அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம்.!
-
Tell a friend
-
Similar Content
-
By புரட்சிகர தமிழ்தேசியன்
’20’ திருத்தம் குறித்து எந்த நாடும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது.!
அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் எந்த நாடும் இலங்கை அரசுக்கு அழுத்தம் எதையும் பிரயோகிக்க முடியாது.”
இவ்வாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடு நேற்று இணைய வழி மூலம் இடம்பெற்றது.
இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.
கேள்வி:- 20ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா ஏதேனும் அழுத்தங்களை பிரயோகித்துள்ளதா.?
பதில்:- 20ஆவது திருத்தம் தொடர்பில் எந்த நாடும் இலங்கை அரசுக்கு அழுத்தம் எதையும் பிரயோகிக்க முடியாது.
இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது.
எமது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கும் அரசாகவே நாம் செயற்படுவோம்.
கேள்வி:- அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளனர் என்று கூறப்படுகின்றது. அவரது வருகை உறுதிப்படுத்த முடியுமா? அவர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளைப் பின்பற்றுவார்களா?
பதில்:- அவரது வருகை அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை முன்கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தக் காரணியையும் கவனத்தில்கொண்டு சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளையும் கவனத்தில்கொண்டு அவரது வருகை தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
வெளிநாட்டிலிருந்து வரும் இராஜதந்திரகள் 24 மணித்தியாலங்கள் மாத்திரமே நாட்டில் தங்கியிருப்பார்களாயின் அவர்களை ஒரே இடத்தில் சந்தித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயற்றிட்டம் சுகாதார அமைச்சின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கமையவே அவரது வருகையும் அமைந்துள்ளது.
https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/88419/
-
-
Topics
-
12
By பெருமாள்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By புங்கையூரன் · Posted
மனதை நெருடிச் செல்லும் எழுத்துக்கள்....! பல சந்தர்ப்பங்களில்.....என்னையே ஒறுத்துப் பல உதவிகளைப் பல உறவுகளுக்குச் செய்திருக்கின்றேன்..! எந்த விதமான அறுவடையையும் எதிர் பார்க்காத விதைப்புக்கள் தான் அவை..! இருந்தாலும்..... அவர்கள் அவசியமில்லாது கிள்ளும் போது....மனதில் பெரிய வலியாக அது பதிந்து கொள்கின்றது...! உங்கள் வரிகளில்....எனது வலிகள் பிரதி பலிக்கின்றன...! -
மட்டக்களப்பை அதிரவைத்த ஆசிரியையின் கோரமுகம்! புத்திஜீவிகள் தலைமறைவு மட்டக்களப்பை அதிரவைத்த ஆசிரியையின் கோரமுகம்! புத்திஜீவிகள் தலைமறைவு அண்மையில் மட்டக்களப்பில் ஆசிரியை ஒருவர் மாணவருக்கும் அவரின் தாயாருக்கும் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து குறித்த ஆசிரியரை பணி நீக்கம் செய்யவேண்டுமென பலரும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். அத்துடன் ஆசிரியையின் குறித்த நடவடிக்கையை கண்டித்தும், அவரை மட்டக்களப்பு கல்வி வலையத்தில் இருந்து அகற்றுமாறும் கோரி மட்டக்களப்பு மாணவர் சமூகம் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது. இவ்வாறான நிலையில் குறித்த ஆசிரியரின் இந்த நடவடிக்கை தொடர்பில் அவரது கணவர் தமது வருத்ததினை தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறித்த ஆசிரியை மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் பணியிருந்த நிலையில் தற்பொழுது அவர் மட்டு மகாஜனா கல்லூரிக்கு இடம்மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. சம்மந்தப்பட்ட பாடசாலை தேசிய பாடசாலை என்பதுடன், தேசியபாடசாலைகள் மத்திய கல்வி அமைச்சின் கீழ்தான் செயற்பட்டது .ஆனால் இன்று மாகாண கல்வி திணைக்களம் குறித்த ஆசிரியரை மாற்றம் செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மட்டக்களப்பு புத்தியீவிகள் கண்டும் காணாமல் நடந்து கொள்வதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ள அதேவேளை , இதுவே ஓரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் என்றால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு ஓர் மாணவரை கடத்துவேன் என எச்சரிப்பது எவ்வளவு ஆபத்தானது என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இதன் பின்புலத்தில் அரசாங்கத்தின் மூன்று பிரபலங்கள் ஆசிரியைக்கு ஆதரவாக நின்று செயல்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளனர் மேலும் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்கும் ஆசிரியையின் பணிமாற்ற சம்பவத்திற்கும் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகின்ற அதேவேளை மட்டக்களப்பு புத்திஜீவிகள் இதனை கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளனர். ஆசிரியையின் மிரட்டல் வார்த்தைகள் இவை, எங்கள் குடும்பத்துக்கு எந்த அளவுக்கு பவர் இருக்கு என்று விசாரித்து பாருங்கள்… ‘எந்த மினிஸ்டரிடம் போனாலும் எதுவும் செய்யமுடியாது…’ மட்டக்களப்பை விட்டே உங்கள் மகனை இல்லாமல் செய்கிற அளவுக்கு எனது கணவனுக்கு பவர் இருக்கு…’ மற்றவர்களிடம் கேட்டுப் பாருங்க சுகுணன் டீச்சரின் கணவன் என்ன செய்கிறவர் என்று..’ ‘ இன்னொரு தடவை இப்படி நடந்தால்உங்கள் மகன் உங்களுக்கு இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கோ” – முதலாவது அந்த ஆசிரியை ஒரு விடயத்தை விளக்கவேண்டும். இதற்கு முன்னர் உங்கள் கணவர் எத்தனை பேரை காணாமல் போகச் செய்திருக்கிறார்? எத்தனை மாணவர்களை இல்லாமல் போகச் செய்திருக்கின்றார்? எத்தனை இளைஞர்களைக் கடத்தி இருக்கின்றார்? தயவு செய்து இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தினால் காணாமல் போன தமது பிள்ளைகளைத் தேடி தெருத்தெருவாக மழையிலும் வெயிலிலும் அலைந்து திரியும் தாய்மாருக்கு பெரிய உதவியாக இருக்கும். ஆயர் இல்லத்தின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள புனித மிக்கல் கல்லுாரியில் இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு ஆயரின் பதில் என்ன, தவக்காலம் என்பதால் மன்னித்து விட்டாரா. வேறு எந்த பாடசாலையாவது இந்தச் சம்பவம் இடம் பெற்றிருந்தால் இன்றைய நிலை என்ன, அதிகாம் படைத்தவன் செய்யும் குற்றத்தை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லையா குறித்த ஆசிரியையின் கணவர் மக்களிற்கு வைத்தியம் பார்ப்பதை விட அரசியல் வாதிகளின் கால் பிடிப்பது தான் அதிக நேரம் என்பது அனைவருக்கும் தெரியும் என மக்கள் ஆதங்கப் படுகின்றனர். சட்டநவடிக்கை எடுப்பதை மூடி மறைக்கும் வலயக் கல்வி அலுவலகம் ஒருதொலைபேசியில் ஒருமாணவருடனும் அந்த மாணவரின் தாயாருடனும் ஒரு ஆசிரியை என தன்னை அறிமுகம் செய்து ஒரு ஒட்டுக்குழு தலைவரின் மனைவி போன்று இரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். 1) மட்டக்களப்பில் இருக்க முடியாது. 2)அவரை இல்லாமல் செய்வேன் அதைவிட தராதரம், நாயே.. என்ற கீழ்த்தரமான வார்த்தைகளை பதிவுசெய்துள்ளார். உண்மையில் இப்படிகதைத்தவர் ஒரு ஆசிரியையாக இருந்தால் அவரை உடனே சம்மந்தப்பட்ட பாடசாலை அதிபர் மனநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற அனுமதிக்கவேண்டும், வலயக்கல்வி அலுவலகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அதனைச் செய்ததா சட்டநடவடிக்கை மூலம் தொலைபேசி நிறுவன பரிசோதனை நேரம் எந்த இலக்கத்தில் இருந்து யார் யாருக்கு கதைத்தது என்பதைல்லாம் வெளிச்சத்திற்கு வரும் உண்மையை அறியலாம், சட்டத்தின் மூலம் சிறைச்சாலையின் உள்ளே தள்ளலாம் அதை ஏன் செயற்படுத்த வில்லை அத்துடன் இந் நடைமுறை இன்று வரை பின்பற்ற வில்லை. சம்மந்தப்பட்டவர் ஆசிரியையாக இருப்பின் வேலையை இழக்கநேரிடும். எனவே சட்டநடவடிக்கையை தீவிரப்படுத்துவதே சிறப்பு, காரணம் இப்படியான ரவுடிகளின் அட்டகாசம் அகற்றப்படும். மட்டக்களப்பின் அரசியல்வாகிகளும் தலைமறைவு காரணம் குறித்த வைதியரின் மிக நெருக்கமானவர்களே மாவட்டத்தின் ஐந்து அரசியல் வாதிகளும். மக்களே உங்களிற்கு யார் உதவுவர் கடவுளைத் தவிர வேறு யாரும் அல்ல…. எதிர்ப்பினைக்கண்டு மனமாற்றம் அடைந்த வைத்தியர் மாகாணக் கல்வித் திணைக்களம் விசாரணை ஒரே நாளில் வைத்தியரின் இரு வேறு பதிவுகள் https://www.meenagam.com/மட்டக்களப்பை-அதிரவைத்த-ஆ/
-
கொலைமிரட்டல் விடுத்த ஆசிரியைக்கு தண்டனை கொடுக்க தயங்கும் பொலிஸாரும் கல்வி அதிகாரிகளும் ! உள் விவகாரம் அம்பலம் மட்டக்களப்பு மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வேன்’ என்று அந்த ஆசிரியை பிரசாந்தி மாணவனை மிரட்டும் ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில், குறிப்பாக கிழக்கில் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், கோபத்துக்கும் ஆளாகி உள்ளார்கள். மிரட்டல் விடுத்த ஆசிரியர் சாதரணமானவர் அல்ல. கிழக்கின் ஒரு முக்கிய ஆயுதக் குழுத் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர். கிழக்கில் பல படுகொலைகள், கடத்தல் நடவடிக்கைகள் போன்றனவற்றின் முக்கிய சூத்திரதாரி என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அந்த முன்னாள் பிரதி அமைச்சரின் நெருங்கிய சகாவின் மனைவி. எனவே அந்த ஆசிரியரின் மிரட்டலை சாதாரணமாக யாரும் எடுத்துவிட முடியாது…’ இதன் ஒரு அங்கமாக பிரசாந்தி ஆசிரியரின் மிரட்டல் சம்மந்தமான பொலிஸ் முறைப்பாடுகளை எந்த காவல் நிலையங்களிலும் பதிவு செய்ய வேண்டாம் என்று கருணா மட்டக்களப்பு பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டுக்க கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஒரு மாணவனுக்கு எதிராக பகிரங்க உயிரச்சுறுத்தல் மிரட்டலை விடுத்த ஆசிரியைக்கு எதிராக இதுவரைக்கும் காவல்துறை கைதுசெய்யவில்லை?” என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் கல்வி அதிகரிகள் சம்மந்தப்பட்ட பிரசாந்தி ஆசிரியரை அருகில் உள்ள பாடசாலைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளார்கள் . இது மாணவர்களின் கோபத்தை தடுக்கவும் மறுபுறம் இரண்டு மாதங்களின் பின் மறுபடியும் சம்மந்தப்பட்ட தேசிய பாடசாலைக்கு மறுபடியும் மாற்ற திட்டமிட்டுள்ளதகவும் தெரிய வருகிறது. கல்வி அதிகரிகள் சம்மந்தப்பட்ட பிரசாந்தி ஆசிரியரை அருகில் உள்ள பாடசாலைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளார்கள் . இது மாணவர்களின் கோபத்தை தடுக்கவும் மறுபுறம் இரண்டு மாதங்களின் பின் மறுபடியும் சம்மந்தப்பட்ட தேசிய பாடசாலைக்கு மற்ற திட்டமிட்டுள்ளதகவும் தெரிய வருகிறது. கல்விசார் அதிகாரிகள் குறிப்பிட்ட ஆசிரியருக்கு ஏதிராக எடுத்த உத்தியபூர்வமன நடவடிக்கையை பெற்றோர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ அறிவிக்காதது ஏன்? இது பாடசாலை உள்பிரச்சனை அல்ல ! இது கடத்தி காணாமல் போகச் செய்யும் முயற்சி . தற்போது மட்டக்களப்பபு மாவட்ட மாணவர்கள் பெற்றோர்கள் என்று பொது பரப்பில் விமர்சிக்கப்படும் விடையம் என்று கல்வி அதிகாரிகளுக்கு புரியவில்லையா? அல்லது சம்மந்தப்பட்ட பாடசாலையில் இதுவரைக்கும் மாணவர்களால் ஆர்ப்பாட்டமே நடத்தப்படவில்லையா! பல நாட்கள் பாடசாலை மூடப்படவில்லையா? பழைய ஆர்ப்பட்டங்கள் எதற்காக காரணங்களுக்கு நடைபெற்றது்.இது அதைவிட சிறு பிரச்சனையா? அந்த காரணங்களையும் ஞாபகப்படுத்த வேண்டுமா ? என பெற்றோர்கள் கேட்கின்றார்கள். https://www.meenagam.com/கொலைமிரட்டல்-விடுத்த-ஆசி/
-
By கிருபன் · பதியப்பட்டது
தமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் அறிக்கை! ஐக்கிய நாடுகள் மனிவுரிமை மாநாட்டில் ஸ்ரீலங்காவின் பக்கம் நிற்பேன் என்று சீனா பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. வேறு எந்த நாடுமே இந்த விவகாரத்தில் பகிரங்கமாக அறிவித்தது இல்லை என்று அரசியல் ஆய்வாளரும் மூத்த ஊடகவியலாளருமான நிலாந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனிவுரிமை அமர்வுகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் உரையாற்றியிருக்கிறார். இதற்கிடையில், ஸ்ரீலங்கா அரசு பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதுடன், மனிதவுரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இது தொடர்பிலான விரிவான தகவல்களை ஐபிசி தமிழுக்கு வழங்குகிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், https://www.meenagam.com/தமிழர்களை-ஏமாற்றிய-ஐ-நாவ/ -
மரண வயசானாலும் அம்மாவிற்கு பிள்ளைகள் குழந்தைகள் தான். எனது பிள்ளைகள் தாங்கள் வளர்ந்து விட்டோம் இன்னும் தங்களை குழந்தைகள் என நான் நினைக்கிறேன் என சொல்வார்கள். பிறந்த உடனே கையில் இருந்த ஞாபகம் தான் எனக்கு இன்னும். எல்லா அம்மாவின் நினைவும் இப்படி தானா தெரியாது.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.