Jump to content

இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஐ.நா மனித உரிமைப் பேரவையின் காணொளி! - அமைச்சர் தினேஸ் கடும் எதிர்ப்பு

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, tulpen said:

நல்ல நகைச்சுவை குமாரசாமி.

இதுக்கு மேலை முரண்டு பிடிக்க அங்கே என்ன இருந்தது. வாழ்ககை முழுக்க முரண்டு பிடிச்சு பிடிச்சே காலத்தை போக்கி  கடைசிலை முரண்டு பிடிக்கவே எதிரி அனுமதிக்காத அளவு நிலைமை இருந்தது. போராடவே போராளிகள் இல்லாமல் பிள்ளை பிடிக்க வேண்டி வந்த  சோகம்.  நடந்ததை நீங்க பகடி விட்டு மழுப்புறீங்க. 

வர வர யாழ் பிரபாகரன் எதிர்ப்பு இணையதளம் போல் போகுது .

 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 66
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

புங்கையூரன்

மருதர்...! தீவுப் பகுதிக்குள் மிகப்பெரிய பொருளாதார இரகசியமொன்று புதைந்திருக்கு..! ஒண்டு....குமாரசாமியண்ணர் சொன்ன விசயம்.....! உல்லாசப் பயணத் துறை...! அங்குள்ள பவளப் பாறைகளின் அழகு..அவுஸ்திரே

கிருபன்

நன்றி பகலவன். முன்னரும் இந்த விளக்கங்களைக் கொடுத்திருந்தீர்கள் என்று நினைவில் உள்ளது. ஆயுதக் கப்பல்கள் இல்லாமல், வழங்கல் இல்லாமல் இறுதிக்காலத்தில் பற்றரி கூட இல்லாமல், ஏன் சயனைட் கூட இல்லாத

Maruthankerny

அவர்கள் முரண்டு பிடிக்கவில்லை என்றுதான் கு சா எழுதி இருக்கிறார்  திரும்ப அதை குவாட் பண்ணி அவர்கள் முரண்டு பிடிக்கவில்லை என  திரும்பவும் எழுதி அதோடு புலிவாந்தியும் சேர்த்து வெறும் தனிமனித தாக்குதலாக

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

வர வர யாழ் பிரபாகரன் எதிர்ப்பு இணையதளம் போல் போகுது .

 இங்கிருக்கும் எனது நண்பன் ஒருவன் நாட்டில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது அவனது வீரம் சொல்லி வேலையில்லை.தானும் ஒரு போராளி போல் துடிதுடிப்பாக இருப்பான்.ஒரு சில ஊடகங்களில் ஈழவிடுதலை பற்றி கவிதை கட்டுரை எழுதியதாக தெரிகின்றது. உறுதியாக தெரியாது.பரப்புரைகளும் கொஞ்ச நஞ்சமல்ல...
ஆனால் 2009 க்கு பின்னர் எல்லாம் தலைகீழ்.....????
ஊரில் பெரிய வீடுகட்டி (பந்தாவுக்கு) தனது மகன் இருவரின் திருமணங்களை ஊரில் ஆடம்பரமாக நடத்தி(பந்தா) அமர்க்களம் செய்துள்ளார்.இத்தனைக்கும் மாப்பிளையும் பொம்புளையும் இங்கு வசிப்பவர்கள். இன்று அவர் ஆடம்பரமாக கட்டிய வீடு காய்ந்து போய் யாரும் வசிக்காமல் இருக்கின்றது.(காசு கொழுப்பு) இவர் பிள்ளைகளும் அங்கு போய் வசிக்கப்போவதில்லை.

இப்போது அவருக்கு ஈழ விடுதலை என்றால் அலர்ஜி. ஈழமக்கள் உரிமைகள் என்றாலே அவர் நம்பியார் பாணியில் கைகளை பிசைவார். ஈழ மக்கள் சௌகரியமாக வாழ்கின்றார்கள் என்ற பொருள்பட பேசுவார்.

செலுட்டு தமிழன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இதற்கு முந்திய தேர்தல் காலத்தில் நான் இங்கு நல்லாட்ச்சி அரசு என்பது வெறும் 
ஏமாற்று வேலை தமிழர்கள் மகிந்தவுக்கு ஆதரவு கொடுத்து தேவையானதை சாதிக்கவேண்டும் 
என்று எழுதினேன். வெள்ளைவான் வருவதுதான் இவர்களுக்கு சந்தோசம் என்று நான் எதோ வெள்ளைவானில் 
முதலீடு செய்திருப்பதாக எழுதினார்கள். அப்படி அன்று எழுதியவர்கள் இப்போ கோத்தா புனரமைக்கிறார் புல்லு புடுங்கிறார் என்று எழுதுகிறார்கள். இப்படியான லூசு கோஸ்ட்டிகளிடம் உலகில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது அல்லது தொலைதூர அரசியல் பார்வை என்பது அறவே கிடையாது. தங்களை மேதாவிகளாக இங்கு யாழ் களத்தில் காட்டிக்கொள்ளும் ஒரு வக்கிர புத்தி மட்டுமே உண்டு. இந்த நல்ஆட்சி கத்தரிக்காய் காலத்தை விழுங்கியதே மிச்சம்.... இப்போ ஐ நா வில் விசாரணை வேறு விதமாக நடக்கிறது உள்நாட்டில் புனரமைப்பு நடக்கிறது காலத்தை எமக்கு சாதமாக்கி பயணிக்காது அவர்களின் ஏமாற்று வேலைகளுக்கு ஏமாளிகளாக இருப்பதில் என்ன பயன்? 

தீவுக்கு சீனன் வந்ததும் விசுகு அண்ணாவின்  வீட்டு காணியை ராடார் பூட்ட கொடுக்கிறம் 
புங்கையூரான் வீட்டு காணிக்குள் பாம்பு தவளை கரப்பான் பூச்சி வளர்க்கிறோம். வியாபாரம் முக்கியம் 

மருதர்...!
தீவுப் பகுதிக்குள் மிகப்பெரிய பொருளாதார இரகசியமொன்று புதைந்திருக்கு..!

ஒண்டு....குமாரசாமியண்ணர் சொன்ன விசயம்.....! உல்லாசப் பயணத் துறை...! அங்குள்ள பவளப் பாறைகளின் அழகு..அவுஸ்திரேலிய பவளப் பாறைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.என்பது அவற்றைப் பார்த்த பின்னரே எனக்குப் புரிந்தது..!

இரண்டாவது கொம்யூனிஸ்ட் கார்த்திகேசு மாஸ்ரர் அடிக்கடி கூறுவது...!

திரை கடலோடித் திரவியம் தேடு ..என்னும் பழமொழியில் மினக்கடாமல்....திரை கடலோடித் திரளி மீன் தேடுவதில் தமிழன் மினக்கட்டால்...மிகவும் அதிக பலன் கிடைக்கும்..!

கடலட்டை, றால் வளர்ப்புக்கும் ...தீவுப்பகுதிகளின்  இயற்க்கை அமைப்பு மிகவும் பொருத்தமானது..!

கடற்படையின் அட்ட காசங்களுக்கு மத்தியிலும்...இந்தியாக்காரர்களின்  இழுவைப் படகுகள் அங்கு வரக்காரணம்....அங்கு அமைந்துள்ள கடலடித் தள மேடைகள் தான்....!

உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்..!

 • Like 7
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

கடலடித் தள மேடைகள் தான்....!

பழைய வாகனம்களை அந்த கண்ட  மேடையில் இறக்கிவிட மீனுக்கு மீனும் இந்திய ரோலர்களின் வலை சிதைவும் நடக்க ஒருக்கல்லில் பல மாங்காய் .

சமீபத்தில் திருகோணமலை கடலில் பழைய ஓடாத பஸ்களை கடலில் இறக்கினவர்கள் .

புதுசா தலைவரின் அறிவுரைகள் யாழின்  முகப்பில் சந்தோசம் மட்டுக்களுக்கு  வாழ்த்துக்கள் .

குறிப்பிட்ட நபர் எல்லை வரைமுறை தாண்டி தலைவரை திட்டுவதை யாழ் அனுமதிப்பதை நிறுத்துவது எப்போது ? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

வர வர யாழ் பிரபாகரன் எதிர்ப்பு இணையதளம் போல் போகுது .

அவர்கள் முரண்டு பிடிக்கவில்லை என்றுதான் கு சா எழுதி இருக்கிறார் 
திரும்ப அதை குவாட் பண்ணி அவர்கள் முரண்டு பிடிக்கவில்லை என  திரும்பவும் எழுதி அதோடு புலிவாந்தியும் சேர்த்து வெறும் தனிமனித தாக்குதலாக எழுதி இருக்கிறார். இதையும் மட்டுறுத்தினார்கள் வாசிக்கிறார்கள் என்றே எண்ணுகிறேன். புலிவாந்திக்கு என்று சிலரையும்  தனிமனித வக்கிர எழுத்துக்களுக்கு என்று சிலரையும் யாழ் நிர்வாகமே வளர்க்கிறதோ தெரியவில்லை.  அப்பாவிகளை ஆமியுடன் சேர்ந்து காட்டிக்கொடுத்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களையே நாம் நேரில் பார்த்து வந்திருக்கிறோம். இவற்றை கடந்துபோதில் என்ன பெரிய விக்கனம் இருக்கப்போகிறது? சேரி சேறுகளை கடந்து செல்வதே வாழ்க்கை 

6 hours ago, குமாரசாமி said:

தலைவர் பிரபாகரனின் தனது மாவீரர் உரைகளில் நாசுக்காக ஆசிய பொருளாதார அரசியல் பற்றி சொல்லிவிட்டார். புலிகளின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகள் பின்னடைவு அல்ல பின் வாங்கல்கள். மாறாக முரண்டு பிடித்திருந்தால்  வடபகுதி முழுவதையும் முள்ளிவாய்க்கால் போல் சாம்பலாக்கியிருப்பார்கள்.

இது எனது தனிப்பட்ட கருத்து.

நான் சில பெயர்கள் அவதாரை கண்டாலே மேற்கொண்டு வாசிப்பதில்லை 
கடந்து சென்றுவிடுவேன் நீங்கள் இப்படி எழுதியால் திரும்ப சென்று வாசிக்க நேர்ந்தது.
இதுக்கு நிர்வாகம் என்ன சொல்ல போகிறது என்று அறிய ஆவல் அவ்வளவுதான். 

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, Justin said:

எலிக்குக் கூட ஒரு மின்சார அதிர்ச்சி கொடுத்தால் அடுத்த முறை தொடக் கூடாது என்ற கற்றுக் கொள்ளும் திறன் இருக்கிறது! (அட, நாம் சிறுத்தைகளல்லவா? மறந்து விட்டது! மன்னிக்கவும்)

அண்ணை குறை நினைக்கப்படாது 
அப்போ எதற்கு கருகிப்போகும் அளவுக்கும் சொக் வாங்கியும் இன்னும்  இந்தியாவுக்கு வால்புடிச்சுக்கொண்டு நிக்கினம் பலர்...? எஸ்பேஸலி கூத்தமைப்பு தேசிக்காய்கள்...?  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

14 வருடங்களுக்கு முன்பு... நுணாவினால் பதியப்  பட் ட இணைப்பை, 
தேடி எடுத்துத் தந்தமைக்கு... நன்றி குமாரசாமி அண்ணா.  🙏

 • Thanks 1
Link to comment
Share on other sites

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை குறை நினைக்கப்படாது 
அப்போ எதற்கு கருகிப்போகும் அளவுக்கும் சொக் வாங்கியும் இன்னும்  இந்தியாவுக்கு வால்புடிச்சுக்கொண்டு நிக்கினம் பலர்...? எஸ்பேஸலி கூத்தமைப்பு தேசிக்காய்கள்...?  

அக்னி கேட்டு நான் எப்ப குறை நினைச்சிருக்கிறன்?:grin:

மின்சார அதிர்ச்சி எனும் தண்டனை தவிர்க்க முடியாமல் இன்னொரு வெகுமதியோடு  இணைந்திருக்கும் போது எலி கிடைக்கும் வெகுமதி தாங்க வேண்டிய மின்னதிர்ச்சியை விட பெரிதா சிறிதா எனத் தீர்மானித்து மீண்டும் மீண்டும் போய் முயற்சி செய்யும்! இது தான் நடக்கிறது என நினைக்கிறேன்!

என் கருத்துப் படி இந்தியாவை நிராகரித்து விட்டு எதுவும் செய்யவும் முடியாது.  நான் இந்திய ஆதரவாளர் அல்ல, ஆனால் தெரிந்த பேயை கூடவே வைத்திருக்க வேண்டுமெனக் கருதுகிறேன்.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

தலைவர் பிரபாகரனின் தனது மாவீரர் உரைகளில் நாசுக்காக ஆசிய பொருளாதார அரசியல் பற்றி சொல்லிவிட்டார். புலிகளின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகள் பின்னடைவு அல்ல பின் வாங்கல்கள். மாறாக முரண்டு பிடித்திருந்தால்  வடபகுதி முழுவதையும் முள்ளிவாய்க்கால் போல் சாம்பலாக்கியிருப்பார்கள்.

இது எனது தனிப்பட்ட கருத்து.

எனது அண்ணர் 2000 ஆண்டு வரை அனைத்து கிளிநொச்சியில் இயக்கங்களினதும் பெரும் ஆதரவாளராக பங்களிப்பாளராக இருந்தார். அவரது மகனது வீரச்சாவுக்கு பின்னர் (தற்செயல் வெடி விபத்து - புலிகள் சொன்னது. அவருக்கு வேறு தகவல்கள் கிடைத்தன) 

இதன் பின்னர் சிலகாலம்  சித்தசுவாதீனமற்றவராக இருந்து பின்னர் தெளிந்திருந்தாலும் புலிகளிலிருந்து தள்ளியே இருந்தார்.

நான் 2003 இல் 2 கிழமை கிளிநொச்சியில் அவரது வீட்டில் நின்று ஒவ்வொரு நாளும் காலையில் என்னை மோட்டார் சைக்கிளில் கொண்டு போய் இயக்க அலுவலகத்தில் அவர் விட்டால் அவர் நான் திரும்பி வரும் வரை வெளியிலேயே நிற்பார். அவர்கள் வந்து என்னை கூட்டிக்கொண்டு போனாலும் கொண்டு வந்து விட்டாலும் அவரது வீட்டிற்குள் வரமாட்டார்கள். அந்தளவுக்கு இயக்கம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மரியாதை கொடுத்து இருந்ததை கண்ணால் கண்டவன் நான்.

அவர் முள்ளிவாய்க்கால்வரை இயக்கத்துடன் சென்று இறுதிவரை அங்கு நின்று இறுதியில் வவுனியா காம்பு வரை வந்து வெளியே வந்தவுடன் அவருடன் தொலைபேசியில் பேசினேன்.

அப்போ அவர் சொன்ன ஒரேயொரு விடயம்

தலைவரை நான் ஒருநாள் சந்திப்பேன்

ஒரேயொரு கேள்வி கேட்கணும் அவரிடம் : பின்னகர்த்தி வைத்திருந்த இத்தனை ஆயுதங்களையும் கடைசிவரை நீங்கள் பாவிக்கவே இல்லையே ஏன்???

Edited by விசுகு
 • Like 1
 • Thanks 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புங்கையூரன் said:

ஒண்டு....குமாரசாமியண்ணர் சொன்ன விசயம்.....! உல்லாசப் பயணத் துறை...! அங்குள்ள பவளப் பாறைகளின் அழகு..அவுஸ்திரேலிய பவளப் பாறைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.என்பது அவற்றைப் பார்த்த பின்னரே எனக்குப் புரிந்தது..!

அதே!

பலாலி விமான நிலையத்தையும்  தீவுப்பகுதிகளும் உல்லாச பயணிகளுக்காக மட்டும் அபிவிருத்தியை செய்தால் போதும். சீன உல்லாச பயணிகளே கொட்டோ கொட்டென்று கொட்டுவர். ஆனால் சிங்களம் இதை ஒரு போதும் விரும்பாது. ஆகையால் அனுமதிக்காது. அப்படி  அபிவிருத்தி நிலை வந்தாலும் அவ்விடத்தில் சிங்கள குடியேற்றங்கள் மூலமே பணிகளை தொடர்வர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

மின்சார அதிர்ச்சி எனும் தண்டனை தவிர்க்க முடியாமல் இன்னொரு வெகுமதியோடு  இணைந்திருக்கும் போது எலி கிடைக்கும் வெகுமதி தாங்க வேண்டிய மின்னதிர்ச்சியை விட பெரிதா சிறிதா எனத் தீர்மானித்து மீண்டும் மீண்டும் போய் முயற்சி செய்யும்!

சா ...நான் உந்த எலியை சாதா எலி எண்டெல்லோ நினைச்சுப்போட்டன் ,
உந்த எலி compare பண்ணி சொக் வாங்கும் கடும் எலியாவெல்லவோ இருக்கு, அதுதான் தொடர்ந்து சொக் மட்டும் வாங்கி வாங்கி கிடக்கு போல 

 • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

சா ...நான் உந்த எலியை சாதா எலி எண்டெல்லோ நினைச்சுப்போட்டன் ,
உந்த எலி compare பண்ணி சொக் வாங்கும் கடும் எலியாவெல்லவோ இருக்கு, அதுதான் தொடர்ந்து சொக் மட்டும் வாங்கி வாங்கி கிடக்கு போல 

அக்னி, கூட்டமைப்பு என்ன எலி என்று தெரியாது😄, ஆனால் ஆய்வுகூட எலிக்கு இப்படி punishment Vs reward ஒப்பிடும் இயலுமை இருக்கிறது. அந்த விடயம் உண்மை!

7 hours ago, விசுகு said:

ஒரேயொரு கேள்வி கேட்கணும் அவரிடம் : பின்னகர்த்தி வைத்திருந்த இத்தனை ஆயுதங்களையும் கடைசிவரை நீங்கள் பாவிக்கவே இல்லையே ஏன்???

இதைப் பற்றி பகலவன் என்ற உறவு ஏற்கனவே எழுதியிருக்கிறாரே? ஆயுதங்கள் வரவு கப்பல்கள் தாக்கப் பட்டதால் குறைந்து அதனால் பற்றாக்குறை ஏற்பட்டதாக?

இது விவசாயி விக் பரப்பி வரும் "ஆயுதங்கள் வெளியிடமொன்றில் மறைத்து வைக்கப் பட்டிருக்கின்றன" என்ற சதித்திட்டக் கதையை ஒட்டி வந்த கருத்துப் போல தெரிகிறது!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விவசாயி போன்றவர்கள் தாயகத்துக்கு  வேண்டிய உதவிகளை செய்தவண்ணம் தங்களது நம்பிக்கைகளை வெளிப்படுத்தி இருக்கலாம் அது உண்மையாக இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் அவர்களும் தாயகத்தில் தான் ஆனால் யாரோ சொன்னார்கள் என்று தங்களின் கொள்கைகளை மாற்றி கொள்பவர்கள் கிடையாது அந்த விடயத்தில் விவசாயி விக்கை நினைத்து பெருமைப்படுகிறேன் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

அக்னி, கூட்டமைப்பு என்ன எலி என்று தெரியாது😄, ஆனால் ஆய்வுகூட எலிக்கு இப்படி punishment Vs reward ஒப்பிடும் இயலுமை இருக்கிறது. அந்த விடயம் உண்மை!

இதைப் பற்றி பகலவன் என்ற உறவு ஏற்கனவே எழுதியிருக்கிறாரே? ஆயுதங்கள் வரவு கப்பல்கள் தாக்கப் பட்டதால் குறைந்து அதனால் பற்றாக்குறை ஏற்பட்டதாக?

இது விவசாயி விக் பரப்பி வரும் "ஆயுதங்கள் வெளியிடமொன்றில் மறைத்து வைக்கப் பட்டிருக்கின்றன" என்ற சதித்திட்டக் கதையை ஒட்டி வந்த கருத்துப் போல தெரிகிறது!

உண்மைதான்

நாங்கள் எழுதுவதெல்லாம்  மருண்டவன்  கண்ணுக்கு தெரிவது போலத்தான் தெரியுது  உங்களுக்கு???

ஆனால் புலிகள்  பற்றி வேறு எவராவது கதை  எழுதினால் அது பொன்னால் பொறிக்கப்பட்ட வரலாறு

அல்லது அவரது  கருத்தில்  குறுக்கிட உங்களுக்கு  உரிமையில்லை  என்பீர்கள்

சாதாரணமாக  அண்ணர்  சொன்னார் என்று  எழுதியிருக்கமுடியும்

ஆனால் அண்ணரின் வாழ்க்கையுடன் எழுதியதற்கு  காரணம்

நான்  எழுதினால்  மட்டும் சந்தேகம்  கொள்வீர்கள் என்பதால்  தான்...

Link to comment
Share on other sites

18 minutes ago, விசுகு said:

ஆம், ஏற்கனவே ஆதாரங்களுடன் ஏன் ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என்று உள்ளே இருந்த பலர் எழுதி விட்டனர். அந்தக் காரணங்களை நீங்கள் நம்பாமல் இதை எழுதுகிறீர்களா எனக் கேட்டேன். 

சதித்திட்டக் கதைகளை கேள்விக்குட்படுத்த வேண்டும், இல்லா விட்டால் அவையே பிரதான தலைப்புச் செய்திகளாக மாறி விடும் - இதை ட்ரம்ப் ஆட்சியின் கீழ் கண்டு கொண்டோம்!

10 hours ago, பெருமாள் said:

விவசாயி போன்றவர்கள் தாயகத்துக்கு  வேண்டிய உதவிகளை செய்தவண்ணம் தங்களது நம்பிக்கைகளை வெளிப்படுத்தி இருக்கலாம் அது உண்மையாக இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் அவர்களும் தாயகத்தில் தான் ஆனால் யாரோ சொன்னார்கள் என்று தங்களின் கொள்கைகளை மாற்றி கொள்பவர்கள் கிடையாது அந்த விடயத்தில் விவசாயி விக்கை நினைத்து பெருமைப்படுகிறேன் .

இன்னும் என்ன ஊரில் சாமத்தியப் பட்ட பெண் பிள்ளை மாதிரி வெட்கம் பெருமாள்? 😂நேரே சொல்லுங்கள்.

ஊருக்கு எவ்வளவு யூரோ/டொலர் அனுப்புகிறோம் என்பதைப் பொறுத்தா என்ன மாதிரியான கற்பனைகளை நம்பலாம்/பரப்பலாம் என்று தீர்மானிப்பீர்கள்? இது மேட்டுக் குடித்தனம் இல்லையா?🤔
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

ஆம், ஏற்கனவே ஆதாரங்களுடன் ஏன் ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என்று உள்ளே இருந்த பலர் எழுதி விட்டனர். அந்தக் காரணங்களை நீங்கள் நம்பாமல் இதை எழுதுகிறீர்களா எனக் கேட்டேன். 

உண்மையில் இந்த  ஆயுதங்கள் சார்ந்த  விடயத்தில்  உங்களைப்போலத்தான் எனது நிலையும்

எந்த  திணிப்பையும் நான் செய்யவில்லை

அந்த பதில்  குமாரசாமியண்ணையின்  பதிலோடு  சம்பந்தப்பட்டதால் 

எனது  அண்ணரின் கூற்றை  மட்டுமே  பதிந்தேன்

அது  மட்டுமல்ல 2009 காலப்பகுதி  யாழ் பல்கலைக்கழக மற்றும் யாழ் இளைஞர்களுடன் பேசியபோது 

அவர்களும் இதே  கருத்தை மட்டுமல்ல யாழில் பயிற்சி  அளிக்கப்பட்ட பல ஆயிரம் இளையோரையும் கடைசிவரை  அண்ணை அழைக்கவில்லை  என சொன்னார்கள்

மற்றும்படி எனது கூற்று  தவறெனில் பகலவன் நிச்சயம்  அதை மறுதலிப்பார்

Link to comment
Share on other sites

14 minutes ago, விசுகு said:

இந்த யாழில் பயிற்சி பெற்ற இளைஞர்களை பிரபாகரன் அழைக்கவில்லை என்பதை எழுதும் போது உங்களுக்கு வன்னிக்குள் இளைஞர்கள் கட்டாயமாகப் பிடித்து முன்னரங்கில் விடப் பட்டது நினைவுக்கு வரவில்லையோ? 

அல்லது வாழைப்பழத்தில் ஊசி போல "கட்டாயமாகப் பிடிக்கவில்லை" என்ற செய்தியைக் கசிய விடுகிற நோக்கமோ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

யாழில் பயிற்சி பெற்ற இளைஞர்களை பிரபாகரன் அழைக்கவில்லை

என்பது தான்  எனது  கருத்து

மீதியை விசாரித்து  அறியமுயலுங்கள்

உங்கள்  போன்றவர்களுடன் பேசி  பிரயோசனமில்லை

நன்றி  வணக்கம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

யாழில் பயிற்சி பெற்ற இளைஞர்களை பிரபாகரன் அழைக்கவில்லை

என்பது தான்  எனது  கருத்து

மீதியை விசாரித்து  அறியமுயலுங்கள்

உங்கள்  போன்றவர்களுடன் பேசி  பிரயோசனமில்லை

நன்றி  வணக்கம்

ஊரில் மிச்சம் இருக்கும் தமிழ் இளைஞ்ர்களை இல்லாமல் செய்வதற்கு ஏற்பாடு செய்கிறீர்கள் போல 🙃

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

“அவர்களும் இதே  கருத்தை மட்டுமல்ல யாழில் பயிற்சி  அளிக்கப்பட்ட பல ஆயிரம் இளையோரையும் கடைசிவரை  அண்ணை அழைக்கவில்லை  என சொன்னார்கள்”

இது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என்றே நினைக்கின்றேன். அவ்வாறான ஆயிரக்காண பலர் இருந்திருந்தால் யாழின் மீதான தாக்குதலில் உள்ளிருந்தே பயன்படுத்தியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

யாழ் இளைஞர்களுக்கு பளை எரிமலையில் வைத்து நிசாந்தன் மாஸ்ரரினால் பயிற்சி அளிக்கப்பட்டது உண்மை. 

மக்கள் படை, எல்லாளன் படை என்ற பெயர்களில் அவர்கள் இயங்கினார்கள். 

2000 இன் ஆரம்பத்தில் சாவகச்சேரி வரை முன்னேறி இராணுவம் யாழில் முடங்கிய வேளையில் அப்படியொரு படைப்பிரிவு இருந்து உள்ளிருந்து தாக்கியிருந்தால் யாழை கைப்பற்றி இருக்கமுடியும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

குறைந்தநாட்கள் கொண்ட பயிற்சி மூலம் தயார்படுத்தப்பட்ட போது சில ஊடுருவல்களும் நடந்தன. அவற்றை அப்போது கட்டுப்படுத்தமுடியவில்லை.

ஆஞ்சியர், பாப்பா போன்றவர்களின் வழிநாடாத்தலில் ஏராளமான இளைஞர்கள் பயிற்சியை முடித்திருந்தும் அவர்களை ஒருங்கிணைக்கும் தொடர்பாடலை ஒழுங்காக செய்திருக்கவில்லை.

2006 ஆகஸ்டில் முகமாலை தொடக்கம் எழுதுமட்டுவாள் கிளாலி முன்னரங்கிலும், யாழ் செல்லும் படையணி பூநகரியில் இருந்து அல்லைப்பிட்டி மண்டைதீவில் தரையிறக்கப்பட்டு ஒரு பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

அதேவேளை உள்ளே இராணுவநகர்வுகளை தடுக்க பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்களை நெறிப்படுத்த் தொடர்புகளை ஏற்படுத்தமுடியவில்லை. சகல கைபேசி அலைவரிசைகளும் முடக்கப்பட்டு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. (மாற்றுவழியினை நெறிப்படுத்தாதன் விளைவு).

புலனாய்வுப்பிரிவின் சில தாக்குதல்களை தவிர்த்து பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்களால் எந்த பயனுமற்றுப்போனது.

- ஊடுருவல்

- நெறிப்படுத்தல் தோல்வி 

இவைகாரணமாக அவர்களை கடைசிவரை பயன்படுத்தவே இல்லை. 

அவ்வாறான இளைஞர்களுக்கு சரியான ஆயுதங்கள் ஒழுங்குபடுத்தல்களையும் மேற்கொண்டிருக்கவில்லை.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பகலவன் said:

2006 ஆகஸ்டில் இருந்து 2009 வரை அங்கிருந்தேரை தொடர்பு கொள்ள முடியவில்லையா..?

Link to comment
Share on other sites

என்னால் சில கருத்துகளை மேற்கோள் காட்ட முடியவில்லை என்பதால் தனித்து எழுதுகிறேன்.

விசுகு அண்ணா, 

ஆயுதங்கள் தொடர்பான இதே கேள்விகள் மக்கள் மத்தியில் இருந்தன. எங்களிடமும் கேட்கப்பட்டன. மக்களிடம் ஆயுதங்கள் தொடர்பான புரிதல் இன்மை, புலிகள் பற்றிய மாய கற்பனைகள் கூட காரணமாக இருக்கலாம்.

இவை புலிகளாலேயே இராணுவ புலனாய்வுத்தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். (புரிதல் இன்மை/மாய தோற்றம்).

எதிரியின் படை வலிமையை (ஆள் மற்றும் ஆயுத) தெரிந்து கொள்வது தான் போரில் முதல் உக்தி. அதை தடுக்க புலிகள் பலவாறு முயன்றனர். சில இணையதளங்களை கூட மிகைப்படுத்தலுக்காக பயன்படுத்தினர்.

சரி, அப்போ ஆயுத புரிதலுக்காக மட்டும்  சிலவற்றை சொல்கிறேன். சுடுகருவிகளும் குண்டுகளும்/வெடிபொருட்களும்/எறிகணைகளும் வேறு வேறானவை. போதுமான சுடுகருவிகள் ( இயந்திர துப்பாக்கிகள் முதல் நீண்ட தூர ஆட்டிலெறிகள் வரை) இருந்தாலும் அவற்றை பயன்படுத்த குண்டுகளுக்கு / வெடிமருந்துகளுக்கு / எறிகணைகளுக்கு பற்றாக்குறை இருந்தது. 

சில உள்ளூர் தயாரிப்பு எறிகணைகள் துல்லியமாக தாக்க தவறின. கிபிர்களில் இருந்து விழும் வெடிக்காத குண்டுகளில் இருந்து வெடிமருந்துகள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். மின்சார விளக்குத்தூண்களில் இருந்த இரும்புக்கம்பிகளை எடுத்து துருவி Spring ஆக மிதிவெடிகளில் பயன்படுத்த தள்ளப்பட்டோம். நீண்டதூர எறிகணைகளின் சுடுகருவிகளை எண்ணை தடவி புதைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். காலவதியான விமான எதிர்ப்பு ஏவுகணைகளை உலங்கு வானூர்திக்கு கூட எதிராக பயன்படுத்த முடியவில்லை. கடலில் பயன்படுத்தும் ஆயுதங்களையும் சில விமான எதிர்ப்பு கனரக ஆயுதங்களையும், மொக்கன், சாரை என்ற பெயர்களில் தரைத்தாக்குதல்களில் பயம் காட்ட பயன்படுத்தமுடிந்ததே தவிர அவற்றை தொடர்சியாக பயன்படுத்தமுடியவில்லை.

கடைசிகளம் கடற்கரையை அண்மித்து இருந்தமையால் சில நீண்ட தூர ஆட்டிலெறிகளை மண் அணைகளில் ஏற்றி கிடையாக வேதாளம் என்ற பெயரில் கூட பயன்படுத்தி இருக்கிறோம்.

தொடர்ச்சியான இடப்பெயர்வில் குறைந்த நிலப்பரப்பில் ஆட்டிலெறி எறிகணைகளை நகர்த்தும்போது பல விமான தாக்குதலிகளினால் அழிக்கப்பட்டன. அங்கிருந்த போராளிகளின் தலைமைமிதான பற்றும் மக்களைமீதான பற்றுமே குறைந்த வளத்துடன், உண்ண உணவுக்கூட இல்லாமல் மே நடுப்புகுதிவரை போராட்டத்தை கொண்டு சென்றது. 

இதை நீங்கள் புரிந்துகொள்ளுவீங்கள் என்று நம்புகிறேன் 

38 minutes ago, MEERA said:

2006 ஆகஸ்டில் இருந்து 2009 வரை அங்கிருந்தேரை தொடர்பு கொள்ள முடியவில்லையா..?

ஊடுவல்களை அடையாளப்படுத்த முடியவில்லை, ஆயுத வளங்கலில் இருந்த குறைபாடு, பயற்சி பெற்ற இளைஞர்களின் பயம், உணர்வான இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு படுகொலைசெய்யப்படிருந்தமை, நெறிப்படுத்தல் இன்மை போன்றவை தான் அவர்களை பயன்படுத்தாமைக்கான காரணங்கள்.

இவைதவிர பெரும்பாலான மறைமுக/புலனாய்வு உறுப்பினர்கள் சகல மாவட்டங்களில் இருந்தும் வன்னிக்கு அழைக்கப்பட்டு இறுதி யுத்தத்தில் களமாடி மடிந்தார்கள். 

Edited by பகலவன்
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகலவன்.

முன்னரும் இந்த விளக்கங்களைக் கொடுத்திருந்தீர்கள் என்று நினைவில் உள்ளது.

ஆயுதக் கப்பல்கள் இல்லாமல், வழங்கல் இல்லாமல் இறுதிக்காலத்தில் பற்றரி கூட இல்லாமல், ஏன் சயனைட் கூட இல்லாத நிலையில்தான் யுத்தம் நடந்தது. இவையெல்லாம் ரணில் பிரதமராக வந்தபோதே ஏற்படுத்திய சர்வதேச வலைப்பின்னலின் காரணமாகவும், புதிய ரீம் வழங்கல்களை செய்ய வெளிக்கிட்டதும், பழைய ரீமில் இருந்தவர்கள் சிலர் மற்றப்பக்கம் போனதும் என்று பல காரணங்கள் சொல்லலாம். 

தலைவரும் பொட்டரும் பல்லாயிரம் போராளிகளும் அர்ப்பணிப்புடன் போராடி வீரச்சாவடைந்தார்கள் என்பதுதான் வரலாறு. 
 
“If you win, you need not have to explain...If you lose, you should not be there to explain!” 
― Adolf Hitler

 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!