Jump to content

`ரஜினி என்னை விட்டுக் கொடுக்கமாட்டார்!' - தனிக்கட்சி ஆரம்பிக்கும் அர்ஜுனமூர்த்தி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார் அர்ஜுன மூர்த்தி. பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவில் நிர்வாகியாக இருந்த அர்ஜுனமூர்த்தி, ரஜினி தொடங்கப்போவதாக அறிவித்திருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி தொடங்கப் போவதாக அறிவித்திருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும் நியமிக்கப்பட்டனர். ரஜினி கட்சியைக் கட்டமைப்பதற்கான பணிகளை இவர்கள் மேற்கொண்டு வந்தனர். இந்தச் சூழலில், கொரோனா அச்சுறுத்தல், உடல்நலம் உள்ளிட்ட விஷயங்களால் அரசியல் கட்சி தொங்கப்போவதில்லை என்று திடீர் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பூட்டினார் ரஜினி. இந்த அறிவிப்பால் மனமுடைந்த தமிழருவி மணியன், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், ரஜினியுடன் தான் தொடர்ந்து பயணிக்கப் போவதாக கூறிய அர்ஜுன மூர்த்தி, விரைவில் தன் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாக கூறியிருந்தார். அதற்கு முன்னோட்டமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘மாற்றத்தின் வழியில் புதிய பயணம்’ என்று ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார் அர்ஜுன மூர்த்தி.

அர்ஜுன மூர்த்தி
 
அர்ஜுன மூர்த்தி

அர்ஜுன மூர்த்தி புதிய அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்து அவரிடமே பேசினோம்.

நீங்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறப்படுகிறதே?

வலிமையான மாற்றத்தை நோக்கி நிறைய பேசிவிட்டோம். நான்கரை கோடி வாக்காளர்கள் 49 வயதுக்கு கீழானவர்கள். இவர்கள் மாறுபட்ட சிந்தனையை விரும்புகிறார்கள். இந்த இளைஞர்களின் அரசியல் தேவையை நான் உணர்ந்திருப்பதாலேயே, பா.ஜ.க-விலிருந்த என்னை தன்னுடன் வந்து பணியாற்றுமாறு ரஜினி கேட்டுக் கொண்டார். கொரோனா இடர்பாடுக்குப் பிறகு, ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு நிதி வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியை சிலர் கையில் எடுத்து விளையாட அனுமதிக்கக் கூடாது. தவிர, இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு வழிகாட்டியாக நான் இருக்க விரும்புகிறேன். ஆகவே, அரசியல் கட்சியைத் தொடங்கி, 2021 தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறேன்.

உங்கள் கட்சியின் நோக்கம் என்ன?

அதிகாரிகளின் ஆலோசனைப்படிதான் இன்றைய அரசு நடைபெறுகிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை. கடந்த 37 ஆண்டுகளாக பல துறைகளிலும் புதுமையைப் புகுத்தி ஒரு மாற்றத்தை நான் உருவாக்கியிருக்கிறேன். இந்தியாவிலேயே புத்திகூர்மை உள்ளவர்கள் அதிகமிருப்பது தமிழகத்தில்தான். நான் தொலைநோக்குப் பார்வையுடன் இருந்ததால்தான் ரஜினி என்னை அழைத்து அருகில் வைத்துக் கொண்டார். எனக்கு 60 வயதாகிவிட்டது. என்னுடைய தொலைநோக்குப் பார்வை வீணாகிவிடக் கூடாது. அரசியலில், ஆட்சி இயக்கத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதுதான் என்னுடைய நோக்கம். வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவும் போகிறேன்.

ரஜினி
 
ரஜினி

உங்கள் அரசியல் பயணத்துக்கு ரஜினியின் ஆதரவை கேட்பீர்களா?

திறமையை பாராட்டுவதற்கு என்றும் சங்கோஜப்படாதவர் ரஜினி. என் திறமையை அறிந்ததால்தான், என்னை அழைத்து மக்களிடம் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தவர் ரஜினி. அவரை நான் நிர்பந்திக்கப் போவதில்லை. அவருக்கு அழுத்தம் தரவும் நான் விரும்பவில்லை. இதனால்தான், அவர் படத்தை நான் பயன்படுத்தப் போவதில்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. நான் திறமைசாலி என்பதால், என்னை அவர் விட்டுக் கொடுக்கமாட்டார் என்று நம்புகிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

IMG-20210128-110816.jpg 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எமது தலைமுறையில்....நான் அறிந்த வரை....அன்புக்கும், அறிவுக்கும் நடக்கும் போட்டிகளில்....பெரும்பாலும் அன்பு தான் இறுதியில் வென்று விடுகின்றது...! உங்கள் அனுபவக் கதை கூறுவதும்.....அதையே தான்..! அடுத்த தலை முறைகளுக்குள்  இவ்வாறான நெருக்கம் இருக்குமென்பது....சந்தேகமே..! தொடருங்கள்  விசுகர்...!
  • இவற்றில் அரசியல் பேசும் வாட்ஸப் குழுமங்களையும், ஏன் யாழ் களத்தையும் கூட சேர்த்துக்கொள்ளலாம்!😂  
  • மனதை நெருடிச் செல்லும் எழுத்துக்கள்....! பல சந்தர்ப்பங்களில்.....என்னையே ஒறுத்துப்  பல உதவிகளைப் பல உறவுகளுக்குச் செய்திருக்கின்றேன்..! எந்த விதமான அறுவடையையும் எதிர் பார்க்காத விதைப்புக்கள் தான் அவை..! இருந்தாலும்..... அவர்கள் அவசியமில்லாது கிள்ளும் போது....மனதில் பெரிய வலியாக அது பதிந்து கொள்கின்றது...! உங்கள் வரிகளில்....எனது வலிகள் பிரதி பலிக்கின்றன...!
  • மட்டக்களப்பை அதிரவைத்த ஆசிரியையின் கோரமுகம்! புத்திஜீவிகள் தலைமறைவு மட்டக்களப்பை அதிரவைத்த ஆசிரியையின் கோரமுகம்! புத்திஜீவிகள் தலைமறைவு அண்மையில் மட்டக்களப்பில் ஆசிரியை ஒருவர் மாணவருக்கும் அவரின் தாயாருக்கும் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து குறித்த ஆசிரியரை பணி நீக்கம் செய்யவேண்டுமென பலரும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். அத்துடன் ஆசிரியையின் குறித்த நடவடிக்கையை கண்டித்தும், அவரை மட்டக்களப்பு கல்வி வலையத்தில் இருந்து அகற்றுமாறும் கோரி மட்டக்களப்பு மாணவர் சமூகம் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது. இவ்வாறான நிலையில் குறித்த ஆசிரியரின் இந்த நடவடிக்கை தொடர்பில் அவரது கணவர் தமது வருத்ததினை தெரிவித்திருந்தார்.   இந்நிலையில் குறித்த ஆசிரியை மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் பணியிருந்த நிலையில் தற்பொழுது அவர் மட்டு மகாஜனா கல்லூரிக்கு இடம்மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. சம்மந்தப்பட்ட பாடசாலை தேசிய பாடசாலை என்பதுடன், தேசியபாடசாலைகள் மத்திய கல்வி அமைச்சின் கீழ்தான் செயற்பட்டது .ஆனால் இன்று மாகாண கல்வி திணைக்களம் குறித்த ஆசிரியரை மாற்றம் செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மட்டக்களப்பு புத்தியீவிகள் கண்டும் காணாமல் நடந்து கொள்வதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ள அதேவேளை , இதுவே ஓரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் என்றால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு ஓர் மாணவரை கடத்துவேன் என எச்சரிப்பது எவ்வளவு ஆபத்தானது என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இதன் பின்புலத்தில் அரசாங்கத்தின் மூன்று பிரபலங்கள் ஆசிரியைக்கு ஆதரவாக நின்று செயல்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளனர் மேலும் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்கும் ஆசிரியையின் பணிமாற்ற சம்பவத்திற்கும் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகின்ற அதேவேளை மட்டக்களப்பு புத்திஜீவிகள் இதனை கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளனர். ஆசிரியையின் மிரட்டல் வார்த்தைகள் இவை, எங்கள் குடும்பத்துக்கு எந்த அளவுக்கு பவர் இருக்கு என்று விசாரித்து பாருங்கள்… ‘எந்த மினிஸ்டரிடம் போனாலும் எதுவும் செய்யமுடியாது…’ மட்டக்களப்பை விட்டே உங்கள் மகனை இல்லாமல் செய்கிற அளவுக்கு எனது கணவனுக்கு பவர் இருக்கு…’ மற்றவர்களிடம் கேட்டுப் பாருங்க சுகுணன் டீச்சரின் கணவன் என்ன செய்கிறவர் என்று..’ ‘ இன்னொரு தடவை இப்படி நடந்தால்உங்கள் மகன் உங்களுக்கு இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கோ” – முதலாவது அந்த ஆசிரியை ஒரு விடயத்தை விளக்கவேண்டும்.   இதற்கு முன்னர் உங்கள் கணவர் எத்தனை பேரை காணாமல் போகச் செய்திருக்கிறார்? எத்தனை மாணவர்களை இல்லாமல் போகச் செய்திருக்கின்றார்? எத்தனை இளைஞர்களைக் கடத்தி இருக்கின்றார்? தயவு செய்து இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தினால் காணாமல் போன தமது பிள்ளைகளைத் தேடி தெருத்தெருவாக மழையிலும் வெயிலிலும் அலைந்து திரியும் தாய்மாருக்கு பெரிய உதவியாக இருக்கும். ஆயர் இல்லத்தின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள புனித மிக்கல் கல்லுாரியில் இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு ஆயரின் பதில் என்ன, தவக்காலம் என்பதால் மன்னித்து விட்டாரா. வேறு எந்த பாடசாலையாவது இந்தச் சம்பவம் இடம் பெற்றிருந்தால் இன்றைய நிலை என்ன, அதிகாம் படைத்தவன் செய்யும் குற்றத்தை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லையா குறித்த ஆசிரியையின் கணவர் மக்களிற்கு வைத்தியம் பார்ப்பதை விட அரசியல் வாதிகளின் கால் பிடிப்பது தான் அதிக நேரம் என்பது அனைவருக்கும் தெரியும் என மக்கள் ஆதங்கப் படுகின்றனர். சட்டநவடிக்கை எடுப்பதை மூடி மறைக்கும் வலயக் கல்வி அலுவலகம் ஒருதொலைபேசியில் ஒருமாணவருடனும் அந்த மாணவரின் தாயாருடனும் ஒரு ஆசிரியை என தன்னை அறிமுகம் செய்து ஒரு ஒட்டுக்குழு தலைவரின் மனைவி போன்று இரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். 1) மட்டக்களப்பில் இருக்க முடியாது. 2)அவரை இல்லாமல் செய்வேன் அதைவிட தராதரம், நாயே.. என்ற கீழ்த்தரமான வார்த்தைகளை பதிவுசெய்துள்ளார். உண்மையில் இப்படிகதைத்தவர் ஒரு ஆசிரியையாக இருந்தால் அவரை உடனே சம்மந்தப்பட்ட பாடசாலை அதிபர் மனநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற அனுமதிக்கவேண்டும், வலயக்கல்வி அலுவலகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அதனைச் செய்ததா சட்டநடவடிக்கை மூலம் தொலைபேசி நிறுவன பரிசோதனை நேரம் எந்த இலக்கத்தில் இருந்து யார் யாருக்கு கதைத்தது என்பதைல்லாம் வெளிச்சத்திற்கு வரும் உண்மையை அறியலாம், சட்டத்தின் மூலம் சிறைச்சாலையின் உள்ளே தள்ளலாம் அதை ஏன் செயற்படுத்த வில்லை அத்துடன் இந் நடைமுறை இன்று வரை பின்பற்ற வில்லை. சம்மந்தப்பட்டவர் ஆசிரியையாக இருப்பின் வேலையை இழக்கநேரிடும். எனவே சட்டநடவடிக்கையை தீவிரப்படுத்துவதே சிறப்பு, காரணம் இப்படியான ரவுடிகளின் அட்டகாசம் அகற்றப்படும்.   மட்டக்களப்பின் அரசியல்வாகிகளும் தலைமறைவு காரணம் குறித்த வைதியரின் மிக நெருக்கமானவர்களே மாவட்டத்தின் ஐந்து அரசியல் வாதிகளும். மக்களே உங்களிற்கு யார் உதவுவர் கடவுளைத் தவிர வேறு யாரும் அல்ல…. எதிர்ப்பினைக்கண்டு மனமாற்றம் அடைந்த வைத்தியர்   மாகாணக் கல்வித் திணைக்களம் விசாரணை ஒரே நாளில் வைத்தியரின் இரு வேறு பதிவுகள்     https://www.meenagam.com/மட்டக்களப்பை-அதிரவைத்த-ஆ/
  • கொலைமிரட்டல் விடுத்த ஆசிரியைக்கு தண்டனை கொடுக்க தயங்கும் பொலிஸாரும் கல்வி அதிகாரிகளும் ! உள் விவகாரம் அம்பலம் மட்டக்களப்பு மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வேன்’ என்று அந்த ஆசிரியை பிரசாந்தி மாணவனை மிரட்டும் ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில், குறிப்பாக கிழக்கில் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், கோபத்துக்கும் ஆளாகி உள்ளார்கள். மிரட்டல் விடுத்த ஆசிரியர் சாதரணமானவர் அல்ல. கிழக்கின் ஒரு முக்கிய ஆயுதக் குழுத் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர். கிழக்கில் பல படுகொலைகள், கடத்தல் நடவடிக்கைகள் போன்றனவற்றின் முக்கிய சூத்திரதாரி என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அந்த முன்னாள் பிரதி அமைச்சரின் நெருங்கிய சகாவின் மனைவி. எனவே அந்த ஆசிரியரின் மிரட்டலை சாதாரணமாக யாரும் எடுத்துவிட முடியாது…’   இதன் ஒரு அங்கமாக பிரசாந்தி ஆசிரியரின் மிரட்டல் சம்மந்தமான பொலிஸ் முறைப்பாடுகளை எந்த காவல் நிலையங்களிலும் பதிவு செய்ய வேண்டாம் என்று கருணா மட்டக்களப்பு பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டுக்க கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஒரு மாணவனுக்கு எதிராக பகிரங்க உயிரச்சுறுத்தல் மிரட்டலை விடுத்த ஆசிரியைக்கு எதிராக இதுவரைக்கும் காவல்துறை கைதுசெய்யவில்லை?” என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் கல்வி அதிகரிகள் சம்மந்தப்பட்ட பிரசாந்தி ஆசிரியரை அருகில் உள்ள பாடசாலைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளார்கள் . இது மாணவர்களின் கோபத்தை தடுக்கவும் மறுபுறம் இரண்டு மாதங்களின் பின் மறுபடியும் சம்மந்தப்பட்ட தேசிய பாடசாலைக்கு மறுபடியும் மாற்ற திட்டமிட்டுள்ளதகவும் தெரிய வருகிறது. கல்வி அதிகரிகள் சம்மந்தப்பட்ட பிரசாந்தி ஆசிரியரை அருகில் உள்ள பாடசாலைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளார்கள் . இது மாணவர்களின் கோபத்தை தடுக்கவும் மறுபுறம் இரண்டு மாதங்களின் பின் மறுபடியும் சம்மந்தப்பட்ட தேசிய பாடசாலைக்கு மற்ற திட்டமிட்டுள்ளதகவும் தெரிய வருகிறது. கல்விசார் அதிகாரிகள் குறிப்பிட்ட ஆசிரியருக்கு ஏதிராக எடுத்த உத்தியபூர்வமன நடவடிக்கையை பெற்றோர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ அறிவிக்காதது ஏன்? இது பாடசாலை உள்பிரச்சனை அல்ல ! இது கடத்தி காணாமல் போகச் செய்யும் முயற்சி . தற்போது மட்டக்களப்பபு மாவட்ட மாணவர்கள் பெற்றோர்கள் என்று பொது பரப்பில் விமர்சிக்கப்படும் விடையம் என்று கல்வி அதிகாரிகளுக்கு புரியவில்லையா? அல்லது சம்மந்தப்பட்ட பாடசாலையில் இதுவரைக்கும் மாணவர்களால் ஆர்ப்பாட்டமே நடத்தப்படவில்லையா! பல நாட்கள் பாடசாலை மூடப்படவில்லையா? பழைய ஆர்ப்பட்டங்கள் எதற்காக காரணங்களுக்கு நடைபெற்றது்.இது அதைவிட சிறு பிரச்சனையா? அந்த காரணங்களையும் ஞாபகப்படுத்த வேண்டுமா ? என பெற்றோர்கள் கேட்கின்றார்கள்.     https://www.meenagam.com/கொலைமிரட்டல்-விடுத்த-ஆசி/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.