Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம்.!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம்.!

Screenshot-2021-01-27-11-26-25-051-org-m

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது."

- இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

'இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள புதிய ஆணைக்குழுவால் அனைத்தும் முறையாக நடந்துவிடப்போவதில்லை. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்குத் தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்கும். ஆட்சி மாறினாலும் அமெரிக்காவின் கொள்கைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படாது' என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இலங்கையில் தற்போதைய ஆட்சியில் மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்குழு ஆராய்ந்து நிரூபித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசு வழங்கியே தீரும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ தலையிட முடியாது.

அமெரிக்காவின் எல்லை மீறிய நடவடிக்கைகளால்தான் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை நெருக்குவாரங்களைச் சந்திக்க வேண்டி வந்தது.

இம்முறையும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் இலங்கை மீது மேலும் நெருக்குவாரங்களைப் பிரயோகிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், இலங்கையின் நட்பு நாடுகள் இதனை எதிர்க்கும். இலங்கையும் தமது நிலைப்பாட்டை ஜெனிவாக் கூட்ட அமர்வில் தெளிவாக எடுத்துரைக்கும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2021/01/28/22032/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது."

வல்லரசுகள் ரஷ்ய/சீன கவுண்மேந்து கூட இப்பிடியொரு அறிக்கைய காலாகாலத்துக்கும் விட்டது கிடையாது......  சிறிலங்கா உலகத்துக்கே வல்லரசு...😎

எங்கை போய் முட்டுறது... 🥀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 இங்குதான் நாட்டில் உள்ள நாரை, நரி, நண்டெல்லாம் கூவுறது. அங்கு போய் மண்டியிடுவினம். சமாளிச்சு, பொய்சொல்லி நாடகமாடி, நம்மடையளும் சான்றிதழ் கொடுத்து தப்பிவிடலாம் என எண்ணி மக்களை ஏமாற்ற வீராப்பு  பேசுறது. கடந்த அரசாங்கம் விட்ட பிழையால் நாம் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்லிக்கொண்டு திரும்பி வருவினம். கடந்த அரசாங்கமும் விட்ட தவறை மறைக்க முயன்றும் முடியாமலே இந்த முடிவை எடுத்தது என்பது தெரிந்தும் சாட்டுவார்கள் குற்றம்.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆனனபடட துருக்கி எர்டாகோனே இப்போது அடிபணிந்து வாலை சுருட்டிக்கொண்டு போய் விடடானாம் , இவற்ர வாய்ச்சவடால்கள் எல்லாம் வேற்று வெட்டுகள்தான். 

Link to comment
Share on other sites

On 28/1/2021 at 06:51, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ தலையிட முடியாது.

spacer.png

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2021 at 00:24, குமாரசாமி said:

வல்லரசுகள் ரஷ்ய/சீன கவுண்மேந்து கூட இப்பிடியொரு அறிக்கைய காலாகாலத்துக்கும் விட்டது கிடையாது......  சிறிலங்கா உலகத்துக்கே வல்லரசு...😎

எங்கை போய் முட்டுறது... 🥀

ஆக .... வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சொல்ல வில்லை,  நாம  சிங்கமய்யா, சிங்கம்... சிங்கள் ஆ தான் உலகத்துக்கே தண்ணி காட்டுவோம்.

பண்ணியில் பண்ணிப்பாருங்கோவன்..

 

*****

2008ல் ராணுவம், மடுவினை கடந்து மன்னார் நோக்கி போகிறது.

இதே ரம்புக்வெல வாய் எகத்தாளம் கதைக்கிறது.... உலகமே வந்தாலும், தம்மை நிறுத்த முடியாது என்று....

ஒரு வெள்ளை ஐலண்ட் பேப்பரில் எழுதுகின்றார்..... சிங்களவர்களே, ஒரு நாள் உலகம் உங்கள் மண்டையில் பெரிய குட்டு ஒன்று வைக்கும்.

அதன் போது, உங்கள் நாட்டினை இழக்கும் நிலையில் இருப்பீர்கள். கவலைப்படுவதை தவிர வேறு ஒன்றுமே செய்யமுடியாமல் போகலாம்.

அவர் சொன்ன நிதர்சனம் வருகின்றது என்றே நினைக்கிறேன்.

இலங்கை சரித்திரத்தில், அதன் ஆட்சியாளர்களின் பெரும் தவறே, ராஜ்ஜியங்களை இழக்க காரணமாகி உள்ளமை வரலாறு.

ராவணன் தொடங்கி, விஜயபாகுவின் மூன்று மகன்கள், சிங்கள பகுதியையும், சங்கிலியன் யாழ்பாணத்தினையும் போர்த்துகேயரிடமும் இழக்க..... விட்ட அதே தவறினை போர்த்துக்கேயர் விட, ஒல்லாந்தரும், பின்னர் பிரிட்டிஷ்காரரும், கண்டியின் கடைசி நாயக்கர் (சொன்னா, சிலபேர் கோவிப்பார்கள்) விட்ட தவறினால், கண்டியும் வீழ , பிரிட்டிஷ்காரர் நீங்கும் போது, ஜி ஜி பொன்னம்பலம் போன்றோர் விட்ட தவறினால், தமிழர் நிலம் சிங்களவனிடம் சிக்கிய நிலைமையும் நடந்தது.  

இப்போதும் அதே தவறு நடப்பதாகவே தோன்றுகிறது.

சீனா காரன்  கொடுக்கும் மன, பண பலத்தினால் வந்த திமிர்.

சிங்களவனுக்கு புரியாத ஒரு விடயம், சீனாவுக்கு, டிரம்ப் இடைஞ்சல் உண்டாக்கிய, சில வர்த்தக தடைகளில், விட்டுக்கொடுப்புகளை செய்வதன் மூலம், அமெரிக்கா, இலங்கைகளுள் செய்ய நினைப்பதை, சிங்களவன் தடுக்க முடியாமல் போகலாம்.

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By புரட்சிகர தமிழ்தேசியன்
   ’20’ திருத்தம் குறித்து எந்த நாடும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது.!

   அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் எந்த நாடும் இலங்கை அரசுக்கு அழுத்தம் எதையும் பிரயோகிக்க முடியாது.”
       இவ்வாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
   அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடு நேற்று இணைய வழி மூலம் இடம்பெற்றது.
   இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.
   கேள்வி:- 20ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா ஏதேனும் அழுத்தங்களை பிரயோகித்துள்ளதா.?
   பதில்:- 20ஆவது திருத்தம் தொடர்பில் எந்த நாடும் இலங்கை அரசுக்கு அழுத்தம் எதையும் பிரயோகிக்க முடியாது.
   இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது.
   எமது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கும் அரசாகவே நாம் செயற்படுவோம்.
   கேள்வி:- அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளனர் என்று கூறப்படுகின்றது. அவரது வருகை உறுதிப்படுத்த முடியுமா? அவர்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளைப் பின்பற்றுவார்களா?
   பதில்:- அவரது வருகை அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
   நாட்டின் பொருளாதாரத்தை முன்கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, அந்தக் காரணியையும் கவனத்தில்கொண்டு சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளையும் கவனத்தில்கொண்டு அவரது வருகை தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
   வெளிநாட்டிலிருந்து வரும் இராஜதந்திரகள் 24 மணித்தியாலங்கள் மாத்திரமே நாட்டில் தங்கியிருப்பார்களாயின் அவர்களை ஒரே இடத்தில் சந்தித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயற்றிட்டம் சுகாதார அமைச்சின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கமையவே அவரது வருகையும் அமைந்துள்ளது.
   https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/88419/
 • Topics

 • Posts

  • மிக்க நன்றிகள் நான் தனியே தான் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் முழுமையாக ஊடகங்களை அணுக முடியவில்லை. சிலர் மட்டும் தாமாகவே செய்தி சேகரித்து பிரசுரிக்கின்றார்கள். இங்கு சரியான அமைப்புக்கள் கட்டமைக்கப்படவில்லை. அது உடனே உருவாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. காரணம் அவற்றுக்கான பக்குவநிலையை ஒருமிக்க எல்லோரும் அடைய வேண்டும்.
  • எனக்கு  முன்வரிசையில் நீங்கள் அதுக்கு முன் துல்பன் வழக்கம்போல் 30வருட போர் என்ன தந்தது தேவையற்ற இழப்பு என்று வழக்கம்போல் புலம்புகிறார் நீங்கள் இந்த நேசமணி 🤣பிழையான தகவலை தந்துவிட்டார் என்று கடுகடுத்து கொண்டு நிக்கிறியள் அன்றுதான் மூவரும் சந்திக்கிறேம்  நீண்ட வரிசை திடிரென அமைதி அமைதி என்று இயந்திர குரல் இயந்திரமனிதர்கள் எமது வரிசையை ஒழுங்கு படுத்துகிறார்கள் நாட்டின் நலன் கருதி தேவையற்ற முதியோர்கள் பூமியை விட்டு அகற்ற படுகிறீர்கள் அவரவர் பெயர்களின் வரிசையில் வரவும் என்றவுடன் பெருமாள் என்று நீண்ட திரையில் பெயர் உடன் எனது டிஜிட்டல் பாஸ்போட் சைஸ் படம் ஓடுகின்றது இயந்திரமனிதர்கள் விரைந்து வந்து என்னை அந்த மிஸினில் படுக்க வைக்கிறார்கள் ஆரம்பத்தில் சுகந்தமாக இருக்கின்றது  திடிர் என்று வலி தோன மிஷனை உடைத்துக்கொண்டு ஓடுகின்றேன் சத்தமுடன் . படுக்கப்போற நேரம் science fiction books கலை  படிக்க வேண்டாம் என்று எத்தனை தரம் சொல்வது தூரத்தில் இருந்து கேட்ப்பது  போல் ஒரு உணர்வு டாங்க்  நிறைந்தது போல் உணர்வு வோஸ் ரூம் போயிட்டு எட்டி பார்க்கையில் யாழ் கடைசியாக பார்த்த பக்கம் அரையும்  குறையுமாக நீங்கள் @ போட்டபடி 
  • இவ்வளவு சொல்லிட்டியள், எங்களுக்கு நெருக்கமானவையை விட்டிட்டியளே? தமிழீழம் உருவாக்கினார் தேசிய … அவர் மகன் ….,  நாதம், தொடருங்கள் … யாழ் களம் காத்திருக்கிறது!
  • மிக முக்கியமான திரைப்பிடிப்பு எல்லோரும் ஒரு படி எடுத்து வைத்துக்கொள்ளவும்     இது இரண்டாம் ஈழப்போர்க் கால படிமம். இந்த திரைப்பிடிப்பின் தனித்துவம் என்னவென்று சொன்னால், உலகில் உள்ள எல்லா படைத்துறை படைஞரும் முதுகில் நுகர்பயன் பையினை(Utility backpack) வைத்துக்கொள்வார்கள். உரோமானிய பேரரசின் காலந்தொட்டு இது நடைமுறையில் இருந்திருக்கிறது. ஆனால் தமிழர் வரலாற்றில் மூவேந்தர் காலத்தில் இது இருந்ததோ தெரியாது (அவங்கள் என்ன நிறத்திலான உடை அணிந்தனர் என்பதுவே தெரியவில்லை!), எமது தமிழீழ நடைமுறையரசின் படைகளிடம் இவ்வாறான வழக்கம் காணப்பட்டதற்கான ஆதாரம் இத்திரைப்பிடிப்பு மட்டுமேயாகும். திரைப்பிடிப்பு தெளிவில்லைத்தாம், ஆனால் அதில் நீல நிறத்தில் ஒவ்வொரு உருவத்தினதும் (பச்சை வரிப்புலி தெளிவாய்த் தெரிகிறது) முதுகில் இருப்பது நுகர்பயன் பையேதாம் என்பதை கவனத்தில் கொள்க. எல்லோரு அதை அணிந்துள்ளதை நோக்குக. இப்படி ஒரு படிமம், வரலாற்றில் காத்து வைக்கப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.