Jump to content

#P2P சிங்கள அரசை அசர வைத்த காரணம் என்ன?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

#P2P சிங்கள அரசை அசர வைத்த காரணம் என்ன?

இந்த சிவில் அமைப்புகளின் போராட்டம் நடக்க இருக்கிறது என்றவுடன், அரசு, போலீசாரை, நீதி மன்றுக்கு அனுப்பி, அய்யோ, கொரோனா, பாதுகாப்பு இல்லை. மக்கள் சேர்ந்தால், நோய் பரவும் என்று சொல்லி, தடை வாங்கி இருந்தது. 

இந்த தடையினை, சாணக்கியன் அலுவலகத்தில் சந்தித்த, போலீசார் வாசித்துக் காட்டி, கையில் கொடுத்து விட்டு சென்றனர்.

ஆனாலும், திட்டமிடப்படி, ஊர்வலம் பொத்துவிலில் ஆரம்பிக்க, வழமைபோல போலீசார் தடையினை போட்டு, சாணக்கியனை இலக்கு வைத்து, உங்களுக்கு தடை உத்தரவினை தந்தோமே என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மக்கள், அவர்களை கடந்து வெகுதூரம் சென்று விட்டனர்.

கொழும்பில், கொரோனா இல்லையா, சுதந்திர தினத்துக்கு தடை வாங்கி விட்டீர்களா இல்லையா? என்று சொல்லி கொண்டே, சாணக்கியன், மக்களை முன்னே அனுப்பி விட்டு, தனக்கு, தடை இருந்த பகுதியை தவிர்த்து, ஊர்வலத்தில் மீண்டும் இணைந்து கொண்டார். இதுபோலவே, சுமந்திரனும் தனக்கு தடையிருந்த, பகுதிகளை தவிர்த்து, மீள இணைந்து கொண்டார். போலீசார், ஒட்டு மொத்தமாக தடையினை வாங்காமல், கலந்து கொள்வார்கள் என்று நினைத்து, சில பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் தலைவர்கள் மீது மட்டும் தடையினை வாங்கி இருந்ததால், சட்ட மூளைகள், தமக்குரிய, தடைகள் உள்ள பகுதிகளில் தாங்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டனர்.

முன்னைய காலம் என்றால், அடி, தண்ணீர் பீச்சி அடித்தல், கண்ணீர் புகை என்று கிளம்பி இருப்பார்கள். ஆனால் உலகமே கவனித்துக் கொண்டிருப்பதே அவர்கள், பேசாமல் ஒதுங்கிக் கொள்ள காரணம்.

காத்தான்குடி பகுதியில் இஸ்லாமிய மக்களும் பேராதரவுடன் இணைய, போராட்டக்காரர்களுக்கு மேலும் உற்சாகம் பீறிட்டுக் கிளம்பியது.  

திருகோணமலையிலும் அதே நிலைமை. ஆனால், இப்போது, வீட்டில் படுத்துக் கிடந்த, தமிழ், இஸ்லாமிய, பாராளுமன்ற உறுப்பினர்கள், தாமும் தலையை காட்டாவிடில், முதலுக்கு மோசம் என்று, வந்து சேர, போலீசாரின் தடைகளை மீறிக் கொண்டு முன்னேறியது மக்கள் கூட்டம். மதம் கொண்ட யானையினை கண்டு, ஒதுங்குவது போல, வேகமாக வரும் ஊர்வலத்தினை கண்டு, போலீசார் ஓரமாக ஒதுங்கிக் கொண்டனர்.

அரசுக்கு ஆதரவான கிழக்கின் ஐந்தின் நான்கு முஸ்லீம் உறுப்பினர்கள் வரவேயில்லை. ஒருவர் மட்டுமே வந்தார். பாரளுமன்றத்தில் தமக்காக பேசிய காரணத்தால், சாணக்கியன், சுமந்திரன் இருவரும் முஸ்லீம் மக்களின் மத்தியில் பெரும் புகழ் மிக்கவர்களாக இருந்தார்கள். மாலை அணிவிப்புகள் கூட நடந்தன.

முல்லை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், யாழ் மாவட்ட நீதிபதிகள், தடை போட்டு, அதனை மக்கள் தூக்கி எறிந்தால் மன்றுக்கு மரியாதை இல்லை என்று, தடை விதிக்க மறுத்து விட்டனர்.

இந்த போராட்டம் மக்களுக்கு பல விடயங்களை உணர்த்தி உள்ளது.

ஒற்றுமையே பலம் என்ற புரிதல். அகிம்சையின் முன்னே, அனைத்து பலமும் செயலிழக்கும். இனி, குருந்தூர் மலை போன்ற விடயங்களுக்கு பலமிக்க, மக்கள் எதிர்ப்பு கிடைக்கும்.

அதேவேளை சிங்களமும் அரண்டு போய் நிக்கிறது. வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவு கோஸ்ட்டிகள், கட்டுக்கதையே, முள்ளிவாய்க்கால். அதெல்லாம் பொய். ஐநா மனித உரிமை அமைப்பினையே அவர்கள் விலைக்கு வாங்கி விட்டார்கள் என்று சொல்லி வாய் சவடால், விட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, நாட்டுக்குள்ளேயே ஒரு மக்கள் கூட்டம், கிளம்பி எழுந்து, தமக்கு நியாயம் வேண்டும் என்று முழங்க, திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி அரசு விழிக்க தொடங்கி விட்டது.

ராணுவத்தளபதி சவேந்திர டீ சில்வா,, இவர்கள், எரியும் நெருப்பினுள் எண்ணெய் ஊத்துகிறார்களே என்று புலம்புகிறார்.

அதே வேளை, எல்லாம் இன்பமயம் என்று நினைத்துக் கொண்டிருந்த, சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களின் அவலம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழகத்திலும் இந்த போராட்டம் பெரும் கவனத்தினையும், அதுகுறித்த தொலைக்காட்சி விவாதங்களையும் நடத்துமளவுக்கு சென்றுள்ளது. அனைவருமே, இதுதான் மிக, மிக சரியானதும், தேவையானதும் என்கின்றனர்.

ஆனாலும், சிங்கள அரசின் புலனாய்வு அமைப்புகளுக்கு, இந்த போராட்டத்தின் பின்னணியில், உலகின் முக்கிய புலனாய்வு அமைப்புகள், குறிப்பாக, டெல்லி உள்ளது என்பதனை ஊகிக்கின்றன.

கருணா அம்மான், பிள்ளையான், இந்திய துணை தூதர் சந்திப்புக்கு காரணம் என்ன என்பதனை, இலங்கை புரிந்திருக்கும்.

அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சரும், தனது விடயத்தின் போது, பல தமிழ் தரப்பினரை சந்தித்து, ஒற்றுமையின் அவசியம் குறித்து, சொன்னதன் நோக்கம் இப்போது கொழும்பின் கரிசனத்துக்கு உள்ளாகின்றது.

இதன் தொடர்ச்சியாக, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் என 47 அமைப்புக்கள்  சேர்ந்தும் ஐநா அமைக்குக்கு தமது அவலம் குறித்து கடிதம் அனுப்பியதுடன், இந்த போராட்டத்தினையும் நடத்தி முடித்துள்ளனர்.

நிலைமையினை புரிந்து கொண்ட, மஹிந்தவும், கோத்தாவும், அவசர, அவசரமாக இந்திய தூதரை சந்தித்து கொழும்பின் மேல் துறைமுக வேலைகளை தாறோம், கிழக்கினை சீனாவுக்கும் கொடாமல், நாங்களே வைத்திருக்கிறோமே என்று சொல்லி இருக்கிறார்கள்.

எனவே, பின்னால் என்ன அரசியல் நடந்தாலும், மூண்டு விட்ட நெருப்பினை, அரசியல் வாதிகள், கையில் விடாமல், சிவில் அமைப்புகள், தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். 

யாழுக்காக, அடியேன் ஆக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நாதமுனி...  அனைத்தையும் அவதானித்து, நல்ல ஒரு தொகுப்பாக தந்து உள்ளீர்கள். 👍🏼👍🏼👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நாளாக நடந்தததை சில வரிகளில் அருமையாக பதிந்துள்ளீர்கள் நாதம்.
பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2021 at 11:41, Nathamuni said:

ஆனாலும், சிங்கள அரசின் புலனாய்வு அமைப்புகளுக்கு, இந்த போராட்டத்தின் பின்னணியில், உலகின் முக்கிய புலனாய்வு அமைப்புகள், குறிப்பாக, டெல்லி உள்ளது என்பதனை ஊகிக்கின்றன

இது வெறும் ஊகம் மட்டும்தான். 

சிவில் சமூகம் பலமற்றதாயினும், அவர்களால்தான் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசியல்வாதிகள் ஒதுங்கி இருந்தால் அடுத்த தேர்தலில் ஆப்பு என்று சேர்ந்துகொண்டார்கள். ஆனால் சிங்களமும் மக்களுக்கு ஜனநாயக ரீதியில் போராட இடம் கொடுக்கின்றோம் என்று தம்மை ஜனநாயகவாதிகளாகவும் காட்டிக்கொள்வார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எந்த அடிப்படையில் ஊகம் என்கிறீர்கள்?

இந்த போராட்டத்தின் காரணகர்த்தாக்களே, சாணக்கியனும், சுமேந்திரனும் தான் என்று சிவாஜிலிங்கமே ஒத்துக்கொன்டுள்ளார். சிவில் அமைப்புகள், பின்னால் இருந்து, பின்னர் முன்னால் வந்தன.

கச்சிதமான திட்டமிடல் மூலம், போலீசார் தடையினை தம்மீது வாங்க வைத்து, சிவில் சொசைட்டி மேலே தடை இல்லாமல், அவர்களை முன்னுக்கு அனுப்பி, சட்ட மூளை வேலை செய்துள்ளது.

அவர்கள் தடை செய்யக்கூடும் என்பதாலே, நகரப்பகுதியில் நடந்தும், நகர்ப்புற பகுதியில், வாகனங்களில், வேகமாகவும் கடக்க, பெரும் திட்டம் போட்டிருந்தார்கள். 

சில விடயங்கள் வெளிப்படையாக தெரியாது. ஆங்கிலத்தில் read between the line என்பார்கள்.

இன்று ராணுவத்தளபதி முதல், ஆனந்த வீரசேகர முதல் புலம்பும் நிலைமைக்கு காரணம் என்ன?

மக்களின் அகிம்சை முன்னெடுப்பு. இந்த போராட்டம், மேலை நாடுகளுக்கும், இந்தியாவுக்கும், ஒரு பிடி கோலை கொடுத்துள்ளது.

தேர்தலில், அரசியல் கைதிகளை விடுவிப்பேன் என்று வடக்கு, கிழக்கில் தேர்தல் உறுதி தந்தீர்கள் மகிந்தா அய்யா, பிள்ளையானுக்கு மட்டுமே கிடைத்த விடுதலை ஏன் அடுத்தவர்களுக்கு கிடைக்கவில்லை என்று சாணக்கியன் இன்று பாராளுமன்றில் சொல்ல, அய்யா பதில் தரவில்லை. மாறாக இஸ்லாமிய  சட்ட அமைச்சர், எழும்பி அரசியல் கைதிகளே இல்லை என்கிறார். சுரேன் ராகவன் ஊளை இடுகின்றார். இந்த கேள்விகளுக்கு பதில் தராமல் இருந்தது, ஜெனீவா பயத்தில்.

இன்று அமெரிக்க தூதர், இந்த ஒரே நாட்டு மக்களின், சாத்வீக, ஜனநாயக போராட்டம், கொழும்பு பத்திரிக்கைகளில் வராமல் போனது எப்படி என்று நியாயமான கேள்வி எழுப்பி உள்ளார்.

இதிலுள்ள read between the line என்ன என்று நினைக்கிறீர்கள்?

இலங்கையில் ஜனநாயகத்தின் தூணான பத்திரிகைகள் நிறுவகங்கள் பயமுறுத்தப் பட்டுள்ளன, அல்லது விலைக்கு வாங்கப்பட்டுள்ளன, அதனூடு சிறுபான்மையின மக்களின் பிரச்னைகளை வெளியே வரவிடாமல் தடுக்கப்படுகின்றது என அமெரிக்கா நினைக்கிறது என்று சொன்னால், அது ஊகம் என்று நீங்கள் சொல்லக்கூடும்.

ஆனால், அந்த கேள்வியின் பின்னே மிக முக்கிய, தெளிவான செய்தி உள்ளதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

எந்த அடிப்படையில் ஊகம் என்கிறீர்கள்?

நான் இணைக்கும் கட்டுரைகள் நீளம் என்று பலர் படிப்பதில்லை. ஆனால் இதைப் படியுங்கள்.

சிவில் சமுகம் உளவு அமைப்புக்களின் பொம்மலாட்டத்தின் பொம்மைகள் என்று சொல்லவும் ஆதாரம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

நான் இணைக்கும் கட்டுரைகள் நீளம் என்று பலர் படிப்பதில்லை. ஆனால் இதைப் படியுங்கள்.

சிவில் சமுகம் உளவு அமைப்புக்களின் பொம்மலாட்டத்தின் பொம்மைகள் என்று சொல்லவும் ஆதாரம் இல்லை.

மன்னிக்க வேண்டும் கிருபன், 2009க்கு பின்னர், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவார்கள் என்பதால், எந்த ஒரு தமிழ் ஆய்வுக்கட்டுரைகளையும் வாசிப்பதில்லை.  😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தாளும் சூழ்ச்சி வெல்லுமா?

மலையக மக்களின் முக்கிய கோரிக்கையான 1000ரூபா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது நடந்தது 8ம் திகதி.

இன்று 10ம் திகதி முஸ்லிம்களின் கோரிக்கையான ஜனாஸா புதைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

ஆகவே.... ஒன்றினைத்தவர்களை பிரிக்க முயல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும் கிருபன், 2009க்கு பின்னர், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவார்கள் என்பதால், எந்த ஒரு தமிழ் ஆய்வுக்கட்டுரைகளையும் வாசிப்பதில்லை.  😰

நல்லது. அதற்காகக் கற்பனைக் குதிரையை அதிகம் ஓட்டி மக்கள் எழுச்சியை “ரோ” போன்ற உளவு அமைப்புக்களின் தூண்டுதலால் நடந்திருக்கலாம் என்று ஊகம் சொல்லவது நல்லதில்லை.

வேலன் சுவாமிகளும், சிவயோகநாதன் என்ற செயற்பாட்டாளரும் 50 பேர் அளவில் வந்தாலே போதும் என்று ஆரம்பித்து மதகுருமார், அரசியல்வாதிகள், முஸ்லிம்கள் என்று பெருகியதுதான் நடந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

முதலாவது, இந்த அம்புலிமாமா கற்பனைக் கதைகள் என்று சொல்வதை நிறுத்தி, தமிழ் தள வாசிப்பு, சிந்தனைகளில் இருந்து வெளியே வாருங்கள் கிருபன் அய்யா.

செய்தி என்பது, புள்ளிகளின் இணைப்பு. யாருமே பக்கத்தில் இருந்து பார்ப்பதில்லை.

அடுத்தது, இன்றய இந்தியாவின் நிலை, குதிரை ஓடின பின்னர் லாயத்தினை பூட்டும்  கதைதான்.

இங்கே சிவில் அமைப்புக்கள் கதை பிறகு வந்திருக்கலாம். அனைத்தையுமே ஒன்றிணைத்து யார்?

பெருகுவார்கள் என்று கணித்து நடத்த திட்டம் போட்டது யார்?

குழப்புவார்கள் என்று தெரிந்து, பிள்ளையானையும், கருணாவையும் அழைத்து, காதோடை சொல்லி அனுப்பியது யாரு?

டக்லஸ், அங்கயன், அமைதியா ஒதுங்கியதன் காரணம்.... மக்கள் எழுச்சி எண்டு கதை விட நான் தயாரில்லை, நீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

சரி. சரி. புள்ளையானும், கருணா அம்மானும் காதில் கேட்டதை உங்கள் காதிலும் போட்டுவிட்டார்கள்!

“ரோ”வும், MI5/6 உம், CIA உம், ஏன் கோத்தபாயாவின் உளவுப்படையும்தான் பேரணியை ஒழுங்குசெய்து, குழப்பம் வராமல் நடாத்தியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கிருபன் said:

சரி. சரி. புள்ளையானும், கருணா அம்மானும் காதில் கேட்டதை உங்கள் காதிலும் போட்டுவிட்டார்கள்!

“ரோ”வும், MI5/6 உம், CIA உம், ஏன் கோத்தபாயாவின் உளவுப்படையும்தான் பேரணியை ஒழுங்குசெய்து, குழப்பம் வராமல் நடாத்தியது.

நீங்கள் தமிழ் நூல்களை மட்டுமே வாசிப்பதால் (அப்படி நான் நம்பவில்லை!) ரஷ்யாவின் FSB லிஸ்ரில் மிஸ்ஸிங்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

நீங்கள் தமிழ் நூல்களை மட்டுமே வாசிப்பதால் (அப்படி நான் நம்பவில்லை!) ரஷ்யாவின் FSB லிஸ்ரில் மிஸ்ஸிங்!😂

ரஷ்யாவின் FSB ஆ?🤔🥴

தமிழ்ப் புத்தகத்தில இன்னும் கேஜிபி என்றுதானே எழுதுகின்றார்கள்! இனி கொஞ்சம் ரப்லொயிட்டையும் இங்கிலிஷீல் படித்து அறிவை வளர்க்கப் பார்க்கின்றேன்.🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

ரஷ்யாவின் FSB ஆ?🤔🥴

தமிழ்ப் புத்தகத்தில இன்னும் கேஜிபி என்றுதானே எழுதுகின்றார்கள்! இனி கொஞ்சம் ரப்லொயிட்டையும் இங்கிலிஷீல் படித்து அறிவை வளர்க்கப் பார்க்கின்றேன்.🤭

அமெரிக்காவின் OSS என்பது இரண்டாம் உலகப் போரின் பின் CIA ஆனது போல, சோவியத் ரஷ்யாவின் KGB நவீன ரஷ்யாவின் FSB ஆனது தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு புறாச்செய்தியாக இன்னும் வந்து சேரவில்லையாம்!:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சரி. சரி. புள்ளையானும், கருணா அம்மானும் காதில் கேட்டதை உங்கள் காதிலும் போட்டுவிட்டார்கள்!

“ரோ”வும், MI5/6 உம், CIA உம், ஏன் கோத்தபாயாவின் உளவுப்படையும்தான் பேரணியை ஒழுங்குசெய்து, குழப்பம் வராமல் நடாத்தியது.

துலைஞ்சுது போங்கோ..... 

யாழிலை, வெட்டி ஒட்டுறதிலை நீங்கள் தான் முதலாவது ஆள். நீங்கள் நம்பவேண்டும் எண்டு, நான், போய் மின்னம்பலத்திலை இதுகளை வேற பேரிலை பதிய ஏலாது கண்டியளே.... 😁

Link to comment
Share on other sites

16 hours ago, Nathamuni said:

முதலாவது, இந்த அம்புலிமாமா கற்பனைக் கதைகள் என்று சொல்வதை நிறுத்தி, தமிழ் தள வாசிப்பு, சிந்தனைகளில் இருந்து வெளியே வாருங்கள் கிருபன் அய்யா.

செய்தி என்பது, புள்ளிகளின் இணைப்பு. யாருமே பக்கத்தில் இருந்து பார்ப்பதில்லை.

அடுத்தது, இன்றய இந்தியாவின் நிலை, குதிரை ஓடின பின்னர் லாயத்தினை பூட்டும்  கதைதான்.

இங்கே சிவில் அமைப்புக்கள் கதை பிறகு வந்திருக்கலாம். அனைத்தையுமே ஒன்றிணைத்து யார்?

பெருகுவார்கள் என்று கணித்து நடத்த திட்டம் போட்டது யார்?

குழப்புவார்கள் என்று தெரிந்து, பிள்ளையானையும், கருணாவையும் அழைத்து, காதோடை சொல்லி அனுப்பியது யாரு?

டக்லஸ், அங்கயன், அமைதியா ஒதுங்கியதன் காரணம்.... மக்கள் எழுச்சி எண்டு கதை விட நான் தயாரில்லை, நீங்கள்?

நாதம்,  மக்கள் எழுச்சி கொண்டு போராடியதை உளவு அமைப்புகளின் ஏற்பாட்டில் நிகழ்ந்தவை என்று கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். போராட்டத்திற்கு பல தடைகளுக்கு மத்தியில் எற்பாடு செய்தவர்களை மலினப்படுத்துகின்றீர்கள் இவ்வாறு கூறுவதன் மூலம்.

இப் போராட்டத்துக்கான முயற்சி இந்த வருடத்தில் அல்ல, கடந்த வருட இறுதியில் தொடங்கிய ஒன்று. மட்டக்களப்பு மனிதநேய அமைப்புகளின் முயற்சியுட மற்ற சிவில் அமைப்புகளும் இணைந்து செய்த போராட்டம் இது.

முதல் நாளில் பொத்துவிலிலேயே  பிசுபிசுத்துப் போய்விடும் என்று நினைத்த போராட்டம் இந்தளவுக்கு மக்களின் பங்களிப்புடன் நிகழும் என்று அரசும் அரசின் ஒத்தோடிகளும் எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை. அத்துடன் ஜெனீவா கூட்டம் மார்ச்சில் நிகழவிருப்பதால் கோத்தா அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

துலைஞ்சுது போங்கோ..... 

யாழிலை, வெட்டி ஒட்டுறதிலை நீங்கள் தான் முதலாவது ஆள். நீங்கள் நம்பவேண்டும் எண்டு, நான், போய் மின்னம்பலத்திலை இதுகளை வேற பேரிலை பதிய ஏலாது கண்டியளே.... 😁

வாசிக்கிறதில எல்லாத்தையும் ஒட்டுறதில்லை. எதை ஒட்டலாம், ஒட்டக்கூடாது என்று கிரகிக்கும் அளவுக்கு களிமண்ணோடு மூளையும் மண்டைக்குள் இருக்கு!😎

நீங்கள் மெனக்கெட்டு டொட்ஸையும் குறொஸ்ஸையும் இணைக்கிறன் எண்டு தமிழ்வாணனின் துப்பறியும் மர்மநாவல்கள் எழுதுகின்றீர்கள். 🤠 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

நாதம்,  மக்கள் எழுச்சி கொண்டு போராடியதை உளவு அமைப்புகளின் ஏற்பாட்டில் நிகழ்ந்தவை என்று கொச்சைப்படுத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். போராட்டத்திற்கு பல தடைகளுக்கு மத்தியில் எற்பாடு செய்தவர்களை மலினப்படுத்துகின்றீர்கள் இவ்வாறு கூறுவதன் மூலம்.

இப் போராட்டத்துக்கான முயற்சி இந்த வருடத்தில் அல்ல, கடந்த வருட இறுதியில் தொடங்கிய ஒன்று. மட்டக்களப்பு மனிதநேய அமைப்புகளின் முயற்சியுட மற்ற சிவில் அமைப்புகளும் இணைந்து செய்த போராட்டம் இது.

முதல் நாளில் பொலிகண்டியிலேயே பிசுபிசுத்துப் போய்விடும் என்று நினைத்த போராட்டம் இந்தளவுக்கு மக்களின் பங்களிப்புடன் நிகழும் என்று அரசும் அரசின் ஒத்தோடிகளும் எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை. அத்துடன் ஜெனீவா கூட்டம் மார்ச்சில் நிகழவிருப்பதால் கோத்தா அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைக்கவில்லை.

நான் சொல்வது, கொழும்பில் உள்ள பல சிங்கள செய்தியாளர்களின் கருத்து. அதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

நீங்கள் சாதாரணமாக நினைப்பது போல, ஜெனீவாவில் ராஜபக்சேக்களுக்கு பெரும் தலையிடி தரப்போவது எங்கள் பிரச்சனை அல்ல. தாஜூடீன், பிரகதீப், லசந்த கொலைகளை விசாரித்த சிங்கள போலீஸ் அதிகாரியினை கொழும்பில் இருந்து கடத்தியதுடன் புலனாய்வு அமைப்புகளின் வேலைகள் எப்போதோ ஆரம்பமாகி விட்டன.

இன்று சீனா உள்ளே வந்து விட்ட நிலையில், இந்தியாவுக்கும், மேற்குலகுக்கும் உள்ள ஒரே தெரிவு, புலனாய்வு அமைப்புகளின் வேலை தான்.

இந்திய துணைத்தூதர் சந்தித்தார் என்றால் என்ன பொருள்? ராவின் கொழும்பு பொறுப்பாளர் என்று எழுதி வைத்துக்கொண்டா இருப்பார்கள்?

இந்தியாவின் கொல்லையில் இருக்கும் இலங்கையானது, சீனாவின் கொல்லையில் இருக்கும் தாய்வான் போன்றது. இரண்டு வல்லரசுகளும், தமது கொல்லைப்புறத்தினை விட்டுகொடுக்கப் போவதில்லை.

நாம், இங்கே இந்தியாவினை நக்கல் பண்ணினாலும், இந்தியா விட்டுவிடும் என்று நானோ, நீங்களோ நினைத்தால், அதை விட முட்டாள் தனம் இருக்க முடியாது.

9 minutes ago, கிருபன் said:

வாசிக்கிறதில எல்லாத்தையும் ஒட்டுறதில்லை. எதை ஒட்டலாம், ஒட்டக்கூடாது என்று கிரகிக்கும் அளவுக்கு களிமண்ணோடு மூளையும் மண்டைக்குள் இருக்கு!😎

நீங்கள் மெனக்கெட்டு டொட்ஸையும் குறொஸ்ஸையும் இணைக்கிறன் எண்டு தமிழ்வாணனின் துப்பறியும் மர்மநாவல்கள் எழுதுகின்றீர்கள். 🤠 

முடிந்தால், தர்க்க ரீதியாக விவாதிப்போம். சும்மா அலம்பறை பண்ணுவது நேரவிடயம்.

நேற்று, எனது பதிவுக்கு, பச்சை குத்தியவர்களில் நீங்களும் ஒருவர்.

Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

நான் சொல்வது, கொழும்பில் உள்ள பல சிங்கள செய்தியாளர்களின் கருத்து. அதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

நீங்கள் சாதாரணமாக நினைப்பது போல, ஜெனீவாவில் ராஜபக்சேக்களுக்கு பெரும் தலையிடி தரப்போவது எங்கள் பிரச்சனை அல்ல. தாஜூடீன், பிரகதீப், லசந்த கொலைகளை விசாரித்த சிங்கள போலீஸ் அதிகாரியினை கொழும்பில் இருந்து கடத்தியதுடன் புலனாய்வு அமைப்புகளின் வேலைகள் எப்போதோ ஆரம்பமாகி விட்டன.

இன்று சீனா உள்ளே வந்து விட்ட நிலையில், இந்தியாவுக்கும், மேற்குலகுக்கும் உள்ள ஒரே தெரிவு, புலனாய்வு அமைப்புகளின் வேலை தான்.

நாம், இங்கே இந்தியாவினை நக்கல் பண்ணினாலும், இந்தியா விட்டுவிடும் என்று நானோ, நீங்களோ நினைத்தால், அதை விட முட்டாள் தனம் இருக்க முடியாது.

இன்று இலங்கைக்குள் எப்படி தன் அதிகாரத்தை சீனாவை மீறி செலுத்தலாம் என இந்தியாவும், மேற்கும் பார்த்துக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இவ் மக்கள் போராட்டம் நிகழ்ந்தமையால் அதை தமக்கு சாதகமாக்கலாமா என அவை பார்க்கின்றன.  எப்படி எம் ஆயுத போராட்டத்தை இந்தியா அன்று தனக்கு சாதகமாக்கியதோ அதே போன்றொரு முயற்சி தான் இது.

ஆனால் இப் போராட்டம் வேறு வழியில்லாது தமிழ் மக்களால் வெகுசன அமைப்புகளினூடு, தமிழ் அரசியல் கட்சிகளின் அனுசரையுடன் இடம்பெற்ற ஒன்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

போராட்டத்துக்கு தேவையான, உந்துதலை கொடுத்தது, சுமந்திரனும், சாணக்கியனும் என்று குழந்தைத்தனமாக நம்புகிறீர்களா?

Link to comment
Share on other sites

7 minutes ago, Nathamuni said:

நான் சொல்வது, கொழும்பில் உள்ள பல சிங்கள செய்தியாளர்களின் கருத்து. அதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

நீங்கள் சாதாரணமாக நினைப்பது போல, ஜெனீவாவில் ராஜபக்சேக்களுக்கு பெரும் தலையிடி தரப்போவது எங்கள் பிரச்சனை அல்ல. தாஜூடீன், பிரகதீப், லசந்த கொலைகளை விசாரித்த சிங்கள போலீஸ் அதிகாரியினை கொழும்பில் இருந்து கடத்தியதுடன் புலனாய்வு அமைப்புகளின் வேலைகள் எப்போதோ ஆரம்பமாகி விட்டன.

இவை தொடர்பாக எந்த அழுத்தமும் பெரியளவில் இலங்கை மீது எழ மாட்டாது. அத்துடன் உப்பிடி ஒரு நாட்டில் உள்ள விசாரணை அதிகாரியை கடத்தி அவர் மூலம் பெற்ற தகவல்களைக் கொண்டு இன்னொரு நாட்டின் மீது அழுத்தங்களை வைக்க முடியாது.  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

இவை தொடர்பாக எந்த அழுத்தமும் பெரியளவில் இலங்கை மீது எழ மாட்டாது. அத்துடன் உப்பிடி ஒரு நாட்டில் உள்ள விசாரணை அதிகாரியை கடத்தி அவர் மூலம் பெற்ற தகவல்களைக் கொண்டு இன்னொரு நாட்டின் மீது அழுத்தங்களை வைக்க முடியாது.  
 
என்ன சொல்ல வருகிறீர்கள் நிழலி?

முள்ளிவாய்க்காலில் எதுவுமே நடக்கவில்லை, எல்லாமே பொய் என்று சிங்களம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அதுக்கு ஆப்பு வைக்கும் வகையில், சட்ட ரீதியாக விசாரணை செய்த அதிகாரி, விசாரணை கோப்புகளுடன் வெளியே எடுக்கப்பட்டுள்ளார். அதன் வீச்சு புரிகிறதா, இல்லையா?

மறுபுறத்தே, ராஜபக்சேக்களின் கோபத்தால், அந்த அதிகாரியின் உயர் அதிகாரியான சாணி அபேயசேகரா உள்ளே கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

நேற்று, எனது பதிவுக்கு, பச்சை குத்தியவர்களில் நீங்களும் ஒருவர்.

தொகுத்து எழுதியதற்கு பச்சை. துருத்திய வரிக்கு கருத்து😎

மேற்குக்கும் அதன் தரகராக இருக்கும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் போட்டிகள் பற்றியும் பல அலசல்கள் வந்துதான் உள்ளன.  சிறிலங்காவில் என்ன நடக்கின்றது, ஜெனீவாவில் என்ன நடக்கக்கூடும் என்பது எல்லாம் wargame ஆக மேசைகளில் அலசப்படுகின்றன.

ஆனால் P2P பேரணியை பின்னிருந்து நடத்தியது புலனாய்வு அமைப்புக்கள் என்பது ஆதாரமில்லாத வெறும் ஊகங்கள். இதையும் ஒருவர் சும்மா எங்காவது எழுதியிருப்பார். ஊகத்தில் தர்கிக்க என்ன இருக்கின்றது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.