Jump to content

போலி அறிவியலும் மூட நம்பிக்கைகளின் விதையும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மையமா? இந்த மாதிரியான கோவில்களை இப்போது உள்ள அறிவியலால் கட்டமுடியுமா என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில் மத அடிப்படைவாதிகள், இந்தியாவின் புராதனச் சின்னங்களான கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் 'மகா சக்தி' பெற்று சுற்றி உள்ள ஊர்களில் 'இடி விழாமல்' தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் 'இடி தாங்கியாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த 'அறிவியல்பூர்வமான' அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் சொல்லி இருக்கக்கூடும்.

இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர் வீச்சுக் காரணமாகத்தான் 'சிட்டுக் குருவி' இனம் அழிந்து போவதாகவும், சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உள்ள இடத்தில்தான் பூமியின் காந்தப் புல மையம் உள்ளதாகவும், அம்மை நோயின் போது வேப்பிலைகள் கட்டுவது அது ஒரு 'ஆண்டிபயாடிக்' என்ற அறிவியல் உண்மையின் காரணமாகத்தான் என்றும் உங்களிடம் யாரேனும் சொல்லி இருக்கக்கூடும். மேற்கண்ட கருத்துகளை நீங்கள் நம்பி இருந்தால் நீங்களும் போலி அறிவியலுக்குப் பலி ஆனவர்தான்.

ஏனெனில், உண்மையில் கலசங்கள் இடிதாங்கிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சிட்டுக்குருவிகள் நகர்ப்புறங்களில் குறைந்து வருவதற்குக் காரணம் அவை கூடு கட்டுவதற்கு ஏற்ற இடங்கள், மரங்கள் குறைந்து வருவதுதான். பூமி கோள வடிவிலானது, ஒரு கோளத்தின் காந்த மையம் அதன் நடுவில்தான் இருக்க முடியுமே தவிர அதன் வெளிப்பரப்பில் இருக்க முடியாது.

வேப்பிலை 'ஆண்டிபயாடிக்' என்றும், அதனால்தான் அம்மை நோயின்போது அதனைக் கட்டுவதாகக் கூறி வரும் நண்பர்களுக்கு ‘அம்மை நோய்' வைரஸினால் ஏற்படும் நோய் என்பதும், ‘ஆண்டிபயாடிக்' என்பது பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து என்பதும் வைரஸும் பாக்டீரியாவும் வேறு வேறு என்பதும் தெரியாது.

போலி அறிவியல் உருவாகக் காரணம்: நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான 'சண்டை' பல நூற்றாண்டு கால வரலாறு கொண்டது. கலிலியோ பூமி உருண்டை என்றபோது, மதவாதிகள் அவரைக் 'குற்றவாளி' என்றனர். மத நூல்கள் பூமி தட்டை என்று கூறுவதாகவும் கலிலியோ கடவுளுக்கு எதிராகப் பேசுவதாகவும் கூறி அவரைக் கொல்ல முனைந்தனர். டார்வின் உயிரித் தோற்றக் கொள்கையை வெளியிட்டபோது, அது கடவுளுக்கு எதிரானது என்றும், கடவுள்தான் அனைத்து உயிரிகளையும் படைத்தார் என்றும் அவரை மதவாதிகள் சாடினர்.மரபியலின் தந்தை கிரிகர் மெண்டல் செய்த ஆய்வுகள் கடவுளின் படைப்பிற்கு எதிரானது என்று கூறி கிறிஸ்துவப் பாதிரியார்கள் அவரை இருட்டறையில் அடைத்தனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை நம் நாட்டை மூடநம்பிக்கைகளின் தலைநகரம் என்றே நாம் கருதலாம். பாரம்பரியம், மரபு,கலாச்சாரம், மத நம்பிக்கைகளின் பெயரில் எதனை வேண்டுமானாலும் மக்களை நம்ப வைக்கலாம். மதத்தில் உள்ள கட்டுக்கதைகள் மிகுந்த கற்பனை வளம் கொண்டவை.

அதன் கதைகளில் பூமியைக் கடத்திக்கொண்டு போய் பூமியில் உள்ள கடலிலேயே மறைத்து வைத்திருப்பார்கள்! பகுத்தறிவும் அறிவியலும் வளர ஆரம்பித்த காலங்களில் முதலில்

மத அடிப்படைவாதிகள் 'அறிவியலால்' தீங்கு ஏற்படும் என்று பிரச்சாரம் செய்தனர். போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும் என்றார்கள். ஆனால் அறிவியல் வளர வளர அடிப்படை வாதிகளால் அறிவியலை முழுமையாக எதிர்க்க முடியவில்லை.

மக்கள் அறிவியலைப் பின்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இதே நிலை தொடர்ந்தால் மதவாதிகளின் பிழைப்பில் மண் விழுந்து விடும். என்ன செய்வது என்று சிந்தித்துத் திட்டம் போட்டவர்களின் கண்டுபிடிப்பே போலி அறிவியல் ஆகும். அறிவியலை எதிர்த்த நாட்கள் போய், இப்போது ஒவ்வொரு மத நிறுவனமும் எங்கள் மதம்தான் அறிவியல்பூர்வமானது என்று அடித்துக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.

இந்தப் போலி அறிவியலின் அடிப்படை மிக எளிமையானது. அதாவது வீழ்த்த இயலாத எதிரியை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். இதன்படி அறிவியலையும் நம்பிக்கைகளையும், கட்டுக் கதைகளையும், பாரம்பரிய மருத்துவ மூடநம்பிக்கைகளையும் கோர்த்து விடுவதுதான். இதனால் மூடநம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல்பூர்வமானது என்று மக்கள் கருதுவார்கள். இவ்வாறு மதத்தில் உள்ள ஒவ்வொரு மூடநம்பிக்கையின் பின்பும் ஒரு அறிவியல் உள்ளதாக கதைகிளப்பி விடப்படுகிறது. தாலி கட்டுவது, தீ மிதிப்பது, ஹோமம் வளர்ப்பது, கோமியம் குடிப்பது, கோவில் சுத்துவது போன்ற அனைத்தும் இன்று அறிவியல்பூர்வமானது என்று கதை கட்டப்பட்டு உள்ளது.

இந்தக் கதைகளைக் கட்டுவதற்கென்று ஆன்மீக எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். இவர்கள் ஆன்மீகத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் பத்திரிகைகள் மூலம் இதனைச் சாதிக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு புதுக்கதை இருக்கும். எடுத்துக்காட்டாக, அதன் தலைப்புகள் 'அம்மி மிதிப்பதன் அறிவியல் அடிப்படை', ‘குளத்தைச் சுற்றினால் சரியாகும் தோல் நோய்' என்றவாறு இருக்கும். 

அமெரிக்காவில் உள்ள நாசாவும், நம்மூர் திருமூலரும்தான் இவர்களால் அதிகமாகப்பாதிக்கப்பட்டவர்கள். எதற்கெடுத்தாலும் 'நாசாவே சொல்லிடுச்சு' என்பார்கள்,

இல்லையானால் 'திருமூலர் அப்பவே இதச் சொல்லி வச்சுட்டுப் போயிட்டாரு' என்பார்கள். தமிழ் ஆசிரியர்களுக்கே புரியாத ஏதாவது ஒரு செய்யுளை எடுத்துப் போடுவார்கள். அதற்கு இதுதான் அர்த்தம் என்பார்கள். 'cosmic dance' அதனைக் குறிப்பால் உணர்த்தவே நடராஜர் 'நடனம்' ஆடுகிறார் என்பார்கள்.

நூல்: முனைவர் எஸ்.சேதுராமன் அவர்கள் எழுதிய “மூட நம்பிக்கைகளும் போலி அறிவியலும்”

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றீ துல்பன்.

நல்லதொரு கட்டுரை

இந்து மதத்தில் மாத்திர‌மல்ல எல்ல சமயத்திலும் இவ்வாறான மூட நம்பிக்கைகள் உண்டு. 

இங்கு பலர் இதை வாசித்தவுடன் சாரைப்பாம்பின் மீது மண்ணெண்ணை ஊற்றியதுபோல் வருவார்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நானும் போலி அறிவியலுக்கும்( Pseudoscience), சதி கோட்ப்பாடுகளுக்கும்(Conspiracy Theories) எதிராக ஒரு திரி திறக்கவேண்டும் என நினைத்தேன். ஏனேனில், தமிழ் பொது பரப்பில் தமிழ் பொக்கிஷம் விக்கி , ஹீலர் பாஸ்கர்,பாரிசாலன் போன்ற அரைவேட்டிக்காடுகளின் கணணொளிகள் அதிக அளவில் பரப்பப்படுகின்றன.

Edited by zuma
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, zuma said:

நானும் போலி அறிவியலுக்கும்( Pseudoscience), சதி கோட்ப்பாடுகளுக்கும்(Conspiracy Theories) எதிராக ஒரு திரி திறக்கவேண்டும் என நினைத்தேன். ஏனேனில், தமிழ் பொது பரப்பில் தமிழ் பொக்கிஷம் விக்கி , ஹீலர் பாஸ்கர்,பாரிசாலன் போன்ற அரைவேட்டிக்காடுகளின் கணணொளிகள் அதிக அளவில் பரப்பப்படுகின்றன.

நன்றி Zuma. போலி அறிவியலை ஆதாரத்தோடு சுட்டிக்காட்டும் பதிவுகளை இடுங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அரியலூர் புதைபடிவங்கள்(Fossil)  மற்றும்  பருப்பொருட்பேறுகளை(concretion)  குறித்த தவறான விளக்கங்களுக்களை அளித்த ஒரிசா பாலு மற்றும் தமிழ்போக்கிஷாம் விக்கி போன்றோருக்கு  நகைச்சுவையுடன் ஒரு எதிர்வினைவு.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

இந்து மதத்தில் மாத்திர‌மல்ல எல்ல சமயத்திலும் இவ்வாறான மூட நம்பிக்கைகள் உண்டு. 

👍

11 hours ago, zuma said:

நானும் போலி அறிவியலுக்கும்( Pseudoscience), சதி கோட்ப்பாடுகளுக்கும்(Conspiracy Theories) எதிராக ஒரு திரி திறக்கவேண்டும் என நினைத்தேன். ஏனேனில், தமிழ் பொது பரப்பில் தமிழ் பொக்கிஷம் விக்கி , ஹீலர் பாஸ்கர்,பாரிசாலன் போன்ற அரைவேட்டிக்காடுகளின் கணணொளிகள் அதிக அளவில் பரப்பப்படுகின்றன.

போலி அறிவியலுக்கு எதிரான திரி திறவுங்கோ 👏
நல்ல காலம் ஹீலர், பாஸ்கர் இவர்களை நான் பார்த்ததே இல்லை. தமிழ் பொக்கிஷம் இரண்டு 3 அரசியல் வீடியோ யாழ் இணையத்தில் பார்த்துள்ளேன். பாரிசாலன் சாதி வெறியர்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.