமாற்று வியாபாரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேசமுடியாதவர்கள் பாடுகிறார்கள், கேட்க முடியாதவர்கள் ரசிக்கிறார்கள். பிறவிக் குருடர்கள் கண்பார்வை பெற்று ஓவியம் வரைகிறார்கள். ஊனமுற்றோருக்குக் கை, கால் முளைக்கிறது. இவை அனைத்தும் நடப்பது மருத்துவமனைகளில் அல்ல. மண்டபங்களில் பட்டால் படாடோபமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் மேடைகளில். உங்களைப் பரிபூரணப்படுத்தும் அற்புத சுகமளிக்கும் ஆன்மிக ஜெபக்கூட்டங்களில்தான் இத்தனை களேபரங்களும். சிறப்பு ஆவி அழைப்புப் பொதுக்கூட்டங்கள், எழுப்புதல் கூட்டங்கள், சொஸ்த சபைகள், யேசு அழைக்கிறார், யேசு விடுவிக்கிறார், பரிசுத்த ஆவியின் தூய எழுப்புதல் கூட்டங்கள் என்று விதவிதமான பெயர்களில் அப்பாவி மக்களை மதிமயக்கி காசுகளைக் கொள்ளையடிக்கும், மதச்சாயத்தில் முக்கி எடுக்கப்பட்ட மல்டி லெவல் மார்கெட்டிங் மாயைகளை கொஞ்சம் விரிவாகவும் இதை நடத்தும் பிரசங்கிகளின் வருமானத்தையும் இன்னபிற வசதிகளையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.

 

அறிவுச்சலவை செய்யப்பட்ட பாவிகளே இங்கே வாருங்கள்!

நோயில்லாத மனிதனும்,கவலைகள் இல்லாத மனிதனும் இந்த உலகில் நிச்சயம் இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் நிலைக்குத் தகுந்தாற்போல் கவலைகளும் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதையே விற்கப்படும் பொருளாக மாற்றி தங்களின் மல்டி லெவல் மார்கெட்டிங்கிற்கு விபரீத கனம் ஏற்றி அப்பாவிகளின் உழைப்பையும் சேமிப்பையும் அவர்களின் ஒப்புதலோடு கொள்ளையடிப்பதற்கு ஒரு திட்டம் வகுக்கப்பட்டு, அவை கார்ப்பரேட் கலர் ஏற்றப்பட்டு, அப்பாவி மக்கள்முன் காட்சிக்கு வைக்கப்படுகிறது. அதன் வண்ணங்களிலும் அதன் விற்பனை உத்திகளிலும் மனதைப் பறிகொடுப்பவன் பின்னர் தன் சொத்து, மனைவி, மகள் ஆகியவற்றையும் தன் ஆதார சேமிப்பையும் இறுதியாக ஆன்மாவையுமே இழக்கிறான். இப்படி ஒரு சாமனிய மனிதன் ஏமாற, மனோதத்துவ ரீதியாக மனிதர்கள் திட்டமிட்டு குற்ற உணர்ச்சியில் திளைத்து மாசோக்கியர்களாக மாறி அதில் இன்பமும் கண்டு சுயம் இழந்து அற்ப மானுடனாகவும், அவர்களால் பாவிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களை இலக்காக கொண்டு கூட்டப்படும் இந்த வகைத் திட்டமிடப்பட்ட ஆபாச, மோசடிக் கூட்டங்கள், நிச்சயம் அதை நடத்துபவர்களை பல கோடிகளுக்கு அதிபர்களாக்கி இருக்கின்றன. அவர்களுக்குத் தேவை குற்ற உணர்ச்சியும் நோய்மையும் நிரம்பிய பலியாடுகள்; எனவேதான் அவர்கள் தங்களுக்கு வருமானத்தை வாரிக் கொடுக்கும் எஜமானர்களை பாவிகளே இங்கே வாருங்கள் என்கிறார்கள். பணத்துடன் பலியாடுகள் வரிசையாகவும் கூட்டமாகவும் இந்த நவீன மோஸ்தர் பொன்ஸீக்கள் முன் மாலையும் கழுத்துமாக நிற்கின்றன.

 

வியாபார உத்திகள்

1. ரெஃபரல் மார்கெட்டிங்

இந்த உத்தியில் ஏதோ ஒரு சகோதரரோ, சகோதரியோ உங்களிடம் வந்து, யதேச்சையாகப் பேசுவது போல பிரசங்கியின் ஆண்மை, வலிமைகளைப் பற்றியும் தாங்கள் மீள முடியாத பிரச்சினையிலும் நோயிலும் இருந்ததாகவும், அந்த X அல்லது XX அல்லது XXX அவர்களுடைய ஜப வலிமையால் தங்கள் பிரச்சினை எப்படி இன்ஸ்டண்ட் முறையில் மறைந்தது என்பதையும் விளக்குவார். கல்லும் கரையும் அந்த உருக்கமான குரலிலும், அந்த அக்கறையிலும் உங்களின் அறிவு திரையிடப்பட்டு மறைக்கப்படும். அதை அவர் சொல்வது உங்கள் மீதான அக்கறையினாலும் அன்பினாலுமே அன்றி அந்த பிரசங்கியை மறைமுகமாக மார்கெட்டிங் செய்வதற்காக அல்ல என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாக உங்களுக்கு “விளங்க” வைக்கப்படும்.

 

2. செய்தி, ஊடகக் கட்டுரை உத்தி

அனைவரும் படிக்கும் நாளிதழ்கள், வார இதழ்களில் வரும் கோகோ கோலா, மெக்டவல் சோடா, பான் பராக் வகை விளம்பரங்கள் நேரடியானவை. இன்ன நோக்கத்திற்காக செய்கிறோம் என அறிவித்துவிட்டு செய்வது. அதற்கு விளம்பரம் என்று பெயர். கருணாநிதி ஊழல் செய்தாரா?, இந்தியாவில் ஏழைகள் இருக்கிறார்களா? மன்மோகன் ஆச்சர்யம்! என்பதெல்லாம் செய்தி வகையைச் சேர்ந்தவை. இந்தியாவின் எல்லாப் பெரிய மோசடிகளிலும் இத்தாலிய சோனியா ஆதாயம் அடைந்திருக்கலாம் என்பது ஊகம் போல சொல்லப்படும் உண்மை செய்தி. திறமையும், செயல்திறனும் இல்லாத மன்மோகன் அரசு ஆட்சியில் நீடிக்கத் தார்மிக உரிமை உள்ளதா என்பன போன்றதெல்லாம் தலையங்கம் (அ) எடிட்டோரியல் வகையில் அடங்கும். இவை எவற்றுள்ளும் இல்லாத ஒரு வகை இருக்கிறது; அதற்குப் பெயர் அட்வர்ட்டோரியல் என்ற பணம் பெற்றுக்கொண்டு செய்தி போலவே போடப்படும் சுய விளம்பரங்களும், பொய்களும். ”ராகுல் காந்தி ஏழை வீட்டில் சாப்பிட்டார்”. ’மண் சட்டி சுமந்தார்’ என்பவையெல்லாம் இந்த வகையில் சேரும். அது போன்ற அட்விட்டோரியலாக, பிரசங்கியின் பெருமைகள்(?!) ஊருக்கு உரத்துச் சொல்லப்படும். இப்படிச் செய்திகளைத் திரிப்பதற்கென்றே தனியாக மீடியா செல்லும், கத்தோலிக்கப் பெருமத நிறுவனங்களால் நடத்தப்படும் நாளிதழ்கள், வார இதழ்கள், தொலைகாட்சி ஊடகங்களும் மிக அதிகமாக உள்ளன.

 

3. திரை நட்சத்திரங்கள் வருகை

திரைத்துறையிலும் அண்டர் கிரவுண்ட் உலகத்திலும் தொடர்புடைய நட்சத்திரங்கள், மின்னும் தாரகைகள். திரைப்படக் கவர்ச்சியினால் பெற்ற புகழை ஆயுதமாகவும் முதலீடாகவும் கொண்ட நட்சத்திரங்களை அழைப்பதன் மூலம் பாமர மனங்களை வீழத்த இந்த உத்தி பயன்படுத்தப்படும். நக்மாக்கள், நமீதாக்கள் வரும் சுவிஷேசங்கள் இந்த வகையானதுதான்.

http://www.tamilhindu.com/wp-content/uploads/nameetha.jpg

 

4. P2P எனப்படும் நேரடி விளம்பர உத்தி

தங்களின் மதிப்புக்குள்ளான மதபீடத்தில் உள்ளவர்களை வைத்து செய்யப்படும் விளம்பரங்கள். பாஸ்டர்கள், ஜெப ஊழியர்கள் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள். வால்போஸ்டர் மூலம் ,ஃப்லெக்ஸ்  பேனர் மூலம், நோட்டீஸ் மூலம் செய்யப்படும் விளம்பரங்களின் உத்தி பற்றி குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை.

 

5. ஒப்புதல் வாக்குமூலங்கள்

பிரசங்க மேடையிலேயே அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள், நேரடிக் காட்சிகள் மூலம் கவர்தல்.

 

இப்படியெல்லாம் சகலவித வியாபார நுணுக்கங்களோடு செய்யப்படும் இந்த வியாபாரத்தின் லாபமாக எப்படியும் ஒரு 10 கோடியை சம்பாதித்து இருப்பார்களா என்று, ஒரு அப்பாவி நண்பரிடம் கேட்டேன். அவர் சொல்லிய கணக்குகள் அனைத்தையும் சேர்த்தால் மொத்த தமிழக பட்ஜெட்டுக்கு அருகில் வந்து விடுகிறது.

ஒரு சோற்றுப் பதமாக சிலரைப் பற்றிப் பார்க்கலாம்…

 

டி.ஜி.எஸ்.தினகரன்

மாபெரும் மோசடியாக, திறமையாக வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய வியாபார உத்தியுடன் கிறிஸ்துவ மதத்தின் பெயரால் பல கள்ளப் பிரசங்கிகள் தோன்றி, ”எங்கள் ஜெபத்தால் முடவன் நடப்பான், குருடன் பார்ப்பான், செவிடன் கேட்பான், ஊமை பேசுவான்,” என்று ஏராளமான பொய்களைச் சொல்லி, அப்பாவி மக்களின் மூளையைக் கெடுத்து, அவர்களை மனநோயாளிகளாக்கி, அவர்களிடமுள்ள பணத்தையும், பொருளையும் கோடிகோடியாகக் கொள்ளையடித்து வருகிறார்கள். இந்தக் கொள்ளைக்காரர்களில் தமிழ்நாட்டில் பிரபலமான கொள்ளையர்களாக இருந்து, பல்லாயிரம் கோடிப் பணம் சம்பாதித்து, இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பவர்கள் டி.ஜி.எஸ். தினகரன், அவர் மகன் பால் தினகரன்.

http://www.tamilhindu.com/wp-content/uploads/DGS-Dinakaran.jpg

1935-இல் சாதாரண குடும்பத்தில் சுரண்டையில் பிறந்த தினகரன், 1972-இல் வங்கி கிளர்க் வேலையை உதறிவிட்டு அதை விடப் பல மடங்கு லாபம் தரக்கூடிய “யேசு அழைக்கிறார்!” என்ற பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தத் தொடங்குகிறார் எனக் குறிக்கப்பட்டாலும் 1980-க்குப் பிறகே இவர் தனியான ஜெப நிறுவனத்தை துவங்குகிறார். அதன் மூலம் அனைவருக்குமான ஜெபக் கூட்டங்களை நடத்தத் தலைப்படும் தினகரனுக்கு அயல்நாட்டு நிதி வர வர, 1984-லிருந்து தொடர்ந்து வாங்கிய குறைந்த விலை நிலத்தில் காருண்யா கல்வி அறக்கட்டளை சார்பாக பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டு, அதிலும் மிக அதிகமான பணம் வெளுக்கத் தொடங்கிய பிறகு, தமிழகம் முழுக்க பரவலாக நிலம் வாங்கிக் குவிக்கப்பட்டது. 2006-ஆம் ஆண்டு காருண்யா கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறிய பிறகு, அவர்களின் மதிப்பு தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. 2008-இல் தீவிர நோய்க்கு ஆட்பட்டு இறக்கும்போது அவரின் சொத்து மதிப்பு சுமாராக 15,000 கோடி ருபாய்கள்.

 

பால் தினகரனின் (டி.ஜி.எஸ்.தினகரனின் மகன்) சாம்ராஜ்யம்

மேலாண்மைக் கல்வியில் பட்டம் பெற்றுவர் பால் தினகரன். தன் தந்தையின் வியாபாரத்தில் புதிய மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்தி மேலும் அதன் வீச்சைப் பிரபலப்படுத்தவும் அதன் மூலமாக மேலும் பணம், நிலம், அதிகாரம் இவற்றைப் பெறவும், தொடர்ந்து தான் பெற்ற வியாபாரக் கல்வியின் நுணுக்கங்களைச் செயல்படுத்துகிறார். ரெயின்போ டிவி 8 மாநில மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. மாதம் 1800-க்கும் மேற்பட்ட விளம்பரதாரர்கள் நிகழ்ச்சியை வழங்குகிறது. 750 ஏக்கருக்கு மேல் கோவையில் காருண்யா கல்வி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்கள். 5000 கோடிக்கு மேல் சொத்து மதிப்புள்ள காருண்யா கல்வி அறக்கட்டளையின் அதிபர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக, தொடர்ந்து இருமுறை பதவி வகித்தவர். அந்தப் பதவியின் மூலம் ஏகப்பட்ட கிறித்தவர்களை வேலையில் அமர்த்த மறைமுகமாக லாபி செய்து வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. டாக்டர் பட்டம் போட்டுக்கொள்ளும் தினகரனுக்கு அந்தப் பட்டத்தை வழங்கியது ஜெர்மனியைச் சேர்ந்த ‘மார நாதா ஜெப சபை’ என்ற மத நிறுவனம். மத்திய அரசின் சிறுபான்மையின அமைச்சகத்தின் கண்காணிப்புக் குழுவில் இவர் இருக்கிறார். ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் ஆட்சி அதிகாரக் குழுவிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார். இவை அனைத்தும் மத்திய அரசின் கல்வித் துறையால் நேரடியாக நியமிக்கப்படுவது.

http://www.tamilhindu.com/wp-content/uploads/Jesus-calls_Paul-Dhinakaran.jpg

மத்திய காங்கிரஸ் அரசில் இவரின் செல்வாக்கு எந்தளவுக்கு உள்ளது என்றால், மத்திய அமைச்சர் பல்லா, இவரிடம் நாடாளுமன்றம் நன்றாக நடக்க நீங்கள் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்கிறார். நிதி மோசடியில் ஈடுபட்டு கோர்ட்டில் பொய்ப் பிரமாண பத்திரம் கொடுத்த வசந்தி ஸ்டான்லி 2010-இல் எழுதிய கடிதத்தில் அவரின் தலைவரின் தேர்தல் வெற்றிக்குப் பிரார்த்தித்துக் கொள்ளச் சொல்கிறார். காங்கிரஸின் ராம்சுப்பு எம்.பியும் சில கோரிக்கைகளை பிரார்த்தனைகளாக்க முன்வைக்கிறார்.

http://www.tamilhindu.com/wp-content/uploads/Vincent-H-Bala-letter-to-Paul-Dhinakaran.jpg

 

http://www.tamilhindu.com/wp-content/uploads/Vasanthi-Stanley-letter-to-Paul-Dhinakaran.jpg

 

http://www.tamilhindu.com/wp-content/uploads/SS-Ramasubbu-letter-to-Paul-Dhinakaran.jpg

மோசடி நபர்களிடம் ஏமாறவும், பணம், மானம் மரியாதையை இழக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இந்த நபர்கள் தன் அலுவலக லெட்டர்பேடில் மோசடியான பிரசங்கிக்கு அங்கீகாரம் செய்து அனுப்பும் கடிதத்தை அவர் பெருமையாக வெளியிட்டு அதன்மூலம் தன் வணிகச் சந்தையைப் பெரிதாக்கிக் கொள்கிறார். தனக்கு இவர்களுடன் அந்தரங்கமாகத் தொடர்பு உண்டு என்று சொல்லி அவர்களின் மூலம் அரசின் திட்டங்களில் ஆதிக்கம் செலுத்த தன் சர்வதேசத் தொடர்புகளை இவர் உபயோகிப்பார் என நம்ப இடமிருக்கிறது. வின்செண்ட் H பல்லா-, சிறுபான்மையின நலத்துறை அமைச்சர், தன்னுடைய 23-ஆம் தேதியிட்ட 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதக் கடிதத்தில் நாடாளுமன்றம் அமைதியாக நடக்க உறுப்பினர்களுடனான பிரார்த்தனையில் வேண்டிக்கொண்டு, அந்த வேண்டுதலால் பட்ஜெட் கூட்டத்தொடர் அமைதியாக நடந்ததற்கு அவருக்கு நன்றி தெரிவிக்கிறார். மேலும் இது போன்ற கூட்டங்களை நடத்தி நாடு சிறக்க அவர் வழிசெய்ய வேண்டுமாம். இந்தக் கேவலமான கடிதத்திற்காகவே அவர் மீது உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பலாம். நான் கேள்வி கேட்பது அவரின் மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளைப் பற்றியோ, பால் தினகரனைப் போன்ற கள்ளப் பிரசங்கிகளை நம்பி மோசம் போவதைப் பற்றியோ அல்ல. தன்னை மதச்சார்பற்றது (இந்துமதச் சார்பற்றது) என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படும் சோனியா காங்கிரஸ் அரசு– அது தரும் பதவியை அனுபவித்துக்கொண்டு அதன் லெட்டர்ஹெட்டில் போலிப் பிரசங்கிகளை அங்கீகரித்துக் கடிதம் எழுதுவதில் உள்ள தார்மிக நெறியைப் பற்றியே.

வின்செண்ட் பல்லாவோ, வசந்தி ஸ்டான்லியோ அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் என்ன விதமான மூடபழக்கத்திற்கும் முறைகேடான வாழ்க்கை நெறிகளுக்கும் பழகிக்கொண்டிருக்கட்டும். யாரும் அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. ஆனால் கவலை, இந்த தேச மக்களின் ஓட்டைப் பெற்றுக்கொண்டு மக்கள் பிரதிநிதி என்ற ஹோதாவோடு யாரையும் அங்கீகரிக்கவோ, நிராகரிக்கவோ இவர்களுக்கு உள்ள உரிமை பற்றியதே? சுனாமி வந்தபோதும் அதன்பின்பும், ‘பாவிகளை அழிப்பதற்காக கர்த்தரின் கோபமே சுனாமி’ என்ற பால் தினகரனை அங்கீகரிக்க, மக்களின் பிரதிநிதியாக அதை வழிமொழிந்து மக்கள் மீது திணிக்க என்ன உரிமை இருக்கிறது இவர்களுக்கு? இறந்து போன அப்பாவி ஏழை இந்து, இசுலாமிய மீனவர்களும் மக்களும் பாவிகள் என்று சொல்ல இந்த படுபாவிகளுக்கும், பரம அயோக்கியர்களுக்கும் என்ன உரிமை இருக்கிறது? கிறிஸ்தவப் பாதிரிமார்களையும் ஏமாந்த ஏழை கிறிஸ்தவர்களையும் வேண்டுமானால் பால் தினகரன் போன்ற பாவிகள்– பரமபிதாவால் தண்டனை அளிக்கப்பட்ட பாவிகள் என்று சொல்ல உரிமை இருக்கிறது. இன்னபிற மக்களைப் பாவிகள் என்று சொல்ல இவர் யார்? செத்துப்போன யாரும் பால் தினகரன் போல சென்னையிலும் டெல்லியிலும் முக்கியமான இடங்களில் அடிமாட்டு விலையில் அடுத்தவர் சொத்தை வம்படியாய் வாங்கியவர்கள் அல்ல. மத்தியக் கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் ரெயின்போ டிவி என்ற பெயரில் தொலைக்காட்சி நடத்தி 300 அமெரிக்க டாலருக்கும், 3000 அமெரிக்க டாலருக்கும் இறை பக்தியை, நம்பிக்கையைக் காசாக்கியவர்கள் அல்ல. 3 fm ரேடியோக்கள் மூலமும் 36,000 நபர்களிடமிருந்தும் தினமும் எந்த மீனவருக்கும் காசு கொட்ட வில்லை. அவர்கள் கடலிலே கஷ்டப்பட்டு உயிரைப் பணயம் வைத்து மீன் பிடித்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள். அவர்கள் எல்லாம் பாவிகள் என்றால் பால் தினகரன்கள், மோகன் சி லாசரஸ்கள் எல்லாம் யார்? குழந்தைகளை பேய், பிசாசுகள் அண்டாமல் காப்பற்றுமாறு கடவுள் 2008-இல் தன்னிடம் நேரடியாகச் சொன்னதாகச் சொல்லும் தினகரன், ஏன் 3000 டாலருக்குக் கீழ் பணம் கொடுக்கும் குழந்தைகளை பரிசுத்த ஆவிகள், பிசாசுகளிடமிருந்து காப்பாற்ற வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆவி உண்மையான ஆவியா? அல்லது துர்ஆவியா? கிறிஸ்தவக் கடவுளுக்கு ஏஜெண்ட் ஆவதன் மூலம் நீங்கள் பெருமளவு காசை உழைக்காமல் கொள்ளையடிக்கலாம் என்று யேசு கிறிஸ்து கூறினாரா?

ஒரு தொழிலும் செய்யாமல், வேலையும் செய்யாமல் ”அற்புதசுகக்” கூட்டங்கள், ”ஆசீர்வாதக்” கூட்டங்கள்…. என்று நடத்தி, லட்சக்கணக்கான அப்பாவி மக்களை ஏமாற்றி – மூளைச்சலவை செய்து, மூட மன நோயாளிகளாக்கியே பல கோடிகளைச் சம்பாதித்து, சுகபோக பணக்காரர்களாகி விட்டார்கள், இவர்கள்.

பால் தினகரன் குறித்த 30 உண்மைகள்

மேலும் சில சுட்டிகள்: சுட்டி 1 | சுட்டி 2 | சுட்டி 3 | சுட்டி 4

 

இது போன்ற மோசடிக் கூட்டங்களில் ஆளை மயக்கும் வண்ணங்களில் உடையணிந்து கொண்டும், உச்ச ஸ்தாயியில் கத்திக்கொண்டும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் மக்களின் கவனத்தை திசைதிருப்பியும், சினிமா கவர்ச்சி நடிகைகளை ஊழியம் செய்ய வைத்தும், அப்பாவி மலைவாழ் மக்களை பெருமளவு மதமாற்ற இவர்களைப் போன்ற மோடி மஸ்தான் சாகசங்கள் தேவைப்படுவதால் கிறிஸ்தவ மல்டி லெவல் மார்கெட்டிங் மத நிறுவனம் இந்தக் குட்டித் திருடர்களை 5000 கோடி,10,000 கோடிகளில் மட்டும் திருடும் அப்போல்ஸ்தர்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் கள்ளத்தனமாக வரும் மதமாற்ற அறுவடைகளை பெரிய கூடாரமான மேலிடம் பார்த்துக்கொள்ளும். இங்கிலாந்தில் இது போன்ற மோசடி மதமாற்ற பிரார்த்தனைக் கூட்டங்கள், ஆவி வருது, உலகம் அழியுது, குழந்தையை சாத்தன் தூக்கும்- போன்ற உளறல்களைப் பொது இடங்களில் நடத்தககூடாது என்று சமீபத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

தங்களின் மத வியாபாரம் பாதிக்கிறது என்றவுடனே இங்கிலாந்தில் அனைத்து மத வியாபாரப் பெருங்குடி மக்களும், அரசுக்கெதிரான போராட்டங்களை ஆரம்பித்தனர். ஆனால் பிரயோஜனமில்லை. இந்தியாவிலும் பாஜகவின் உமா பாரதி பால் தினகரனைப் பற்றி குற்றம் சொன்னவுடன் கிறிஸ்தவ திருச்சபைகளும், அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு செய்தி போடும் மீடியாக்களும், போலி மதச்சார்பற்ற அரசியல்வாதிகளும் அலறித் துடித்துப் பிரச்சினை பண்ணினார்கள்.

 

மோகன் சி.லாசரஸ்

தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி என்ற சிற்றூரைச் சேர்ந்த, சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த, திருச்சபையில் குறைவான சம்பளத்திற்கு மணி அடித்து ஊழியம் செய்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்த சி.லாரன்ஸ் பற்றியும் அவரின் இன்றைய நிலையைப் பற்றியும் பார்க்கலாம். லாரன்ஸ் என்ற பெயர் கவர்ச்சியாக இல்லை என நினத்ததால் அவர் மோகன் சி.லாசரஸாக மாறுகிறார்.. இவர் தினகரன் கூட்டங்களுக்கு அடிக்கடி போய்வந்ததன் விளைவு, இவரும் தினகரனைப் போல் ஒரு ‘கம்பெனி’ தொடங்கக் காரணமாயிற்று! தினகரன் “இயேசு அழைக்கிறார்” என்ற பெயரில் ஏமாற்றியதுபோல, நாலுமாவடி சி.லாசரஸ் என்பவரும் “இயேசு விடுவிக்கிறார்” என்ற பெயரில் தன் தொழிலை ஆரம்பித்தார்! உண்மையில் இந்த மோகனின் தாய்-தந்தை வழி முன்னோர்கள் அனைவரும் இந்து மதத்தவர்கள். ‘பெத்தலேகமி’லிருந்து வந்த கிறிஸ்துவே இவரின் நடிப்பை கண்டு இவர்தான் உண்மையான பெத்லகேம்வாசியோ என நினைக்குமளவு உலக நடிப்பு நடிப்பார். சோனியா காந்தி, கருணாநிதி எல்லாம் இவரிடம் நடிப்புப் பிச்சை வாங்க வேண்டிய அளவு பெரிய நடிகர். இவரது நடிப்பாற்றல் மூலம் மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே கோடீஸ்வரனாகி விட்டார்! இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர் என்ற பட்டியலுக்கு வந்து விட்டார்!

http://www.tamilhindu.com/wp-content/uploads/Mohan-C-lazarus.jpg

தூத்துக்குடி என்.பெரியசாமி குடும்பம்தான் தென் மாவட்டங்களிலேயே, ஒரு தொழிலும் செய்யாமல் முதல் பணக்காரர்களான குடும்பம்! இன்று பெரியசாமியைத் தோற்கடிக்கும் மாபெரும் பணக்காரனாகிவிட்டார், “இயேசு விடுவிக்கிறார்” அதிபர் மோகன் சி.லாசரஸ்! நாலுமாவடி கிராமத்தையே விலைபேசி வாங்கிக் கொண்டிருக்கிறார், இயேசுவின் பெயரால்! “என்னைப் பின்பற்றி வருகிறவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரக்கடவன்”– என்றார் இயேசு. ஆனால், இந்த நாலுமாவடி இயேசுவோ, “எல்லாக் கிறிஸ்துவனும் என்னிடம் தந்துவிட்டுப் போங்கள்” என்று ஊழியம்(?) செய்கிறார். மற்ற கொள்ளையர்களைப் போலவே லாசரஸும் மற்றவர்களுக்கு சுகம் அளிக்கிறார். முடவர்களை நடக்க வைக்கிறார். குருடர்களைக் கேட்க வைக்கிறார். செவிடர்களை பார்க்க வைக்கிறார். பாமர மக்களிடம் திருடும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, நடிகை நக்மாவை வைத்து நடுநடுவே தன் பிரசங்க வியாபாரமும் செய்து சொத்து சேர்க்கிறார். கூடும் கூட்டத்தை வீடியோ படம் எடுத்து, வெளிநாடுகளில் கொண்டு போய் கிறிஸ்துமதப் பிரசாரம் செய்வதாகச் சொல்லி, அங்கிருந்தும் பெரும் தொகையைப் பெற்றுக் கொள்கிறார், மோகன் சி.லாசரஸ்.

http://www.tamilhindu.com/wp-content/uploads/nagma-child-of-Jesus-300x228.jpgஇவர் அண்மையில் சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெரும் பணக்காரர்களுக்கென்று, அற்புத சுகமளிக்கும் ஜெபக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்திற்கு சினிமா நடிகை நக்மா என்பவரையும் அழைத்து வந்திருந்தார். நடிகை நக்மா அரபு நாடுகளுக்குப் போய் பணம் சம்பாதித்து வருவார். இந்தியாவில் குற்றம் செய்து விட்டு, அரபுநாடுகளில் பதுங்கிக்கொண்டிருக்கும் பலரோடு, நடிகை நக்மா தொடர்புள்ளவர் என்றெல்லாம் கூடப் பத்திரிகைச் செய்திகள் வந்ததுண்டு. அத்தகைய நடிகை நக்மாவோடுதான், “இயேசு ஊழியம்” செய்வதாகச் சொல்லி, கிறிஸ்துவர்களை ஏமாற்றும் மோகன் சி.லாசரஸ் தொடர்பு கொண்டு, நட்சத்திர ஓட்டலில் “ஊழியம்” செய்திருக்கிறார்கள். நாலுமாவடி கிராமத்துக்கும் இருவரும் போய் “அல்லேலூயா” பிரசாரம் செய்திருக்கிறார்கள். சினிமா நடிகைகளை நேரில் காண்பதில் பாமர ஆசை கொண்ட கிராமத்து மக்கள், ஆயிரக்கணக்கில் கூடி, நடிகை நக்மாவின் ‘அல்லேலூயா’ ஆட்டத்தைக் கண்டுகளித்திருக்கிறார்கள். எல்லா வகையான வியாபார விளம்பரத்திற்கும் நடிகைகள் தேவை என்று நினைக்கிறார்கள். நடிகைகளின் கவர்ச்சியை இதற்கும் உபயோகப்படுத்திகொள்ள மத நிறுவனங்களுக்கு என்ன தடை? காசு வரும் என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தானே அவர்களின் மதக்கொள்கை.

தன் சொந்த நடிப்புத் திறமையாலும், நடிகைகளின் தொண்டு ஊழியத்தாலும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் 150 மிஷனரிகளை இந்தியா முழுக்க தொண்டு செய்ய அனுப்பி இருக்கிறார். “17 லட்சத்திற்கும் மேற்பட்ட காட்டுமிராண்டி பாவிகளை (கேவலமான வார்த்தை பிரயோகங்கள் மோகன் சி. லாசரஸுடையது) மதம்மாற்றும் அரிய பணியில் இருப்பதால் அயல் நாட்டில் உள்ள வியாபாரக் கனவான்களே, சீமான்களே, சீமாட்டிகளே மனமுவந்து எனக்கு 500 டாலரோ, 5000 டாலரோ போடுங்கள். பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவிடத்தில் ஒரு செண்ட் இடத்தை உங்களுக்குத் தர சிபாரிசு செய்கிறேன்” என்கிறார். குறுகிய காலத்தில் 1 லட்சம் மக்கள் தன் ஏமாற்று வேலைகளால் கிறிஸ்துவைக் கடவுளாக ஏற்றுக்கொண்டார்கள் என்கிறார். கோயிலில் மணியடித்துக்கொண்டிருந்த லாசரஸின் தற்போதைய சொத்து மதிப்பு எப்படியும் 2000 கோடியைத் தாண்டும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

 

வின்செண்ட் செல்வகுமார்

‘வாய்ஸ் ஆஃப் ஜீசஸ்’ மற்றும் ‘ஏஞ்சல் டீவி’ வைத்து ஏமாற்றும் வின்செண்ட் செல்வகுமார் பற்றிய தகவல்கள்–
http://www.tamilhindu.com/wp-content/uploads/Vincent-Selvakumar.jpg

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வின்செண்ட் செல்வகுமார் கல்லூரிக் காலங்களில் தான் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், பின்னர் பரிசுத்த ஆவி தன்னை ஒரு நாள் ஆரத்தழுவி உண்மை இன்பத்தை உணர்த்தியதாகவும், அதன் பின்னர் தான் இறை வியாபாரத்திற்கு வந்ததாகவும் வாக்குமூலம் தருகிறார். வெள்ள பெருக்கு, பருவ மழை தவறுவது, பேருந்து விபத்து, சிலிண்டர் வெடிப்பது, நில நடுக்கம், வாந்தி, பேதி முதலான எந்த நிகழ்வுமே கர்த்தரின் இறுதிக்கால எச்சரிக்கையாகவே சொல்லி, அந்த பயத்தை வியாபாரம் செய்வதில் பெருமளவு வெற்றி அடைந்திருக்கிறார். அதில் திருடிய பணத்தில் சுமார் 15 கோடி முதலீட்டில் ஏஞ்சல் டீவி என்ற முழுக்க பொய்யையும், புனைசுருட்டையும் மட்டுமே பரப்பும் டீவியைத் தொடங்கி நடத்தி வருகிறார். பரலோகத்தில் இருப்பதாக சிலரால் சொல்லப்படும் பரம்பிதாவே இவர்களின் தீர்க்கதரிசனங்களைக் கண்டு அஞ்சி நடுங்கி தனக்காகவும் பிரார்த்திக்கொள்ளும்படி 1000 யூரோ கொடுத்துக் கேட்டதாக சிலர் சொல்கிறார்கள். அந்த அளவு துல்லியமாகவும், குரூரமாகவும் சாபம் கொடுக்கவும், பயத்தை ஏற்படுத்தவும் தனிப்பட்ட மனோதத்துவப் பயிற்சி எடுத்திருப்பதாக இவரின் அபரிமிதமான பாலியல் இச்சைகளால் விலகி போன சொந்த மகன் ஜாய்ஸ்டன் நக்கீரனில் தெரிவித்து இருக்கிறார். தான் சிறிது சிறிதாக பெண்ணாக மாறிக்கொண்டிருப்பதாகச் சொல்லி தன் பக்த ஆடுகளின் மனைவிகளுக்கு பரிசுத்த ஆவியை காண்பிக்க இவர் செய்த பாதி முயற்சிகள் தோற்றுப்போய் காவல் நிலையப் பஞ்சாயத்துகள் மூலம் முடிவுக்கு வந்ததை நக்கீரன் புண்ணியத்தில் அனைவரும் அறிந்திருப்பீர்கள். வலுவான ஊடக பலம் கொண்டு மாபெரும் சாம்ராஜ்யம் கட்டியிருக்கும் வின்செண்ட் செல்வகுமாரின் சொத்துகள் பற்றிய விபரம் பெரும் மறைபொருளாகவே இருக்கிறது.

அடுத்த நித்தி என்ற பெயரில் வின்செண்ட் செல்வகுமார் பற்றிய நக்கீரன் கட்டுரை.

சத்யம் டீவியின் சமாளிப்பும் பிரசாரமும்

சகோதரி நக்மா பிரசாரம்

முன்னறிவிப்பு என்னும் மோசடி

 

ஜான் பிரபாகரன்

http://www.tamilhindu.com/wp-content/uploads/John-Prabhakaran.jpg

கிறிஸ்தவ சேவை நிறுவனங்களின் சமீபத்தில் வெளிப்பட்ட மோசடி. பேராயர்.ஜான் பிரபாகரன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஹிம் ட்ரஸ்ட் என்ற இன்னுமொரு கிறிஸ்தவ மோசடி நிறுவனத்தின் மீது 20-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் மற்றும் அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்கக் தலைவர் பாதிரியார் சாம் ஏசுதாஸ், போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார். தங்களுக்கு மேற்படி ஜான் பிரபாகரன் கமிஷனாகத் தர வேண்டிய 50 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டார் என்பதே புகார். விபரம் என்னவென்றால் ஹிம் என்ற ஹெவன்லி இண்டர்டினாமினல் மிஷன் (Heavenly Interdenominal Mission Trust)  என்ற மோசடி மிஷனரிக்கு தங்கள் சர்ச் மக்களிடமிருந்து பணம் வசூல்செய்து கொடுத்தால் 10 சதவீதம்  கமிஷன் தருவதாகவும் ,அதை நம்பி மக்களிடம் மிஷனரி மதமாற்றக் காரணங்களுக்காக என்று கூறி வசூல் செய்து மோசடி கிறிஸ்தவ போலி மிஷனரியிடம் கொடுத்ததாகவும் ஆனால் அவர்கள் தாங்கள் உறுதியளித்தபடி கமிஷன் தொகை 50 கோடியை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் அதை போலீஸ் கமிஷனர் வசூல் செய்து தரவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.  கமிஷனரிடம் புகார் கொடுத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த பாதிரியார், ஜான் பிரபாகரன் கூறியதை நம்பி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பாதிரியார்கள் பலரும் ஆலயத்துக்கு வரும் பொதுமக்கள், தெரிந்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல் செய்து கொடுத்தனர். அந்த வகையில், இதுவரை சுமார் ரூ.500 கோடி வரை வசூல் செய்து கொடுத்தனர். இதனால் பணத்தை வசூல்செய்து கொடுத்த சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். போலீஸ் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும்” என்று கூறியுள்ளார். வசூல் செய்த 500 கோடியுடன் தலைமறைவான மோசடி கிறிஸ்தவ பாதிரியாரை காவல்துறை வழக்கம்போல வலைவீசித் தேடுகிறது.

இந்தியாவில் உள்ள மோசடி மிஷனரிகள், மினிஸ்டரி என்ற பெயருடன்…

இந்திய மோசடி அறக்கட்டளை பற்றிய செய்தி 

 

சார்லஸ் & ஃபேமிலி

கிறிஸ்துவக் கள்ளப் பிரசங்கிகளின் மூளைச்சலவை– முட்டாள் மோசடிப் பிரசாரம் எந்த அளவுக்குக் கிறிஸ்துவ சமூகத்தைப் பாதித்துள்ளது என்பதற்கு, அண்மையில் கோவை மாநகரத்திலிருந்து வெளிவந்த ஒரு பத்திரிகைச் செய்தியே சான்று. திருச்சியை அடுத்த துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் சார்லஸ் (வயது 43), மத போதகர். இவர் கோவை பாப்பநாயக்கன் பாளையம் அன்னை இந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது தம்பி செல்வக்குமார் மன அமைதியற்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் செல்வக்குமாரை உயிர்ப்பிப்பதாகக் கூறி, அவரது பிணத்தை வைத்து சார்லஸ் 53 நாட்களாக ஜெபம் செய்து வந்தார். இரண்டு மாத காலம் பிணம் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்ததால் அழுகி – புழுப்புழுத்து நாற்றமெடுத்தது. இந்த நாற்றம் அந்த வட்டாரமெல்லாம் பரவ, அப்பகுதி மக்கள் திரண்டார்கள். பிணத்தை உயிர்ப்பிக்க 2 மாதமாக ஜெபம் நடக்கிறது என்கிற உண்மையை அறிந்ததும், மக்கள் ஆத்திரமடைந்து பிரசங்கி சார்லஸ் வீட்டு மீது கல் வீசித் தாக்கினார்கள். கல் வீச்சால் வீட்டுக்கதவு – ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகள் உடைந்து நொறுங்க, பெரும் பதட்டம் ஏற்பட்டது. இது பற்றிய தகவல்கள் போலீசாருக்குத் தெரிந்ததும், அவர்கள் சென்று செத்துப்போன செல்வக்குமாரின் பிணத்தைக் கைப்பற்றி, மத போதகர் சார்லசை அழைத்துப் போய் விசாரணை செய்தார்கள். செல்வக்குமாரின் பிணம் இருந்த அறைக் கதவை ராஜேந்திரன் என்பவரும் மற்றவர்களும் உடைத்துத் திறந்தபோது, ஆட்கள் வருவது கூட தெரியாமல் சார்லசும், மனைவி குழந்தைகளும் ஜெபம் செய்து கொண்டு இருந்தனர்.

கதவைத் திறந்தவுடன் தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. அங்கு மரக்கட்டிலில் செல்வக்குமாரின் பிணம் படுக்க வைக்கப்பட்டு இருந்தது. இறந்து 53 நாட்கள் ஆனதால் பிரேதம் அழுகிப்போய் இருந்தது. அறையின் தரையிலும், சுவரிலும் புழுக்கள் ஓடின. சார்லஸ் குடும்பத்தினர் இந்த அறையில் தினமும் 10 மணி நேரம் முழு இரவு ஜெபம் என்று விடிய விடிய ”உயிர்ப்பித்தல் பிரார்த்தனை” செய்து வந்துள்ளனர்.

சார்லஸ் மூடநம்பிக்கை கொண்டு மனநோயாளியாகி இது போல் செயல்பட்டுள்ளார். இதற்கு உதவியாக மனைவி மற்றும் குழந்தைகளையும் பயன்படுத்தி உள்ளார். சைகோ போல் சார்லஸ் நடந்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் விசாரணையில் மனநோயாளி சார்லஸ் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:

என்னுடைய ஜெபத்தின் மகிமையால் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளேன். குருடர்களுக்குப் பார்வை கிடைத்துள்ளது. முடமானவர்களை நடக்க வைத்துள்ளேன். புற்றுநோயில் இருந்தும் பலரைக் குணப்படுத்தி உள்ளேன். எதற்கெடுத்தாலும் பயப்படும் என்னுடைய தம்பியை ஜெபத்தில் குணப்படுத்த கோவையில் எனது வீட்டுக்கு அழைத்து வந்து பிரார்த்தனை செய்தோம்.

கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தம்பி செல்வக்குமார், மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக என்னுடைய மனைவி சாந்தி போனில் கூறினார். அப்போது நான் நாகர்கோவிலில் இருந்தேன். இது பற்றி யாரிடமும் சொல்லாதே, ஜெபம் செய்து மீண்டும் தம்பிக்கு உயிரூட்டலாம் என்று என்னுடைய மனைவியிடம் கூறினேன்.

அது போல் அவளும் யாரிடமும் கூறாமல் அறையைப் பூட்டி வைத்தாள். கீழ் வீட்டில் இருக்கும வின்சென்ட் குடும்பத்தினருக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும். இறந்த என்னுடைய தம்பியை மீண்டும் உயிர்ப்பிக்க ஜெபம் செய்தோம். 90 நாட்களில் தம்பியை உயிர்ப்பிக்க முடியும் என்று நம்பினோம். தம்பி மீண்டும் உயிர்த்தெழுவதற்கான காலகட்டம் வந்த நிலையில் போலீசாரும், பொது மக்களும் கெடுத்து விட்டனர். தம்பியின் ஆவியுடன் பேசினேன். அவனுடைய கை, கால்களில் அசைவு தெரிய தொடங்கியது. அதற்குள் அவனை உயிர்ப்பிக்க முடியாமல் சாகடித்து விட்டனர்.”

— இவ்வாறு போலீசாரிடம் சார்லஸ் திரும்பத் திரும்ப கூறி வருகிறார். இது பத்திரகைச் செய்தி.

கள்ளப் பிரசங்கிகள்,  “அற்புதசுகம்”, “ஆசீர்வாதக் கூட்டம்” என்ற பெயரால் மோசடிப் பிரசங்கம் செய்து ‘காணிக்கை’ என்ற பெயரால் கோடிக் கோடியாகக் கொள்ளையடிப்பதோடு அவர்களது மூளைச்சலவைப் பிரசாரம், எப்படி மனிதர்களை மனநோயாளிகளாக்கியுள்ளது என்பதையும் பார்க்கிறோம்!

-0-

“ஏசுநாதர் முடவர்களை நடக்க வைத்து, குருடர்களைப் பார்க்க வைத்து, தொழுநோயாளிகளைக் குணப்படுத்தி, அப்பங்களைப் பல்லாயிரமாகப் பெருக வைத்து அற்புதங்களைச் செய்தார் என்பதுதான் இன்றும் கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருக்கின்றது. உண்மையில் ஏசுநாதர் அவர் காலத்தில் இப்படி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் மேல் அன்பு காட்டினார் என்பதைத் தாண்டி அவர் எந்த அற்புதங்களும் செய்யவில்லை. அப்படி யாரும் செய்யவும் முடியாது. இன்றைக்கு கிறித்தவ நற்செய்திக் கூட்டங்களில் அந்த அற்புதங்களுக்கான (பொய்)சாட்சிகள் செட்டப் செய்யப்பட்டு மேடையேற்றப்படுகின்றனர். இப்படித்தான் மதத்தின் மூடநம்பிக்கை நசிந்து போகாமல் காப்பாற்றப்படுகின்றது. அந்த அற்புதங்கள் உண்மை என்றால் இன்று கிறித்தவ மிசினரிகள் நடத்தும் எண்ணிலடங்கா மருத்துவமனைகளுக்கு என்ன காரணம்? அதற்குப் பதில் தேவ செய்தியாளர்களை வைத்து எல்லா நோயாளிகளையும் சடுதியில் குணமாக்கி விடலாமே? மேலும் ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புப் போரினால் உறுப்புக்களை இழக்கும் ஈராக், ஆப்கான் நாடுகளைச் சேர்ந்த அப்பாவிகளுக்கும் அந்த உறுப்புக்களை மீண்டும் தருவிக்கலாமே? இப்படி கலப்படமில்லாத பொய்மையின் வலிமை கொண்டுதான் கிறிஸ்த்தவ மத நிறுவனங்கள் இயங்குகின்றன.” என்கிறார் திக-வின் நாத்திகம் ராமசாமி. இத்தனைக்கும் பிறகும் அப்பாவி மக்கள் ஆட்டு மந்தை போல் இந்தக் கள்ள தீர்க்கதரிசிகளின் பின்னே செல்கிறார்கள். பரமபிதாவின் பெயரால் நடக்கும் இத்தனை குற்றங்களையும் கண்டு பரம பிதாவோ, அபரிசுத்த ஆவியோ இவர்களைத் தண்டிக்கட்டும்.

http://www.tamilhindu.com/wp-content/uploads/uma.jpg

மடமையைப் பரப்பி மக்களை மனநோயாளிகளாக்கி ஏமாற்றுகிற இவர்களின் திருட்டை, பொய்-மோசடியை, ஏமாற்றைத் தடுத்து, மக்களை இந்த மோசடிக்காரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் நாட்டை ஆளும் அரசுக்கே உண்டு. கள்ளநோட்டு அடிப்பவன், பித்தளையைத் தங்கம் என்று ஏமாற்றுபவன், ரூபாய் நோட்டை இரட்டித்துத் தருவதாக ஏமாற்றுகிறவன், கள்ள லாட்டரிச் சீட்டு விற்பவன், திருட்டு வி.சி.டி. எடுத்து விற்பவன், போலி ஆவணங்களைக் கொடுத்து வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றுகிறவன்…. என்று மக்கள் சமூகத்தை ஏமாற்றும் மோசடிக் கொள்ளளைக்காரர்கள் போன்றவர்கள்தான், இந்தக் கள்ளப் பிரசங்கிகளும். ஆனால், அந்த மோசக்காரர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதைப் போல இந்தக் கள்ளப் பிரசங்கிகள்– ஏமாற்றி மோசடி செய்யும் மோசடிக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தன் கடமையை செய்யத் தவறி வருகிறது அரசு.

 

http://www.tamilhindu.com/2012/09/o-lord-punish-these-sinners/

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்க இன்னுமா இவங்கள நம்புறீங்க..😂😂

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.