Jump to content

பிரிட்டனில் முஸ்லிம்களின் இனப்பெருக்கம் அதிகரிப்பு மற்றவர்களை விட 3 மடங்கு அதிக குழந்தைகள் பிறப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில் முஸ்லிம்களின் இனப்பெருக்கம் அதிகரிப்பு மற்றவர்களை விட 3 மடங்கு அதிக குழந்தைகள் பிறப்பு

[19 - June - 2007]

பிரிட்டனிலும் முஸ்லிம்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு அதிகளவில் எந்த பெயர்கள் வைக்கப்பட்டன என்பது குறித்து பிரிட்டனில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தெரிய வந்த விபரங்கள் வருமாறு

பிரிட்டனில் மற்றவர்களை விட முஸ்லிம்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. முஸ்லிம் களின் இனப்பெருக்கம் காரணமாக ,முஸ்லிம் குழந்தைகள் தான் கடந்த ஆண்டு அதிகளவில் பிறந்துள்ளன. இந்த குழந்தைகளில் ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்களில் `முகமது' என்ற பெயர் அதிகளவில் பதிவாகி உள்ளது. முகமது என்றால் `புகழுக்குரியவர்' என்று அர்த்தம்.

`தாமஸ்' மற்றும் `ஜோசுவா' போன்ற கிறிஸ்தவப் பெயர்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. பிரிட்டனில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்கள் குடியேறி உள்ளனர். இவர்கள் தங்கள் நாட்டு உச்சரிப்பின் படி `முகமது' என்று குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்துள்ளனர். உச்சரிப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும் அதன் ஆங்கில எழுத்து அந்தந்த நாட்டுக்கு ஏற்றபடி 14 வகைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்களில் ,ஒலிவியா, கிரேஸ் ஜெசிகா ஆகிய பெயர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்து வந்தன. முஸ்லிம்களின் பெண்குழந்தைகளுக்கு ` ஆயிஷா' என்ற பெயர் அதிகளவில் சூட்டப்படுகின்றது. கடந்த ஆண்டில் பதிவான பெண் குழந்தைகளின் பெயர்களில் `ஒலிவியா' என்ற பெயர் முதலிடத்தை பிடித்துள்ளது.` கிரேஸ்' என்ற பெயர் 37 சதவீதம் அதிகரித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை பிடித்துள்ள, `ஜெசிகா' என்ற பெயர், கடந்த ஆண்டில் நான்காயிரத்து 416 குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது. `ரூபி' என்ற பெயர் அடுத்த இடத்தை பிடித்துள்ளது. ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்த `எமிலி' என்ற பெயர் ,கடந்த ஆண்டு ஐந்தாவது இடத்துக்குப் போய் விட்டது.

பெண் குழந்தைகளில் ,864 பேருக்கு `சம்மர்' என்றும் ,55 பேருக்கு `ஆட்டம்ன்' என்றும் பருவ காலப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஆனால், `ஸ்பிரிங்' மற்றும் `வின்ட்ஸர்' என்ற பருவ காலப் பெயர்களில் எந்தக் குழந்தையும் பதிவு செய்யப்படவில்லை. பிரபலங்களின் குழந்தைகள் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கும் சூட்டுவதும் அதிகரித்துள்ளது. பிரிட்டனில் புகழ்பெற்ற பாப் பாடகி `பியாச்செஸ் கெலடாப் ' என்ற பெயர் ,இரண்டாயித்து 948 குழந்தைகளுக்கு சூட்டப்பட்டு பிரபலங்களின் பெயரில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தினக்குரல்

Link to comment
Share on other sites

பிரான்ஸிலும் இதே பிரச்சனைதான்.

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் உதவிப்பணம். மற்றது, அதிக பிள்ளைகளைப் பெற்று முஸ்லிம்களிம் தொகையை உலகில் அதிகரிப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேக தமிழர்கள் இரண்டுடன் நிறுத்தி விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனேக தமிழர்கள் இரண்டுடன் நிறுத்தி விடுகிறார்கள்.

பன்றி போல குட்டி போடச் சொல்லுறீங்களா..??!

அளவுக்கு மிகுந்த பிள்ளைகளின் எண்ணிக்கை அவர்கள் மீதான பெற்றோரின் கவனிப்பை அன்பை சிதறடிச்சிடும்..! ஏலவே உலக சனத்தொகை 6,602,224,175 இவ்வளவா இருக்கேக்க.. இன்னும்...????????????!

கறுப்பி அக்கா உலக சனத்தொகை எவ்வளவென்று எழுத்தில சொல்லுங்க பார்ப்பம்..! :rolleyes:

Link to comment
Share on other sites

பன்றி போல குட்டி போடச் சொல்லுறீங்களா..??!

அளவுக்கு மிகுந்த பிள்ளைகளின் எண்ணிக்கை அவர்கள் மீதான பெற்றோரின் கவனிப்பை அன்பை சிதறடிச்சிடும்..! ஏலவே உலக சனத்தொகை 6,602,224,175 இவ்வளவா இருக்கேக்க.. இன்னும்...????????????!

கறுப்பி அக்கா உலக சனத்தொகை எவ்வளவென்று எழுத்தில சொல்லுங்க பார்ப்பம்..! :rolleyes:

நாம் இருவர் நமக்கு இருவர். அனால் இப்போ நாட்டுக்கும் ஒரு ஆள் தேவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி அக்கா உலக சனத்தொகை எவ்வளவென்று எழுத்தில சொல்லுங்க பார்ப்பம்..! :rolleyes:

இதென்ன பெரிய விடயமா??

ஆறு ஆறு சைவர் இரண்டு இரண்டு இரண்டு நான்கு ஒன்று எழு அஞ்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன பெரிய விடயமா??

ஆறு ஆறு சைவர் இரண்டு இரண்டு இரண்டு நான்கு ஒன்று எழு அஞ்சு

வடிவு சார் யாழகளத்தை வைச்சு காமிடி க்

ஒன்றும் செய்யல தானே?

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பெரிய விடயமா??

ஆறு ஆறு சைவர் இரண்டு இரண்டு இரண்டு நான்கு ஒன்று எழு அஞ்சு

நாங்க எழுத்தில எழுதச் சொன்னமே தவிர சொற்களில என்று சொன்னமா..??! :lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க எழுத்தில எழுதச் சொன்னமே தவிர சொற்களில என்று சொன்னமா..??! :(:rolleyes:

எழுத்தில் தானே சொற்கள் உருவாகின்றன?

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தில் தானே சொற்கள் உருவாகின்றன?

:rolleyes:

ஆம்.. இப்ப தன் விசயத்துக்கே வந்திருக்கிறீங்க.. எழுத்தில ஒரு சொல்லில சொல்லச் சொன்னம்..! இப்ப புரிஞ்சுதா என்ன கேட்டம் என்று..! :(:lol:

Link to comment
Share on other sites

தமிழர்களும் மக்கள் தொகையை கூட்ட வேண்டும்

நிச்சயமாக குறிப்பாக ஈழத்தமிழர்கள் இனத்தை பெருக்கவேண்டும்

இஸ்ரேலியர்களை பாருங்கள் இன்றும் இனப்பெருக்கத்தை கைவிடவில்லை

Link to comment
Share on other sites

நிச்சயமாக குறிப்பாக ஈழத்தமிழர்கள் இனத்தை பெருக்கவேண்டும்

இஸ்ரேலியர்களை பாருங்கள் இன்றும் இனப்பெருக்கத்தை கைவிடவில்லை

ஒரு இனத்தைப் பெருக்குவதால் எந்தப் பயனுமில்லை. உதாரணம் தமிழ்நாடு.

அதுவும் சரியான கட்டமைப்பில்லாத தமிழர் சமுதாயத்தில் இது தேவையற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளைகளை பெறுவதோடு பெற்றோரின் கடமை முடிந்துவிட்டது என்ற சிந்தனையோடுதான் பலர் (தமிழர்கள்) வாழ்கிறார்கள்..

அந்த பிள்ளைகளை வளர்த்து சமூகத்தில் மனிதர்களாக வளர்த்தெடுக்க பலர் தவறி விடுகின்றனர்.. வெளிநாடுகளில் இதை பல வீடுகளில் பார்க்கிறோம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்றி போல குட்டி போடச் சொல்லுறீங்களா..??!

அளவுக்கு மிகுந்த பிள்ளைகளின் எண்ணிக்கை அவர்கள் மீதான பெற்றோரின் கவனிப்பை அன்பை சிதறடிச்சிடும்..! ஏலவே உலக சனத்தொகை 6,602,224,175 இவ்வளவா இருக்கேக்க.. இன்னும்...????????????!

கறுப்பி அக்கா உலக சனத்தொகை எவ்வளவென்று எழுத்தில சொல்லுங்க பார்ப்பம்..! :rolleyes:

six billion six hundred two million two hundred twenty-four thousand one hundred seventy-five

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

six billion six hundred two million two hundred twenty-four thousand one hundred seventy-five

கறுப்பி அக்கா கெட்டிக்காரிதான் போங்க..!

ஆறு புள்ளி ஆறு பில்லியன் ஆக உள்ளது உலக சனத்தொகை..! இதில் சீனாவும் இந்தியாவும் மூன்றில் ஒரு பங்கை அடக்கிவிட்டுள்ளன..! அங்கெல்லாம் இப்ப குடும்பத்துக்கு ஒன்று என்ற நிலை கட்டாயமாகிட்டுது.

ஈழத்தமிழர்கள் புகலித்தில் குட்டி போட்டு அதை தாயகத்துக்குப் போராட அனுப்பவர் என்பது நல்ல கற்பனை..! வேணும் என்றால் உதவித் தொகை பெறலாம் என்று சொல்லுங்க.. குட்டியைப் போட்டிட்டே இருப்பாங்க..!

குழந்தை வளர்ப்பில் நம்மவர்கள் இன்னும் வன்முறைத்தனமான அணுகுமுறையைத்தான் புலம்பெயர்ந்தும் செய்கின்றனர்..! :P :blink:

Link to comment
Share on other sites

நிச்சயமாக குறிப்பாக ஈழத்தமிழர்கள் இனத்தை பெருக்கவேண்டும்

இஸ்ரேலியர்களை பாருங்கள் இன்றும் இனப்பெருக்கத்தை கைவிடவில்லை

ஆனால் ஈழத்தமிழர்களில் பலர் தமிழை மறந்து ஆங்கில, பிரேஞ்சு, டொச்சு மொழிகளில் மோகமாக இருப்பதுடன், குழந்தைகளின் பெயர்களுக்கும் தமிழில் இல்லாத பெயர்களை அல்லவா சூடுகிறார்கள். கிறிஸ்தவதமிழர்கள் ஆங்கிலப் பெயர்களையும்(ரெக்ஸி, டானியல்,ஜோன்சன்) இந்துத் தமிழர்கள் வட இந்தியப் பெயர்களையுமே (அஸ்வின், அஸ்விதா, ஷிவாங்கி) சூட்டுகிறார்கள். முதலில் இருக்கிற தமிழர்களும் தமிழர்களாக இருக்கப் பாருங்கள்.அடையாளத்தை இழக்காமல் இருக்கப்பாருங்கள்.

கந்தப்பு உங்கள் பெயர் கூட ஸ்கந்த என்ற வடமொழி சொல்லின் திரிபுதான். வெற்றிவேல் என்பது தூய தமிழ் பெயர். :blink:

நல்ல தமிழ் பெயராய் வைப்பது தமிழ் வளர்க்க உதவும்

Link to comment
Share on other sites

கந்தப்பு உங்கள் பெயர் கூட ஸ்கந்த என்ற வடமொழி சொல்லின் திரிபுதான். வெற்றிவேல் என்பது தூய தமிழ் பெயர். :lol:

நல்ல தமிழ் பெயராய் வைப்பது தமிழ் வளர்க்க உதவும்

:unsure::blink: கிளிஞ்சுது கிருஷ்ணகிரி

அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில கந்தப்புக்கே ஆப்பா :unsure:

வட மொழி வட மொழி என்று பேசுறவங்க எல்லாரும் சேர்ந்து வடமொழி சொற்ககளை இணைக்கலாம்தானே களத்தில? :angry: :angry:

Link to comment
Share on other sites

கிறிஸ்தவதமிழர்கள் ஆங்கிலப் பெயர்களையும்(ரெக்ஸி, டானியல்,ஜோன்சன்) இந்துத் தமிழர்கள் வட இந்தியப் பெயர்களையுமே (அஸ்வின், அஸ்விதா, ஷிவாங்கி) சூட்டுகிறார்கள். முதலில் இருக்கிற தமிழர்களும் தமிழர்களாக இருக்கப் பாருங்கள்.அடையாளத்தை இழக்காமல் இருக்கப்பாருங்கள்.

மீ அகேயின் இந்த இரண்டு பேரின்ட பேயரையும் எங்கையோ கேட்டிருகிறேன் :blink: சரி எனகேன் வம்பு நான் போயிற்று வாரேன் :unsure: .....................போக முன் ஒரு செய்தி என்ன பெயர் வைகிறதென்று முக்கியமில்லை எப்படி வளர்கிறோம் என்பது தான் முக்கியம் :P

வரட்டா :P

Link to comment
Share on other sites

கந்தப்பு உங்கள் பெயர் கூட ஸ்கந்த என்ற வடமொழி சொல்லின் திரிபுதான். வெற்றிவேல் என்பது தூய தமிழ் பெயர். :blink:

நல்ல தமிழ் பெயராய் வைப்பது தமிழ் வளர்க்க உதவும்

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

பழைய யாழ்களத்தில் குளக்காட்டன் அவர்களினால் எழுதிய கருத்துக்களை வாசித்தேன். பல சொற்கள்(ஆங்கில கிருஸ்தவ பெயர்கள்) தமிழ்வடிவத்துக்கு ஏற்றாற்போல் விவிலியத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

ஜீசஸ் என்பது இயேசு என்றும்,

ஜோசப் என்பது சூசை என்றும்,

மேரி என்பது மரியாள் என்றும்,

ஜோன் என்பது அருளப்பன் என்றும்,

போல் என்பது சின்னப்பன் என்றும்,

அன்ரனி என்பது அந்தோணி என்றும்,

தோமஸ் என்பது தோமையார் அல்லது தொம்மை என்றும் மொழிபெயர்க்கப்பட்டது.

மேலும் வாசிக்க

http://www.yarl.com/forum/index.php?s=&amp...ost&p=84474

அவ்வாறே ஸ்கந்தன் என்ற வடமொழிப் பெயர் கந்தன் என்று தமிழ்வடிவத்துக்கு ஏற்றால் போல மொழி பெயர்க்கப்பட்டதாக நினைத்தேன். பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.

பழைய யாழ்களத்தில் குளக்காட்டன் அவர்களினால் எழுதிய கருத்துக்களை வாசித்தேன். பல சொற்கள்(ஆங்கில கிருஸ்தவ பெயர்கள்) தமிழ்வடிவத்துக்கு ஏற்றாற்போல் விவிலியத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

ஜீசஸ் என்பது இயேசு என்றும்,

ஜோசப் என்பது சூசை என்றும்,

மேரி என்பது மரியாள் என்றும்,

ஜோன் என்பது அருளப்பன் என்றும், (மொழிபெயர்க்கப்பட்டது

போல் என்பது சின்னப்பன் என்றும், (மொழிபெயர்க்கப்பட்டது)

அன்ரனி என்பது அந்தோணி என்றும்,

தோமஸ் என்பது தோமையார் அல்லது தொம்மை என்றும் மொழிபெயர்க்கப்பட்டது.

மேலும் வாசிக்க

http://www.yarl.com/forum/index.php?s=&amp...ost&p=84474

அவ்வாறே ஸ்கந்தன் என்ற வடமொழிப் பெயர் கந்தன் என்று தமிழ்வடிவத்துக்கு ஏற்றால் போல மொழி பெயர்க்கப்பட்டதாக நினைத்தேன். பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.

மொழிபெயர்க்கப்பட்டது என்பதை விட தமிழுக்கு இசையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது அல்லது காலப்போக்கில் திரிபடைந்தது என்று சொல்லலாம்

Link to comment
Share on other sites

கறுப்பி நல்ல தமிழ் சொல்தானே

கறுப்பி என்பது அழகிய தமிழ் சொல்.

கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு... :blink:

Link to comment
Share on other sites

இனப்பெருக்கத்தை பற்றி கதைக்கிறதை விட்டுட்டு ..

யாரு பேர் பற்றிகதைக்க சொன்னது?? :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.