லீ வெண்லியாங்: கொரோனா வைரஸ் குறித்து உலகை எச்சரித்த சீன மருத்துவர் இறந்து ஓராண்டு நிறைவு
-
Tell a friend
-
Topics
-
Posts
-
ஓ அப்படியா செய்து பார்க்கத்தான் வேண்டும். நன்றி sir உண்மைதான் இப்ப பெண்களைவிட ஆண்களிற்குத்தான் நிறைய சமையல் முறைகள் தெரிந்திருக்கு...
-
அன்று நாம் ஆசிரியர்களின் காலில் விழுந்து கும்பிடவில்லை.ஓரளவு மரியாதையுடன் வாழ்ந்தோம்.ஆசிரியர்கள் ,அதிபர்கள் தங்களை விழுந்து கும்பிட அனுமதிக்கவும் இல்லை .ஆனால் இன்று மேடைகளில் ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்பார்க்கின்றனர் விழுந்து கும்பிட வேணும் என்று.
-
By பசுவூர்க்கோபி · பதியப்பட்டது
இயற்கையே மாறிப்போச்சு..! ********************* கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி கால் பாகம் தரையே இங்கு இயற்கையின் செழிப்பு எல்லாம் ஏன் தானோ விறகாய் போச்சு பாரெல்லாம் வெய்யில் வெக்கை பாலைவனம்போல் காயும் தேசம் நீரெல்லாம் வற்றித்தானே-எம் நிலமெல்லாம் புழுதியாச்சு மழைவந்து கொட்டித் தாக்கும் மரமெல்லாம் காற்றால் சாயும் நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய் நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும். விஞ்ஞானம் உயர்ந்ததாலே விண் மேகம் கீழேயாச்சு சந்திரனில் கால் பதித்து—பூமி சரித்திரமே பின்னால் போச்சு நெருப்போடு நீரும் காற்றும் நிலத்தோடு ஆகாய ஐம்பூதம் அத்தனையும் எம்முள் வைத்தே அகிலமே எம் உடலாய்யாச்சு இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே. அன்புடன் -பசுவூர்க்கோபி- -
By பிழம்பு · பதியப்பட்டது
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தோம். பனை அபிவிருத்தி தொடர்பிலும் ஆராய்ந்தோம் அதேபோல் பனை உற்பத்திகளை எவ்வாறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதையும் ஆராய்ந்தோம் அத்தோடு புகையிலை உற்பத்தி தொடர்பிலும் புகையிலை உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்தோம். படகுாகட்டுமானங்கள், விவசாயம் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பிலும் ஆராய்ந்தோம். அரச பொருளாதார ஊக்குவிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பினூடாக சில திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். வடபகுதியிலுள்ள சிறு தொழில் முயற்சியாளர்கள், நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தாமாகவே தமது நிலையை மேம்படுத்தி செல்வது வரவேற்கதக்கது. முதலீட்டாளர்களுக்கு எமது அமைச்சின் ஊடாக பூரண ஒத்துழைப்பினை வழங்க தயாராக இருக்கின்றோம். அத்தோடு மேலும் வடபகுதியில் இவ்வாறான சுயதொழில் முயற்சியாளர்கள் நடுத்தர முயற்சியாளர்களுக்கு எம்மாலான உதவியை ஒத்துழைப்பினை வழங்கி அவர்களை மேம்படுத்துவதன் மூலம் பிரதேங பொருளாதாரத்தை முன்னேற்ற செல்ல முடியும் என்பது எமது நோக்கமாகும். வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறப்பதற்கு நாங்கள் மிகவும் அவதானமாக செயற்பட்டு வருகின்றோம். எனினும் எதிர்காலத்தில் அவற்றை மீள திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். நுண் கடன் திட்டம் என்பது ஒரு பிரச்சினையான விடயமாக காணப்படுகின்றது. குறிப்பாக நுண் கடன் பட்டவர்கள் கடனை மீளச் செலுத்த முடியாத நிலை இங்கே காணப்படுகின்றது அதோடு இந்த நுண்கடன் தொடர்பாக நாடு பூராவும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக கடன் பெற்றவர் பலர் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. சிலர் கடனை பெற்று சில தொழில் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். எனினும் அந்த தொழில் முயற்சியானது, தொழில் சுற்றாடல் மற்றும் அகசூழல் காரணமாக அது சாத்தியப்படாத்தன் காரணமாக பொதுமக்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது” என்றார். யாழில் தொழிற்சாலைகளை மீள திறந்து பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை! – உதயன் | UTHAYAN (newuthayan.com) -
By பிழம்பு · பதியப்பட்டது
(எம்.மனோசித்ரா) கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்படும் வரை அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் காணப்படும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் , இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் 800 - 1200 செல்சியஸ் வெப்பநிலையில் தகனம் செய்யப்பட்டது. தற்போது சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. எனவே தற்போது தகனம் மற்றும் அடக்கம் ஆகிய இரண்டுக்கும் சட்ட பூர்வமாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப உரிய அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படும் நிலங்களிலேயே சடலங்களை அடக்கம் செய்ய முடியும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இதற்கான ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்படும் வரை , சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து கூறுவதிலும் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல் காணப்படுகிறது. சடலங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டியை திறக்க முடியுமா ? , எந்தளவு ஆழத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும்? உள்ளிட்ட விடயங்களையும் உள்ளடக்கியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அத்தோடு இதுவரையில் உபயோகிக்கப்படுகின்ற நிலங்களிலேயே கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா அல்லது அவற்றுக்காக வேறு இடம் ஒதுக்கப்பட வேண்டுமா என்பவை தொடர்பிலும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றார். கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் | Virakesari.lk
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.