Jump to content

யாழ்.தையிட்டியில் தனியார் காணியையும் உள்ளடக்கி பாரிய விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.தையிட்டியில் தனியார் காணியையும் உள்ளடக்கி பாரிய விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..!

Screenshot-2021-01-30-18-38-05-667-org-m

யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் ஒரு பகுதியையும் எடுத்து “திஸ்ஸ விகாரை” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

100 அடி உயரத்தில் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டுள்ளது.

 தையிட்டி பெண்கள் காவலரனுக்கு அருகாமையில் இந்த விகாரை தனியார் காணியில் அமைக்கப்படவுள்ளது.

அந்தக் காணி திஸ்ஸ விகாரைக்குரிய காணி என தெரிவிக்கப்பட்ட போதும் அதனுடன் இணைந்து தனியார் காணிகள் விடுவிக்கப்படாமல் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதேவேளை நேற்றய தினம் குறித்த விகாரைக்கான அடிக்கல் நாட்டப்படுவதாக தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதுடன், குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு தடை விதிக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்ககதாகும்.

https://jaffnazone.com/news/23019

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி சிங்கள மக்கள் அல்லது பௌத்த மத மக்கள் வாழும் பிரதேசமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தையிட்டி சிங்கள மக்கள் அல்லது பௌத்த மத மக்கள் வாழும் பிரதேசமா?

குசா, யார் வாழும் பிரதேசம் என்பது விடையமல்ல, யாருடைய நாடு என்பதே விடையம்.

அங்கசனுக்கும் டக்கிக்கும் வாக்கு போட்டால் இந்த அபிவிருத்தி தான்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

குசா, யார் வாழும் பிரதேசம் என்பது விடையமல்ல, யாருடைய நாடு என்பதே விடையம்.

அங்கசனுக்கும் டக்கிக்கும் வாக்கு போட்டால் இந்த அபிவிருத்தி தான்....

 

கூட்டமைப்புக்கு  வாக்கு போட்டாலும் நடந்திருக்கும் மீரா அண்ண

கிழக்கு போச்சு என்று கத்தி கூப்பாடு  போட்ட ஆட் களை இன்னும் காணல இந்த திரிக்கு  அபே ரட்ட  

( சிங்களவர் மைண்ட் வாய்ஸ்)
 

Link to comment
Share on other sites

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்.தையிட்டியில் தனியார் காணியையும் உள்ளடக்கி பாரிய விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..!

Screenshot-2021-01-30-18-38-05-667-org-m

சிங்கள இராணுவத்தினர் ஏன் தமிழ்மக்களுக்கு வீடுகள் கட்டும் பணிக்குச் சென்று மேசன் தொழில் பயின்றார்கள் என்பதற்கு இன்று நல்ல விளக்கம் கிடைத்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

குசா, யார் வாழும் பிரதேசம் என்பது விடையமல்ல, யாருடைய நாடு என்பதே விடையம்.

அங்கசனுக்கும் டக்கிக்கும் வாக்கு போட்டால் இந்த அபிவிருத்தி தான்....

 

இதேதான் கிழக்கு மாகாணத்திலும் நடக்கின்றது. தகுதியில்லாதவர்களுக்கும் தரகர்களுக்கும் வாக்களித்தால் தமிழர்களின் கோவணத்தையும் உருவிப்போட்டுத்தான் விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனியார் காணியில் 100 அடி உயரத்தில் விகாரை

 
Capture-13-696x320.jpg
 70 Views

யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில் புத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளார்.

வலி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்  விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு, நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த விகாரை தனியார் காணியில் 100 அடி உயரத்தில் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கில்  சமீபகாலமான தொடர்ந்து சைவ ஆலயங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ராஜபக்சே அரசாங்கத்தால் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=40860

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2021 at 10:55, தனிக்காட்டு ராஜா said:

கூட்டமைப்புக்கு  வாக்கு போட்டாலும் நடந்திருக்கும் மீரா அண்ண

கிழக்கு போச்சு என்று கத்தி கூப்பாடு  போட்ட ஆட் களை இன்னும் காணல இந்த திரிக்கு  அபே ரட்ட  

( சிங்களவர் மைண்ட் வாய்ஸ்)
 

நக்கலா அல்லது மகிழ்ச்சியா.. 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2021 at 08:59, Kapithan said:

நக்கலா அல்லது மகிழ்ச்சியா.. 🤥

கருத்து என்னது அதை எடுத்துக்கொள்பவர்களை பொறுத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Capture-13-696x320.jpg

144368717_230908252001957_24951687304293

சிறிலங்காவின் வடபகுதியில் இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாழில் தடக்கப்பட்டதுக்கு  காரணம் பிரபாகரன் என்று அழும்  கூட்டம் இந்த திரிப்பக்கம்  எட்டியும் பார்க்க மாட்டினம் ஆக்கும் .😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கு யாழில் தடக்கப்பட்டதுக்கு  காரணம் பிரபாகரன் என்று அழும்  கூட்டம் இந்த திரிப்பக்கம்  எட்டியும் பார்க்க மாட்டினம் ஆக்கும் .😃

அவர்கள் விரும்பியதுதானே நடைபெறுகிறது. இனி அவர்களுக்கு இங்கு என்ன வேலை? திறப்புவிழாவுக்கு வருவார்கள் ஆரவாரமாக திறப்போடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இங்கு யாழில் தடக்கப்பட்டதுக்கு  காரணம் பிரபாகரன் என்று அழும்  கூட்டம் இந்த திரிப்பக்கம்  எட்டியும் பார்க்க மாட்டினம் ஆக்கும் .😃

அது ஒரு தராசு மாதிரி. நீங்கள் தமிழ்த் தேசியத்தையும், புலிகளையும், தமிழ் மக்கள் அவலங்களையும் பற்றிப் பேசுங்கோ. நாங்கள் அதைச் சமப்படுத்த புலிகளைன்ர மனிதவுரிமை மீறல்களைப் பற்றி மட்டும் பேசுறம். நாங்களும் உதுக்குள்ள வந்து சிங்கள அரசின்ர, அவயின்ர ராணுவத்தின்ர கொடுமைகளைப் பற்றிப் பேசினால் இக்களத்தின்ர நடுநிலமை என்னாவது? அதனாலதான் நாங்கள் புலிகளைப்பற்றி மட்டும் பேசுறம். என்ன , நான் சொல்றது சரிதானே? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.