Jump to content

`2,000 கார்கள்; ஹெலிகாப்டரில் மலர் தூவல்!’ -சசிகலாவை வரவேற்கத் தயாராகும் ஆதரவாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`2,000 கார்கள்; ஹெலிகாப்டரில் மலர் தூவல்!’ -சசிகலாவை வரவேற்கத் தயாராகும் ஆதரவாளர்கள்

சசிகலா

சசிகலா

ஒரேநேரத்தில் முதல்வரும் சசிகலாவும் நேருக்கு நேர் வேலூரைக் கடப்பது தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை மூலம் முதல்வரின் கவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

பெங்களூரில் ஓய்வெடுத்துவரும் சசிகலா நாளை மறுநாள் (8-ம் தேதி) வேலூர் மாவட்டம் வழியாகச் சென்னை திரும்புகிறார். 7-ம் தேதியன்றே சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் சசிகலாவின் பயணத் திட்டம் 8-ம் தேதிக்கு திடீரென மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. 8, 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வேலூர் வரவிருந்தார். எடப்பாடி பழனிசாமி முன்பு தனது அரசியல் பலத்தைக் காட்ட விரும்பிய சசிகலா பயணத் திட்டத்தை 8-ம் தேதி மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சசிகலாவின் வரவேற்பைத் திருவிழாவைப்போல் கொண்டாட அ.ம.மு.க-வினர் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்கள். 8-ம் தேதி காலை பெங்களூருவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுக்க சசிகலா புறப்படுகிறார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தமிழக எல்லையான ஓசூரில் திரண்டு சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவிருக்கிறார்கள்.

சசிகலா டிஸ்சார்ஜ் ஆனபோது...
 
சசிகலா டிஸ்சார்ஜ் ஆனபோது...

அங்கிருந்து கிருஷ்ணகிரி, பர்கூர், வாணியம்பாடி டோல்கேட், ஆம்பூர் நகரம் வரை மேளதாளங்களுடன் கோலாகலமான வரவேற்பு அளிக்கவும் அ.ம.மு.க-வினர் திட்டமிட்டிருக்கிறார்கள். தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபன், மாதனூரை அடுத்துள்ள கூத்தம்பாக்கத்தில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி சசிகலாவை வரவேற்கவிருக்கிறார். இதற்கான அனுமதி கேட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் மனு கொடுத்திருக்கிறார். ஜெயந்தி பத்மநாபன் வாடகைக்கு எடுக்கவிருக்கும் ஹெலிகாப்டரின் டிராவல் ஏஜென்சி நிறுவனம் கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரில் செயல்பட்டுவருகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்கவிருக்கிறார். ஒரு மணி நேர வாடகை 80,000 ரூபாய் என ஜெயந்தி பத்மநாபன் தெரிவித்திருக்கிறார். அப்படியெனில், இரண்டு மணி நேரத்துக்கு சுமார் 1,60,000 ரூபாய் வாடகை செலுத்தி ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவுகிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

தொடர்ந்து, கந்தனேரி மற்றும் வேலூர் மாநகரிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வேலூர் வழியாகத் தொடர்ந்து பயணிக்கும் சசிகலாவுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, கத்திப்பாரா என வழிநெடுகிலும் அதிரவைக்கும் வேட்டுகளுடன் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அ.ம.மு.க நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்கள். சென்னை சென்றடைவதற்குள் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் சசிகலாவைப் பின்தொடர்ந்து அணிவகுத்துச் செல்லும் என்றும் அ.ம.மு.க-வின் மாநில நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர். அதேபோல், முதல்வரை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளையும் அ.தி.மு.க-வினர் தடபுடலாகச் செய்துவருகின்றனர். அசாதாரண சூழலில் ஒரே நேரத்தில் முதல்வரும், சசிகலாவும் நேருக்கு நேர் வேலூரைக் கடப்பது தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை மூலம் முதல்வரின் கவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதையடுத்து, முதல்வரின் பயணத் திட்டம் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. சசிகலா சென்ற பின்னர் 9-ம் தேதியன்று காலை 9:30 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்துக்கு வருகிறார் முதல்வர் பழனிசாமி. இரண்டாவது பாயின்ட்டாக சோளிங்கரில் நடைபெறும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடன் அரை மணி நேரம் கலந்துரையாடுகிறார். பின்னர், ராணிப்பேட்டை முத்துக்கடைப் பகுதியில் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார்.

அதை முடித்துக்கொண்டு மதியம் வேலூரிலுள்ள பென்ஸ் பார்க் ஹோட்டலுக்கு வந்து உணவருந்துகிறார். இந்த ஹோட்டல், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்குச் சொந்தமானது. சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் பள்ளிகொண்டாவில் மகளிர் குழுவினருடன் கலந்துரையாடிவிட்டு கே.வி.குப்பத்தில் நடைபெறும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்துகொள்கிறார்.

தொடர்ந்து, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் தொகுதியான காட்பாடியில் முதல்வர் பழனிசாமிக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கிறார்கள். அங்கு துரைமுருகனுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்கும் முதல்வர் பழனிசாமி, மாலையில் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசவிருக்கிறார். மறுநாள் 10-ம் தேதி காலை முதல் மதியம் வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். சலசலப்பு, சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காமல் சசிகலாவுக்கு வழிவிட்டு பிரசார தேதியை முதல்வர் மாற்றியிருப்பது, அ.தி.மு.க-வினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

https://www.vikatan.com/news/politics/supporters-gears-up-welcoming-sasikala-to-tamilnadu

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 முக்கிய கட்சிகளின் பார்வையில்... சசிகலாவின் ரீஎன்ட்ரி!

spacer.png

 

சென்னைக்கு நாளை சசிகலா வரும்போது வரவேற்பு எப்படியிருக்கும், வந்து அவர் என்ன பேசப்போகிறார் என்று தமிழகமே தடதடத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது, சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்கக்கூடாது என்று ஆளும்கட்சி தரப்பில் தமிழக காவல்துறை தலைமைக்கு மனுவுக்கு மேல் மனுக்கள் குவிக்கப்படுகின்றன. அதனால் பேரணி நடக்குமா, நடக்காதா, சசிகலாவின் எதிர்வினை எப்படியிருக்குமென்று யூகங்கள் றெக்கை கட்டுகின்றன. நாளை அவர் சென்னைக்கு வரும்போதே, அவருடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வு எந்த திசையிலிருக்கும் என்பது தெரிந்துவிடும்.

அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்...

சசிகலா குறித்தும், அவருடைய வருகை ஏற்படுத்தும் அதிர்வுகள் குறித்தும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பு இருக்கும். அதுதான் அரசியல் பார்வை. அதன் அடிப்படையில்தான், அந்தக் கட்சிகளின் அடுத்தடுத்த நடவடிக்கைகளும் இருக்கும். அந்த வகையில், அதிமுகவிலும், திமுகவிலும், அதிமுகவை மறைமுகமாக இயக்குவதாக பலராலும் சுட்டிக்காட்டப்படும் பாரதிய ஜனதாவிலும் சசிகலாவைக் குறித்து நடக்கும் விவாதங்கள் எப்படியிருக்கின்றன என்பது பற்றி, இந்த மூன்று கட்சிகளிலும் உள்ள பல்வேறு சீனியர்கள், கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் என பலரிடமும் கருத்துகளைக் கேட்டோம். ஒரே கட்சியில் இருக்கும் பலர் கூறும் கருத்துக்களிலும் சின்னச்சின்ன முரண்பாடுகள் இருந்தாலும், அந்தக் கட்சியினரின் பொதுப்பார்வை இதுதான் என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகத் தெரிய வந்திருக்கிறது.

முதலில் அதிமுகவில் என்ன நினைக்கிறார்கள்...

சசிகலா மீண்டும் வரும்போது, கட்சிக்குள் பெரும் முட்டல், மோதல் வெடிக்குமென்று வெளியில் இருக்கும் பலரும் நினைக்கிறார்கள். கட்சிக்குள் இப்போது வரை அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஏன் இல்லை என்பதற்கு கட்சி நிர்வாகிகள் சொல்லும் காரணமும் நம்பும்படியாகத்தான் இருக்கிறது.

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் இந்த நிலையை அடைவதற்கு சசிகலாவும் ஒரு முக்கியப் படியாக இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அதற்கு முன்னும் அவர்கள் கட்சிக்காக அடிமட்டத்திலிருந்து உழைத்தவர்கள்தான். சசிகலா செய்த உதவிக்கு ஈடாக அவர்கள் ஏற்கெனவே நிறையச் செய்துவிட்டார்கள். இதை இரண்டு தரப்புமே மறுக்கமுடியாது. அம்மா இருக்கும்வரை, சீட் வாங்குவதில் இருந்து ஒவ்வொரு மாதமும் சசிகலாவின் குடும்பத்தினரான தினகரன், திவாகரன், வெங்கடேஷ், ராவணன் என பல்வேறு அதிகார மையங்களுக்கும் அவர்கள் கையும் கட்டி, கப்பமும் கட்டி பணிவிடை செய்தார்கள். எத்தனையோ தருணங்களில் மிகவும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோரும் அன்பு காட்டியதும் அச்சப்பட்டதும் அம்மாவுக்குதான். ஆனால் அவரை திரை மறைவிலேயே வைத்திருந்து, அவருடைய அதிகாரத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு இவர்களே கட்சியையும் ஆட்சியையும் ஆக்கிரமித்தார்கள். ஆனால் கடந்த நான்காண்டுகளாக முதல்வர், அமைச்சர்கள் உட்பட அனைவரும் மிகப்பெரிய சுதந்திரத்துடன் வலம் வருகிறார்கள். சம்பாதிப்பதில் கட்சிக்கும் கொஞ்சம் கொடுக்கிறார்கள்; கெளரவமாக வலம் வருகிறார்கள். இப்போது அம்மாவே இல்லை என்ற நிலையில், இவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து சேர்ப்பது தேவையில்லாத வேலை; வம்பை விலை கொடுத்து வாங்குகிற விஷயம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்’’ என்றார்கள்.

இப்படிச் சொன்னவர்களிடம், சசிகலாவைப் புறக்கணிப்பது அவருடைய சமுதாயத்தைப் புறக்கணிப்பதாக ஆகிவிடாதா என்று கேட்டதற்கு, ‘‘இதற்குத்தான் ஓபிஎஸ் மிகவும் கோபப்படுகிறார். அவர்கள் மட்டும்தான் சமுதாயமா, நானில்லையா என்று கேட்கிறார். அவர்களால் நான் அவமானப்படுத்தப்பட்டபோது சமுதாயம் பார்த்தா அவமானப்படுத்தினார்கள் என்பதுதான் அவரின் கேள்வி’’ என்றார்கள். பழைய வீடியோக்களைப் போட்டு, ‘துரோகிகள், நன்றியில்லாதவர்கள்’ என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவது பற்றியும் நாம் கேட்கத் தவறவில்லை. அதற்கும் அவர்கள் பதில் சொல்கிறார்கள்...

‘‘அம்மாவுக்கு இவர்கள் செய்யாத துரோகமா, அந்தச் சம்பவங்களை இப்போது வெளியில் சொன்னாலும் அந்தக் குடும்பத்தினரால் பதிலே பேசமுடியாது’’ என்று நம்மையே அதிர வைக்கிறார்கள்.

அதிமுக தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு பத்திரிக்கையாளர், இந்த வாதங்களில் உண்மை இருப்பதை ஒப்புக்கொண்டதோடு, முத்தாய்ப்பாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.

 

‘‘இந்த நான்காண்டுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒரு தலைவனாக உருவாக்கிக் கொள்ள நிறையவே உழைத்திருக்கிறார்; அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். இதற்கு மேல் ஆட்சியே போனாலும் அவரால் மற்றவர்களுக்கு அடிபணிந்து போவது என்பதை கற்பனை செய்யவே முடியாது. அதுதான் சசிகலாவுக்கு ரீஎன்ட்ரி கொடுக்கவே கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கக் காரணம். பன்னீரைப் பொருத்தவரை, சசிகலாவுக்கு மீண்டும் சேவகம் செய்வதை விட இப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற கெளரவத்தையே தக்க வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமியோடு ஒத்துப்போவதே தனக்கும் நல்லது என்று நினைக்கிறார்!’’ என்று புட்டு வைத்தார்.

ஆக, சசிகலா தரப்புடன் மறைமுகமான தொடர்பில் இருப்பதுபோலவும், சமுதாயரீதியாக பற்றுதலுடன் இருப்பது போலவும், அரசியல் அங்கீகாரம் கொடுத்ததற்காக நன்றியுடன் இருப்பது போலவும் சில அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் காட்டிக்கொள்வதில் உண்மை ஏதுமில்லை என்பது புரிகிறது. சசிகலாவை இப்போதல்ல; இனி எப்போதுமே அதிமுக தலைமை ஏற்குமா என்பது சந்தேகமே.

அடுத்து திமுகவைப் பார்ப்போம்...

நிச்சயம் முடிந்து திருமண நாளுக்குக் காத்திருக்கும் மணமக்களைப் போல, தேர்தல் முடிவு நாளுக்காக ஆவலோடு காத்திருக்கும் உடன்பிறப்புகளுக்கு, அதிமுகவில் நடக்கும் அத்தனை குழப்பங்களும் அல்வாதான். சசிகலாவை அதிமுக தலைமை ஏற்க மறுக்கிறது என்பது அவர்களுக்குள் இன்னும் உற்சாகத்தைத் தந்துள்ளது. தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் அதிமுக வாக்குகளைப் பிரிப்பதற்கு சசிகலாவும், தினகரனும் நிச்சயம் உதவுவார்கள் என்பதுதான் இந்த உற்சாகத்திற்குக் காரணம்.

அதற்கேற்ப இப்போது சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் சென்னைக்குள் சசிகலா வந்ததும் பேரணியில் ஒரு கலவரம் வெடிக்கும். அப்படியே நடக்காவிட்டாலும், முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக சசிகலா ஏதாவது அதிரடியாகச் சொல்வார்; அதை வைத்து கட்சிக்குள் மிகப்பெரிய களேபரம் வெடிக்கும். மதுரையிலும், தஞ்சாவூரிலும் அதிமுகவினரால் ஓட்டுக்கேட்டுப்போகவே முடியாது. அது திமுக வெற்றிவாய்ப்பை இன்னும் பிரகாசமாக்கிவிடும்...இதுதான் திமுகவிற்குள் இருக்கும் எதிர்பார்ப்பு!

கேமராவை டெல்லிப்பக்கம் திருப்புவோம்....பாரதிய ஜனதா என்ன நினைக்கிறது...

இந்தத் தேர்தலில் அதிமுகவிடமிருந்து குறைந்தபட்சம் 60 சீட்டுகளையாவது வாங்கிவிட வேண்டுமென்று, ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்திருந்த பாரதிய ஜனதாவுக்கு, அதை அழுத்திக் கேட்பதில் சில நெருடல்கள் இருந்தன. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீரும் பாரதிய ஜனதா தலைமைக்கு யார் அதிக நெருக்கம் என்பதைக் காட்டிக்கொள்வதற்கு ரொம்பவே மெனக்கெடுபவர்கள். மத்திய அரசின் எல்லாத் திட்டங்களையும் ஆதரித்தாலும் தேர்தல் என்று வரும்போது, 60 சீட்டுகளைக் கொடுப்பதற்கு ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தது பாஜக தலைமை. அவர்களுக்குக் கிடைத்த தகவலின்படி, அதிமுக கூட்டணியில் 40 சீட்கள் கிடைப்பதே கஷ்டம் என்ற நிலைமைதான் இருந்தது.

ஆனால் சசிகலா இப்போது வந்திருப்பதால், ‘கண்டிப்பாக 60 சீட்கள் வேண்டும். இல்லாவிட்டால் அமமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சசிகலாவை பரப்புரைக்குப் பயன்படுத்துவோம்’ என்று இப்போது மிரட்டியே 60 சீட்களைக் கேட்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சசிகலாவுக்கு பழைய விவகாரங்கள் எல்லாம் தெரியும் என்பதால், அவரும், மத்திய அரசின் அதிகாரத்துறைகளும் சேரும்போது தங்களுக்கு பலவிதமான சிக்கல்கள் வருமென்று தெரிந்து கேட்கும் சீட்டுகளை அதிமுக தலைமையில் கொடுத்துவிடுவார்கள்...இப்படித்தான் பாரதிய ஜனதாவின் தமிழகத் தலைவர்கள் பலரும் தாறுமாறாக கணக்குப்போடுவதாகத் தகவல்கள் வருகின்றன. டெல்லியின் கண்ணசைவுகளும் இந்த கணக்கிற்குக் காரணமாயிருக்கலாம்.

இப்படியாக...சசிகலா வருகையை வைத்து, ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு விதமான கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களின் மனக்கணக்குதான் என்னவாயிருக்கப் போகிறதோ?
 

https://minnambalam.com/politics/2021/02/07/17/sasikala-what-ADMK-DMK-BJP-views

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1612783309266747-0.png
அது வேறொன்றுமில்லை, சசியை கொண்டாட வேண்டும் என்பது இப்போதைக்கு பாஜக நம் ஊடகங்களுக்கு கொடுத்துள்ள புரோஜெக்ட். இதன் மூலம் 1) எடப்பாடியை கட்டுப்படுத்தலாம், 2) அதிமுக எதிர்ப்பு வாக்குகளை அமமுகவுக்கு கொண்டு வந்து அணை கட்டலாம் எதிர்பார்க்கிறார்கள். ரவீந்திரன் துரைசாமி போன்றவர்கள் இதை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் 'மோடி எதிர்ப்பு வாக்குகள்' அமமுகவுக்கு வரும் என ஜல்லியடிக்கிறார்கள். இன்னொரு பக்கம் திமுக ஆட்சிக்கு வரவே கூடாது என தம் பிடிப்பவர்களும் சசியை கொண்டாட முனைகிறார்கள். 
 
சொல்புத்தி சுயபுத்தி எவையுமே இல்லாதவை நம் ஊடகங்கள். கடந்த ஓராண்டில் மட்டும் பாஜக தலைமை நம் ஊடக தலைமை எடிட்டர்களிடம் எவ்வளவு முறை பேசியிருக்கிறார்கள் , என்னென்ன நிதியுதவிகள் செய்திருக்கிறார்கள்  அம்பலப்படுத்தினால் இது உறுதியாகி விடும். நான் சொல்வது செய்தி சேனல்களை மட்டுமல்ல சுயாதீன ஊடகம் எனும் பெயரில் வரும் சில யுடியூப் சேனல்களையும் தான். விஜயகாந்த் பாணியில் இவர்களுக்கு பதில் சொல்லுவதே தகும்! 
 
ஊடகங்களுக்கு வெளிப்படையான அரசியல் இருக்கலாம். தப்பில்லை. நான் ரிபப்ளிக் டிவியை, மதன் டைரியை ஏற்பேன். ஆனால் 'புரோக்கர்' சேனல்கள் அருவருக்கத்தக்கவை. அவை மக்களை குழப்பும் நோக்கிலேயே செயல்படுபவை.
 
இனி அதிஷா சொல்லி இருப்பதைப் படியுங்கள்.
 
"சசிகலா வருகையை திருவிழா போல கொண்டாடுகின்றன ஊடகங்கள். ஒரு ஊழல் குற்றவாளியின் வருகையை மாஸ் ஹீரோவுக்கான பில்டப்போடு இதுவரை உலகில் யாருமே இப்படி ரிப்போர்ட் பண்ணியிருக்க மாட்டார்கள். எநத தொ.கவிலும் சசியின் ஊழல் பற்றி யாருமே மூச்சுகூடவிடவில்லை. அதுதானே அவர் கடந்துவந்த பாதை. ஊடகங்கள் அதைப்பற்றியும் தானே பேசவேண்டும்.  ஆனால் என்னமோ தமிழகத்தை மீட்க வரும் வொன்டர்வுமன் போல பில்டப் கொடுத்துக்கொண்டிருப்பது அருவருப்பானது."

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்: மௌனம் கலைத்த சசிகலா

 
spacer.png

பெங்களூருவிலிருந்து சென்னை வந்து கொண்டிருக்கும் சசிகலா அடக்குமுறைக்கு நான் அடிபணியமாட்டேன் என்று கூறி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மௌனம் கலைத்துள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையான சசிகலா இன்று சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கிருஷ்ணகிரி கத்திகுப்பத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்புக்கு நான் அடிமை, தமிழ் பண்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை, இந்த தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை, ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன் என்று தெரிவித்தார்.

 

அப்போது தீவிர அரசியலில் ஈடுபடுவீர்களா, என்ற கேள்விக்கு நிச்சயமாக என்று பதிலளித்தார். அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக அமைச்சர்கள் புகார் கொடுத்தது தொடர்பான கேள்விக்கு, அது அவர்களின் பயத்தை வெளிப்படுத்துகிறது என்றார்.

ஜெயலலிதா நினைவிடம் எதற்காக மூடப்பட்டது என்று தெரியும் என கூறிய சசிகலா, விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன், அப்போது விரிவாக பேசுகிறேன் என காரில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசினார்.

"அதிமுக பல சோதனைகளை சந்தித்த போதும் பீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டு வந்துள்ளது. புரட்சித்தலைவி வழிவந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே எனது விருப்பம்" என்றும் குறிப்பிட்டுள்ளார் சசிகலா.

 

https://minnambalam.com/politics/2021/02/08/43/sasikala-speaks-in-krishnagiri

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2021 at 12:42, உடையார் said:

`2,000 கார்கள்; ஹெலிகாப்டரில் மலர் தூவல்!’ -சசிகலாவை வரவேற்கத் தயாராகும் ஆதரவாளர்கள்

எப்படித்தான் பார்த்தாலும் இவர் ஒரு ஊழல் மற்றும் பொதுமக்களின் சொத்துக்களுக்கு சொந்தக்காரி. வெளிநாடுகளில் இப்படியானவர்களின் மரணச்செய்திகூட வெளியில் வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எப்படித்தான் பார்த்தாலும் இவர் ஒரு ஊழல் மற்றும் பொதுமக்களின் சொத்துக்களுக்கு சொந்தக்காரி. வெளிநாடுகளில் இப்படியானவர்களின் மரணச்செய்திகூட வெளியில் வராது.

இவவை விட படுமோசமானது திமுக சொந்த இனம் தமிழ் இனம் என்று சொல்லி சொல்லியே இனத்தை கருவறுத்தவர்கள் அநேகமா இந்தமுறை திமுக வராவிட்டால் நேரே சங்குதான் இரண்டாய் மூன்றாய் உடைவார்கள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.