Jump to content

ஏழு பேர் விடுதலையில் தாமதம் ஏன்? பேரவையில் முதல்-அமைச்சர் பழனிசாமி விளக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு பேர் விடுதலையில் தாமதம் ஏன்? பேரவையில் முதல்-அமைச்சர் பழனிசாமி விளக்கம்

ஏழு பேர் விடுதலையில் தாமதம் ஏன்? பேரவையில் முதல்-அமைச்சர் பழனிசாமி விளக்கம்

 

சென்னை,

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

ஏழு பேர் விடுதலை விஷயத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை திமுக பரப்பி வருகிறது. 2018 ஆம் ஆண்டு 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுவை கருணாநிதி அமைச்சரவை நிராகரித்தது. மூவரின் தண்டனையை குறைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதிமுக தீர்மானத்தினை எதிர்த்து அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தான்  ஏழு பேர் விடுதலை பாதிக்கப்பட்டது.

இவர்களின் விடுதலை குறித்து திமுக அரசியல் நாடகம் நடத்தி வருகின்றது. நான் ஆளுநரை சந்திக்கும்போதெல்லாம்  ஏழு பேர் விடுதலை குறித்து வலியுறுத்துகிறேன். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும். 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் பழனிசாமி கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/02/04141631/Why-the-delay-in-the-release-of-seven-people-chiefMinister.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுவை கருணாநிதி அமைச்சரவை நிராகரித்தது.

 

1 hour ago, உடையார் said:

அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தான்  ஏழு பேர் விடுதலை பாதிக்கப்பட்டது.

 நினைவு படுத்தனும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7 பேர் விடுதலை, ஆளுநர் நிராகரிப்பு

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் 161 இன்படி தமிழக சட்டசபையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மீது ஆளுநர் எந்தவித முடிவையும் எடுக்காமல் இருந்தார். இதனிடையே பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு முதலில் வாதிட்டது. பின்னர், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது, தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்தனர். ஆனால், உச்ச நீதிமன்றம் ஆணையட்டு 12 நாட்களாகியும் தமிழக அரசின் பரிந்துரை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை சட்டத்திற்கு உள்பட்டு மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என இன்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/governor-banwarilal-purohit-rejects-7-tamil-release/articlecontent-pf519797-411030.html

Link to comment
Share on other sites

4 hours ago, பெருமாள் said:

 

 நினைவு படுத்தனும் .

நிச்சயமா நினைவு படுத்தணும். ஈழத்தமிழரின் உரிமை போராட்டத்தை பாதித்த ஒவ்வொரு போராட்ட நடவடிக்கைகளும்,  அரசியல் தீர்மானங்களும் நிச்சயம் நினைவு படுத்தப்பட வேண்டியவையே. 👍 நன்றி பெருமாள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நிச்சயமா நினைவு படுத்தணும். ஈழத்தமிழரின் உரிமை போராட்டத்தை பாதித்த ஒவ்வொரு போராட்ட நடவடிக்கைகளும்,  அரசியல் தீர்மானங்களும் நிச்சயம் நினைவு படுத்தப்பட வேண்டியவையே. 👍 நன்றி பெருமாள். 

நிச்சயமாக. 

அது மட்டுமல்ல, போராட்டத்திற்கு எம்முள்ளே இருந்து குழிபறித்தோரையும், இப்போதும் குழிபறிப்போரையும் நினைவுபடுத்தவும் அடையாளம் காணவும் வேண்டும் .

Link to comment
Share on other sites

23 minutes ago, Kapithan said:

நிச்சயமாக. 

அது மட்டுமல்ல, போராட்டத்திற்கு எம்முள்ளே இருந்து குழிபறித்தோரையும், இப்போதும் குழிபறிப்போரையும் நினைவுபடுத்தவும் அடையாளம் காணவும் வேண்டும் .

உண்மைகளை  வரவேற்கும் உங்கள் கருத்தை மனதார வரவேற்கிறேன். விடுதலைப் போராட்டத்தின் அரப்பணிப்புகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சிக்கும் அனைத்து தவறான விடயங்களும்  வெளிப்படையாக மக்களிடம் போய்சேர்வது நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

உண்மைகளை  வரவேற்கும் உங்கள் கருத்தை மனதார வரவேற்கிறேன். விடுதலைப் போராட்டத்தின் அரப்பணிப்புகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சிக்கும் அனைத்து தவறான விடயங்களும்  வெளிப்படையாக மக்களிடம் போய்சேர்வது நல்லது. 

உண்மை.

ஆனால் தியாகங்களுக்கு சேதாரம் இல்லாமல், பக்கச்சார்பற்று..நேர்மையுடன், எதிர்காலத்தை நோக்கி.. 👍

Link to comment
Share on other sites

6 minutes ago, Kapithan said:

உண்மை.

ஆனால் தியாகங்களுக்கு சேதாரம் இல்லாமல், பக்கச்சார்பற்று..நேர்மையுடன், எதிர்காலத்தை நோக்கி.. 👍

நிச்சயமாக.  தியாகங்களுக்கு எப்போதும் தலை வணங்க வேண்டும். ஆனால் தியாகங்களின் பின்னால் அரசியல் தவறுகளை மறைப்பது எமக்கே  பாரிய பின்னடைவை கொடுக்கும்  என்பதையே வலியுறுத்துகிறேன்.  அப்படியான விசுவாசங்களை அடியோடு ஒழிப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுவர் விடுதலை நிராகரிப்பு நாடகம் அம்பலம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகு 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட எழுவரையும் விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உண்டு என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ள விவகாரம் தாமதமாக தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் சட்டரீதியாக பல போராட்டங்களை நடத்திய பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக ஆளுநர் தன் முடிவை அறிவிக்க வேண்டும் என ஏழு நாள் கெடு விதித்திருந்தது. தமிழக அரசு எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த கெடு கடந்த வாரம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி குடியரசு தின விழாவின் போதும், 30-ஆம் தேதி நேரடியாகவும் தமிழக முதல்வர் ஆளுநரைச் சந்தித்தார். ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என 30-ஆம் தேதி ஆளுநருடனான் சந்திப்பின் பின்னர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஆனால் குடியரசு தினத்திற்கு முன்பே எழுவரின் விடுதலை தொடர்பான கோரிக்கையை நிராகரித்த ஆளுநர் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி விட்டார். இந்த கடிதம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

இன்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநரின் பதிலை மத்திய அரசு மனுவாக தாக்கல் செய்ய இந்த விவகாரம் வெளியில் வந்துள்ளது. ஆளுநர் எழுதியுள்ள கடிதத்தில் ஆபத்தான பல விஷயங்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 2011-ஆம் ஆண்டு முதல் இந்த விவகாரத்தை வைத்து அதிமுக அரசு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது.
 

https://inioru.com/எழுவர்-விடுதலை-நிராகரிப்/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

நினைவு படுத்தனும் .

ஒன்றை கூட உருவாக்காதவர்கள்
ஒன்றைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்: தமிழக ஆளுநர்

 
tamil-Governer-696x435.jpg
 6 Views

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல காலமாக தமிழகத்தை சேர்ந்த பல கட்சிகள் கோரி வருகின்றன. இது குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் கொடுத்திருந்தது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இது குறித்த முடிவை தமிழக ஆளுநர் இன்னும் எடுக்கவில்லை.

இதேவேளை 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தார். மேலும், இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என ஆளுநர் தரப்பு கூறியுள்ளது.

முன்னதாக, பேரறிவாளனின் விடுதலை பற்றிய மாநில அரசின் 2018 பரிந்துரை குறித்து தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்  மூன்று – நான்கு நாட்களில் முடிவு செய்வார் என்று உச்ச நீதிமன்றத்திடம் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன் ஆளுநர் இது குறித்து முடிவெடுக்கலாம் என கூறிய நிலையில், ஆளுநர் மீண்டும் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உண்டு என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=41369

Link to comment
Share on other sites

7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத்தலைவர் நல்ல முடிவை எடுப்பார் -அமைச்சர் ஜெயக்குமார்

 

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/asasassa-720x430.jpg

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவர் விரைந்து நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரிக்கவில்லை எனவும், அதற்கான அதிகாரம் படைத்தவர் குடியரசு தலைவர் என்ற கருத்தை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

 

7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத்தலைவர் நல்ல முடிவை எடுப்பார் -அமைச்சர் ஜெயக்குமார் | Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழு பேர் விடுதலை தொடர்பில் சட்டரீதியான ஆலோசனைக்குப் பின் முடிவு -அமைச்சர் சி.வி.சண்முகம்

 
1-44.jpg
 26 Views

ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுத்து அறிவிப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,   இந்த விவகாரம் குறித்து  குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது அவர் முடிவெடுப்பார் என்று ஆளுநர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம்சுமத்தப்பட்டு சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் விடுதலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்டரீதியான ஆலோசனைக்குப் பின் முடிவெடுக்கப்படும் என  அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

 கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் எனத் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இது வரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதனிடையே, தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு கடந்த ஜன.21-ம் திகதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார்’ என்று மத்திய அரசு உறுதியளித்தது.

இதையடுத்து, பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று  உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் ஆளுநர் சார்பில் பதிலளிக்கப்பட்ட போது, எழுவர் விடுதலை குறித்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் பதில் அளித்துள்ளார். இது குறித்து சட்டரீதியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டரீதியான ஆலோசனை பெற்ற பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்”  என்றார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=41442

 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.