Jump to content

தவறான தகவலை அடையாளம் காண்பதற்கான உதவிக்குறிப்புகள்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

who-covid-19-misinformation-disinformation.gif?sfvrsn=8799b6f7_15

மூலத்தை மதிப்பிடுங்கள்

 உங்களுடன் தகவல்களைப் பகிர்ந்தவர் யார், அவர்கள் எங்கிருந்து அதைப் பெற்றார்கள் என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் . உங்கள்  நண்பர்கள் அல்லது குடும்பத்தினராக இருந்தாலும், அவர்களின் மூலத்தை நீங்கள் சரிபாக்க வேண்டும்.

 போலி சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்க்க,  குறிப்பிடட கணக்கின் சுயவிவரங்கள்(Profiles) எவ்வளவு காலம் செயலில் இருந்தன, அவற்றைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் சமீபத்திய இடுகைகளைப் பாருங்கள். வலைத்தளங்களைப் பொறுத்தவரை, பின்னணி தகவல்கள் மற்றும் முறையான தொடர்பு விவரங்களைத் தேட “எங்களைப் பற்றி மற்றும் “எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் பக்கங்களைச் சரிபார்க்கவும்.

 படங்கள் அல்லது காணெளிகளின்  நம்பகத்தன்மையை சரிபார்க்க ஒரு பழக்கமாக்குங்கள். படங்களுக்கு, கூகிள் மற்றும் டின்இ(Tineye) வழங்கிய தலைகீழ் பட தேடல்(Reverse Image Search) கருவிகளைப் பயன்படுத்தலாம். வீடியோக்களுக்கு,  தலைகீழ் பட தேடல் கருவிகளில் நுழையக்கூடிய சிறு உருவங்களை பிரித்தெடுக்கும் சர்வதேச மன்னிப்பு சபையின்  யூடியூப் டேட்வியூவரைப்(Youtube Datviewer) பயன்படுத்தலாம்.

 ஒரு ஆதாரம் நம்பமுடியாத அல்லது துல்லியமற்றதாக இருப்பதற்கு  தேர்ச்சி அற்ற  காட்சி வடிவமைப்பு(Visual Design), மோசமான எழுத்து மற்றும் இலக்கண பிழைகள்  அல்லது ஆச்சரியக்குறிகள், நிறுத்தல் குறிகளின்  அதிகப்படியான பயன்பாடுகள்  ஆகியவை அடங்கும்.

தலைப்புச் செய்திகளுக்கு அப்பால் செல்லுங்கள்

அதிக எண்ணிக்கையிலான கிளிக்குகளைப் பெற தலைப்புச் செய்திகள் வேண்டுமென்றே பரபரப்பானதாகவோ அல்லது ஆத்திரமூட்டும் விதமாகவோ இருக்கலாம். ஒரு கட்டுரையின் தலைப்பை விட  உட் சென்று  முழுமையாக படியுங்கள் . தகவலுக்காக சமூக ஊடகங்களை விட பரவலாகத் தேடுங்கள்.செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் போன்ற அச்சு ஊடக மூலங்களையும், பாட்காஸ்ட்கள்(Podcasts) மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள் போன்ற டிஜிட்டல் மூலங்களையும் பாருங்கள்.

 உங்கள் ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதன்(Diversifying) மூலம்  நம்பகமான அல்லது நம்பகதன்மையற்றவை பற்றி  சிறந்த படத்தைப் உங்களால் பெற்றுக்கொள்ளமுடியும்.

திகதியை சரிபார்க்கவும்.

நீங்கள் தகவல்களைக் காணும்போது, பிவரும்  கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்:

இது சமீபத்திய கதையா?

இது புதுப்பித்த மற்றும் தற்போதைய நிகழ்வுகளுக்கு பொருத்தமானதா?

தலைப்பு, படங்கள்  அல்லது புள்ளிவிவரங்கள் நிகழ்வுகளுக்கு வெளியே(Out of Context) பயன்படுத்தப்பட்டுள்ளதா?

துணை ஆதாரங்களை ஆராயுங்கள்

அவர்களுடைய  கூற்றுக்ள்  நம்பகரமான உண்மைகளுடன் ஒத்துபோகின்றனவான என உறுதி செயுங்கள்  - எடுத்துக்காட்டாக, நிபுணர்களிடமிருந்து மேற்கோள்கள் அல்லது புள்ளிவிவரங்கள் அல்லது ஆய்வுகளுக்கான இணைப்புகள். நிபுணர்ககள் நம்பகமானவர்கள் என்பதையும் இணைப்புகள் உண்மையில் கட்டுரையை ஆதரிக்கின்றன என்பதையும் சரிபார்க்கவும்

ஆசிரியரை அடையாளம் காணவும்.

ஆசிரியரின் பெயர்  உண்மையானதா அல்லது நம்பக தன்மை உடையதா என  வலைத்தளங்களின்(Online) தேடுங்கள்.

உங்கள் சார்பு தன்மையை  சரிபார்க்கவும்.

சந்தேகம் இருக்கும்போது, உறுதியான  தகவல்களை வெளியிடுவதில் கவனம் செலுத்திய சர்வதேச நிறுவனங்கள்,உண்மையை-சரிபார்ப்பு வலையமைப்புகள்  மற்றும் உலகளாவிய செய்தி நிறுவனங்கள் போன்ற நம்பகமான  அமைப்புகளை அணுகவும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. - குறள்: 423

-மூலம் உலக சுகாதார நிறுவனம், தமிழில் யாழுக்காக  சுமா.

Edited by zuma
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, zuma said:

இதுகளை தேடி சரி பார்க்கவே பாதிப்பொழுது  வீணாகி விடும்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கிளி குருவி எல்லாம்கூட கேர்ள் பிரண்டுடன் சுத்துது.......ம்......!   😁
  • ஓ அப்படியா செய்து பார்க்கத்தான் வேண்டும். நன்றி sir  உண்மைதான் இப்ப பெண்களைவிட ஆண்களிற்குத்தான் நிறைய சமையல் முறைகள் தெரிந்திருக்கு... Ha ha 
  • அன்று நாம் ஆசிரியர்களின் காலில் விழுந்து கும்பிடவில்லை.ஓரளவு மரியாதையுடன் வாழ்ந்தோம்.ஆசிரியர்கள் ,அதிபர்கள் தங்களை விழுந்து கும்பிட அனுமதிக்கவும் இல்லை .ஆனால் இன்று மேடைகளில் ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்பார்க்கின்றனர் விழுந்து கும்பிட வேணும் என்று.
  • இயற்கையே மாறிப்போச்சு..! ********************* கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி கால் பாகம் தரையே இங்கு இயற்கையின் செழிப்பு எல்லாம் ஏன் தானோ விறகாய் போச்சு   பாரெல்லாம் வெய்யில் வெக்கை பாலைவனம்போல் காயும் தேசம் நீரெல்லாம் வற்றித்தானே-எம் நிலமெல்லாம் புழுதியாச்சு   மழைவந்து கொட்டித் தாக்கும் மரமெல்லாம் காற்றால் சாயும் நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய் நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும்.   விஞ்ஞானம் உயர்ந்ததாலே விண் மேகம் கீழேயாச்சு சந்திரனில் கால் பதித்து—பூமி சரித்திரமே பின்னால் போச்சு   நெருப்போடு நீரும் காற்றும் நிலத்தோடு ஆகாய ஐம்பூதம் அத்தனையும் எம்முள் வைத்தே அகிலமே எம் உடலாய்யாச்சு   இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே.   அன்புடன் -பசுவூர்க்கோபி-
  • வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தோம். பனை அபிவிருத்தி தொடர்பிலும் ஆராய்ந்தோம் அதேபோல் பனை உற்பத்திகளை எவ்வாறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதையும் ஆராய்ந்தோம் அத்தோடு புகையிலை உற்பத்தி தொடர்பிலும் புகையிலை உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்தோம்.     படகுாகட்டுமானங்கள், விவசாயம் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பிலும் ஆராய்ந்தோம். அரச பொருளாதார ஊக்குவிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பினூடாக சில திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். வடபகுதியிலுள்ள சிறு தொழில் முயற்சியாளர்கள், நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தாமாகவே தமது நிலையை மேம்படுத்தி செல்வது வரவேற்கதக்கது. முதலீட்டாளர்களுக்கு எமது அமைச்சின் ஊடாக பூரண ஒத்துழைப்பினை வழங்க தயாராக இருக்கின்றோம். அத்தோடு மேலும் வடபகுதியில் இவ்வாறான சுயதொழில் முயற்சியாளர்கள் நடுத்தர முயற்சியாளர்களுக்கு எம்மாலான உதவியை ஒத்துழைப்பினை வழங்கி அவர்களை மேம்படுத்துவதன் மூலம் பிரதேங பொருளாதாரத்தை முன்னேற்ற செல்ல முடியும் என்பது எமது நோக்கமாகும். வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறப்பதற்கு நாங்கள் மிகவும் அவதானமாக செயற்பட்டு வருகின்றோம். எனினும் எதிர்காலத்தில் அவற்றை மீள திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். நுண் கடன் திட்டம் என்பது ஒரு பிரச்சினையான விடயமாக காணப்படுகின்றது. குறிப்பாக நுண் கடன் பட்டவர்கள் கடனை மீளச் செலுத்த முடியாத நிலை இங்கே காணப்படுகின்றது அதோடு இந்த நுண்கடன் தொடர்பாக நாடு பூராவும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக கடன் பெற்றவர் பலர் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. சிலர் கடனை பெற்று சில தொழில் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். எனினும் அந்த தொழில் முயற்சியானது, தொழில் சுற்றாடல் மற்றும் அகசூழல் காரணமாக அது சாத்தியப்படாத்தன் காரணமாக பொதுமக்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது” என்றார். யாழில் தொழிற்சாலைகளை மீள திறந்து பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.