Jump to content

`இந்த மூன்றும் கூட கொரோனா அறிகுறிகளாக இருக்கலாம்!' - சொல்லும் பிரிட்டனின் புதிய ஆய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`இந்த மூன்றும் கூட கொரோனா அறிகுறிகளாக இருக்கலாம்!' - சொல்லும் பிரிட்டனின் புதிய ஆய்வு

New corona virus

New corona virus ( Pixabay )

காய்ச்சல், இடைவிடாத இருமல், வாசனை மற்றும் சுவை உணர்வுகள் மரத்துப்போவது போன்ற அறிகுறிகள் மட்டுமல்லாமல் தற்போது புதிதாக குளிர், பசியின்மை, தசைவலி போன்றவற்றையும் காட்டக்கூடும் என்று ஆய்வில் கண்டுபிடிப்பு.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருக்கும் இம்பீரியல் கல்லூரி ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக நாடுகளின் பிரதான அச்சமாக உள்ள கொரோனா பெருந்தொற்று முன்பு கூறியுள்ள பல அறிகுறிகளையும் தாண்டி வேறு சில அறிகுறிகளான குளிர், பசியின்மை, தசைவலி போன்றவற்றையும் காட்டக்கூடும் என்பதே அது.

ஜூன் 2020 முதல் ஜனவரி 2021 வரையில் சுமார் ஒரு மில்லியன் மனிதர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவு , இதற்கு முன் நம்மிடம் கூறப்பட்டு வந்த சில அறிகுறிகளையும் கடந்து மேலே கூறப்பட்டவையும் தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.

corona virus
 
corona virus

ஆனால் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் இதற்கு முன் கொடுத்திருந்த நிச்சய அறிகுறிகள் காய்ச்சல், இடைவிடாத இருமல்,வாசனை மற்றும் சுவை உணர்வுகள் மரத்துப்போவது போன்றவை மட்டுமே. இந்தத் தகவலை Xinhua அறிவிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழுமமான REACT( Real-time Assessment of Community Transmission) சில சாத்தியக்கூறுகளை முன்வைக்கிறது. இந்த அறிகுறிகளில் வயதை ஒட்டிய மாற்றங்கள் பலரிடம் காணப்பாட்டாலும், அனைவரிடமும் இருந்த ஒரே பொதுவான அறிகுறி குளிர்ஜுரம்.

 

தவிர, இந்த அறிகுறிகளின் எண்ணிக்கை ஒருவரிடம் அதிகம் காணப்பட்டால் அவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைக் காட்டுவதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால் இவர்கள் ஆய்வு மேற்கொண்டவர்களிடம், 60 சதவிகிதம் பேர் முன் கூறப்பட்டிருந்த எந்த விதமான அறிகுறிகளையும் ஆராய்ச்சி நடத்திய வாரத்தில் காட்டவில்லை என்றும் கூறுகிறார்கள்.

corona
 
corona

இங்கிலாந்து நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை 3,996,833 இது வியாழன் காலை எடுக்கப்பட்ட எண்ணிக்கை. இதில் 115,068 இறப்புகள். கொரோனா பாதிப்பில் உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறது இங்கிலாந்து. முதல் மூன்று இடங்கள் முறையே அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில்.
இதுவரையில் இங்கிலாந்து நாட்டில் 12.6 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- லதா ரகுநாதன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா கொல்லுதோ இல்லையோ, இந்த ஆங்கில வைத்திய ஆராச்சிக் குழுமங்கள் ஆளுகளை உயிரோடை கொன்றுவிடும்.

ஆங்கிலத்தில் ADR என்று அழைக்கப்படும் இந்தத் தொந்தரவு, இந்த காலகட்டத்தில் பல நோயாளிகளை வாட்டி வதைக்கும் தொந்தரவாக உருவெடுத்துள்ளது. 

ADR என்றால் என்ன?
ஏ.டி.ஆரின் முழு விளக்கம் ADR "Adverse drug reaction" அதாவது எதிர் எதிர் மருந்துகளின் பக்கவிளைவுகள். ஆங்கில மருத்துவர்கள் கொடுக்கும் அனைத்து மருந்துகளும் முழுக்க முழுக்க உடலுக்கு ஒவ்வாத இரசாயனங்களினால் ஆனவை. இது மருந்து கொடுக்கும் மருத்துவர் உட்பட அதனை உட்கொள்ளும் நோயாளி வரையில் அனைவருக்கும் தெரியும். தெரிந்தே நோயாளிகளும் உட்கொள்கிறார்கள் 
  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு அந்த பெடியனை பற்றி தெரியுமா?... அந்த வயசுக்குரிய குழப்படி . தூசணம் கதைக்கிறது மட்டும் தான் பெடியனில் உள்ள குறை ...ஏ லெவலில் கணித பிரிவில் படித்து வரும் அவன் வகுப்பில் டொப் ராங்கர்...அவனது பெற்றோர்களும் ஆசிரியர்கள் ...தகப்பன் அதே பாடசாலையில் படித்தவர் ...காலமாகி விட்டார். அந்த பெடியன் குரலை ரெக்கோட் பண்ணாமல் உங்களிடம் வந்து சொன்னால் , அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?...பெடியன் குழப்படி அவன் பொய் சொல்கிறான் என்று தான் சொல்வீர்கள். இந்த ரீச்சர் குடும்பம் மட்டுவிற்கு வந்து  7,8 வருடங்கள் தான் இருக்கும்...பெடியனுக்கும்,டாக்குத்தரின் மகனுக்கும் படிக்கிறதில் போட்டி ...இருவரும்  பேசி தீர்த்து  என்று  மூடிட்டு இருந்திருக்கோணும் அல்லது அதிபரிடம் கொண்டு போய் இருக்கோணும் ....அதை எல்லாம் விட்டுட்டு ஒரு பேட்டை ரவுடி மாதிரி தனது அதிகாரத்தை காண்பிக்கிறா அதற்கும் சிலர்  வாங்கி கொண்டு ...இவவின் குணம் ஏற்கனவே பெடியனுக்கு தெரிந்த படியால் தான் ரெக்கோட் பண்ணினவன். அவ வளமையாய் எல்லா யாழ்ப்பாணத்தவருக்கு இருக்கும் ஒரு  திமிரில் தேவையில்லாமல் கதைத்ததால் அந்த டொக்டருக்குத்  தான் அவமானமும்,பிரச்சனையும் . இனி மேல் பெற்றோர் படிப்பிக்கும் பாடசாலைகளில் பிள்ளைகள் படிக்க கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வர பட வேண்டும் . அந்த டொக்டருக்கு மட்டுவில் ஒரு மரியாதையும் இல்லை ...ஆனால் அவர் கல்முனை ,அக்கரைப்பற்று போன்ற பகுதிகளில் வைத்திய சேவைக்காய் பிரபல்யமான ஒருவர் ...டெங்கு ஒழிப்பு ,கொரோனா விழிப்புணர்வு சம்மந்தமாய் நேரடியாய் களத்திற்கு போய் உழைத்தவர் ...இவர் கொரோனா காலத்தில் போட்ட கட்டுப் பாடுகளால் முஸ்லீம் மக்கள் இவர் மீது கடும் எதிர்ப்பில் இருந்தனர் ...மக்களுக்காய் கடுமையாய் உழைத்தவர் ...மக்களுக்கு இவர் மீது மதிப்பு இருந்தது ...இவை எல்லாம் இவரது சொந்த மனைவியால் 10 நிமிசத்தில் இல்லாமல் போகும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார் . உண்மையில் இவரது மனைவி கதைத்தது கோபத்தில் அதில் அரசியலில்லை ....ஆனால் பிறகு அதை அரசியலாக்கி விட்டார்கள் ...அவருக்கு சாணக்கியன் கூடவும் நல்ல நடப்பு இருக்கு. ஆசிரியைக்கு முதலில் நல்ல கவுன்சிலிங்குக்கு அனுப்ப வேண்டும் ....எங்கேயாவது தூர இடத்திற்கு டிரான்சார் கொடுத்து அனுப்ப வேண்டும்  பி;கு : டீச்சர் தன்னுடைய மகன் கெட்டு போக கூடாது என்றால் அவருடைய மகனைத் தான் கவனமாய் வைத்திருக்க வேண்டும் ...அடுத்தவரோடு போய் சண்டை பிடிப்பதில் பிரயோசனமில்லை ...இது இரு மாணவர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்சனை 
    • இன்சைட் ரேடிங் என்பது காங்கிரஸ் செனட் மட்டத்தில் நன்றாகவே நடக்கிறது. ஒரு சட்டம் வரப்போகுது என்றவுடனேயே அதனைச் சார்ந்த ஸ்ரொக்குகளை விற்றோ வாங்கியோ பணத்தை சம்பாதிக்கிறார்கள்.
    • ஒன்றாக இருந்த கூட்டமைப்பை உடைத்த சுமத்திரன் இப்படிக் கூறுவது  சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது.
    • எது நடுநிலை வகிதத்தா?எனக்கு முக்குப் போனாலும் எதிரிக்கு(தமிழர்களுக்கு) சகுனம் பிழைக்கணும் என்று நினைப்பது இந்தியா. இந்தியாவே இந்தப் போரை நடத்தியது. அது எப்படி ஒத்துக் கொள்ளும். ஒருவேளை 1 வாக்கால் இலங்கை தோற்க வேண்டிய நிலை வந்தால் நடுநிலமையைக்கைவிட்டு  சீனா .பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும். இது வரலாறு.
    • ஐயா மன்னிக்க வேணும்... நீங்கள் என்ன உத்தியோகம் பார்கிறியல் எண்டு சொல்லேளுமே? அதுக்கு பிறகும், நாங்க கெட்ட குடியோ, நீங்கள், பெருங்குடியோ எண்டு ஒரு முடிவுக்கு வரலாம். 🤦‍♂️ *** இலவசமா கொடுக்கிறது தானே எண்டு புத்திமதிகளை அடிச்சு விடலாம்.  ராஜ், ராஜரத்தினம் உள்ள போனது insider trading.  அது illegal ஆனாலும், அந்த வகையில் வந்த பணம் பறிமுகலாது எண்டு சட்டம் உள்ளது. ஆகவே அவர் உள்ளே போய் வந்தாலும், ஒரு billionaire. அவர் உள்ள போக வேண்டிவந்ததன் காரணம், புலிகளுக்கு, நிதிஉதவி அளித்தது. அதேவேளை, ஏன் சசிகலா, ஸ்டாலின், மகிந்தா நினைவுக்கு வரவில்லை?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.