Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழீழத்தில் உவர் மண்ணை வண்டல் மண்ணாகும் திட்டம்

Recommended Posts

தமிழீழத்தில் உவர் மண்ணை வண்டல் மண்ணாகும் திட்டம்

Bone Island

இது எனது கள உறவுகள் கோசன் சே மற்றும் தனிக்காட்டுராஜா வேண்டுகோளின் பேரில் தொடங்குகின்றேன்.  இது "நான்" இல்லாமல் யாழ் கள உறவுகள் "நாம்" செய்யும் திட்டமாக செயற்படுத்துவதாக  உத்தேசம்.

எமது திட்டங்கள் பல வன்னி மற்றும் யாழை சுற்றி இருப்பதால் பல கிழக்கு மாகாண கிராமங்கள் பலன் பெறாமல் செல்கின்றன.  

நான் இரண்டாம் தடவை சென்ற வருடம் சென்று 3 கிழமைகள் நைனா தீவு தொடக்கம், மன்னார், சிலாபம், திருகோணமலை மற்றும் பாசிக்குடா பகுதிகளை சென்று பார்த்தேன்.   

முக்கியமாக பயணத்தில் விவசாயத்தை மற்றும் மக்களின் அடிப்படை தேவைகள் முன்வைத்து பயணித்தேன்.  முதலில் தமிழீழ விவசாய  பிரச்சினைகளை கூறு போடுவோம்.

எல்லா இடமும்  நான் கண்ட விவசாய பிரச்சினைகள்:

1) விவசாய தொழில்நுட்ப தட்டுப்பாடு - இப்போதும் பாத்தி கட்டி கையால் வெங்காயம் நடுகிறார்கள்.
2) அதீத இரசாயன பாவனை -  மருந்து இப்பவும் அடித்து தள்ளுகிறார்கள்.   உரம் அடிக்கிறார்கள்.  
3) விவசாய தொழிலாளர்கள் -  ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்.   பாதுகாப்பு உபகரணங்கள் (சுவாச முகமூடி, சப்பாத்து இல்லை) .  பலர் காலில் ஆறாத காயங்களுடன் திரிகிறார்கள்.
4) நீர் பாவனை - பாத்தி முறை என்ற படியால் ஒவ்வொரு நாளும் இறைத்து தள்ளுகிறார்கள்.  பாத்திகளில் வெள்ளையா கல்சியம் படிந்திருக்கும்.
5) விதைகள் -  கைபிரிட் என்று சொல்லி இப்போது ஜி எம் ஓ புகுத்தி விட்டார்கள்.  பல விவசாயிகள் சிறு நீராக பாதிப்பால் இறக்கிறார்கள்.
6) சந்தை படுத்தல் -  இதில் பல இடை தரகர்கள் இருப்பதால் விவசாயிக்கு இலாபம் இல்லை.
7) சூழல் பாதிப்பு - பறவைகள் காணாமல் போகின்றன, நன்னீர் உவர் நீராக மாறுவது,  இரசாயன பாவனையால் மண் பாதிப்பு

(கவனிக்க: நான் ஏதாவது சுட்டி காட்ட தவறினால் தயவு கூர்ந்து அதை இந்த திரியில் சேருங்கள்.  நான் ஒருங்கிணைக்கிறேன்)

மேலே குறிப்பிட்ட விடயங்கள் யாவும் நன்னீர் உவர் நீராக மாற காரணிகள்.  

நாம் மண்ணை வண்டல் மண்ணாக்கி விட்டு தொடர்ந்து செய்வதை செய்தால் திரும்பவும் பாதிப்பு ஏற்படும்.

ஆதலால் நாம் நல்ல விவசாய முறைகளை பாவிக்கவேண்டும்.

எப்படி எம் மண் உவர் மண்ணாக மாறுகிறது?

ஒவ்வொரு தாவரமும் நைட்ரஜன்(மா சத்து), பொஸ்பரஸ்( புரதம்), பொட்டாசியம்(கொழுப்பு) என்ற மூன்று முக்கியமான சத்துக்களை பெற்று வளரும்.    

பிரச்சினை என்னவென்றால் செயற்கை நைட்ரஜன் கூட பாவிக்கும் போது தாவரம் நிறைய நீரை குடித்து பெரிதாக வளரும்.  இங்கு தான் பிரச்சினையே நாம் மனிதர் நிறைய குப்பை சாப்பாடு சாப்பிட்டு 200 கிலோ பருமன் பெற்றால் மூடு வலி, அழுத்தம், சளி என்று பல வருத்தங்களுக்கு குழுசை போடவேண்டும்.  

அதே போல் தாவரங்களும் உடல் பருமன் பெற்று குண்டாக பூச்சிகளின் பூஞ்சணங்களில் தொல்லை அதிகரிக்கும்.   அதனால் தான் கண்ட பாட்டுக்கு கிருமி நாசினி தெளிக்கிறோம்.  

பூச்சிகள் ஒரு போதும் ஒரு இயற்கையா வலிமையாக வளர்ந்த தாவரத்தை தாக்காது.  அவர்களுக்கு பழுத்த வெம்பிய மற்றும் பருத்து பலவீனமான தாவரங்கள் தான் விருப்பம்.  மற்றும் அவர்களது சுவைக்கும் நாக்கு அவர்களின் காலில் இருக்கும் ஒரு இலையில் நின்று காலால் சுவைத்து மொட்டை போடுவார்கள்.

விதையை விக்கும் உலக அசுர நிறுவனங்களே உங்களுக்கு கிருமி நாசினியும், செயற்கை உரமும் விற்பதால் அவர்கள் அந்த பாவனையை ஊக்குவித்து இலாபம் அடைகிறார்கள்.  அவர்கள் விவசாயிகளுக்கு "விளைச்சல்" என்ற ஒரு கரட்டை முன் ஆட்டி ஆசை காட்டி விற்பார்கள்.  அவர்களது ஆராய்ச்சிகள் பல பொய்.

ஆதாலால் இரசாயன/இயற்கை சேர்த்து வெளிநாடுகளில் செய்வது போல் முதலில் மாற்றத்தை கொண்டுவருவது முக்கியம்.   கனடாவில் தாவர சுழற்சி,  தாவர உரம்(அல்பல்பா, பக் வீட்) , ஆடு/கோழி அடைப்பு என்று செயற்கையின் தாக்கத்தை குறைக்க இயற்கையையும் பாவிக்கிறார்கள்.

எப்படி உவர் மண்ணை மீட்பது?

இதற்கு நான் நத்தார் நேரம் தமிழ் விவசாய அறிஞர் ஒருவரிடம் பேசி பெற்றது என்னவென்றால் இதை நாம் இலகுவாக செய்யலாம்.   

தமிழீழ விவசாயம் பெரும்பான்மையாக கிணத்து நீரை நம்பி இருக்கிறது.  கிணறுகள் கீழே உள்ள நீர் தாங்கிகளில் இருந்து வரும் ஊற்றில் இருந்து நீரை பெறுகின்றன.   இப்போது பல அடிமட்டத்திற்க்கு போய் கடலில் இருந்து நீரை அதற்குள் பெற தொடங்கிவிடும்.   

முன்பு எல்லா வயல்களில் திறந்த கேணிகள் இருக்கும் அவை மழை நீரை சேமித்து திரும்பி எமது ஊற்றுகளுக்கு நீர் வழங்கும்.  இப்போது குழாய் கிணறு என்பதால் நீர் தேக்கங்கள் அரிது.

நான் முதலில் டொரோண்டோவில் விவசாயம் செய்யும் போது இங்கு 250 அடிக்கு நிலத்தடி நீர் தேக்கங்கள் காய்ந்துவிட்டன என்று தெரிந்தேன்.   அதனால் நாம் குளம் கட்டி நீர் தேக்கி அடுத்த வருடம் விவசாயம் பார்த்தோம்.

அவர் பெரிய அளவில் ஈடுபட்டு $300 மில்லியன் டொலர் பெற்று கொடுக்க அந்த ஒப்பந்தத்தை தம் குடும்பத்திடம் கொடுக்க வற்புறுத்தி தட்டி கொட்டிவிட்டார் எமது அரைசியல்வாதி ஒருவர்.

அந்த காசில் நீர் தேக்கங்களில் இருந்து குழாய் வைத்து  உவர் மண்ணில் வரம்பு கட்டி நீரை நிறைப்பது.  அந்த நீர் கீழ் வடிந்து செல்லும் போது நாம் மேல் கொண்டு வந்த உவர்ப்பு மற்றும் கல்சியம் போன்றவற்றை கீழே அனுப்புகிறோம்.

நாம் எப்படி உவர் மண் பகுதிகளில் செலவு அதிகம் இல்லாமல் வண்டல் மண்ணாக்கலாம்?

(கவனிக்க:  இது நாம் கனடாவில் செய்த யுக்திகள் இவை.  நீங்கள் தாராளமாக ஆராய்ச்சி செய்து இங்கு இணையுங்கள்.  நாம் அதை அலசி சேர்ப்போம்)

நாம் கனடாவில் ஓர்கானிக் பத்திரம் பெறவேண்டும் என்றால் அந்த நிலத்தில் குறைந்தது 3 வருடங்களுக்கு செயற்கை விவசாயம் நடந்திருக்க கூடாது.  அதில் பத்தை புதராக இருந்து பின் அதை நாம் பிரட்டி தாழ்ப்போம்.

ஆதலால் இயற்கையாக ஒரு உவர் நிலத்தை மாற்ற மூன்று தொடக்கம் ஐந்து வருடங்கள் எடுக்கும்.

இங்கு நான் இயற்கை விவசாயி என்ற படியால் குழாய் வைத்து நீர் கொண்டுவரும் யுக்தியில் பெரும் ஆர்வம் இல்லை.    எமக்கு நீரை எம் பூமி தாய் வானத்தில் இருந்து இயற்கையாக கொட்டுறாள் அதை ஏந்தி பிடிக்க தெரியாமல் இருக்கிறோம்.

மற்றும் மண்ணில் முதல் பத்து இஞ்சியில் தான் உரம் இருக்கும் அதற்கு கீழே களி மண் தான்.  அதனால் இந்த உலகமே உயிருடன் இருப்பதற்கு காரணம் அந்த வண்டல் மண் தான்.   அதனில் இருக்கும் நுண்ணுயிர்கள் தான் உயிர்!   அந்த நுண்ணுயிர்களை தாக்கினால் பின் இரசாயன நிறுவனத்திற்கு காசு அளவேண்டும்.

நாம் இங்கு மூன்று விடயங்கள் செய்தாலே பெரும் பயன் கிடைக்கும்.

1) வரம்பு கட்டி மழைக்கால நீரை அந்த நிலத்தில் தேக்கி வைப்பது.  அது வடிந்து போய் கொண்டிருக்கும்.
2) நிலம் காய்ந்திருக்கும் நேரம் இலை தளைகளை போட்டு இயற்கை உரத்தால் 10 இஞ்சிக்கு நிரப்புவது.  இதனால் நீர் ஆவியாக போகாமல் பிடித்து வைத்து,  நுண்ணுயிர், பூச்சிகளின் வளர்ச்சியை கூட்டி உக்கவைப்பது.
3) மற்றும் ஆடு, மாடுகளை அடைப்பது.  இவை நிலத்தை மிரித்து பிரச்சினையான களைகளை தடுக்கும். மலமும் சலமும் சத்தை கூட்டும்.

நாம் இந்த முறைகளை பாவித்து கனடாவில் இரசாயன ஜி எம் எமோ உரங்களால் மணலாக இருக்கும் மண்ணை வண்டலாக்குவோம்.  

(கவனிக்க:  வேறு யுக்திகளை தாராளமாக இணையுங்கள். )

சரி அப்ப அடுத்து என்ன செய்யலாம்?

இங்க தான் எங்கட கோசன் அண்ணையும் தனிக்காட்டு ராஜா அண்ணையும் வருகினம்.

நாம் ஒரு சோதனை திட்டம் கிழக்கில் செய்யலாம்.  அந்த செலவுகளை நான் பொறுப்பேற்கிறேன்.

உவர் மண்ணால் நீர் தட்டுபாடால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தெரிவு செய்து தாருங்கள்.

எனக்கு கிழக்கில் உயர் அரசாங்க அதிகாரிகள் உறுதுணை இருக்கிறது.  அதனால் வேறு திட்டங்களையும் அந்த கிராமத்திற்கு பெற்று கொடுக்கலாம்.

இதை விளம்பரப்படுத்தி எம் திட்டத்தை மற்றைய பகுதிகளுக்கு பரப்ப யாழ் தளத்தை பாவிப்போம்.

அப்ப என்ன இயற்கை விவசாயத்தை தொடங்குவமே?

Edited by விவசாயி விக்
 • Like 14
 • Thanks 8
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விவசாயி விக்!

நானும் ஒரு இயற்கை விவசாயிதான். அடுத்த ஜென்மத்தில் ஒரு விவசாயியாக பிறக்கவேண்டும் என்பதே என் வேண்டுதல்.

ஆடு மாடு கோழிகள் வளர்த்தாலே இயற்கையான  பசளைகள் கிடைத்து விடும்.பனைமர ஓலைகள் தோட்டங்களுக்கு நல்ல பசளை.காவுளாய்,பூவரசம் சருகுகள்,மாஞ்சருகுகள் எல்லாவற்றையுமே பசளைகளாக பாவித்தோம். செம்மறி ஆடுகளை பசளைகளுக்காக தென்னங்காணி,தோட்டக்காணிகளில்,வயல்களில் பட்டி பட்டியாக கட்டி வளர்த்தோம்.ஆனால் இன்று அங்கே எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. இதற்கு மேலைத்தேய விவசாய தொழில் நுட்பங்களை மேலும் அறிமுகப்படுத்த வேண்டும். அதில் மிக முக்கியமானது தண்ணீர் சேமிப்பும் ,சேமிப்பு முறையில் நீர் பாசன வசதியும் நுட்பங்களும்.ஊரில் விவசாயத்தை கடினமான தொழிலாகவும் கேவலமான தொழிலாகவும் எண்ணும் நிலையை மாற்ற வேண்டும்.

இலங்கையை பொறுத்தவரை ஒரு பெரிய இயற்கையின் வரப்பிரசாதம் சூரிய ஒளி. இதை வைத்து பல விடயங்களை இலகுவாக செய்யலாம். உங்களுக்கு தெரியாததல்ல.

எனது ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.

 • Like 3
Link to comment
Share on other sites

17 hours ago, குமாரசாமி said:

வணக்கம் அண்ணா.  

எம்மவர்கள் இப்போதும் இலை தளைகளை எரிக்கிறார்கள்.  முன்பு மரத்திற்கு பக்கத்தில் பாத்தி வெட்டி இயற்கை குப்பைகளை போட்டு மூடுவோம்.  

உடலை கண்டபாட்டுக்கு முறித்து வேலை செய்யாமல் விவசாயம் செய்ய முடியும்.   மற்றும் கூலி வேலைக்கு ஆள் இல்லாத படியால் சிங்களவருக்கு வேலை வாய்ப்பு கூடுகிறது.  

நீர் பாவனைக்கு சொட்டு நீர் பாய்ச்சல் கருவிகள் உபகரணங்கள் ஒன்றும் தமிழீழத்தில் காண முடியவில்லை.  

மண் பதப்படுத்தல்(ரில்லிங்),  பாத்திக்கட்டும் உபகரணங்கள் மற்றும் வெங்காயம் வேறு விதைகளை நடும் உபகரணங்கள் இல்லை.

இப்போது அம்பாறை மட்டக்களப்பு பகுதியில் பெருந்தெரு வசதியோடு இருக்கும் கிராமம் ஒன்றை தந்தால் நாம் அதை உதாரண தோட்டமாக்கலாம்.  

எனது அரசு நண்பருக்கு நாளை அழைப்பு விடுக்க உத்தேசம்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விவசாயி விக் said:

எல்லா இடமும்  நான் கண்ட விவசாய பிரச்சினைகள்:

1) விவசாய தொழில்நுட்ப தட்டுப்பாடு - இப்போதும் பாத்தி கட்டி கையால் வெங்காயம் நடுகிறார்கள்.
2) அதீத இரசாயன பாவனை -  மருந்து இப்பவும் அடித்து தள்ளுகிறார்கள்.   உரம் அடிக்கிறார்கள்.  
3) விவசாய தொழிலாளர்கள் -  ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்.   பாதுகாப்பு உபகரணங்கள் (சுவாச முகமூடி, சப்பாத்து இல்லை) .  பலர் காலில் ஆறாத காயங்களுடன் திரிகிறார்கள்.
4) நீர் பாவனை - பாத்தி முறை என்ற படியால் ஒவ்வொரு நாளும் இறைத்து தள்ளுகிறார்கள்.  பாத்திகளில் வெள்ளையா கல்சியம் படிந்திருக்கும்.
5) விதைகள் -  கைபிரிட் என்று சொல்லி இப்போது ஜி எம் ஓ புகுத்தி விட்டார்கள்.  பல விவசாயிகள் சிறு நீராக பாதிப்பால் இறக்கிறார்கள்.
6) சந்தை படுத்தல் -  இதில் பல இடை தரகர்கள் இருப்பதால் விவசாயிக்கு இலாபம் இல்லை.
7) சூழல் பாதிப்பு - பறவைகள் காணாமல் போகின்றன, நன்னீர் உவர் நீராக மாறுவது,  இரசாயன பாவனையால் மண் பாதிப்பு

இந்த ஏழும் பிரதான பிரச்சனைகள்.

உடனடியாகவே பூச்சிகொல்லி பாவனையை முற்றாக நிறுத்தி இயற்கை பூச்சி விரட்டி பாவனைக்கு மாறவேண்டும்.

செயற்கை உரபாவனையையும் முற்றாக நிறுத்தி இயற்கை பசளைக்கு மாறவேண்டும்.

On 19/2/2021 at 22:57, விவசாயி விக் said:

நாம் இங்கு மூன்று விடயங்கள் செய்தாலே பெரும் பயன் கிடைக்கும்.

1) வரம்பு கட்டி மழைக்கால நீரை அந்த நிலத்தில் தேக்கி வைப்பது.  அது வடிந்து போய் கொண்டிருக்கும்.
2) நிலம் காய்ந்திருக்கும் நேரம் இலை தளைகளை போட்டு இயற்கை உரத்தால் 10 இஞ்சிக்கு நிரப்புவது.  இதனால் நீர் ஆவியாக போகாமல் பிடித்து வைத்து,  நுண்ணுயிர், பூச்சிகளின் வளர்ச்சியை கூட்டி உக்கவைப்பது.
3) மற்றும் ஆடு, மாடுகளை அடைப்பது.  இவை நிலத்தை மிரித்து பிரச்சினையான களைகளை தடுக்கும். மலமும் சலமும் சத்தை கூட்டும்.

அப்ப என்ன இயற்கை விவசாயத்தை தொடங்குவமே?

காலாகாலமா செய்தது தான்.

மாரிகாலம் தொடங்க முதல் வரம்பு கட்டுதல் பிரதானமா இருக்கும், எல்லைக்காணிக்காறரும் கட்டினால் (இருபக்கமும்) வரம்பு பலமாகும்.

நெல் விளைஞ்சு அருவி வெட்டின கையோட உழுது எள்ளும் சணலும் போடுவினம். நிலத்திற்கு வீட்டில் சேரும் குப்பை(மாட்டுச்சாணம், ஆட்டு புழுக்கை, வளவில கூட்டி வாற சருகு எல்லாம் சேர்ந்த கலவை) போடுவினம் நெல்லு விதைக்க முன்னர், குப்பை போடுவது குறைவென்றால் எள்ளு போடாமல் சணலை போட்டு அது வளர்ந்ததும் பிளவடிச்சுவிடுவினம்.

சிலர் காணி முழுக்க உமி போட்டு எரிச்சு விடுவினம்.

பட்டி அடைத்தல் என்று சொல்லுறது. இப்ப பட்டியும் இல்லை அடைப்பும் இல்லை. (எங்கட பக்கம்)

கிழக்கில நிறைய ஊர் மாடுகள் வளக்கினம், அவற்றை இரவில் பட்டி அடைக்க கட்டணம் (இலவசமாயும் செய்வார்களோ தெரியவில்லை) கொடுத்து பயன்படுத்தலாம். இரவில் பட்டிக் காவல் அவசியம்.

மழைக்கால நீரை சேமித்தல் மிக குறைவாக உள்ளது, வெங்காயச் செய்கையில் ஈடுபடுவோர் சேமிக்க கூடிய குளத்து நீரை களவாக திறந்து விடுவதால் கிணற்று நீர் மட்டம் விரைவாக வற்றுகின்றது, நன்னீரும் உவர்நீராகின்றது. (இப்ப வெங்காயம் விக்கிறவிலை தெரியும் தானே)

மக்கள் பாவனையில் இல்லாத கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் (சிறிய குட்டை, குளங்கள் முதல் பரந்து அகன்ற பிரதேசத்தில் உயரம் குறைந்த நீண்ட அணைகளைக்கட்டி (சில இடங்களில் கடற்கரையோர வீதிகள் உயரமாக இருந்தால்) மழை நீர் தேக்கும் முயற்சி பலனளிக்கலாம்.

 • Like 3
 • Thanks 3
Link to comment
Share on other sites

2 hours ago, ஏராளன் said:

உடனடியாகவே பூச்சிகொல்லி பாவனையை முற்றாக நிறுத்தி இயற்கை பூச்சி விரட்டி பாவனைக்கு மாறவேண்டும்.

செயற்கை உரபாவனையையும் முற்றாக நிறுத்தி இயற்கை பசளைக்கு மாறவேண்டும்.

மிகவும் அருமையான பதிவு.   வாசிக்கும் போது எனது பாட்டனார் கண் முன் வந்து போனார்.

நாம் கிருமி நாசினி, உரம் விடயங்களில் அரச மட்டத்தில் தடை கொண்டுவர முடியாது.  ஆனானபட்ட ராஜபக்சவே தடை போட முடியாமல் போனது.   

ஆனால் நாம் அதை தனி நபர் விவசாயி மட்டத்தில் செய்யலாம்.   ஏற்கனவே கிழக்கு அதிகாரி ஒருவர் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உள்ளூர் விதைகளை பாவித்து கண்டுகள் வளர்த்து விநியோகிக்கிறார்.

நாம் உவர்ப்பு மண் பகுதிகளில் நீர் தேக்கத்தை கூட்டுவதற்கு பழைய குளங்களை தூர்வாருவது மற்றும் வெளிநாடுகளில் இப்போது செய்வது போல் மழை நீர் பராமரிப்பு தேக்கங்களை குடியிருப்புகளில் நிறுவி நீர் சேமிப்பு செய்து மண்ணரிப்பு மற்றும் வெள்ளத்திற்கு தடை போடலாம்.  

இப்போது ஊரில் மழை பெய்தால் வெராந்தாவில் ஒரு அடிக்கு தண்ணி தேங்கி பின் திறந்த கிணத்துக்குள் கசிந்து ஊற்றுகளை மாசுபடுத்துகிறது.

அதே நேரம் வெங்காய விதைப்பு முறையை மாற்ற வேண்டும்.  நாம் கனடாவில் பாத்தியை உயர்த்தி பிடடியாக கட்டுவோம்.  2 அடி அகலம் 100 அடி நீளம். பின் 5 வரிக்கு நீட்டாக வெங்காயம் நட்டு பின் அதற்கு சொட்டு தண்ணி குழாய்களை வைத்துவிடுவோம்.   

கனடாவில் களை எடுக்க ஆள் இல்லை என்ற படியால் நாம் இரண்டு முறைகளை பாவிக்கிறோம்.  ஒன்று வைக்கோல் கொண்டு மூடுவது மற்றது முற்போக்கா களை எடுப்பது.  முதல் இரண்டு கிழமையில் மூன்று தொடக்கம் நாலு தடவை செய்வோம்.    இங்கு கவனிக்க வேண்டியது கனடிய இயற்கை விவசாயிகள் பழைய உபகரணங்களை பாவித்து நின்று கொண்டே களை எடுப்பம்.

நீங்கள் கூறியது போல் தெருவோரமாக வரும் நீர்களை கடலுக்கு செல்லுமுன் திட்டி ஏற்படுத்தி தேக்கிவிடலாம்.  அத்தோடு அந்தந்த பகுதியில் வளரும் இயற்கை புதர்களை கொண்டு வெளிச்சு போய் இருக்கும் நிலத்தை சூரியனிடம் இருந்து மூடலாம்.   இந்த புதர்கள் கால் நடைக்கோ அல்லது வருமானம் தர கூடியதாக இருந்தால் இன்னும் நன்று.

கிழக்கில் எங்கே பாதிப்பு கூடிய பகுதிகள் என்று தெரியுமா?  நாளை கிழக்கு அதிகாரியோடு பேசும்போது கேட்டு பார்க்கிறேன்.

Sri Lanka Bans Monsanto Herbicide After Report Suggests Link to Deadly Kidney Disease (March 2014)

Sri Lanka Lifts Ban on Sale of Ghysophate(Round up) (May 2014)

Edited by விவசாயி விக்
 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

உடனடியாகவே பூச்சிகொல்லி பாவனையை முற்றாக நிறுத்தி இயற்கை பூச்சி விரட்டி பாவனைக்கு மாறவேண்டும்.

செயற்கை உரபாவனையையும் முற்றாக நிறுத்தி இயற்கை பசளைக்கு மாறவேண்டும்.

இயற்கை விவசாய முறைக்கு திரும்ப நீண்ட காலம் எடுக்கும். இருந்தாலும் முயற்சி மிக முக்கியம். சூத்தை மரக்கறிகள் என கழிச்சு விட்டதை மேற்குலகு தேடிச் சாப்பிடுகின்றது. இயற்கையின் மகிமையை மனிதம் உணர ஆரம்பித்து விட்டது.

 • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

இயற்கை விவசாய முறைக்கு திரும்ப நீண்ட காலம் எடுக்கும். இருந்தாலும் முயற்சி மிக முக்கியம். சூத்தை மரக்கறிகள் என கழிச்சு விட்டதை மேற்குலகு தேடிச் சாப்பிடுகின்றது. இயற்கையின் மகிமையை மனிதம் உணர ஆரம்பித்து விட்டது.

அப்படி இல்லை அண்ணா.   நிலத்தை திருப்ப காலம் எடுக்கும் ஆனால் சூத்தையே இல்லாதா நல்ல கத்தரிக்காய் நாம் வளர்க்கலாம்.

நான் இங்கு அமைச்சில் வேலை செய்யும்போது இயற்கை மருந்தாக வேப்பெண்ணெயை கொண்டுவந்தேன்.   பகடி என்னவெண்டால் இரசாயன அதிகாரிகள் என்னை வறுத்தெடுத்தனர்.   வேப்பெண்ணையின் பாதுகாப்பு பற்றி வேப்பெண்ணெய்யை கொஞ்சம் சவற்காரத்துடன் சேர்த்து தெளித்தாலே போதும்.  பூக்கும் முன்பும் மற்றும் பிஞ்சு பிடித்தபின் தெளிக்கவேண்டும்.   நம்மாழ்வார் பஞ்ச காவியம் போன்ற இயற்கை நாசினிகளை பாவிக்கிறார்கள்.  

மற்றும் இங்கு முக்கியமான விடயம் என்னவெண்டால் விதைகள்.  நல்ல இயற்கை விதையாக இருந்தால் அந்த கண்டுகளுக்கு பெரிய தாக்கம் இருக்காது.   

என்னை சந்தையில் பலர் கேட்பார்கள், இயற்கை விவசாயம் என்றால் என்ன என்று நான் கேட்பேன் உங்கள் வீட்டு தார் தரை வெடிப்பில் வளரும் டாண்டிலயனுக்கு யார் உரம் போட்டு நாசினி தெளித்தது?  அது துள்ளி வளர்ந்து பூத்து குலுங்குகிறதல்லவா?  அதே யுக்தி தான் எமதும்.   யோசித்துக்கொண்டு போவார்கள்.  

நான் பல இயற்கை விதைகளை சேர்த்து வைத்திருக்கிறேன்.  கோவிட் கோவிந்தா தொடங்கியபோது எல்லோரும் மளிகை சாமான் வாங்க செல்ல நான் விதை கடைக்கு சென்று பல்லாயிரம் டொலர்களுக்கு இயற்கை விதை வாங்கி பதுக்கினேன்.

அதனால் எம் ஊரில் பல போகம்  வளர்ந்து காலநிலை மற்றும் ஊர் பூச்சி பூஞ்சணங்களை தாங்கும் விதைகளை நாம் வளர்த்து அதை விவசாயிகளின் கையில் கொடுத்து ஒரு விதை பண்டமாற்று யுக்தியை கொண்டுவரவேண்டும்.   

இயற்கை விதை என்றால் மலிவு அல்ல இங்கு ஒரு தங்க செரி தக்காளி விதை $1 டொலர்.   அதனால் நாம் விதையை வைத்து எம்மை முடக்கும் வியாபாரிகள் நிறுவனங்களிடம் இருந்து சுதந்திரமாக இருக்கவேண்டும்.

Edited by விவசாயி விக்
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விவசாயி விக் said:

விவசாயி, எனக்கும் ஒரு விளக்கம் தேவை...!

சிறியதொரு வீட்டுத் தோட்டமொன்று,,,நீண்ட காலமாகச் செய்து வருகின்றேன்!

இங்கு  இயற்கை விதைகள் என விற்பவர்களிடம்..வெண்டி, கத்தரி, குடை மிளகாய், பயத்தை  போன்றவையின் கன்றுகளையும் 
நடுவது வழக்கம்! ஆனால் அந்த விதைகளை அடுத்த வருடம் உப்யோகிக்கும் போது அவை அனேகமாக முளைப்பது குறைவு!

அடுத்த பிரச்சனை....பொஸ்ஸம் எனப்படும் ஒரு வகை (மர நாய் போன்று உருவம் இருக்கும்)  இரவில் வந்து கத்தரிக்காய்களைக் கொன்டு போய் விடும்..!  வலை போட்டால், வலையை வெட்டி உள்ளே போகின்றது! 
இதற்கு ஏதாவது தீர்வு உங்களுக்குத் தெரியுமா? நன்றி...!

கீழே மூண்டு பேர் முழிசின படி இருக்கீனம் பாருங்கோ....!😐

spacer.png

 • Like 1
Link to comment
Share on other sites

28 minutes ago, புங்கையூரன் said:

அண்ணா உந்த குறுக்கால போவாரிண்ட படம் எல்லாம் தேவையில்லை இங்க ஒரு மாபியாவே இருக்குது.   இப்போது நாய்கள் வந்த பிறகு இவர்களின் தொல்லை இல்லை.  

எப்போதும் இயற்கையை இயற்கையால் தான் விரட்டலாம்.   இந்த இரண்டு யுக்திகளை பாவித்து பாருங்கள்.

ஒன்று அந்துப்பூச்சி பந்துகளை (Moth balls) சின்ன லேஸ் துணிகளில் கட்டி தாவரங்கள் மரங்களில் கட்டலாம்.

மற்றையது எங்கட விக்ஸ், டைகர் பாம் போன்ற மணம் உள்ள கழிகளை போஸம் வரும் வயர்கள், கிளைகள் மற்றும் உங்கள் தோட்ட பெட்டியை சுற்றி பூசிவிடலாம்.  

அவர்களுக்கு கத்தரி வாசம் பிடிபடாவிட்டால் பக்கத்துக்கு வீட்டுக்கு சென்றுவிடுவார்கள்.

இன்னொரு விடயம் லைவ் ட்ராப் அதாவது பொறி வாங்கி பிடித்து ஆட்களை கொண்டுபோய் முருகண்டியில் இறக்கலாம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விவசாயி விக் said:

மிக்க நன்றி....விவசாயி...!

பொறி வைக்கின்றது...சாத்தியமில்லை..! 

உங்களுக்கு முதல் வைச்சுப் பார்த்து...அது வேலை செய்தால்...பிறகு பொஸ்ஸத்துக்கு வையுங்கோ...என்று வீட்டில் சொல்லி  விட்டார்கள்!

அடுத்த தெரிவு  பூச்சிப் போளை தான்...!

என்ன மாதிரி...முடிவு என்று பின்னர் எழுதுகின்றேன்...!

Link to comment
Share on other sites

2 minutes ago, புங்கையூரன் said:

மிக்க நன்றி....விவசாயி...!

பொறி வைக்கின்றது...சாத்தியமில்லை..! 

உங்களுக்கு முதல் வைச்சுப் பார்த்து...அது வேலை செய்தால்...பிறகு பொஸ்ஸத்துக்கு வையுங்கோ...என்று வீட்டில் சொல்லி  விட்டார்கள்!

அடுத்த தெரிவு  பூச்சிப் போளை தான்...!

என்ன மாதிரி...முடிவு என்று பின்னர் எழுதுகின்றேன்...!

மற்றும் அணில், போஸம் போன்ற ரோமம் உள்ள விலங்குகளுக்கு நொறுக்கிய முட்டை கோது பிடிக்காது.   அதை தாவர கடைகளில் பெட்டியில் விற்கிறார்கள் அல்லது நீங்களே நொறுக்கி போட்டுவரலாம்.   

நாம் இங்கு துலிப் நடும்போது கட்டாயம் பாவிப்போம்.  இல்லையே பங்குனியில் அணில்கள் தோண்டி ஆம்லெட் போட்டுவிடுங்கள்.

மற்றும் உங்கட போஸம் சொப்ட் போல எங்கட இப்படி இருக்கும்

Image result for possums

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விவசாயி விக் said:

மீண்டும் நன்றி...!

முட்டைக் கோது பிரச்சனை இல்லை....! நிறையச் சேரும்..!

மற்றது  இங்கு இவையளைப் பாதுகாக்கப் பட்ட மிருகங்களுக்குள் சேர்த்து விட்டார்கள்..!

கை வச்சால்...சில வேளைகளில் கம்பி எண்ண வேண்டியும் வரலாம்.!😩

உங்கடை  ஆக்களைப் பார்க்கக் கொஞ்சம் பயமாக் கிடக்குது..!😲

 • Haha 1
Link to comment
Share on other sites

8 minutes ago, புங்கையூரன் said:

மீண்டும் நன்றி...!

முட்டைக் கோது பிரச்சனை இல்லை....! நிறையச் சேரும்..!

மற்றது  இங்கு இவையளைப் பாதுகாக்கப் பட்ட மிருகங்களுக்குள் சேர்த்து விட்டார்கள்..!

கை வச்சால்...சில வேளைகளில் கம்பி எண்ண வேண்டியும் வரலாம்.!😩

உங்கடை  ஆக்களைப் பார்க்கக் கொஞ்சம் பயமாக் கிடக்குது..!😲

இங்க வெள்ளைகள் இதை சாப்பிடுவினம்!  போஸம் குழம்பு வைக்கும் முறை.

http://www.grouprecipes.com/41075/brawler-possum-stew.html

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விவசாயி விக் said:

இங்க வெள்ளைகள் இதை சாப்பிடுவினம்!  போஸம் குழம்பு வைக்கும் முறை.

http://www.grouprecipes.com/41075/brawler-possum-stew.html

spacer.png

நன்றி...! கங்காருவில கை வைக்கவே மனம் வருகுது இல்லை!

ஆனால் கடைகளில் சாப்பிட்டிருக்கிறேன்! முதலையும் பரவாயில்லை! கோழி மாதிரி இருக்கும்!

வேட்டையில்  கொல்லப்பட்ட பொஸ்ம் விக்ரோறியா மானிலத்தில்...சில கடைகளில் விக்கிறார்களாம்!

மெல்பர்ன் அடுத்த முறை போகும் போது...விளையாடத் தான் இருக்கு..!

இங்கு பொஸங்களுக்காக....வனத்துறையினர்  மரங்களில்  கூடுகள் செய்து வைத்திருப்பார்கள்...!

நாங்கள் குழம்பு வைச்சு மணத்தால்...எங்களையும் குழம்பு வைத்து விடுவார்கள்!😲

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி, தொடருங்கள், என் ஆதரவும் உண்டு உங்கள் முயற்ச்சியில், 

என் வீட்டு தோட்டத்திற்கு உணவு கழிவு பொருட்களை கிரைண்டரில் அடித்து கன்றுகளுக்கு போடுவது வழமை, நல்ல விளைச்சல்

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பைத் தொடங்கிய விவசாயிவிக்ற்கு நன்றிகள். இயற்கை விவசாயத்தை இலகுவாக செய்து இலாபம் ஈட்டும் வழிகளை தொடர்ந்து தாருங்கள். பலர் பயனடைவார்கள்

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரிக்கும் நான் எழுதுவதற்கும் தொடர்பிருக்குமோ தெரியவில்லை. ஆனால், நீருடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் எழுதுகிறேன்.

2013 இன் முடிவில் வந்த கட்டுரையொன்றில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோயில் பிரதேசத்தில், தங்கவேலாயுதபுரம், காஞ்சிரங்குடா, கஞ்சிகுடிச்சியாறு மற்றும் உடும்பன்குளம் ஆகிய தமிழ்க் கிராமங்கள் அரசால் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும் தமிழர்கள் நன்னீருக்குக் கஷ்ட்டப்படுவதாகவும், சுமார் 7 அல்லது 8 கிலோமீட்டர்கள் நடந்துசென்றே நீரினைப் பெற்றுவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்றைய நிலைமை சரியாகத் தெரியவில்லை. இதுபற்றி தெரிந்தவர்கள் கூறினால் புலம்பெயர் தமிழர்கள் உதவலாம். 

அவர்களுக்கிருக்கும் முக்கியமான பிரச்சினைகளாக நன்னீர், வீடுகள் மற்றும் போக்குவரத்திற்கான பாதைகள் என்பவற்றில் ஏதாவது ஒரு விடயத்தில் தொடங்கலாம். 

 • Like 2
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்க்க முடிந்தது விவசாயி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்  மரக்கறி பயிருக்கு ப்யர் போன இடம் களுதாவளை செட்டி பாளையம் , ஆகிய இரு ஊர்கள் தற்போது இங்கே வீற்றுட் பயிர் செய்து நல்ல விளைச்சலை கண்டுள்ளார்கள் . பணமே முதலீடு லாபமும்  அதே பணம் என்பதால் செயற்கை உரம் கிருமிநாசினிதான் தெளிக்கிறார்கள் , அம்பாறை எனது ஊர்  இங்கே அதிகம் நெல் வயல்கள் மட்டுமே , 

On 22/2/2021 at 10:06, ரஞ்சித் said:

ஒவ்வொரு வீடுகளுக்குமிடையில் அதிக தூரம் என்ற படியாலும் நிலத்தில் அதிக கற்பாறைகள் இருப்பதாலும் நீரைக்கொண்டு செல்ல தாமதமாகிறது என சொன்னார்கள்  வரும் வெள்ளிக்கிழமை அங்காலப்பக்கம் செல்வேன் விசாரித்துத்து சொல்கிறேன்  .

 • Like 4
Link to comment
Share on other sites

On 21/2/2021 at 23:36, ரஞ்சித் said:

மிகவும் தொடர்பு உள்ள விடயம் சகோ.  நான் கடந்த வாரமாக கிழக்கில் உள்ள தொடர்புகளோடு பேசி ஒரு நல்ல சமூக சேவகனை பிடித்துவிட்டேன்.  அவருடன் இந்த கிராமங்களை முன் வைத்து பேசுகின்றேன்.

நான் கென்யாவில் 2002-2005 வரை நன்னீர் வழங்கும் திட்டங்களில் வேலை செய்தபடியால் இலகுவாக அதை நடை முறைப்படுத்த  தெரியும்.  
 இப்போது தொழில் நுட்பமும் வளர்ந்த படியால் சூரிய நீர் இறைப்பிகளையும் பாவிக்கலாம்.  

மழை நீர் சேமிப்பு, குளங்களை தூர் வாருதல் மற்றும் குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கலாம்.

 • Like 2
Link to comment
Share on other sites

On 23/2/2021 at 12:32, தனிக்காட்டு ராஜா said:

இன்றுதான் பார்க்க முடிந்தது விவசாயி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்  மரக்கறி பயிருக்கு ப்யர் போன இடம் களுதாவளை செட்டி பாளையம் , ஆகிய இரு ஊர்கள் தற்போது இங்கே வீற்றுட் பயிர் செய்து நல்ல விளைச்சலை கண்டுள்ளார்கள் . பணமே முதலீடு லாபமும்  அதே பணம் என்பதால் செயற்கை உரம் கிருமிநாசினிதான் தெளிக்கிறார்கள் , அம்பாறை எனது ஊர்  இங்கே அதிகம் நெல் வயல்கள் மட்டுமே , 

ஒவ்வொரு வீடுகளுக்குமிடையில் அதிக தூரம் என்ற படியாலும் நிலத்தில் அதிக கற்பாறைகள் இருப்பதாலும் நீரைக்கொண்டு செல்ல தாமதமாகிறது என சொன்னார்கள்  வரும் வெள்ளிக்கிழமை அங்காலப்பக்கம் செல்வேன் விசாரித்துத்து சொல்கிறேன்  .

கட்டாயம் தெரிவியுங்கள் சகோ.  

இப்போது எமது பாரம்பரிய நெல் விதைகளை தடை செய்து கைபிரிட் நெற்களை பாவிப்பதால் அங்குள்ள விவசாயிகளுக்கு சிறு நீராக வருத்தங்கள் இருக்கின்றதா?

விவசாயிகள் இலாபம் பார்க்க முடிகிறதா?   ஏதாவது தொழில் நுட்பங்கள் தேவை படுகிறதா?

நெல் போகம் முடிய வேறு பயிர்களை வளர்த்து வருமானத்தை கூட்ட முடியுமா?

வேறு பிரச்சினைகளை கண்டறிந்து தெரிவித்தால் நன்றி.

 • Like 1
Link to comment
Share on other sites

murunkai-keerai.jpg?v=f7c7a92a9cb9
 
இயற்கை முறையிலான முருங்கை, முருங்கைசார் உற்பத்திப் பொருட்களுக்கான தேவை, கேள்வி என்பன உலகச் சந்தையில் அதிகரித்துள்ளன. 
 
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் "முருங்கை வளர்ப்பு, அதன் பெறுமதிசேர் உற்பத்திகளை எவ்வாறு மேற்கொள்ளலாம்" என்பது குறித்த அறிவூட்டல் நிகழ்வு,  இணையவழியூடாக வடக்கு-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நடுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
குறைந்தளவு பயிர்ப் பாதுகாப்பு முறைமை மற்றும் இழப்பீடுகள் குறைந்த இம் முருங்கை உற்பத்தியூடாகப், பல்வேறு வழிகளில் பாதிப்புக்குள்ளான வறுமை நிலையில் உள்ள மக்களை இவ் உற்பத்தியில் ஈடுபாடு கொள்ள வைப்பதன் மூலம், அம்மக்களுக்கான நிலையான வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். 
 
எனவே இவ் இணையவழிக் கலந்துரையாடலில்,  அனைவரையும்
பங்குகொண்டு இத்திட்டத்துக்கு  வலுச் சேர்க்குமாறு  கேட்டுக்கொள்ளுகின்றோம்!
 
When: Saturday February 27  Eelam Time: 7:30 PM Toronto Time: 9:00 AM London Time: 2:00 PM
Please contact :  contact@needcentre.org for more information
 
இவ் நிகழ்வை பின்வரும் https://www.facebook.com/needcentre/ என்ற முகப்புத்தக (facebook) இணையத்தள முகவரிகளுடாக அல்லது https://www.youtube.com/channel/UC_6ubklMUdL-wrBMPTKKeZA என்ற வலையொளி(YouTube) ஊடக இணைப்பை ஏற்படுத்தி பயன்பெறலாம்.
--
Edited by விவசாயி விக்
 • Like 1
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விவசாயி விக் said:

மிகவும் தொடர்பு உள்ள விடயம் சகோ.  நான் கடந்த வாரமாக கிழக்கில் உள்ள தொடர்புகளோடு பேசி ஒரு நல்ல சமூக சேவகனை பிடித்துவிட்டேன்.  அவருடன் இந்த கிராமங்களை முன் வைத்து பேசுகின்றேன்.

நான் கென்யாவில் 2002-2005 வரை நன்னீர் வழங்கும் திட்டங்களில் வேலை செய்தபடியால் இலகுவாக அதை நடை முறைப்படுத்த  தெரியும்.  
 இப்போது தொழில் நுட்பமும் வளர்ந்த படியால் சூரிய நீர் இறைப்பிகளையும் பாவிக்கலாம்.  

மழை நீர் சேமிப்பு, குளங்களை தூர் வாருதல் மற்றும் குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கலாம்.

குழாய்க்கிணறு பாவிக்கலாமா? விக் மழைநீரை மீள்நிரப்பு(recharge) குழி/நிலத்தின் கீழ் செல்ல வைப்பது எப்படி என விளக்கமுடியுமா? குழாய்க்கிணறுகளை தோண்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விவசாயி விக் said:

கட்டாயம் தெரிவியுங்கள் சகோ.  

இப்போது எமது பாரம்பரிய நெல் விதைகளை தடை செய்து கைபிரிட் நெற்களை பாவிப்பதால் அங்குள்ள விவசாயிகளுக்கு சிறு நீராக வருத்தங்கள் இருக்கின்றதா?

விவசாயிகள் இலாபம் பார்க்க முடிகிறதா?   ஏதாவது தொழில் நுட்பங்கள் தேவை படுகிறதா?

நெல் போகம் முடிய வேறு பயிர்களை வளர்த்து வருமானத்தை கூட்ட முடியுமா?

வேறு பிரச்சினைகளை கண்டறிந்து தெரிவித்தால் நன்றி.

பெரிதாக வருத்தங்கள் இல்லை விவசாயி விக்  விவசாயிகள் என்பதை நிலத்தின் சொந்தக்காரரே ஆளை வைத்து விவசாயம் செய்கிறார் அதனால் அவருகே லாபம் நெல் விலை கூடினால் செய்பவருக்கு ஏக்கருக்கு இத்தனை மூடையென கூலியாக நெல் வழங்கப்படும் . அனைத்தும் நெற்க்காணிகள் என்ற படியால்  வேறு பயிர்கள் செய்ய மாட்டார்கள் நிலம் பழுதாகிவிடும் என்பதால் சில நிலங்கள் இரண்டு போகமும் தற்போது அதிக மழையால் மாரி போகமும் சிலருக்கு நட்டம்  

ஆனால் திருக்கோவில் பகுதியில் நன்னீர் மீன்பிடியும் தற்போது சோளன், கச்சான், பப்பாசி என்பன பயிருட்டு நல்ல விளைச்சலையும் மரக்கறிகளையும் பயிரிட்டுள்ளார்கள்  ஆனால் எல்லாம் இந்த கைப்பிரிட் விதைகளே விவசாயி 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2021 at 19:58, புங்கையூரன் said:

விவசாயி, எனக்கும் ஒரு விளக்கம் தேவை...!

சிறியதொரு வீட்டுத் தோட்டமொன்று,,,நீண்ட காலமாகச் செய்து வருகின்றேன்!

இங்கு  இயற்கை விதைகள் என விற்பவர்களிடம்..வெண்டி, கத்தரி, குடை மிளகாய், பயத்தை  போன்றவையின் கன்றுகளையும் 
நடுவது வழக்கம்! ஆனால் அந்த விதைகளை அடுத்த வருடம் உப்யோகிக்கும் போது அவை அனேகமாக முளைப்பது குறைவு!

அடுத்த பிரச்சனை....பொஸ்ஸம் எனப்படும் ஒரு வகை (மர நாய் போன்று உருவம் இருக்கும்)  இரவில் வந்து கத்தரிக்காய்களைக் கொன்டு போய் விடும்..!  வலை போட்டால், வலையை வெட்டி உள்ளே போகின்றது! 
இதற்கு ஏதாவது தீர்வு உங்களுக்குத் தெரியுமா? நன்றி...!

கீழே மூண்டு பேர் முழிசின படி இருக்கீனம் பாருங்கோ....!😐

spacer.png

https://www.banggood.com/KC-JK369-Garden-Ultrasonic-PIR-Sensor-Solar-Animal-Dispeller-Strong-Flashlight-Dog-Repeller-p-1163318.html?utm_design=18&cur_warehouse=CN&utm_source=emarsys&utm_medium=mail_local210225_180d&utm_campaign=newsletteremarsys&utm_content=Yoshiki&sc_src=email_4758630&sc_eh=0d8cb28ce9b57deb1&sc_llid=891449&sc_lid=201554893&sc_uid=IZLiQT8A2W

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.