Jump to content

தொலைவும் வாழ்வும் , தொலையும் வாழ்வும்


Recommended Posts

இஞ்சாருங்கோ!! இஞ்சாருங்கோ! பிரித்தானிய பிரஜைகளுக்கானபயணத்தடையை இலங்கை அரசு விலத்தி இருக்கிறதாம் இலங்கைக்கு போவமே!! என்றாள் சாரதா ஏன்?  எதற்கு? இப்ப என்ன அவ்வளவு அவசரம் என்றார் மாணிக்கவாசகர். இல்லங்க போனவருசம் போக இருந்தம் இந்த பாழாய் போன கொரானா வந்ததால ஊருக்கும் போகமுடியல நம்ம மகனுக்கும் வயசாகிறது. கல்யாணம் கட்டிக்கொடுக்க வேண்டுமே . ம் அங்க போனால் வெளிநாட்டு சனம் வந்துட்டுது என்று அங்க‌ சனம் ஓடுதாம் கொரானா பயத்தால். அதுமட்டும் இல்லாமல் தனிமைப்படுத்தி விடுவாங்களாம். நாமதானே இங்க ஊசி போட்டுட்டம் அங்க போய் ஊசி போட்டதை காட்டினால் உள்ள விடுவாங்களாம் என்று சொல்லுறாங்களே? அதுமட்டும் இல்லாமல் இலங்கையில இறப்பு வீதம் கூட இங்கத்தயமாதிரி இல்ல குறைஞ்சிட்டுது . நீ ஊருக்க போக பிளான் பண்ணிட்ட சரி நடக்கட்டும் என்றவர். ஊரில உன்ற மகனாருக்கு ஆர் பொண் கொடுப்பார்கள் நான் பரிமளம் அக்காகிட்ட சொல்லிட்டன் அவா பார்த்திருக்கா ஒரு பெண். ஆரு நம்ம குமாரசாமியின்ற மனிசியோ ஓம் ஓம் அவதான் . உன்ற மகன் இங்க திரியுற திரிச்சலுக்கு நாள் தோறும் போதை , கிளப்  அது இது என்று இவன் கிடக்குறான்  சேருர கூட்டமும் அவனுகள் பழக்க வழக்கத்திற்கும் . ஊரில யாரும் பொண்ணு கொடுப்பாங்களோ?

லண்டன் என்று சொன்னால் கொடுப்பாங்கள் தானே!. உனக்கு விசயம் தெரியாதுடி இப்ப அங்குள்ள சனம் வெளிநாடுகள பற்றி நல்லா படிச்சிட்டுதுகள் அதுமட்டும் இல்லாமல்  அக்குவேர் ஆணிவேரா எல்லாம் துருவி ஆராய்ஞ்சும் வச்சிருக்குதுகள். நீ என்ன கல்யாணம் கட்டக்க துள்ளிக்குதிச்ச நீதானே இதானா? லண்டன் சைக் இந்த நாட்டில ஆர் இருப்பாங்கள் கதைக்க கூட ஆட்கள் இல்ல கறிவாங்கயும் ஆட்கள் இல்ல என ஞாபகம் இருக்கா?.  அதெல்லாம் நாளாக நாளாக பழகிட்டுதானே .ம் பிள்ள என்ன செய்யுதாம் பிள்ள கிறயுவேற்றாம்  ஓ.... ! பிள்ளையும் நல்ல பிள்ளையாம்   !      இப்ப ரீச்சிங் கிடைச்சிருக்காம் அது மட்டும் இல்ல நம்ம சாதிதானாம் ! சாதி வரைக்கும் விசாரிச்சு இருக்கிற........... பின்ன நம்ம பிள்ளைக்கு நல்ல இடம் தானே பார்க்கணும் .ம்ம் சரி ஒன்லைனில ரிக்கட் விலையையும் நாட்டில என்ன  மாதிரி நிலமையென பார்க்க போணை எடுத்தவருக்கு நாட்டில இருந்து முகநூலில் ஒரு நண்பர் மூலமாகமெசேச் வீடியோவாக வருகிறது அதைப்பார்த்ததும் மாணிக்க வாசகர் அடியேய் அந்த பிரசர் குளிசையை எடுத்துட்டு ஓடிவாடியென அலறினார்.

 

No description available.

இந்த பிக்குவின் வீடியோ தான் முற்று முழுதாக இனவாததை கக்கிய வீடியோவே அது ...........

                                                                                                                                                                               தொடரும் ...😄

 

 

 

 

 • Like 16
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மேலும் தொடருங்கள், நாங்களும் தொடர்கின்றோம்.....!   😁

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இனவாதம்....பிக்கு மாருக்கு வயிறு வளர்க்க உதவுகின்றது!

அதை விடுவம்...!

மாணிக்க வாசகர் இன்ரென்ஸிவ் வாட்டில எண்டு கேள்வி..!

அப்படி என்ன தான் அந்த மெஸ்ஸேஜில  இருந்திருக்கும்?😮

Edited by புங்கையூரன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த பிக்குவின் வீடியோ தான் முற்று முழுதாக இனவாததை கக்கிய வீடியோவே அது ...........

   தொடரும் ...😄

தொடருங்கோ தொடருங்கோ மிச்சம் என்ன நடக்குதெண்டு பாப்பம்.😁

 • Like 1
Link to comment
Share on other sites

Quote

ஒன்லைனில ரிக்கட் விலையையும் நாட்டில என்ன  மாதிரி நிலமையென பார்க்க போணை எடுத்தவருக்கு நாட்டில இருந்து முகநூலில் ஒரு நண்பர் மூலமாக மெசேச் வீடியோவாக வருகிறது அதைப்பார்த்ததும் மாணிக்க வாசகர் அடியேய் அந்த பிரசர் குளிசையை எடுத்துட்டு ஓடிவாடியென அலறினார்.

என்னவாயிறுக்கும்???.⁉️ தொடருங்கள் தனி.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

லண்டன் சைக் இந்த நாட்டில ஆர் இருப்பாங்கள்

ஒரு மார்க்கமாகத்தான் இருக்கு!😃

தொடருங்கள். அப்பத்தான் வைச்சுச் செய்யலாம்😂

 • Haha 2
Link to comment
Share on other sites

தொடருங்கள் சகோ.  

என்ன தான் வெளிநாடு பற்றி தெரிந்தாலும் வெளிநாட்டு ஆசை இப்போதும் அங்கு  உள்ளது.    

என்னோடு பேசிய எல்லோரும் பிள்ளைக்கு வேலை கொடுத்து வெளிநாடு எடுத்துவிடு அப்பு எண்டு ஒரு வரி சொல்லி வைப்பார்கள்.


அந்த பிள்ளை லண்டன் பெரிய கண்ணில் சுற்றி வந்து பெரிய கூண்டில் மணி பார்க்க ஆசை படுதாம், மாணிக்கவாசகர் சொட்டைக்கு எல்லாம் குழுசை போட கூடாது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

"தொலைவும் வாழ்வும் "அழகான தலையங்கம். வெளி நாட்டில் எல்லோரும் தொலைத்து விட்டுத் தான் தேடுகிறார்கள். அன்பை , நேசத்தை ,,உறவை ஆதரவை இழந்து விடட  சுதந்திரத்தை . தாய் நாட்டுக்கான ஏக்கத்தை. . பாராட்டுக்கள் .

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முனிவர் எழுதினால் சொல்லவும் வேண்டுமா??

ஆனால் எல்லோருடைய பெயர்களும் அடி வாங்கும் போலிருக்கு??

தொடருங்கள்

Link to comment
Share on other sites

On 20/2/2021 at 01:45, suvy said:

மேலும் தொடருங்கள், நாங்களும் தொடர்கின்றோம்.....!   😁

தொடர்கிறேன் ஆதரவுக்கு நண்றி அண்ணாச்சி 

 

On 20/2/2021 at 02:41, புங்கையூரன் said:

இனவாதம்....பிக்கு மாருக்கு வயிறு வளர்க்க உதவுகின்றது!

அதை விடுவம்...!

மாணிக்க வாசகர் இன்ரென்ஸிவ் வாட்டில எண்டு கேள்வி..!

அப்படி என்ன தான் அந்த மெஸ்ஸேஜில  இருந்திருக்கும்?😮

அப்படி ஒன்றும் இல்லை இலங்கை சிங்களவர்களுடைய நாடு தமிழர்களும், முஸ்லீம்களும் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள் மிக கீழ்த்தரமான வார்த்தைகளை ஆக்ரோசமாக பேசி காணொளி வெளியிட்டு இருந்தார் இந்த பிக்கு அந்த வீடியோவத்தான் மாணிக்கவாசகர் பார்த்ததில் பிரச கூடிட்டுது 

 

On 20/2/2021 at 03:00, குமாரசாமி said:

தொடருங்கோ தொடருங்கோ மிச்சம் என்ன நடக்குதெண்டு பாப்பம்.😁

சரி சரி மீதியையும் எழுட்கி விடுறன் 

 

13 hours ago, விவசாயி விக் said:

தொடருங்கள் சகோ.  

என்ன தான் வெளிநாடு பற்றி தெரிந்தாலும் வெளிநாட்டு ஆசை இப்போதும் அங்கு  உள்ளது.    

என்னோடு பேசிய எல்லோரும் பிள்ளைக்கு வேலை கொடுத்து வெளிநாடு எடுத்துவிடு அப்பு எண்டு ஒரு வரி சொல்லி வைப்பார்கள்.


அந்த பிள்ளை லண்டன் பெரிய கண்ணில் சுற்றி வந்து பெரிய கூண்டில் மணி பார்க்க ஆசை படுதாம், மாணிக்கவாசகர் சொட்டைக்கு எல்லாம் குழுசை போட கூடாது.

நன்றி விவசாயி விக் வெளிநாட்டு ஆசை என்பதை பலர் இலங்கையை விட்டு வெளியேறினால் போதும் என்றே நினைக்கிறார்கள் நாட்டு நிலையும் , பொருளாதார வங்குரோந்தும் , மக்களின் கைகளில் பணம் இல்லா திண்டாட்டமும் , வறுமை நான் கூட நினைத்து இருக்கிறேன் நாட்டை விட்டு செல்லாம் என்றால் பாருங்கோவன் உங்க லிஸ்டில என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ஏதாவது வேலை விசா இருந்தால் கூட நானும் தயாராகவே இருக்கிறேன் என்றால் பாருங்கோவன்.

 

13 hours ago, நிலாமதி said:

"தொலைவும் வாழ்வும் "அழகான தலையங்கம். வெளி நாட்டில் எல்லோரும் தொலைத்து விட்டுத் தான் தேடுகிறார்கள். அன்பை , நேசத்தை ,,உறவை ஆதரவை இழந்து விடட  சுதந்திரத்தை . தாய் நாட்டுக்கான ஏக்கத்தை. . பாராட்டுக்கள் .

நன்றி நிலாமதி அக்கா நீங்கள் கூறியது உன்மையே

 

7 hours ago, விசுகு said:

முனிவர் எழுதினால் சொல்லவும் வேண்டுமா??

ஆனால் எல்லோருடைய பெயர்களும் அடி வாங்கும் போலிருக்கு??

தொடருங்கள்

ச் ச அப்படி இல்லை சும்மா ஓர் கற்பனைக்கு எழுதி விட்டது  கருத்துக்கு நன்றி 

Link to comment
Share on other sites

ஏன் என்ன ஆச்சு பிரசர் கூடிட்டுது போல இருக்கு எதுக்கு இந்த கோதாரி பிடிச்ச வீடியோக்களை பார்க்குறீங்க நீங்க??. எனக்கென்ன விருப்பமா நாட்டில இருந்து அனுப்பிவிடுறாங்கள் சரி சரி அந்த சோபாவில இருங்க முதலில் ம் ம் .  அப்பாடா நீ என்ன சொன்ன??  சைக் லண்டனா? அடியேய் நான் உன்ன இங்க கல்யாணம் கட்டி எடுக்காட்டி நாட்டில கருவாடு வித்திட்டு இருந்திருப்ப . நான் எதுக்கு கருவாடு விற்கபோறன் என்ற படிப்பிக்கு நான் வேலை எடுத்திருப்பன் ம்கூம் உன்ற படிப்புக்கு வேலை வேறா அடகடவுளே என்று இழுத்தார் மாணிக்கவாசகர் . நான் உங்களை கல்யாணம் கட்டாட்டால் நீங்கள் வெள்ளைக்காரியத்தான் கல்யாணம் கட்டி இருக்கணும் உங்க அரியெண்டம் தாங்க முடியாமல் அவளே உங்கள விட்டுட்டு ஓடியிருப்பாள். நானெண்டபடியால் உங்கள தாங்கிக்கொண்டு இருக்கன்.

அட பார்ரா புதுனத்தை  ........... சரி சரி மகள் யமுனா எங்க? அவள் ஏதோ வகுப்பாம் என போயிருக்கா இனி வருவா. ம்ம் உன்ற புதல்வன் எங்க அதோ வாரான் . மகன் இஞ்ச வாங்க என்று அம்மா கூப்பிட மகனோ என்ன சொல்லுங்க நேரம் இல்ல எனக்கு மாணிக்க வாசகர் மனதுக்குள் (ஒரு வேலைக்கு போக துப்பில்லை இவனுக்கு நேரம் வேற போகுதாம்) ஒன்றும் இல்லை ஊரில ஒரு பெண் பார்த்திருக்கம் உனக்கு கல்யாணம் கட்டி வைக்க எதுக்கு அவசரம்? எனக்கு கல்யாணம் கட்ட இஸ்டம் இல்ல உன்ற மனுசருக்கு இன்னொன்றை  பார்த்து கட்டி வையும் ( மாணிக்கவாசகர் மனதுக்குள் சிரிக்கிறார் நான்  என்ன வேணாம் என்றா சொல்ல போறன்) காலம் முழுவதும் ஒருவளைக்கட்டிக்கொண்டு இழுத்துக்கொண்டு திரிய என்னால் முடியாது என்றான் அவன்.

அப்படி சொல்லாத மகன் நம்மட கலாச்சாரத்துக்கு ஏற்றமாதிரித்தான் நாம வாழணும் நாட்டை விட்டு வந்தாலும் நீங்கள் ரெண்டு பேரும் இங்க பிறந்தாலும் நாம் தமிழர்கள் தெரியுமோ? அதுக்கு என்ன இப்போ என  மாறி கேட்கிறான் அவன் நாங்கள் இந்த நாட்டு பிரஜைதான் வேணுமென்றால் நீங்கள் இருவரும் உங்கட நாட்டுக்கு போங்க என்றான் அவன் மாணிக்க வாசகர் நடப்பதை பார்த்தும் கேட்டுக்கொண்டிருந்தார் ஒன்றும் பேசாமல். ஏனென்றால் அவர் அவன் விருப்பத்துக்கு நடப்பதால் அவனிடம் கதைப்பது குறைவு. என்பதை கதைத்து பல ஆண்டுகள் மாணிக்க வாசகர் ஒரு செருமலை கொடுக்க இருவரும் அமைதியானார்கள் அவர் எழுந்ததும் அவன் வெளியே சென்றுவிட்டான் .

அடுத்த நாள் காலை இஞ்சாருங்க அவனுக்கு  கல்யாணம் கட்டிக்கொடுத்தால் திருந்திடுவான். நீ நம்புறயா? ஓம். சரி  அந்த பிள்ளையிட போட்டோவ காட்டு இப்ப எல்லோரும் பேஸ்புக், வட்ஸ் அப் அது இது எண்டு எல்லாம் வச்சிருக்கு பேசிப்பழகினால் சந்தோசம் ஆனால் எனக்கு இதில் துளியும் நம்பிக்கை இல்லை என்றார் மாணிக்கவாசகர். சரி நீங்கள் டிக்கட்ட போடுங்கள் போவோம் நாட்டுக்கு  போய் அந்த பெண் வீட்டாருட்ட ஜாதகம் எல்லாம் வாங்கி ஐயரிட்ட காட்டி பொருத்தம் எல்லாம் பார்த்து சீதனம் பற்றி பேசணும் எதுக்கு சீதணம்?  பின்ன ? அதை வேண்டித்தான் அங்க கல்யாண செலவை முடிக்கணும் சீதணம் வேண்டக்கூடாது... சீதணம் வேண்டாட்டி எப்படி கல்யாணம் முடிக்கிற ? என்றாள் மனைவி அங்க போய் பார்ப்போம் குடும்பம் வசதியென்றால் பேசிப்பார்ப்போம் இருந்தாலும் நாம சீதனம் வேண்டுவது அழகில்லை ம்ம் என்றாள் மனைவி  யமுனாவை (மகளை) என்ன செய்வது அவளைக்க்கூட்டிக்கொண்டு போக இயலாது அவள உங்க அக்காவீட்டில விட்டுட்டு போவோம் என்ன ?? ம்ம்

தொடரும்...........

 

Edited by தனிக்காட்டு ராஜா
 • Like 11
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தம்பி தனியொருவனாக நிக்கிறியள் கவனம். மிச்சத்தை யும் வாசிக்க காத்திருக்கிறேன்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ராஜா.
ஒரு மார்க்கமாகத் தான் எழுதுறியள்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தனி

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தம்பிக்கு வெளிநாட்டு மனங்களின் புதினங்கள் எல்லாம் வடிவாத் தெரியுது......ம் .....தொடருங்கள்.....!   😁

 • Haha 1
Link to comment
Share on other sites

நாட்டுக்கு போக வெளிக்கிட்டார்கள் இருவரும் பயணம் தயாரானது  விமானம் வெளிக்கிடுகிறது மாஸ்க போடுங்கள் , நீ என்ன சாறி கட்டாமல் ரவுசரோட வாரநீ? ஊருக்க போய் சாரியை கட்டுறன் போதுமா? நீங்க அங்க போனதும் கைக்கு குளவுஸ்சோடதான் திரிய வேண்டும் ம்ம் பயணம் முடிந்து நாட்டை வந்தடைகிறார்கள் இருவரும் .சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா என்பது போல திறந்த வெளிச்சிறைச்சாலையானாலும் அங்கே முழுமூச்சை இழுத்து விடும் போது அந்த மூச்சின் சுதந்திரத்தை அனுபவிக்கிறார் மாணிக்கவாசகர். 

இலங்கை போரின் பின்னர் புதிய கண்ணாடிக் கட்டிடங்கள்  மெதுவாக நகர்புறங்களில் முளைத்து வளர்ச்சியடைவதையும் பாதைகள் சீராக இருப்பதை பார்த்தவாறே மட்டக்களப்பு விரைகிறார்கள். ஆனாலும் இலங்கையென்பது எத்தனை யுகங்கள் ஆனாலும் தமிழ் மக்களை நிம்மதியாக வாழவிடாது என்று என்று அவர் மனத்துக்குள் ஓர் விம்பம் திரைவிரித்து செல்கிறது .மட்டக்களப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது எனும் பெயர் பலகையைப்பார்த்த பின்னர் தான் தன் கால்களுக்கு ஓர் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மூட்டுவலி வந்த முழங்கால் வலி இல்லாமல் ஓடித்திரியவும் புழுதியில் நடக்கவும் புதிதாக நடை பழக எண்ணிய குழந்தைபோல தான் வளர்ந்த ஊரை சுற்றிப்பார்க்க துடிக்கிறது மாணிக்கவாசகர் மனது 

ஊரை( கல்லடி) வந்தடைகிறார்கள் ஊரில் மாணிக்கவாச்காரின் அக்காவின் வீடு மேல்மாடி இவர்களுக்காக தயாராக இருந்தது வீடு வந்தவர்களை பொது சுகாதார பரிசோகதருக்கு அறிவிக்கிறார் அக்கா. அவர் வந்து பி சி ஆர் பரிசோதனையெல்லாம் முடிந்ததா? ஓம் எல்லாம் கொழும்பில முடிச்சிட்டம் சரி இருந்தாலும் வெளியில் அதிகமாக நடமாடாதீர்கள்.. சரி என உறுதி வழங்கிய பின்னர் அவர் நகர்கிறார். நலன் விசாரிப்புகள் தொடர்ந்த பின்னர் மாணிக்க வாசகர் குளிக்க செல்கிறார் குளித்து முடிந்து வந்த அவர் சரத்தை கட்டிக்கொண்டு காலில் செருப்பை மாட்டிக்கொண்டு ஓடத்தயாராகிறார் அந்த கல்லடி பாலத்துக்கு எங்க போறீங்க அவசரமாக?? இந்த கல்லடி பாலத்துக்குத்தான் போயிட்டு வாரன் ஒரு டீ , சாப்பாடு ஏதாவது சாப்பிட்ட்டு போகலாமே? வேனில வரக்குள்ள சாப்பிட்டது இன்னும் சமிக்கல நான் நடந்து போய் வந்தால் சமிச்சிடும் என்று சொல்லிவிட்டு போகிறார் பசியும் மறந்து ஊர் நினைவும் நண்பர்களுடன் கூடி ,மகிழ்ந்த நினைவும் யாரைத்தான் விட்டு வைத்தது. 

போய் வந்த பிறகே பல நினைவுகளை பாலம் இன்னமும் சுமந்து நிற்பதை அறிகிறேன். என்னைப்போன்றவர்களின் பலநினைவுகளைசுமந்து பழைய பாலமும். எப்போதும் புதிதை கண்டால் மனிதன் பழையதை மறந்துவிடுவார்கள் ஆனால் பழையது பழையதுதான் காதலாகட்டும் , கடந்த கால நினைவுகளாகட்டும் மனதில் நின்றுகொண்டே பயணம் செய்யும் மரணிக்கும் வரை. அந்த நினைவுகளுடன் விடு வருகிறார் மாணிக்க வாசகர் அன்றிரவே எந்த குழுசையும் இல்லாமல் நிம்மதியான நித்திரையை அணைத்துக்கொள்கிறார். 

அடுத்த நாள் காலை பரிமளம் சொன்ன பிள்ளையின் வீட்டுக்கு இருவரும் செல்கிறோம் வேகம் கூடிய மோட்டார் சைக்கிளும் ,அதிக வாகனங்களும் கொஞ்சம் கூட பொறுமைஇல்லாத சாரதிகளும் , பெரிய மதில் சுவர்களும் யாரும் எட்டிப்பார்க்க முடியாத மதில் சுவர்கள் ஒரு மாடி வீடு ஒரு கார் என்றும் தானும் தன்ற குடும்பமும் என்ற சுவரை மனதில் எழுப்பி காலத்தின் மாற்றத்தில் நகர்புறங்களில் நாகரீகத்திலும் வாழ்வதைக்காணக்கூடியதாக இருந்தது . அவர்கள் வீட்டை அடைகிறோம் பிள்ளையை பார்த்ததும் மனிசிக்கு பிடித்து போகிறது. சீதனம் வேண்டுமென்றவள் சீதனம் கீதனம் ஒன்றும் வேண்டாம் பெண்னை மட்டும் கொடுங்கள் என்றதும் எனக்கும் அவளை மருகளாக ஏற்றுக்கொள்ள மனம் ஏங்கியது . மகனும் கதைத்ததா உங்கள் நம்பர், பேஸ்புக் ஐடி எல்லாம் கொடுத்தேன் அவனிட்ட கோல் எடுக்கலயா? என்று கேட்க அவள் தலையை அசைத்தும் அசைக்காமலும் இருந்தாள் . அந்த அசைவில் நான் புரிந்து கொண்டேன் அவன் இவளும் கதைக்கவில்லையென . என் மனைவி லண்டனைப்பற்றிப் புழுக ஆரம்பித்தாள் அவளுக்கு அவள் மனதில் ஓர் மாய‌விம்பத்தை ஏற்படுத்துகிறாள் ஆனால் அவை வெளியுலக வாழ்க்கையே ஆனால் கல்யாண வாழ்க்கை இருமணம் இணைந்து வாழும் உள்ளக வெளியக வாழ்க்கை என்பது எனக்கு மட்டுமே தெரிந்தது . நலன் விசாரிப்புக்களும். தேநீர் உரையாடல்களுடன் அவளுடைய ஜாதகம் வாங்கி விடைபெறுகிறோம்.

மனைவி ஐயரை தேடிச்செல்கிறாள் நானோ மீண்டும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ மீண்டும் நாட்டுக்கு வர எண்ணி மாமாங்கேஸ்வரயும், கொக்கட்டிச்சோலையானையும் ,களுதாவளை பிள்ளையாரையும் , வெளிச்சவீடு, கச்சேரி இருக்கும் கோட்டை பகுதியியையும் , முகத்துவார கடற்கரையும் காணச்செல்கிறேன் ஓர் ஆட்டோவைப்பிடித்து.  நாட்கள் கரைகின்றது விடுமுறை முடியும் தறுவாயில் அந்த பிள்ளையின் வீட்டுக்குச் செல்கிறேன் . வாங்கோ அண்ணா என அந்த பிள்ளையின் அம்மா உள்ளே அழைக்கிறாள் என்ன நீங்கள் மட்டும் தனிய வந்திருக்கிறியள்? ஒன்றும் இல்லை மனிசி ஐயருட்ட போய்ட்டா நான் பிள்ளையோட கொஞ்சம்  கதைக்க வேணும் அதுதான் வந்தேன் ஓஅப்படியா! இனி வந்துடுவா என்றது பிள்ளையும் வருகிறது வாங்கோ மாமா எப்ப வந்த நீங்கள் இப்பதான் மகள் ஓ சாப்பிட்ட நீங்களா ஓம் சாப்பிட்டன் உங்களுடன் மகள்கொஞ்சம் கதைக்க வேண்டும் ஓ கதைக்கலாமே. 

தொடரும்

83254082-3282602148472145-6891935507250999183-n

   1268312-587060098026377-1143096778-o10446164-655119617901353-3715426698338792794-o50699214-2230647590334278-5093197065429712896-o100680494-3212466655485695-5645038708710178816-n104084587-3014552331946856-5735542268665653463-o50449627-2211282212270816-7390566933097086976-n29136885-1925340241129223-6203095580234577820-n143633908-727763441466042-2185395085769927578-o

Edited by தனிக்காட்டு ராஜா
 • Like 10
 • Thanks 2
Link to comment
Share on other sites

On 21/2/2021 at 21:35, shanthy said:

தம்பி தனியொருவனாக நிக்கிறியள் கவனம். மிச்சத்தை யும் வாசிக்க காத்திருக்கிறேன்.

நாலு பேர் ஓடும் போது நாமளும் சேர்ந்து ஓடாமல் என்ன விசயம் என்று கேட்டு ஓடுவமே ஒன்றும் இல்லையென்றால் தனிய நின்று ஆட வேண்டிய சூழ்நிலையில் தனியொருவனாக ஆட வேண்டியதுதான் அக்கா.

வாசியுங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 

On 21/2/2021 at 22:44, ஈழப்பிரியன் said:

தொடருங்கள் ராஜா.
ஒரு மார்க்கமாகத் தான் எழுதுறியள்.

கற்பனைக்கு அளவில்லை  எண்ணத்தை இறக்கிவிட வேண்டும் சிறு சம்பவங்களை வைத்து அண்ண  தொடரும் இறுதிப்பகுதி 

 

On 22/2/2021 at 12:30, putthan said:

தொடருங்கள் தனி

நன்றி புத்தர் வாழ்

 

27 minutes ago, suvy said:

தம்பிக்கு வெளிநாட்டு மனங்களின் புதினங்கள் எல்லாம் வடிவாத் தெரியுது......ம் .....தொடருங்கள்.....!   😁

மிக்க நன்றி அண்ணை சும்மா சிறு சம்பவங்கள் ஊரில் நடக்கும் அவை மனதில் கதை போல கால ஓட்டத்தில் கிறுக்கலாக மாறுகிறது 

அடுத்த கதை ஊர் கதை ஒன்றும் எழுதணும் இன்னும் இரு நாட் கள் பாடசாலை பார்ப்போம் நேரம் கிடைத்தால் அதையும் கிறுக்கிட வேண்டியதுதான்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்துநடை நன்றாக இருக்கு, பலர் இங்கு மாயையில் தான் வாழ்கின்றார்கள், நிஜத்தை தொலைத்துவிட்டு, தொடருங்கள்

 • Thanks 1
Link to comment
Share on other sites

சொல்லுங்கள் மாமா .........இங்க பார் மகள் எனக்கும் ஓர் பெண் பிள்ளை இருக்குறா நான் பெய்ய சொல்ல விரும்பல உண்மைய சொல்கிறன் நீ என்ற மகனுடன் கதைச்ச நீயா ? தயங்கியவள் இல்ல மாமா நான் கோல் எடுத்த நான் ஆனால் அவர் ஆன்சர் பண்ணல.  ம்ம் தெரியும் அவனுக்கு கல்யாணம் கட்டுற ஐடியா இல்ல. என்ற மனிசி சொன்னது எல்லாம் பொய் அவன் உன்ற வாழ்க்கைக்கு சரிவரமாட்டான். அவன் அந்த நாட்டு வாழ்க்கை வாழ்கிறான் உன் வாழ்வை கெடுத்துக்கொள்ளாதே நல்லா இரு மகள் உனக்கும் கையில் வேலை இருக்கிறது நல்ல பெடியனா பார்த்து கல்யாணம் கட்டு  என ஏக்கத்துடன் . சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.மாணிக்கவாசகர் 

வரும் வழியில் தான் வெளிநாட்டு வாழ்கையில் தன் பிள்ளையைக்கூட ஒழுங்காக வளர்க்க முடியாத நாட்டில் வாழ்ந்து தொலைக்கிறோமே என் எண்ணியும். தனக்கும் ஓர் பெண் பிள்ளை இருப்பதை எண்ணியும். தன் காலில் உள்ள தடத்தையும் எத்தனை கண்டிப்பு எத்தனை அடி தன் தகப்பனின்ற வாங்கி நான் வளர்திருப்பேன். ஆனால் தற்போத்ய வாழ்வில் தங்கள் பேச்சைக்கூட கேட்காத பிள்ளையை வளர்த்த என்னிடம் எந்த பிழையும் இல்லை. நாடும் சட்டமும் நாகரிகமும் நம்மை நமது வாழ்வையும் தொலைத்து தொலைவில் கொண்டுபோய் விடுகிறது என எண்ணி வீடு செல்கிறார். அடுத்த நாள் கொழும்பு விமான நிலையம் வருகிறோம் ஐயர் என்ன சொல்கிறார்? ஐயர் கொஞ்ச பரிகாரம் செய்ய சொல்கிறார் ஓ அப்படியா மனிசி கோல் எடுக்கிறா அந்த பிள்ளையின் வீட்டுக்கு ஹலோ ரம்யாவா ஓம் சொல்லுங்க மாமி ஐயர் வந்து கொஞ்ச பரிகாரம் செய்ய சொல்லுறார் நான் இங்குள்ள ஐயரிட்ட காட்டியும் உங்களுக்கு கல்யாணம் வைக்கிற தேதிய‌ சொல்லுறன் சரியோ சரி மாமி கவனமாக போய்வாருங்கோ ஓம் நான் வைக்கிறன் . சரி 

லண்டன் வந்த அவர்கள் மீண்டும் அவர்கள் வந்திறங்கியதை அறிவிக்க அழைப்ப்பு எடுக்கிறார் சாரதா. ரம்யாவின் போண் நிறுத்தப்பட்டு இருந்த்து . இஞ்சாருங்கோ போண் வேலை செய்யுதில்லை பரிமளத்த்க்கு எடுத்து பாரேன் என நான் சொல்ல. பரிமளம் அக்கா ரம்யா போண் வேலைசெய்யுதில்ல ஏன்? ஓ அதுவா அவளுக்கு லண்டன் வர விருப்பம் இல்லையாம் ஏனாம் அவளுக்கு விருப்பம் இல்ல? அவளுக்கு யாரோ என்னவோ சொல்லி இருக்காங்கள் போல கல்யாணத்துல விருப்பம் இல்லெண்டு சொல்லுறாள் . நாம பாவம் என்று பார்த்து வெளிநாட்ட்டுக்கு எடுத்து விடுவோம் என பார்த்தால் கழுதைக்கு விருப்பம் இல்லையாமா? அவள் இல்லாட்டி ஆயிரம் பொட்டைகள் கிடைப்பாள் என கடுங் குரலுடன் போணை வைத்தாள் சாரதா .

இஞ்சாருங்க அந்த பெட்டை கல்யாணம் வேணாம் என்று சொல்லுதாம், அவளுக்கு இங்கு வந்து வாழ கொடுத்து வைக்கல ஆரோ  என்னவோ சொல்லி இருக்காங்களாம். நீங்கள் ஏதும் சொன்ன நீங்களோ? நான் என்ன சொல்ல போறன் நான் சில இடங்களை பார்க்கல எண்டு இருக்கன் நீ வேற.... ஓ உங்களுக்கு இடம் பார்க்கிரதுதான் முக்கியம் போல? சரி  சரி விடு வேற யாரையெண்டாலும் பார்ப்போம் என மாணிக்கவாசகரும்... என் மனதிற்குள் நான் செய்தது நன்மையா , தீமையா, நல்லதா, கெட்டதா என என்மனம் ஆயிரம் கேள்விகள் கேட்டு உறுத்திக்கொண்டே இருக்கிறது உறுத்துகிறது நல்லது என நினைத்தால் நல்லது கெட்டது என நினைத்தால் கெட்டது நல்லதுதான் செய்திருக்கிறேன் என உறுதிகொள்கிறார். மகளை வீட்டுக்கு அழைக்க போணை எடுக்கிறார்.

அப்போது அடுத்த மெசேஞ் வருகிறது காணொளியாக அதை திறந்த போது அங்கு P2P பேரணி சுமந்திரனும் , சாணாக்கியரும் பேரணி நடத்துகிறார்கள்.  சாரதா அந்த குளிசைப்போத்தல எடுத்துவா  பிரசர் கூடுனமாதிரி இருக்கு என்று கூறி போணை ஓவ் செய்கிறார் மாணிக்கவாசகர். 
முற்றும் 

கற்பனையும் உண்மையும் சேர்த்து 


  
 

16 hours ago, உடையார் said:

உங்கள் எழுத்துநடை நன்றாக இருக்கு, பலர் இங்கு மாயையில் தான் வாழ்கின்றார்கள், நிஜத்தை தொலைத்துவிட்டு, தொடருங்கள்

நன்றி உடையார் உங்கள் கருத்துக்கு 

 • Like 6
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

TKR ன் தாயகத்தில் இருந்தபடி புலத்தின் உறவுகளுக்கு அங்குள்ள யதார்த்த நிலமையினை உறைக்க சொல்லும் கருத்துக்களில் எப்போதுமே உடன்பாடு உண்டு.

ஆனால் திடீர் விடிவெள்ளி அரசியல்வாதிகளின்மீது நீங்கள் காட்டும் பரிவு மட்டுமே சுத்தமா பிடிப்பதேயில்லை.

முஸ்லீம் சமூகம் ஆளும் வர்க்கத்துடன் ஒட்டியுறவாடியதால்  குப்பை மட்டுமே அள்ள  அங்குள்ள தமிழர்களை தள்ளிவிட பட்டார்கள் என்ற உங்கள் தகவல் ஒரு திரியில் பார்த்தேன்...

 தாயகத்தில் குப்பை அள்ளும் தமிழர் பற்றியும் எழுதுகிறீர்கள், தாயகத்துக்கு குட் பாய் சொல்லிவிட்டு போன தமிழர்கள் பற்றியும் எழுதுகிறீர்கள்,

எழுத்திலும் உங்கள் பெயர் தனிதான்.

 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஓ அதுவா அவளுக்கு லண்டன் வர விருப்பம் இல்லையாம் ஏனாம் அவளுக்கு விருப்பம் இல்ல? அவளுக்கு யாரோ என்னவோ சொல்லி இருக்காங்கள் போல கல்யாணத்துல விருப்பம் இல்லெண்டு சொல்லுறாள் . நாம பாவம் என்று பார்த்து வெளிநாட்ட்டுக்கு எடுத்து விடுவோம் என பார்த்தால் கழுதைக்கு விருப்பம் இல்லையாமா? அவள் இல்லாட்டி ஆயிரம் பொட்டைகள் கிடைப்பாள் என கடுங் குரலுடன் போணை வைத்தாள் சாரதா .

அதுதானே. இலண்டன் மாப்பிள்ளையை (சொத்தை என்றாலும் பவுணெல்லோ!) வேண்டாம் என்று சொன்னா, சொல்லுறவுக்குத்தானே வாழ்க்கையில் நல்லா இருக்கக் கொடுத்து வைக்கேலை. சொக்கத் தங்கமா இருக்கிற இலண்டன் மாப்பிள்ளைகளுக்கு பொண்ணுங்க நிரையில வந்து நிற்பாளுக😜

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தனியின் எழுத்துக்குள் சுமந்திரன் சாணக்கியன் இன்னோரன்ன பேர்வழிகளுக்கு கௌரவ வேடம். அப்பிடி சும்மா எண்டாலும் வந்து எட்டிப் பார்த்துட்டு போவார்கள்.😆

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்போது அடுத்த மெசேஞ் வருகிறது காணொளியாக அதை திறந்த போது அங்கு P2P பேரணி சுமந்திரனும் , சாணாக்கியரும் பேரணி நடத்துகிறார்கள்.  சாரதா அந்த குளிசைப்போத்தல எடுத்துவா  பிரசர் கூடுனமாதிரி இருக்கு என்று கூறி போணை ஓவ் செய்கிறார் மாணிக்கவாசகர். 
முற்றும் 

வேற லெவல் சிங்கம் .....

 • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.