Jump to content

ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநரைச் சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைகளில் உள்ளனர்.

இவர்கள் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதாக கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், இதுவரை ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு ஒன்று தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பேரவை தீர்மானம் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மூன்று, நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில்தான், ஏழு பேர் விடுதலையை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - ஏழு பேர் விடுதலை குறித்து பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் பழனிசாமி, ஆளுநரை நேரில் சந்தித்த படியால்...
ஏழு பேரின் விடுதலை, விரைவில் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது என்றே கருதுகின்றேன்.

அவர்கள்... விடுதலையின், பின்...
அ.தி.மு.க. / பா.ஜ.க.  தேர்தலை சந்திப்பது.. சாதகமாக இருக்கும் என கருதுகின்றார்கள்.

"யார்... குத்தினாலும், அரிசி.. ஆனால் சரி." 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

"யார்... குத்தினாலும், அரிசி.. ஆனால் சரி." 👍

நல்ல விடயம். அரசியல் வியாபாரம் அந்த மாதிரி வேலை செய்யுது. ஆனால் அனைவரையும் விடுதலை செய்ய மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நல்ல விடயம். அரசியல் வியாபாரம் அந்த மாதிரி வேலை செய்யுது. ஆனால் அனைவரையும் விடுதலை செய்ய மாட்டார்கள்.

குமாரசாமி அண்ணா....
ஏன்... அப்படி சொல்கிறீர்கள்?

25 வருடத்துக்கு மேல்... சிறையில் இருக்கும்,
ஏழு பேருமே... உண்மையான குற்றவாளிகள் அல்ல.

ராஜீவை... கொலை செய்தவர்கள், இப்பவும்  வெளியில், சொகுசாக வாழ்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா....
ஏன்... அப்படி சொல்கிறீர்கள்?

25 வருடத்துக்கு மேல்... சிறையில் இருக்கும்,
ஏழு பேருமே... உண்மையான குற்றவாளிகள் அல்ல.

ராஜீவை... கொலை செய்தவர்கள், இப்பவும்  வெளியில், சொகுசாக வாழ்கின்றார்கள்.

உலகத்திற்கே தெரிந்த விடயம் அவர்கள் கொலையாளிகள் இல்லையென்பது..
இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

சுத்துமாத்து என்பது இதை தான். தேர்த்தல் வரைக்கும்  வைத்து இழுப்பார்கள். பிறகு கிடப்பில் போட்டு விடுவார்கள். இதை விட இன்னும் நிறைய சுத்துமாத்துகள் வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் விடுதலை செய்யப்படலாம் என்று சொல்லப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நல்ல விடயம். அரசியல் வியாபாரம்

தேர்தல் வருகிறது.  

எது எப்படியோ நல்லது நடக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுவர் விடுதலை: விரைவில் அறிவிப்பு… நம்பிக்கை தரும் தமிழக அரசு… காரணத்தை விளக்கும் வழக்கறிஞர்

Digital News Team 2021-01-31T14:46:18

விகடன்

 

திங்கள்கிழமையில் இருந்து புதன்கிழமைக்குள் நிச்சயமாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரும் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார்கள் என அடித்துச் சொல்கிறது வழக்கறிஞர் வட்டாரம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும்இ பேரறிவாளன்இ நளினிஇ முருகன் உள்ளிட்ட ஏழு பேரும் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 செப்டம்பர் 9-ம் தேதிஇ தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

7-tamils-300x169.jpeg

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆளுநர் அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். அதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் தண்டனை அனுபவித்து வருபவர்களில் ஒருவரான பேரறிவாளன். ஆளுநர் தாமதம் செய்துவருவது குறித்து உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து எழுவர் விடுதலை தொடர்பான முழக்கங்கள் தீவிரமடைந்தன.

!
இந்தநிலையில் கடந்த 21-ம் தேதி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ”தமிழக ஆளுநர் அடுத்த மூன்று அல்லது நான்கு நாள்களில் முடிவெடுப்பார்” என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆனால் விடுதலை குறித்து தெளிவுபடுத்தக் கூறி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க ஒரு வார கால அவகாசம் வழங்கி (ஜன. 29-ம் தேதிக்குள்) வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஓத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

தொடர்ந்து  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்து பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி பரிந்துரைக் கடிதம் ஒன்றையும் கொடுத்து வந்தார். இந்தநிலையில் காந்தியின் நினைவு தினமான நேற்று ஏழு பேரும் விடுதலை செய்யப்படலாம் எனத் தகவல் பரவியது.

ஆனால் இன்று விடுதலை செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை. திங்கள்கிழமையில் இருந்து புதன்கிழமைக்குள் நிச்சயமாக ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என அடித்துச் சொல்கிறது வழக்கறிஞர்கள் வட்டாரம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் புகழேந்தி

”விரைவில் அறிவிப்பு வரும். நேற்றே எதிர்பார்த்தோம் ஆனால் வரவில்லை. திங்கள்கிழமை அறிவிப்பு வருவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன.

கவர்னருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் மிகத் தெளிவாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 161-வது பிரிவில் ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு தண்டனையைக் குறைப்பது மாற்றி அமைப்பது ஆகிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

pukalenthy-297x300.jpg
ஆக 161-ம் பிரிவின் அதிகாரம் மாநில அரசின் அதிகாரம்தான் என உச்சநீதிமன்றமே மூன்றுமுறை தெளிவுபடுத்திவிட்டது. கேபினட்டின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்தான் கவர்னர் எனவும் தெளிவாகச் சொல்லிவிட்டது. 9.9.2018-ல் தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என முடிவெடுத்துவிட்டது. அதற்கான தீர்மானமும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால்இ ஆளுநர் எந்தவொரு முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்து வந்தார். இதுவரை எந்தவொரு வழக்கிலும் கேபினட்டின் முடிவை ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக ஒத்தி வைத்ததாக வரலாறே இல்லை.

இந்தநிலையில்இ தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கின் விசாரணையின்போது ‘மல்டி மானிட்டரிங் கமிட்டி அதாவது சர்வதேச அளவில் ஏதாவது சதி நடந்ததா என்று நடக்கும் விசாரணை முடிவுக்காகக் காத்திருப்பதாக கவர்னரின் தரப்பில் சொன்னார்கள். ஆனால் உச்சநீதிமன்றமோ ‘அதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை அந்த விசாரணை வேறு. அதைக் காரணம் காட்டி விடுதலை செய்யமாட்டேன் எனச் சொல்லமுடியாது’ என தெளிவாகச் சொல்லிவிட்டது. இனிமேல் கவர்னருக்கு விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான் மத்திய அரசின் சி.பி.ஐ வழக்கறிஞரே நீதிமன்றத்தில் கவர்னர் இரண்டு நாள்களில் முடிவெடுப்பார் என்று சொல்லிவிட்டார்.

perarivu-300x125.jpg
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஏழு பேரையும் விடுதலை செய்தே ஆகவேண்டும். உச்சநீதிமன்றமும் அதனால்தான் அழுத்தம் கொடுக்கிறது. முதல்வரும் கவர்னரைச் சந்தித்திருக்கிறார். அனைத்து விஷயங்களையும் வைத்துப் பார்க்கும்போது விடுதலை செய்வதற்கான பிராசஸ் நடந்துவருவதாகத் தெரிகிறது. கண்டிப்பாக திங்கள்கிழமை விடுதலை ஆகிவிடுவார்கள் என்றே தெரிகிறது” என்கிறார் நம்பிக்கையாக.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இதுகுறித்துப் பேசினோம்இ

”கனர்னருக்கு முதல்வர் ரிமைன்ட் செய்துவிட்டு வந்திருக்கிறார். சுப்ரீம் கோர்ட் ஆர்டர் குறித்தும் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். ஒருவாரம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கவர்னர்தான் இனி முடிவெடுக்கவேண்டும். நல்ல முடிவாக வரவேண்டும் என்றுதான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

தொடர்ந்துஇ அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது

”தமிழக மக்களின் வேண்டுகோளை ஏற்று ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என மறைந்த முதல்வர் அம்மா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். நீதிமன்ற வழிகாட்டுதலின்படிஇ விடுதலை செய்வதாகவும் அறிவித்தார். ஆனால்இ அப்போதைய மத்திய அரசு அதற்குத் தடை வாங்கிவிட்டது. தொடர்ந்து அம்மா நீதிமன்றத்தில் கடுமையான சட்டப் போராட்டத்தையும் நடத்தி வந்தாநடத்தி வந்தார்.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தார்.

ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது கடுமையான விவாதத்துக்கு உள்ளானது. அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக கோரிக்கையை முன்வைத்தன. தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி தற்போது மத்திய அரசின் வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் ஆளுநர் முடிவெடுப்பார் என்று சொல்லியிருக்கிறார். நீதிமன்றமும் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது.  முதல்வரும் நீதிமன்ற உத்தரவையும் கோடிட்டுக் காட்டி ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்திப் பேசி வந்திருக்கிறார். ஆளுநரும் பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதனால் ஏழு பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசும் நம்புகிறது அ.தி.மு.கவும் நம்புகிறது” என உறுதியாகச் சொல்கிறார்.

https://thinakkural.lk/article/108643

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுவர் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுவது  நியாயமில்லை- பா.ம.க தலைவர் ராமதாஸ் அறிக்கை

 
1-1.jpg
 32 Views

தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று மருத்துவர் ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு, 12 நாட்களாகியும் அது குறித்து இன்று வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுனர் மேலும் ஒரு முறை உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்தன. கடந்த ஜனவரி 20ஆம் தேதி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த வி‌ஷயத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நாள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட மத்திய அரசு, 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரை மீது ஆளுனரே முடிவெடுக்கலாம்; அடுத்த 4 நாட்களுக்குள் இதுபற்றி ஆளுனர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தது. அதற்கு அடுத்த நாள் பேரறிவாளன் தரப்பின் கோரிக்கைப்படி, இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் அளித்த வாக்குறுதியின்படி கடந்த 25ஆம் தேதிக்குள் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும்; உச்சநீதிமன்ற ஆணைப்படி முடிவெடுப்பதாக இருந்தாலும் கூட 28ஆம் தேதிக்குள் ஆளுனர் தீர்மானித்திருக்க வேண்டும்.

ஆனால், கெடு முடிந்து நான்கு நாட்களாகியும் கூட எந்த நகர்வும் நடக்கவில்லை; அதற்கான காரணத்தையும் ஆளுனர் மாளிகை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த தாமதம் பெரும் மனித உரிமை மீறல் ஆகும். பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கும் விவகாரத்தில் இவ்வளவு கால தாமதம் தேவையில்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் சிறையில் அடைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை அனுப்பி வைத்து கிட்டத்தட்ட 30 மாதங்கள் நிறைவடையப் போகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இல்லாத காரணங்களைக் கூறி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுனர் முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல. 7 தமிழர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து தமிழக ஆளுனர் செயல்பட வேண்டும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி, தங்களின் வாழ்நாளில் பெரும்பகுதியை இழந்து விட்ட 7 தமிழர்களின் விடுதலையை இனியும் தாமதிப்பது சரியல்ல. எனவே, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு அடுத்த 3 நாட்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவரையும், அவரைத் தொடர்ந்து மற்ற 6 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=40950

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

எழுவர் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுவது  நியாயமில்லை- பா.ம.க தலைவர் ராமதாஸ் அறிக்கை

 
1-1.jpg
 32 Views

தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று மருத்துவர் ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு, 12 நாட்களாகியும் அது குறித்து இன்று வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுனர் மேலும் ஒரு முறை உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்தன. கடந்த ஜனவரி 20ஆம் தேதி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த வி‌ஷயத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நாள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட மத்திய அரசு, 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரை மீது ஆளுனரே முடிவெடுக்கலாம்; அடுத்த 4 நாட்களுக்குள் இதுபற்றி ஆளுனர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தது. அதற்கு அடுத்த நாள் பேரறிவாளன் தரப்பின் கோரிக்கைப்படி, இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் அளித்த வாக்குறுதியின்படி கடந்த 25ஆம் தேதிக்குள் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும்; உச்சநீதிமன்ற ஆணைப்படி முடிவெடுப்பதாக இருந்தாலும் கூட 28ஆம் தேதிக்குள் ஆளுனர் தீர்மானித்திருக்க வேண்டும்.

ஆனால், கெடு முடிந்து நான்கு நாட்களாகியும் கூட எந்த நகர்வும் நடக்கவில்லை; அதற்கான காரணத்தையும் ஆளுனர் மாளிகை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த தாமதம் பெரும் மனித உரிமை மீறல் ஆகும். பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கும் விவகாரத்தில் இவ்வளவு கால தாமதம் தேவையில்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் சிறையில் அடைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரையை ஆளுனருக்கு தமிழக அமைச்சரவை அனுப்பி வைத்து கிட்டத்தட்ட 30 மாதங்கள் நிறைவடையப் போகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இல்லாத காரணங்களைக் கூறி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுனர் முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல. 7 தமிழர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து தமிழக ஆளுனர் செயல்பட வேண்டும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி, தங்களின் வாழ்நாளில் பெரும்பகுதியை இழந்து விட்ட 7 தமிழர்களின் விடுதலையை இனியும் தாமதிப்பது சரியல்ல. எனவே, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு அடுத்த 3 நாட்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவரையும், அவரைத் தொடர்ந்து மற்ற 6 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=40950

இன்னும்நாலுநாள் முடியேலையோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.