தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு நாம் தமிழர் கட்சியே வழிகாட்டி: சீமான் பேட்டி

By
கிருபன்,
in தமிழகச் செய்திகள்
-
Tell a friend
-
Topics
-
0
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By உடையார் · பதியப்பட்டது
திருத்தப்பட்ட பிரேரணை இன்று ஜெனிவாவில் முன்வைக்கப்படுகின்றது – வாக்கெடுப்பு 22 இல் 3 Views இலங்கை குறித்த இணைத் தலைமை நாடுகளால் தயாரிக்கப்பட்ட பிரேரணையின் திருத்தப்பட்ட நகல் இன்று திங்கட்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளது. உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலுக்காகவே இந்த திருத்தப்பட்ட நகல் யோசனைகள் சமர்ப்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு பேரவையின் கூட்டத் தொடரின் இறுதியில் – 22 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகளவு நிகழ்வுகளுக்கான நேர ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டியிருப்பதால், இலங்கை குறித்த வாக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பதையிட்டு இதுவரையில் தீர்மானிக்கவில்லை என ஜெனிவா வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்த போதிலும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தியோகப்பற்றற்ற கலந்தாலோசனைகளுக்காக பிரேரணையின் திருத்தப்பட்ட நகல் இன்று பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருப்பதை உறுதிப்படுத்திய இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, “பிரேணையை நாம் பரிசீலனை செய்து எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்” எனவும் குறிப்பிட்டார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இத்தகவலை அவர் தெரிவித்தார். ‘புதிய நகல் யோசனையின் அடிப்படையில் இணக்கப்பாடான தீர்மானம் ஒன்றுக்கான வாய்ப்புக்கள் உள்ளதா?” எனக் கேட்கப்பட்டபோது, ‘இணக்கப்பாடான தீர்மானம் ஒன்று குறித்து அவர்கள் (இணைத் தலைமை நாடுகள்) முதலில் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், சில விடயங்கள் கடுமையானதாக இருந்தமையால் அவற்றை நாம் எதிர்த்தோம். நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்திய பின்னர் அவர்கள் தயாரித்த புதிய பிரேரணையே இன்று வெளியிடப்படுகின்றது. அது எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அதனைப் பெற்றுக்கொண்ட பின்னரே எம்மால் சொல்ல முடியும். நாம் அதனை ஆராய வேண்டும். ஆனால், இணக்கத்துடனான தீர்மானம் ஒன்றுக்கான வாய்ப்புக்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்” என கொலம்பகே பதிலளித்தார். வாக்கெடுப்பின்போது அங்கத்துவ நாடுகளின் ஆதரவு கிடைக்குமா எனக் கேட்கப்பட்டபோது பதிலளித்த கொலம்பகே, ‘மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் உரையின் போது பெரும் பாலான நாடுகள் இலங்கைக்கு ஆதவாக கருத்து வெளியிட்டிருந்தன. இருந்த போதிலும் வாக்கெடுப்பில் இந்த நிலைமை மாற்றமடையலாம். சக்தி வாய்ந்த நாடுகள் அங்கத்துவ நாடுகளை இலங்கைக்கு ஆதரவளிக்காமலிருப்பதற்கான அச்சுறுத்தல்களைக் கொடுப்பார்கள்” எனத் தெரிவித்தார். இதேவேளையில், இணக்கப்பாட்டுடான தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு இணைத் தலைமை நாடுகள் இறுதிவேளையில் முயற்சித்த போதிலும் அதனை இலங்கை நிராகரித்துவிட்டது. வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடையும் என்பதை தெரிந்துகொண்டுள்ள போதிலும், வாக்கெடுப்பையே இலங்கை விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 47 உறுப்பினர்களைக் கொண்டுள்ள மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு 10 நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்றே முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொவிட் தகன விடயத்தில் இலங்கை எடுத்த புதிய நிலைப்பாட்டையடுத்து அது 15 ஆக அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்லாமிய நாடுகள் சிலவற்றின் ஆதரவை இதன் மூலம் இலங்கை பெற்றுள்ளது. இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் நடுநிலை வகிக்கலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. 29 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பாhக்கப் படுகின்றது. பிரேரணையின் திருத்தப்பட்ட வடிவம் இன்று சமர்ப்பிக்கப்பட்டபின்னர் அது குறித்த விவாதங்களும் பேரம் பேசல்களும் ஜெனிவாவில் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.ilakku.org/?p=43996 -
குலமகள் தங்கம் தானே வேறென்ன செல்வம் வேண்டும் – மாரீசன் 3 Views சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இக்கவிதை பிரசுரமாகின்றது. சட்டங்கள் கற்றுத்தேறிச் சாதிக்கும் திறமைவிஞ்ச சான்றோரி னருகமர்ந்து சபையினில் வீற்றிருந்து மட்டிலா வறிவினாற்றல் அனுபவ முதிர்ச்சியாலே மக்களின் வழக்குக் கேட்டு உண்மைகள் ஆய்ந்து தேர்ந்து வெட்டெனக் குற்றம் சுற்றம் நீக்கிநுண் மதியினாலே வெளிப்படை யாகநீதி வழங்கிடும் பெண்ணைக் கொள்ளப் பட்டொடு பக்கம் வந்து அமர்ந்திடும் காளையர்க்குத் தட்சணை வைத்துத் தட்டம் ஏந்தியும் நிற்பதாமோ? தலைவனைக் கண்ணிற் காணும் தெய்வமாய்த் தொழுது கொண்டு தன்னலம் கருதிடாமல் இன்சொலா லீர்த்து நிற்பார் விலையிலா வன்பால் பண்பால் ஆண்மையு மணுக வைப்பார் வினைகளிற் கற்றுத் தேர்ந்த திறமைகள் விரியக் காட்டி மலையெனத் தாக்கவல்ல வறுமையிற் கலக்கம் கொள்ளார் மனத்தினி லுறுதிபூண்டு மலைத்திடா துழைக்கும் கொள்கை குலமகள் தங்கம் தானே வேறென்ன செல்வம் வேண்டும் குவலயம் சிறக்க வைப்பீர் சீதனம் விலக்கிக் கொள்வீர் தந்தையும் தாயுமாவார் தலைவனின் துணையுமாவார் தார்மீக நெறியில் நின்று ஆன்மீகம் காத்து வாழ்வார் முந்தையோர் உரைத்த நீதி மூதுரை நெஞ்சில் தாங்கி முன்னுணர் நுண்மதியால் நுணுக்கமாய்க் கருத்துரைப்பார் சிந்தையிற் தெளிவுமோங்கும் செயலினிற் திறமை வீங்கும் செழுமையு மீர்க்குமுள்ளம் கருணையும் சுரக்கும் பண்பில் சொந்தங்கள் உறவுநாடிச் சோர்விலா துழைக்கும் பெண்ணை நிந்தமாய்க் கொள்ளுவோர்க்கு வேறென்ன செல்வம் வேண்டும் https://www.ilakku.org/?p=44009
-
By உடையார் · பதியப்பட்டது
கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் முன்னணி இணைந்து செயல்படாது – கஜேந்திரகுமார் 3 Views தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் இணைந்து செயல்படாது என்று அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவரின் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அத்துடன், “நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தேர்தலின்போது சிறிய ஆட்டம் கண்டிருந்த நிலையிலும்கூட தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆதரித்து கையொப்பமிட்டு அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். “இது தமிழ் மக்கள் மீது மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதுகில் குத்திய ஒரு செயற்பாடாகும். எனவே, இவ்வாறான தமிழ்த் தேசியக் கூட்ட மைப்போடு ஒற்றுமையை வலியுறுத்து வதற்காக அனைத்து கட்சிகளையும், இணைப்பதாக இனி எந்த சிவில் சமூகத்தினரோ, மதகுருமாரோ முன் வரவேண்டாம். எனவே, அவ்வாறான முயற்சிகளை கைவிட வேண்டும். அத்தோடு நாமும் பாராளுமன்றத்திலும், வேறு செயல்பாடுகளிலும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புடன் இன்றிலிருந்து சேர்ந்து பயணிக்க மாட்டோம்” என்றார். https://www.ilakku.org/?p=44002 -
By Kavallur Kanmani · Posted
உங்கள் பதிவுக்கு கருத்தெழுத தவறி விட்டேன். மன்னிக்கவும். எங்கள் ஊருக்கே அழகு தருவது ஒல்லாந்தர் கட்டிய கடல்கோட்டை. சரித்திர சின்னங்களில் ஒன்றான இக் கடற்கோட்டை பல ஆண்டுகள் இராணுவத்தளமாக மாறியது. இப்பொழுது உல்லாச விடுதியாக மாற்றியுள்ளனர். நன்றிகள் தமிழ்சிறி. -
By Kavallur Kanmani · Posted
எத்தனை வசதிவாய்ப்புக்களுடன் வாழ்ந்தாலும் நாம் பிறந்து வளர்ந்த அந்த மண்வாசனை எம்மை விட்டு அகலாது. படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் வாதவூரான். கவிதையை படித்து பச்சைப் புள்ளிகள் இட்ட மல்லிகை வாசம் கிருபன் மோகன் புலவர் அனைவருக்கும் நன்றிகள்
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.