Jump to content

Recommended Posts

விவசாயி விக் ஏன் உங்களுக்கு தண்டப்பணம் தந்தார்கள் ?  கூட்டத்துடன் நின்றீர்களா? 
காவல் துறையினர் மக்களின் நலனுக்காகத்தானே கடமையாற்றுகின்றனர்.
சட்டங்களுக்கு பொதுமக்கள் மதிப்பளித்தே ஆகவேண்டியது கட்டாயமாகிறது. ஆனாலும் 1500 டொலர் என நினைக்க கவலையாக உள்ளது. சிறைத்தண்டனையும் உள்ளதா?  கொரானா வந்தாலும் வந்தது மக்களை ஒரு கை பார்க்கிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டல்லவா நிற்கிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன ஆசைகள்

முடிவில்???

திருடராகப்பார்த்து திருந்தாவிட்டால்??

நன்றி அக்கா ஆக்கத்துக்கும் எச்சரிக்கைக்கும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கண்மணி உங்கள் சிறுகதை போல யேர்மனியில் ஒரு நகரில் துருக்கியர்கள் வீட்டிலும் டிசம்பர் மாதம் நடந்தது. கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த மனைவி மீது கணவர் சுடுநீரால் ஊற்றி விட்டார். 

கொரோனா என்பது உலக அரசியல் சும்மா சனத்தை அடக்கும் தந்திரம் என்றெல்லாம் எம்மவர் பலரும் கருதுகின்றனர். 

இதுவே பேராபத்தான சிந்தனை. அரசு விதித்துள்ள தடைகள் விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். எங்களை மட்டும் அல்ல மற்றவர்களையும் பாதுகாப்பதற்கான உதவியாக எல்லோரும் உணர வேண்டும்.

 

 • Like 2
Link to comment
Share on other sites

சிலர் இப்பவும் கொரோனாவாவது ஒன்றாவது என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அது மட்டுமல்ல எம்மைப் பார்த்து நகைக்கவும் செய்கிறார்கள். எது நடந்தாலும் நாம் சமூக அக்கறையோடு செயற்படுவது அவசியம்.  உங்கள் நேரத்திற்கும் கருத்திற்கும் நன்றிகள் சாந்தி. 
படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் ஜெகதா துரை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 17/2/2021 at 14:32, Kavallur Kanmani said:

லொக்டவுண்  

வதனிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த நந்தனை திரும்பிப் பார்த்தாள் நல்ல தூக்கம். இன்று சனிக்கிழமை வேலையில்லாததால் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான்.  

இப்பொழுதெல்லாம் இந்த லொக்டவுணால் வீட்டில் இருந்தேதான் வேலை செய்கிறார்கள். வீட்டில் வேலை செய்வதென்பது இலேசான காரியமில்லை. வேலையிடத்துக்கு போனோமா வேலை செய்தோமா நாலு நண்பர்களுடன் அரட்டை அடித்து வெளி உலகம் பார்த்து கடைக்கு போய் மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி என்று இருந்த காலம் மாறி இப்பொழுதெல்லாம் வீடே கதி என்று வீட்டின் சுவர்களுக்குள்ளேயே முட்டி மோதி பேசிக்கொண்டு சீ இதென்ன வாழ்க்கை? அடிக்கடி மனதுக்குள் அங்கலாய்ப்;பு ஏற்பட்டாலும் இதுவும் கடந்து போகும் என்று மனதைத் தேற்றிக்கொண்டனர்.  

வதனியும் வீட்டில் வேலை செய்தாலும் இப்பவெல்லாம் விதவிதமாகச் சமையல் செய்வதும் பழைய நண்பிகளையெல்லாம் தேடிப்பிடித்து கதைப்பதுமாக ஒன்லைன் வட்ஸ்அப் என்று ஒருமாதிரி பொழுதைப் போக்கிக் கொண்டாள்.

இந்த வருடம் நந்தனின் 50வது பிறந்த நாளை பெரிய மண்டபம் எடுத்து விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்ற அவளது கற்பனைகளெல்லாம் கனவாகிப் போகுமென்று யார் நினைத்தார்கள்.  

இத்தனை வருடமாக அவர்களது வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் வந்தபோதும் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  

பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் படித்து முடிக்கும்வரை தம் பொறுப்புக்களை உணர்ந்து தம் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே அவர்களது இத்தனை ஆண்டுகளும் கழிந்து விட்டன.

நேற்று நந்தனுக்கு 50வது பிறந்தநாள். நாள் முழுவதும் தொலைபேசியிலும் வட்ஸ்சப்புக்களிலுமாக வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன. வதனியும் தன் பங்கிற்கு கேக் இனிப்புவகைகள் பிரியாணி என்று செய்து அசத்தியிருந்தாள்.

இருந்தாலும் வதனி நந்தனுக்குத் தெரியாமல் பிள்ளைகளுடன் சேர்ந்து நந்தனின் பிறந்தநாளை வீட்டிலாவது பெரிதாகக் கொண்டாட வேண்டுமென்று திட்டமிட்டாள்;.

அந்த திட்டத்திற்கு ஆப்பு வைப்பதுபோல் “வீட்டிற்குள் இருங்கள் வெளியே திரியாதீர்கள்” என்று மேஜர் முதல் பிரதமமந்திரி வரை தொலைக் காட்சிகளில் அறிவித்து மக்களின் நலனைப் பாதுகாக்கும்படி அறிவுறுத்தியது மட்டுமன்றி வீட்டிலும் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் வதனிக்கோ எப்படியாவது சேப்பிரைஸ் பாட்டி வைத்து நந்தனை பிரமிக்க வைக்க வேண்டுமென மனம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது.

புது வீடு வாங்கியபின் வீட்டில் எந்த கொண்டாட்டமும் வைக்க அவளுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

உறவுகளைச் சந்தித்தும் பல மாதங்களாகி விட்டன. எனவே நெருங்கிய உறவுகளை நந்தனுக்குத் தெரியாமல் ரகசியமாக சனிக்கிழமை வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தாள்.

அத்துடன் நந்தனை மகிழ்விப்பதற்காக அவனது நண்பர்கள் தனது நெருங்கிய நண்பிகள் என்று ஒவ்வொன்றாக சொல்லி 20-25 பேர் ஆகி விட்டது.

சனிக்கிழமை மதியம் வரை வீட்டில் எந்த மாறுதலும் தெரியாதபடி ரகசியமாகவே அனைத்து ஆயத்தங்களும் நடந்தன.

வீடும் என்றும் போல் அமைதியாக இருந்தது.

மத்தியானத்துக்கு மேல் ஒரு நண்பன் மூலம் நந்தனை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தபடி அனைத்து திட்டங்களும் சரியாக நடைபெற்றுக்கொண்டிருக்கவும் வதனி பூரண திருப்தியுடன் மளமளவென்று காரியங்களை மேற்கொண்டாள்.

அவசர அவசரமாக வீட்டை அலங்கரித்து ஓடர் பண்ணியிருந்த கேக்கை மேசையில் வைத்து அலங்கரித்து மற்றைய ஒழுங்குகளையெல்லாம் சரிவர செய்து முடித்தாள்.

திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. மத்தியானத்துக்குமேல் ஒரு நண்பனின் மூலம் நந்தனை வெளியே வெளியே அழைத்துச் செல்லவும் திட்டமிட்டிருந்தாள்; நீண்ட நாட்களின் பின் சந்தித்த நெருங்கிய நண்பனுடன் தத்தமது 50 வயது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே சுற்றியதில் நேரம் போனது தெரியவில்லை.  

மாலை மங்கத் தொடங்கியதும் வீட்டிற்கு போகலாம் என நந்தன் கேட்கவும் சரி என்ற நண்பனும் வதனிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு நந்தனுடன் வீட்டிற்கு வந்தான்.

வீடு அமைதியாகத்தான் இருந்தது. தன்னுடன் வந்த நண்பனை வீட்டிற்குள் அழைப்பதா விடுவதா என நந்தன் சிந்தித்த மறுகணம் நந்தன் தன்னை பின் தொடர்வதைக் கவனித்து “ வா வா வந்து ரீ குடிச்சிற்றுப் போகலாம்” என அழைத்தான். வீட்டின் கதவைத் திறக்கவும் “சேப்பிரைஸ்” என்று அனைவரும் கூக்குரலுடன் கைதட்டி நந்தனை வரவேற்கவும் நந்தன் திகைப்பில் திக்குமுக்காடிப் போனான்.  

என்ன இது? லொக்டவுண் காலத்தில் இப்படிச் செய்கிறார்களே என மனம் அங்கலாய்த்தாலும் நீண்ட நாட்களாகச் சந்திக்காத நண்பர்களையும்  உறவுகளையும் சந்தித்த சந்தோசத்தில் மனம் குதூகலமாகி மகிழ்ச்சியில் மூழ்கிப் போனான்.

வீட்டிற்குள் கலகலப்பும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது.  

எங்கட ஆக்களின்ர பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் சும்மாவா? ஏல்லோரும் வண்ண வண்ண உடைகளுடனும் விதவிதமான அலஙகாரங்களுடனும் வந்து இறங்கி வீட்டிற்குள் செல்வதையும் வீட்டிற்குள் நடந்த

குதூகலத்தையும் அவதானித்த யாரோ காவல் துறைக்கு செய்தி அனுப்பி விட்டார்களோ அல்லது தற்செயலாக அந்த வீதியில் பயணித்த காவல் துறையினருக்கு மூக்கில் வியர்த்து விட்டதோ யாரறிவார்?  

மக்களின் நலனுக்காகத்தானே சட்டங்களும் ஒழுங்குகளும் என்று சிந்திக்காமல் மனம் போல திட்டமிட்ட வதனி கதவைத் தட்டிய காவல் துறையினரைக் கண்டதும் திகைத்து விட்டாள்.

வீதியில் நிறைய வாகனங்களைக் கண்ட காவல் துறையினர் சந்தேகத்தில் ஒவ்வொரு வீடாக தட்டி சோதித்ததில் இவர்கள் வீட்டில் அதிகம் பேர் நின்றது கையும் மெய்யுமாக பிடிபட்டு விட்டது.

என்ன செய்வது என்ற தெரியாமல் சிலர் மேல் அறைகளுக்குள்ளும், சிலர் நிலக்கீழ் அறைகளுக்குள்ளும் ஓடி ஒழிந்தனர்.  

இருந்தும் யாராலும் காவல் துறையினரை ஏமாற்ற முடியவில்லை.  

அனைவருக்கும் குற்றப் பணமாக ஆளுக்கு ஆயிரம் டொலர் ரிக்கற் எழுதி கொடுக்கப்பட்டது.

உறவுகள் நட்புக்கள் அனைவரும் திகைத்து என்ன செய்வது என்று அறியாது வருத்தத்துடனும் ஏமாற்றத்தடனும் நிற்க வதனியோ பலமுறை காவல் துறையினரிடம் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் எதற்கும் செவிசாய்க்கவில்லை.

தமது கடமையில் கண்ணாயிருந்த காவல்துறையினர் இறுதியில் நந்தனின் கையிலும் பத்தாயிரம் டொலருக்கான குற்றப்பணத்திற்கான ரிக்கற்றை திணிக்கவும்; நந்தன் வெலவெலத்துப் போனான்.

காவல் துறையினர் தமது கடமையை முடித்து விட்டு வெளியே போய் நின்று அனைவரையும் வெளியேறும்படி பணித்து விட்டு தம் வாகனத்தினுள் காத்திருந்தனர்.

நந்தன் வதனியை திரும்பிப் பார்த்த பார்வையில் வதனி எரிந்து போகாத குறை.

வந்திருந்த அனைவரும் தலையைத் தொங்கப் போட்டபடி வெளியேற வதனியோ கையைப் பிசைந்தபடி கண்கலங்க பார்த்துக்கொண்டு நின்றாள். உறவுகள் சிலர்  “அவள் வதனிதான் கூப்பிட்டாள் என்றால் எங்களுக்கு எங்கே அறிவு போனது” என்று தம்மை நோவது போல வதனியை திட்டியபடி வெளியேறினர்.

ஆசைஆசையாக பார்த்துப் பார்த்து செய்த அலங்காரங்கள் கேக் இனிப்பு பலகாரங்கள் உணவுகள் அனைத்தும் தேடுவாரற்று கிடந்தது.

இத்தனை ஆண்டு வாழ்வில் இதுவரை நந்தனின் இந்தமாதிரியான கோபத்தைப் பார்த்தறியாத வதனிகூட ஒருகணம் திண்டாடிப் போனாள்.

மெதுவாக பக்கத்தில் போய்” என்ன நந்தன் நான் உங்கட பிறந்தநாளை வடிவாகக் கொண்டாட வேணுமெண்டுதானே இப்படிச் செய்தனான்” என்ற ஆரம்பிக்கவும் நந்தன் கட்டுக்கடங்காத கோபத்துடன் “உன்னை நான் கேட்டனானா பிறந்தநாள் கொண்டாடச் சொல்லி அறிவு கெட்ட ஜென்மம்”என்று ஆவேசத்துடன் அவளைப் பிடித்து தள்ளி விட்டான்.

இந்த தாக்குதலை எதிர் பார்க்காத வதனி நிலை தடுமாறி பக்கத்தில் இருந்த மேசையைப் பிடிக்க முயற்சித்தும் பிடி நழுவிப் போக அவளுக்கிருந்த மனக் குழப்பமும் சோர்வும் அவளை பெலவீனப்படுத்த தட்டுத் தடுமாறி அருகிலிருந்த சுவரில் மோதி கீழே விழுந்து விட்டாள்.

சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடி வந்தனர். நந்தனும் ஒருகணம் திகைத்தாலும் ஆத்திரம் அடங்காமல் விறைப்புடன் நின்றான். வதனியின் தலையிலிருந்து இரத்தம் கொட்டியதை கண்ட பின்தான் நந்தனுக்கு நிலமையின் தீவிரம் மனதை உறுத்தியது.  

உடனடியாக அவளைத் தூக்கி செற்றியில் படுக்கவைத்துவிட்டு அம்புலன்சுக்கு அழைத்தனர்.

இந்த கொரோனா காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் அதிக வேலைப் பழுவுடன் இருப்பதால் சிறிது தாமதித்தே உதவி கிடைத்தது.  

வதனியை அம்புலன்சில் ஏற்ற, நந்தனை கைது செய்து பொலிஸ் விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

நந்தன் இதை எதிர்பார்க்கவில்லை.

நந்தன் திட்டமிட்டு எதுவும் செய்யா விட்டாலும் குற்றவாளியாகத்தான் பார்க்கப்பட்டான். நந்தன் பயத்திலும் திகைப்பிலும் உறைந்து போனான்.

தன் பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்டு வதனிக்கு இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்க வேதனையில் துவண்டு போனான்.

நிறைய இரத்தம் இழந்து விட்டதால் வதனியும் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள்.

நந்தனையும் விசாரணை முடியும்வரை பொலிஸ் காவலில் வைத்து விட்டார்கள்.

பிள்ளைகளோ என்ன செய்வதென்று தெரியாத நிலையில் .

இதில் யாரை நோவது?

கணவனது பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட வதனியையா?

ஆத்திரப்பட்ட நந்தனையா?

அல்லது அவனது 50வது பிறந்த நாளையா?

லோக்டவுணையா?

எதை?

உண்மைச் சம்பவத்தைக் கதையாக்கியிருக்கிறீர்கள்,நன்றாக உள்ளது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நேரத்துக்கேற்ற கதை நேர்த்தியாய் சொல்லப்பட்டுள்ளது. குற்றத்தின் அளவைக் காட்டிலும் தண்டனை மிகுதியாய்ப் போனது இரக்க உணர்வு மேலிடச் செய்கிறது. சில நேரங்களில் யாருக்கும் இத்தகைய சூழல் ஏற்படுவதுண்டு.

 • Like 1
Link to comment
Share on other sites

10 hours ago, சுப.சோமசுந்தரம் said:

நேரத்துக்கேற்ற கதை நேர்த்தியாய் சொல்லப்பட்டுள்ளது. குற்றத்தின் அளவைக் காட்டிலும் தண்டனை மிகுதியாய்ப் போனது இரக்க உணர்வு மேலிடச் செய்கிறது. சில நேரங்களில் யாருக்கும் இத்தகைய சூழல் ஏற்படுவதுண்டு.

சில சமயங்களில் சட்டத்திற்கு அமைந்து நடக்காவிட்டால் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டு விடுகிறது. அதிலும் இந்த காலக்கட்டத்தில் சமூகஅக்கறையுடன் நாம் செயற்படுவது அவசியம். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் சு.ப. சோமசுந்தரம்

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நியோ-கோவ் எத்தனை கட்சிய ஒடச்சிருக்கம் .. எத்தனை கலர மாத்திருக்கம் .. எங்ககிட்டியேவா..☺️..😊
  • //சபைக்குள் புகுந்து விளையாடுகிறது கொரோனா// விளையாடியும் "என்ற் ரிசல்ட்" என்ன.? கொரோனோ அதற்கும் மேலான வைரஸ்களை பார்த்து பயந்து விட்டுது என்டு தானே அர்த்தம்.😢
  • கிட்டு பொது இடத்தில, பல பொது சனத்திடையே பேசியத்தையே சொன்னேன். கிட்டுவுக்கு, பக்கத்தில் நின்று, off the record ஐ புனலடக்கி, புலன் செவிமடுத்து, உளவெடுத்து சொன்னதாக, சொல்லவில்லை.
  • கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை...? மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார். கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை. பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால், அவர் முகத்தில் பவுடர் கூட பயன்படுத்தவில்லை. பேச்சு ஆங்கிலத்தில் உள்ளது. அவர் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசினார், ஆனால் அவருடைய வார்த்தைகள் உறுதியுடன் இருந்தன. அப்போது குழந்தைகள் கலெக்டரிடம் சில கேள்விகளை கேட்டனர். கே: உங்கள் பெயர் என்ன? என் பெயர் ராணி. சோயாமோய் என்பது எனது குடும்பப் பெயர். நான் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவள். வேறு ஏதாவது கேட்க வேண்டுமா? ஒரு மெல்லிய பெண் பார்வையாளர்களிடமிருந்து எழுந்து நின்றாள். கேள், குழந்தை... "மேடம், ஏன் முகத்துக்கு மேக்கப் போடக்கூடாது?" கலெக்டரின் முகம் சட்டென்று வெளிறியது. மெல்லிய நெற்றியில் வியர்வை வழிந்தது. அவர் முகத்தில் புன்னகை மறைந்தது. பார்வையாளர்கள் திடீரென அமைதியானார்கள். மேஜை மேல் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து கொஞ்சம் குடித்தார். பிறகு குழந்தையை உட்காருமாறு சைகை செய்தார். பிறகு மெதுவாக பேச ஆரம்பித்தார். குழந்தை குழப்பமான கேள்வியைக் கேட்டது. இது ஒரு வார்த்தையில் பதில் சொல்ல முடியாத ஒன்று. அதற்குப் பதில் என் வாழ்க்கைக் கதையைச் சொல்ல வேண்டும். என்னுடைய கதைக்காக உங்கள் பொன்னான பத்து நிமிடங்களை ஒதுக்க நீங்கள் தயாராக இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள். தயார்... நான் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் பிறந்தேன். கலெக்டர் சற்று நிதானித்து பார்வையாளர்களை பார்த்தார். "மைக்கா" சுரங்கங்கள் நிறைந்த கோடெர்மா மாவட்டத்தின் பழங்குடியினர் பகுதியில் ஒரு சிறிய குடிசையில் பிறந்தேன். என் அப்பாவும் அம்மாவும் சுரங்கத் தொழிலாளர்கள். எனக்கு மேலே இரண்டு சகோதரர்களும் கீழே ஒரு சகோதரியும் இருந்தனர். மழை பெய்தால் கசியும் ஒரு சிறிய குடிசையில் நாங்கள் வாழ்ந்தோம். வேறு வேலை கிடைக்காததால் எனது பெற்றோர் சொற்ப கூலிக்கு சுரங்கத்தில் வேலை செய்தனர். அது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தது. எனக்கு நான்கு வயதாக இருக்கும் போது, என் அப்பா, அம்மா மற்றும் இரண்டு சகோதரர்கள் பல்வேறு நோய்களால் படுத்த படுக்கையாக இருந்தனர். சுரங்கங்களில் உள்ள கொடிய மைக்கா தூசியை சுவாசிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது. எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, என் சகோதரர்கள் நோயால் இறந்துவிட்டனர். ஒரு சிறு பெருமூச்சுடன் கலெக்டர் பேச்சை நிறுத்திவிட்டு கண்ணீரை துடைத்தார். பெரும்பாலான நாட்களில் எங்கள் உணவில் தண்ணீர் மற்றும் ஒன்று அல்லது இரண்டு ரொட்டிகள் தான். எனது சகோதரர்கள் இருவரும் கடுமையான நோய் மற்றும் பட்டினியால் இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டனர். என் கிராமத்தில் பள்ளிக்கூடம் என்று ஒன்று இல்லை. பள்ளிக்கூடம், மருத்துவமனை அல்லது கழிவறை கூட இல்லாத கிராமத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? மின்சாரம் இல்லாவிட்டாலும்? . ஒரு நாள் நான் பசியுடன் இருந்தபோது, என் தந்தை என்னை, இரும்புத் தாள்களால் மூடப்பட்ட ஒரு பெரிய சுரங்கத்திற்கு இழுத்துச் சென்றார். அது புகழ் பெற்ற மைக்கா சுரங்கம். இது ஒரு பழங்கால சுரங்கம். கீழே உள்ள சிறிய குகைகள் வழியாக ஊர்ந்து சென்று மைக்கா தாதுக்களை சேகரிப்பது எனது வேலை. பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இது சாத்தியமாக இருந்தது. என் வாழ்நாளில் முதல்முறையாக ரொட்டி சாப்பிட்டு வயிறு நிரம்பினேன். ஆனால் அன்று நான் வாந்தி எடுத்தேன். நான் ஒன்றாம் வகுப்பு படிக்க வேண்டிய வயதில் நான் விஷ தூசியை சுவாசிக்கக்கூடிய இருட்டு அறைகளில் மைக்காவை முகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உழைத்தால் ஒரு ரொட்டியாவது கிடைக்கும். பசி மற்றும் பட்டினியால் நான் ஒவ்வொரு நாளும் மெலிந்து நீரிழப்புடன் இருந்தேன். ஒரு வருடம் கழித்து என் சகோதரியும் சுரங்கத்தில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். கொஞ்சம் நல்லா வந்தவுடனே அப்பா, அம்மா, அக்கா மூவரும் சேர்ந்து உழைத்து பசியில்லாமல் வாழலாம் என்ற நிலைக்கு வந்தோம். ஆனால் விதி வேறொரு வடிவில் நம்மை ஆட்கொள்ளத் தொடங்கியது. ஒரு நாள் கடும் காய்ச்சலால் வேலைக்குப் போகாமல் இருந்தபோது திடீரென மழை பெய்தது. சுரங்கத்தின் அடிவாரத்தில் தொழிலாளர்கள் முன்னிலையில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். அவர்களில் என் அப்பா, அம்மா மற்றும் சகோதரி. அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழியத் தொடங்கியது . பார்வையாளர்கள் அனைவரும் மூச்சு விடக்கூட மறந்தனர். பலரது கண்களும் கண்ணீரால் நிரம்பி வழிந்தது. எனக்கு ஆறு வயதுதான் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இறுதியில் அரசு அகத்தி மந்திர் வந்தடைந்தேன். அங்கு நான் படித்தேன். என் கிராமத்தில் இருந்து முதலில் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டவள் நான். இறுதியாக இதோ உங்கள் முன் கலெக்டர். இதற்கும் நான் மேக்கப் பயன்படுத்தாததற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். பார்வையாளர்களை பார்த்துக்கொண்டே அவர் தொடர்ந்தாள். அந்த நாட்களில் இருளில் ஊர்ந்து நான் சேகரித்த மைக்கா முழுவதையும் ஒப்பனை பொருட்களில் பயன்படுத்துவதை அப்போதுதான் உணர்ந்தேன். மைக்கா என்பது ஃப்ளோரசன்ட் சிலிக்கேட் கனிமத்தின் முதல் வகை. பல பெரிய அழகுசாதன நிறுவனங்கள் வழங்கும் மினரல் மேக்கப்களில், 20,000 இளம் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்து உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும் பல வண்ண மைக்காக்கள் மிகவும் வண்ணமயமானவை. ரோஜாவின் மென்மை உங்கள் கன்னங்களில் பரவுகிறது, அவற்றின் எரிந்த கனவுகள், அவர்களின் சிதைந்த வாழ்க்கை மற்றும் பாறைகளுக்கு இடையில் நசுக்கப்பட்ட அவர்களின் சதை மற்றும் இரத்தம். மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள மைக்கா இன்னும் சுரங்கங்களில் இருந்து குழந்தை கைகளால் எடுக்கப்படுகிறது. நம் அழகை அதிகரிக்க. இப்போது நீங்கள் சொல்லுங்கள். நான் முகத்தில் எப்படி மேக்கப் போடுவது?. பட்டினியால் இறந்த என் சகோதரர்களின் நினைவாக நான் எப்படி வயிறு நிரம்ப சாப்பிட முடியும்? எப்பொழுதும் கிழிந்த ஆடைகளை அணிந்திருக்கும் என் அம்மாவின் நினைவாக நான் எப்படி விலை உயர்ந்த பட்டு ஆடைகளை அணிவது?. வாய் திறக்காமல் தலையை உயர்த்தி, சிறு புன்னகையுடன் அவள் வெளியே சென்றபோது பார்வையாளர்கள் அனைவரும் அறியாமல் எழுந்து நின்றனர். அவர்கள் முகத்தில் இருந்த மேக்கப் அவர்கள் கண்களில் இருந்து வழியும் சூடான கண்ணீரில் நனைய ஆரம்பித்தது. ஃபேஸ் பவுடர், க்ரீம், லிப்ஸ்டிக் நிறைந்த பெண்களைப் பார்த்து சிலர் வெறுப்படைந்தால் அவர்களைக் குறை சொல்லாதீர்கள். அதிக தரமான மைக்கா இன்றும் ஜார்க்கண்டில் வெட்டப்படுகிறது. 20,000க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் அங்கு வேலை செய்கின்றனர். சிலர் நிலச்சரிவாலும், சிலர் நோயாலும் புதையுண்டுள்ளனர். மலையாளத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. Ivp Balu Ivp Balu
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.