-
Tell a friend
-
Topics
-
Posts
-
விடுப்புகளை அறிந்தால்தானே தடுப்புகளைத் தவறின்றிச் சரியாகப் போடமுடியும். அதில் நிழலி ஐயாவும் திறனுடன் நேர்மையும் கொண்ட பெருவிண்ணன். உங்களுக்கும் ஏற்பட்ட அனுபவத்தை மறந்துவிட்டு இப்படியெல்லாம் எழுதக்கூடாது தம்பி.😌
-
By பெருமாள் · பதியப்பட்டது
இறையாண்மைக்கு எதிராக யாராவது அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக செயற்படுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல." என முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அதேபோல், அடக்குமுறை, அச்சுறுத்தலுக்குப் பயந்து ஒளிந்தோடும் இனம் நாங்களல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "நாட்டினதும், மக்களினதும் இறையாண்மைக்கு எதிராக யாராவது தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நினைத்த பிரகாரம் சட்டமூலங்களை ஏற்படுத்தத் திட்டமிடுவதாக இருந்தால் அதற்கு எதிராகப் போராடுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. சில சந்தர்ப்பவாத தேரர்கள் பின்வாங்கினாலும் இவ்வாறான அச்சுறுத்தல், அடக்குமுறைகளுக்கு பயந்து, மீகெட்டு வத்தே குணானந்த தேரரின் வம்சத்தில் செயற்படும் எந்தவொரு பிக்குவும் மௌனித்திருக்கப் போவதில்லை. ஒரு சிலர் எம்மை அச்சுறுத்தி, அடக்கி எங்களது வாயை மூடிவிடப் பார்க்கின்றனர். மேலும், மாகாண சபை முறைமைக்கு நாங்கள் எதிர்ப்பு. யார் எதிர்த்தாலும் எவ்வாறு எதிர்த்தாலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தியே ஆகுவோம் எனச் சிலர் தெரிவிக்கின்றனர். அப்படியானால் இது தொடர்பாக யார் எதிர்த்தாலும், யார் அச்சுறுத்தினாலும் மாகாண சபை முறைமைக்கு எதிரான எமது போராட்டத்தை எந்த வித்தியாசமும் இன்றி, நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வோம் என்பதை இவர்களுக்குத் தெரிவித்து வைக்க விரும்புகின்றோம்" - என்றார் https://tamilwin.com/article/mahanayaka-theros-to-fight-against-the-government-1618601315 -
By தமிழ் சிறி · Posted
ஜனாதிபதியின் மிரட்டல் – மேலதிக பாதுகாப்பு கோரும் விஜயதாச!! அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிரட்டியதாக கூறியதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மேலதிக பாதுகாப்பை கோரியுள்ளார். இது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸ்மா அதிபரிடம் கடிதத்தை கையளித்துள்ளார். நேற்று காலை விஜயதாச ராஜபக்ஷவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி, கடும் தொனியில் பேசியதாக தெரிவித்திருந்தார். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் உட்பட அரசாங்கத்தின் சில திட்டங்கள் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக குரல் கொடுத்ததால் தான் ஜனாதிபதி மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது, இது போர்ட் சிட்டிக்குள் ஒரு தனி சீன காலனி அமைக்க வழிவகுக்கும் என விஜயதாச ராஜபக்ஷ கூறினார். அரசாங்க தரப்பு உறுப்பினராக இதுபோன்ற ஊழல்களையோ அல்லது நாட்டின் சில பகுதிகளோ விற்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். https://athavannews.com/2021/1210174 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்கான மாமியார் மற்றும் மச்சான்: வவுனியாவில் சம்பவம் வவுனியா- கண்டி வீதிக்கருகிலுள்ள வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மருமகன் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் அவரது மாமியார் மற்றும் மச்சான் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த அரியதாஸ் திரேஸ் (வயது – 35) மற்றும் அசோகன் வசந்தி (வயது – 52) ஆகிய இருவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல், வவுனியா, வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக காணப்படுகின்ற மரத்திற்கு பின்னால் மறைந்திருந்த சந்தேகநபர், அவ்விடத்திற்கு வருகை தந்த அவரது மனைவியின் சகோதரனுடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தன் உடமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது முதுகில் குத்தியுள்ளார். அதனை தடுக்க முற்பட்ட மாமியார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போது தாக்குதலில் காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்திய சந்தேகநபரான கிளிநொச்சி- திருநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞனை, மக்கள் தடுத்து வைத்திருந்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் . குடும்ப தகராறு காரணமாகவே குறித்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2021/1210226
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.