Jump to content

துணை (குறும் படம்)

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் நடக்கும் மாற்றங்கள்.   நல்ல முடிவு  .சிறந்த கதை 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான குறும்படம்.
இணைப்புக்கு நன்றி யாயினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல குறும்படம் ...!

இந்தப் படம் கனடாவிலை தான் எடுத்திருக்குப் போல...!

அங்கும் ராமா என்ற பெயரில்...பட்டர் விக்கிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//இல்லையென்றுதான் சொல்லுவினம், ஓம் என்று சொல்ல ஏலாது. இல்லையென்று சொல்லவேண்டும் என்றுதான் இந்த சமூதாயம் அவர்களுக்கு சொல்லிவளர்த்திருக்கு//..

பட்டென்று உரைக்கும்படி வசனம் இருந்தாலும், எடுத்த கருப்பொருளை சொல்ல கொஞ்சம் தயங்குவதாக படம் பார்க்கும்பொழுது எண்ணத்தோன்றியது.. 

இணைத்தமைக்கு நன்றிகள் யாயினி.

Link to comment
Share on other sites

On 10/2/2021 at 07:46, புங்கையூரன் said:

ஒரு நல்ல குறும்படம் ...!

இந்தப் படம் கனடாவிலை தான் எடுத்திருக்குப் போல...!

அங்கும் ராமா என்ற பெயரில்...பட்டர் விக்கிறார்களா?

இந்தக் குறும்படம் யேர்மனியில் எடுக்கப்பட்டது. களஉறவு வீ.சபேசன் இயக்கத்திலும் உருவாக்கத்தில் வந்துள்ளது. சபேசனே மறந்திட்டீங்களோ புங்கையூரான் ? கனகாலம் களத்தில் சபேசன் எழுதவில்லை.

சபேசன் மேடைக்கு வரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, shanthy said:

இந்தக் குறும்படம் யேர்மனியில் எடுக்கப்பட்டது. களஉறவு வீ.சபேசன் இயக்கத்திலும் உருவாக்கத்தில் வந்துள்ளது. சபேசனே மறந்திட்டீங்களோ புங்கையூரான் ? கனகாலம் களத்தில் சபேசன் எழுதவில்லை.

சபேசன் மேடைக்கு வரவும்.

நன்றி....சாந்தி!

காலம், கவிதையெழுதிய படியே..... தன் பாட்டில் நகர்ந்து கொண்டிருக்கின்றது!

அது யாருக்காகவும் காத்திருப்பதில்லையே...! 

உங்கள் றைன் நதிக் கவிதை வாசித்தேன்! நிறைய விடயங்கள் அதில் உள்ளடங்கியுள்ளன!

"நம்ம " சபேசனை யாரால் தான் மறக்க முடியும்?

மேடையைப் பார்த்தா படியே உள்ளேன்..!😀

Link to comment
Share on other sites

நீண்ட காலம் வராததால் எனது கடவுச்சொல் மறந்து விட்டது. இங்கே எனது குறம்படத்தை இணைத்த யாயினி மற்றும் கருத்து எழுதிய நிலாமதி, புங்கையூரான், பிரபா சிதம்பரநாதன், சாந்தி அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shabesan2005 said:

நீண்ட காலம் வராததால் எனது கடவுச்சொல் மறந்து விட்டது. இங்கே எனது குறம்படத்தை இணைத்த யாயினி மற்றும் கருத்து எழுதிய நிலாமதி, புங்கையூரான், பிரபா சிதம்பரநாதன், சாந்தி அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி  சபேசன்!!! குறும்புகள் தொடரட்டும்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சபேசன் said:

கடவுச்சொல் ஞாபகம் வந்து விட்டது. மீண்டும் நன்றிகள்

வணக்கம் சபேசன் சார்!
எங்களையெல்லாம் ஞாபகம் இருக்கோ? :)

Link to comment
Share on other sites

1 minute ago, குமாரசாமி said:

வணக்கம் சபேசன் சார்!
எங்களையெல்லாம் ஞாபகம் இருக்கோ? :)

உங்களை எல்லாம் மறக்க முடியுமா?

Link to comment
Share on other sites

1 hour ago, சபேசன் said:

கடவுச்சொல் ஞாபகம் வந்து விட்டது. மீண்டும் நன்றிகள்

சமுதாயாத்திற்கு தேவையான சிறந்த கருத்தியலை கொடுத்த சிறந்த குறும்படம். வாழ்த்துக்களும்  நன்றயும்  சபேசன். 

Link to comment
Share on other sites

21 hours ago, tulpen said:

சமுதாயாத்திற்கு தேவையான சிறந்த கருத்தியலை கொடுத்த சிறந்த குறும்படம். வாழ்த்துக்களும்  நன்றயும்  சபேசன். 

மிக்க நன்றி tulpen!

Link to comment
Share on other sites

வயதான தனித்து வாழும் துணையற்றவர்களிற்கு அவர்களின் தனிமையை போக்க ஒரு துணை வேண்டும் என்ற கருத்தியலில் அண்மையில் தமிழில் குறும்படங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கும் ஆரோக்கியமான சூழ்நிலையில் சபேசனின் துணையும் வெளி வந்துள்ளது.'

'சில்லுக்கருப்பட்டி'  எனும் 4 குறும்படங்களின் தொகுப்பில், தனித்து வாழும் ஒரு ஆணுக்கும் அதே போன்று வாழும் பெண்ணுக்கும் இடையில் அரும்பும் காதல் / பாசம் பற்றிச் சொல்லும் படமாக Turtles அமைந்து இருந்தது. அதன் பின்னர் வெளியான 'புத்தம் புது காலை' எனும் குறும்படங்களின் தொகுப்பில் ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்து இருந்த 'இளமை இதோ இதோ' யும் இதே போன்று வயதானவர்களுக்கு இடையில் இருக்கும் காதலையும் துணையின் தேவையையும் சொல்லி இருந்தது. 

இதே வரிசையில் சபேசனின் துணையும் வெளியாகி உள்ளது. இது பற்றிய எந்த பிரக்ஞையும் பெரியளவில் இல்லாத எம் சமூகத்தில் இருந்து வெளிவந்து இருக்கும் இக் குறும்படம் எம் மத்தியில் பேசாத கருப்பொருளை துணிவாக சொல்லியிருக்கு. வயதானவர்கள் என்றால் ரீவி சீரியல் பார்த்துக் கொண்டு,  பேரக் குழந்தைகளை பொறுப்பாக வளர்க்கும் கடமையை மட்டுமே செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பவர்களை அதிகமாக கொண்ட புலம்பெயர் சமூகத்தில் இந்தப் படம் அவசியமான ஒன்று.

முதல் முயற்சி என்பதால் நாடகத்தன்மை இடையிடையே எட்டிப் பார்ப்பது இலேசாக தெரிகின்றது. முக்கியமாக நாயகி கதைக்கும் முறை எனக்கு சற்று நாடகத்தன்மையாக தெரிந்தது. தமிழ் சினிமா பாடல்களின் வாத்திய இசையை பின்னனி இசையாக பாவிக்காமல் எம்மவர்களால் இதற்கென தனியாக கோர்க்கப்பட்ட இசை கோர்வையை பயன்படுத்தி இருப்பின் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

ஆனாலும் இப்படியான சின்ன சின்ன விடயங்களை தவிர்த்து பார்த்தால் நல்லதொரு முயற்சி. 

பி.கு.

விக்கி மீடியா வில் துணைக்கு என பக்கம் இருந்தால் நல்லது
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சபேசன்  அப்படியே தமிழ் டைட்டில் ம் கொஞ்சம் கவனம் .

Link to comment
Share on other sites

13 hours ago, நிழலி said:

மிக்க நன்றி நிழலி!

நாடகத் தன்மை வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதையும் மீறி சில இடங்கள் அப்படியான உணர்வை தரக் கூடியதாக அமைந்து விட்டன என்பதில் எனக்கு சற்று வருத்தம் உண்டு. அடுத்தடுத்த படங்களில் கற்றுத் தேறி விடுவேன் என்கின்ற நம்பிக்கை உண்டு.

விக்கியில் ஒரு பக்கத்தை திறப்பது நல்ல ஒரு யோசனை. நிச்சயம் செய்கிறேன்.

12 hours ago, பெருமாள் said:

வாழ்த்துக்கள் சபேசன்  அப்படியே தமிழ் டைட்டில் ம் கொஞ்சம் கவனம் .

மிக்க நன்றி பெருமாள்! கவனத்தில் எடுக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.