Jump to content

தமிழீழத்தில் உவர் மண்ணை வண்டல் மண்ணாகும் திட்டம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

குழாய்க்கிணறு பாவிக்கலாமா? விக் மழைநீரை மீள்நிரப்பு(recharge) குழி/நிலத்தின் கீழ் செல்ல வைப்பது எப்படி என விளக்கமுடியுமா? குழாய்க்கிணறுகளை தோண்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

குழாய் கிணறுக்கு தடையா?  அப்படியென்றால் நிலத்தடி ஊற்றுக்கள் அந்தப்பகுதியில் ஏற்கனவே வற்றி இருக்கினறந்து என்று அர்த்தம்.   

இப்போது எல்லா வெளிநாட்டு குடியுர்ப்புகளும் மழை நீர் பராமரிப்பை குடியிருப்புகளுக்குள் கட்டி இருப்பார்கள்.   அதனால் ஓடி வரும் நீரை கல் பதித்த நீரோடைகள் மூலம் 15 ஆதி தாளம் உள்ள சின்ன குளங்கள் நிரப்பி அதை வேறு குளங்களோடு நீர் ஓடும் இயற்கை பாதையை வைத்து தொடுப்பார்கள்.

பின் மண் அரிப்பை தடுக்கும் அதே நேரம் நீரை சுத்திகரிக்கும் புற்களை சுற்றி வளர்த்து வைப்பார்கள்.   மற்றும் இந்த குளங்களில் நன்னீர் மீன், ஆமை, தவளைகளை வளர்க்கலாம்.  

நாம் இயற்கையின் தெம்பை எத்தனை தவளைகள் ஏக்கருக்கு இருக்கு என்று பார்த்தாலே தெரியும்.  உள்ளூர் பறவைகள், ஊர்வன மற்றும் பூச்சிகளை வளர்ப்பது இயற்கை விவசாயத்திற்கு மிகவும் உகந்தந்து.   அவை வேற்றின பூச்சிகள், பூஞ்சணங்கள், எலிகள் போன்றவற்றை இயற்கையா மட்டுப்படுத்தும்.

இங்கு அமெரிக்காவில் எப்படி மழை நீர் சேகரிக்கிறார்கள் என்று விபரிக்கிறார்கள். 

https://www.nrdc.org/stories/green-infrastructure-how-manage-water-sustainable-way

21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பெரிதாக வருத்தங்கள் இல்லை விவசாயி விக்  விவசாயிகள் என்பதை நிலத்தின் சொந்தக்காரரே ஆளை வைத்து விவசாயம் செய்கிறார் அதனால் அவருகே லாபம் நெல் விலை கூடினால் செய்பவருக்கு ஏக்கருக்கு இத்தனை மூடையென கூலியாக நெல் வழங்கப்படும் . அனைத்தும் நெற்க்காணிகள் என்ற படியால்  வேறு பயிர்கள் செய்ய மாட்டார்கள் நிலம் பழுதாகிவிடும் என்பதால் சில நிலங்கள் இரண்டு போகமும் தற்போது அதிக மழையால் மாரி போகமும் சிலருக்கு நட்டம்  

ஆனால் திருக்கோவில் பகுதியில் நன்னீர் மீன்பிடியும் தற்போது சோளன், கச்சான், பப்பாசி என்பன பயிருட்டு நல்ல விளைச்சலையும் மரக்கறிகளையும் பயிரிட்டுள்ளார்கள்  ஆனால் எல்லாம் இந்த கைப்பிரிட் விதைகளே விவசாயி 

தகவலுக்கு நன்றி.  

வேறு பயிர்கள் நட்டு நெல் வயலை பழுதாக்க முடியும். உண்மை.   ஆனால் அல்பால்பா, மற்றும் மண்ணுக்கு நலன் அளிக்கும் புற்களை வளர்த்து வெளிநாடுகள் போல் வைக்கோல் எடுத்து மழை காலங்கள் பாவிக்கலாம் மற்றும் பால், இறைச்சி உற்பத்தியை கூட்டலாம்.

சும்மா வயலை தரிசாக விடாமல் இவை மண்ணரிப்பை தடுத்து நீர் ஆவியாக போவதையும் தடுக்கும்.  றை போன்ற தானிய இயற்கை உரங்கள் இரு கிழமைகளில் தளிர்த்துவிடும்.   

https://en.wikipedia.org/wiki/Hay

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, vaasi said:

இணைப்பிற்கு நன்றி வாசி.   நான் 2003ம் ஆண்டு கனடா நயாகரா பகுதி பீச் பழ தோட்டங்களை பறவைகளிடம் இருந்து காக்க பூம் கனன் எனும் சத்த பீரங்கிகளை சோதித்து பார்த்தோம்.  

எல்லா இடமும் பிரச்சினை என்னவென்றால் இயற்கை எதிரிகளுக்கு இது சும்மா சத்தவெடி தான் என்னை ஒன்றும் செய்யாது என்று பழகிவிடும்.   பசி வந்தால் மிருகங்களுக்கும் பத்தும் பறந்து போகும்.  ஆதலால் சத்த பீரங்கியுடன் பருந்துகளை வைத்தும் விரட்டுவார்கள்.

இப்போது ஸ்ட்ராவ்பெரி போன்ற தோட்டங்கள் மேலே கருப்பு வலை போல் கூரை போல் இழுத்து மூடுவார்கள்.

இவை வீட்டு பாவனைக்கு உகந்ததாக இருந்தாலும் விவசாயத்திற்கு பெரிய அனுகூலம் தராது.

https://www.agdaily.com/news/michigan-farmers-cannon-fire-complaints/

 

கவனித்தீர்கள் என்றால் பெரும் இரைச்சல் எடுத்து அங்கும் இங்கும் பறக்கும் விமானங்களால் கூட தடுக்கமுடியாது.

Meet Juliet, the falcon making Pearson Airport a little safer

https://www.cbc.ca/news/canada/toronto/programs/metromorning/toronto-airport-falcon-safety-birds-1.4028010

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

60 நாள் போதும் மண்ணை மீட்டெடுக்க/ Nammalwar speech

ஐயாவின் இந்த பேச்சு இத்திரிக்கு பயன்படுமென நினைக்கிறேன்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மண் .இல்லா பயிர் வளர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2021 at 10:02, ஏராளன் said:

60 நாள் போதும் மண்ணை மீட்டெடுக்க/ Nammalwar speech

ஐயாவின் இந்த பேச்சு இத்திரிக்கு பயன்படுமென நினைக்கிறேன்.

நன்றி சகோ.  நம்மாழ்வார் எனது இயற்கை விவசாய குருக்களில் ஒருவர்.  இவருக்காகவே பசுமை விகடன் சாந்தா வாங்கி வைத்திருந்தேன்.  இவரிடம் இருந்து தான் பால் பெரியோர் குடிக்க கூடாது என்று அறிந்தேன்.

இணைப்பிற்கு நன்றி.  பார்த்து கருதிடுகிறேன்.

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

மண் .இல்லா பயிர் வளர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

எனக்கு இதில் பெரிய ஈடுபாடு இல்லை.   இதை பாவித்து 3 கிழமைகளில் லெட்டூஸ் வளர்த்துதான் நாம் அதை மளிகை கடையில் இப்போது வாங்குகிறோம்.   பஞ்சு நிலம் அல்லது ஓடும் நீரில் வளர்ப்பார்கள்.

சில பிரச்சினைகள்:  

1) இலாபம் பார்க்க பெரிய முதலீடு தேவை ($2 மில்லியன் குறைந்தது)
2) உரம் செயற்கையாக தண்ணீருக்கு கொடுப்பதால் அது அப்படியே தாவரம் உறிஞ்சி உங்கள் உடலுக்கு தரும்.
3) நிலத்தில் நுண்ணுயிர்கள் இயற்கை உரத்தை உடைத்து 118 வேதியல் பொருட்களாக மாற்றும்.  எம் உடலிலும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை வேதியல் போர்டுகளும் இருப்பதால் எம் உடலுக்கு மிகவும் உகந்தது.
4) செயற்கை உரத்தில் கூடியது 15 வேதியல் பொருட்கள் தான் இருக்கும்.  இதனால் உடலுக்கு தீங்கு.

அண்ணா உலகை சுற்றி பார்த்து தெரிந்து கொண்டது, எம்மிடம் நிறைய விவசாய நிலம் இருக்கிறது ஆனால் நாங்கள் இறைச்சி உற்பத்திக்காக சோளம்/சோயா போன்ற கால்நடை தீவனத்திற்கு தான் அதை விரயமாக்கி மண்ணையும் இயற்கையையும் அழிக்கிறோம்.

மூடிய அறைக்குள் இருப்பதால் ஈரலிப்பு கூடி பூஞ்சணங்கள் வரும் அல்லது ஒரு தாவரத்திற்கு ஒரு நோய் வந்தால் அந்த வளர்ப்பு அறையே தாக்கப்படும். அதனால் கிருமிநாசினி பாவிப்பு கூட தேவை.

 

இது ஒரு விளம்பர படம்!!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி வி.வி.மற்றது மீன் வளர்ப்போடு சேர்ந்த பயிர் வளர்ப்பு(aquaponic) பற்றிய உங்கள் கருத்து எப்படி.

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2021 at 07:02, சுவைப்பிரியன் said:

நன்றி வி.வி.மற்றது மீன் வளர்ப்போடு சேர்ந்த பயிர் வளர்ப்பு(aquaponic) பற்றிய உங்கள் கருத்து எப்படி.

நன்னீர் மீன் வளர்ப்பு/விவசாயம் நவீனமாக செய்வது முதலீடு கூடிய விடயம்.  நீங்கள் பெரிய நன்னீர் மீன் வளர்ப்பு நிலையம் வைத்திருந்தால் அதன் கழிவுகளை நீக்கும் மற்றும் தாங்கியை சுத்திகரிக்கும் செலவை குறைக்க தாவரங்களை வளர்க்கலாம்.  ஆனால் நன்னீர் மீனுக்கு போடும் தீனியில் மெர்குரி கலந்திருக்கும் மற்றும் மீனுக்கு அண்டிபயோடிக், வேறு மருந்துகள் பாவிப்பார்கள்.  தாவரம் அத்தனையும் உறிஞ்சி எம் உடலுக்குள் செலுத்துவிடும்.

ஆனால் இயற்கையாக வயலுக்குள் முன்பு மீன்கள் வளர்ந்தன.  இதை இப்போதும் இந்தோனேசிய நெல் விவசாயிகள் சதுப்பு நில மீன்களை வயலுக்குள் வளர்த்து எடுப்பதை கண்டிருக்கிறேன்.  இப்போது இரசாயன உரங்கள் மருந்துகளுக்கு மாறுவதால் இது ஒரு பிரச்சினை.

நாம் கனடாவில் நீர் பாசன குளத்தில் வானவில் டிரவுட் மீன்களை வளர்த்து சோதித்து பார்த்தோம்.  மீன்கள் வளர்ந்து பயன் தந்தன.   

வன்னியில் 2004கில் பிரச்சினை தொடங்குமுன் திலாப்பியா மீன்களை அங்குள்ள குளங்களில் வளர்க்க எத்தனித்தேன் ஆனால் ஊரில் நன்னீர் மீனுக்கு சந்தை இல்லை என்று கை கழுவிவிட்டார்கள்.  பிரச்சினை தொடங்கியபின் அடடா உதவி இருக்குமே என்று தகவல் வந்து ஆதங்கப்பட்டேன்.

Marketing Video:

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன விவசாயியை சில நாளா இங்கு காணவில்லை என்று நினைத்தீர்களா?

வேறு என்ன கிழக்கில் ஒரு நம்பிக்கையான இளையவரை கனடிய தமிழ் கொங்கிரஸ் நண்பர்கள் பிடித்து தந்துள்ளார்கள்.  அவருடன் திட்டமிடல் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

புல்லுமலை, வாகரை, கரடியனாறு பகுதிகளை இப்போது தேர்ந்தெடுத்து உள்ளோம்.  அவர் அங்கு விவசாய நிலங்களை நான் வாங்க பார்த்து வருகிறார்.  

அவர் நிலங்களின் பயன்,  நீர் பாசன வசதி, மண்ணின் தன்மை,  காலநிலை, பயிர் போகங்கள், வேலையாள் கிடைக்கக்கூடிய தன்மை, பயண இலகு தன்மை போன்ற விடயங்களோடு சில நிலங்களை தேர்தெடுத்து இந்த கிழமை முடிவுக்குள் தருவார்.  

அதை நான் வாங்க முடிவு செய்துள்ளேன்.  எம்மவருடன் குத்தகை பேசி ஒரு விடயம் நீண்ட காலம் செய்ய முடியாது.  அதனால் வாங்கி ஒரு நிரந்தர உதாரண தோட்டத்தை நிறுவ திட்டம்.

இந்த தோட்டத்தில் பயிற்சி மட்டுமல்லாமல் இளையோர் மற்றும் இயற்கை விவசாயம் பயில விரும்புவோருக்கு 4 பரப்பு காணி 3 வருட குத்தகையில் கொடுக்க திட்டம்.   அவர்களை எம்முடைய உபகரணங்களை, சந்தை தொடர்புகளை  பாவித்து விதை தொடக்கம் விற்பனை மற்றும் கணக்கியல் வரை பயிற்றுவித்து பின் அவர்களுக்கு நிலவசதி மற்றும் உபகரணங்கள் தந்துதவி சொந்தமாக இயற்கை விவசாயத்தை அவர்கள் செய்ய உதவுவவோம்.

நற்செய்தி என்னவென்றால் இந்த உதவும் இளையவர் மென்பொருள் துறையில் இருப்பதால் அவர் டெலிவரி மற்றும் சந்தைப்படுத்தும் மென்பொருள்களையும் உருவாக்கி வைத்திருக்கிறார்.  அதனால் இயற்கை விவசாயிகள் தம் கைபேசியிலேயே விவசாய அலுவல்களை இலகுவாக செய்யலாம்.   கடைகள், சந்தைகளுக்கு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக நேரடி விற்பனை செய்யலாம்.  இடைத்தரகர்களை தேவை இல்லை.  அவர்கள் வந்தாலும் வாடிக்கையாளர் விலை தான் கொடுத்து பெறவேண்டும்.

ஈழத்தில் இப்போது பலருக்கு பல வருத்தங்கள் இருப்பதால் இயற்கை உணவை நாட தொடங்கியுள்ளார்கள்.  இதனால் எம் விளைச்சலுக்கு நல்ல சந்தை இருக்கும்.  அதுவும் இப்போது கிழக்கில் பல சுற்றுலா விடுதிகள் வருவதால் நல்ல விலைக்கு பொருட்களை விற்கலாம்.

நான் இங்கிருந்து எனது தேனீ வளர்ப்பு, இயற்கை விவசாய நண்பர்களை அனுப்பி அங்குள்ளவர்களுக்கு பயிற்சி கொடுக்க திட்டம். 

View of a green house with a plot of vegetables growing beside it.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மொனோகல்ச்சர்(ஒற்றை கலாச்சாரம்) vs மல்ட்டிகல்ச்சர்(பன் கலாச்சாரம்)

உலகப்போர் இரண்டின் முன் தோட்டங்கள் 5 ஏக்கர் தான் பெரிய தோட்டமாக இருந்தது.  அங்கு விவசாயிகள் வசந்த கால பயிர்கள்(வெங்காயம், கீரை, லெட்டூஸ், சாலட் மிக்ஸ், கரட், பீட்ஸ்), கோடைகால பயிர்கள்(கத்தரி, தக்காளி, குடை மிளகாய், கோவா, பூசணி, சோளம், உருளை), இலையுதிர் கால பயிர்கள்(புரோக்கலி, பீன்ஸ், கேல், உள்ளி) போன்றவற்றை வளர்த்தார்கள்.    மற்றும் சிறு கால் நடை(கோழி, ஆடு, பன்றி, பசு மாடு மற்றும் இறைச்சிக்கு நாண்பன் மாடு) வளர்ப்பும் சேர்ந்து இருந்தது.  இதை தான் பன் கலாச்சார கமம் என்று அழைத்தார்கள்,

இந்த பன் கலாச்சார விவசாயத்தில் பல அனுகூலங்கள் இருந்தது.  ஒரே இன தாவரங்கள் இல்லாத படியால் பூச்சி, பூஞ்சண தொல்லைகள் குறைவு.  அப்படியே ஒரு தாவரம் அடிபட்டாலும் மற்றைய காய் கறிகள் கைகொடுக்கும்.   மற்றும் இந்த தாவரங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவும் அதாவது கனடா பூர்வீக குடிகளின் மூன்று சகோதரிகள் முறையை எடுத்தால் பீன்ஸ் நைட்ரஜனை சோளத்திற்கு கொடுத்து சோளத்தை தனது ஊன்றுகோலாக பாவித்து அதே நேரம் ஸ்குவாஷ் தனது முள் இலைகளால் சோளத்தையும் பீன்சையும் இயற்கை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றியது.   நாம் வெங்காயத்தை மற்றும் மிளகாய் பயிர்களை கத்தரி நடுவே நட்டு வெட்டு பூச்சிகளை துரத்துவோம்.   

விவசாயிக்கு மூன்று போகமும் சந்தைப்படுத்த விளைச்சல் இருந்தது.  முக்கியமாக தனது குடும்பத்திற்கும் வேலையாட்களுக்கும் உண்ண உணவு இருந்தது.  அதனால் சுய சார்பாக வாழ்ந்தார்கள்.  மற்றும் கால் நடைகள் எருவை இலவசமாக தந்தது.  இங்கு பனி காலத்திற்கு முன் கோழி, ஆடு, ஆண் பன்றிகள், நாண்பன் மாடு இறைச்சியாக்கபடும்.  அதனால் பனி காலத்திலும் உணவிற்கு தட்டுப்பாடு இல்லை.  தேவையானவற்றை வைத்துக்கொண்டு மீதியை விற்றார்கள்.  மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

இங்கு தான் எமது மனித மா விவசாயிகள் மனிதரை அடக்கி ஆள மற்றும் தமது பெரு உணவு நிறுவன நண்பர்களுக்கு விநியோகிக்க ஒற்றை கலாச்சாரத்தை கொண்டுவந்தார்கள்.  அதாவது ஒரு மெக்டொனால்ட் நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 67,000 நாண்பன் மாடுகள் தேவை.  அவற்றை சிறு தோட்டக்காரரிடம் பெறமுடியாது.  அதனால் அவர்கள் ஒற்றை தோட்ட முறையை புகுத்தி அதற்குள் வெடிகுண்டு இரசாயனம்,  நச்சு வாயு கிருமி நாசினி எல்லாம் புகுத்தினார்கள்.  ஏனென்றால் 500 ஏக்கருக்கு கோவா மட்டும் போட்டு வைத்திருந்தால் அதில் ஒரு கோவாவில் புழு வந்தால் அந்த 500 ஏக்கரும் நாசம்.  பின் விவசாயி தற்கொலை செய்வார்.   

நாம் இப்போது கனடாவில் திரும்பி பன் கலாச்சார விவசாயத்தை கொண்டுவருகிறோம்.  ஐந்து ஏக்கரில் இயற்கை பன் கலாச்சார விவசாயம் செய்து $80,000 உழைக்கலாம் வீட்டுக்கும் சாப்பாடு இருக்கும்.  அதே நேரம் 1000 ஏக்கருக்கு சோளம் போட்டால் $40,000 உழைக்கலாம் அதுவும் சுவர் தெருகாரர் விலையை நிர்ணயிப்பதை வைத்து தான்.  வீட்டுக்கும் சாப்பாடு இல்லை.  அதனால் பல ஒற்றை கலாசார விவசாயிகள் வேறு வேலைகளும் செய்வார்கள்.

ஊரிலும் பன் கலாசார இயற்கை விவசாயத்தை கொண்டுவருவதே திட்டம்.  

உங்கள் கருத்துக்கள், புது யோசனைகளை முன் வையுங்கள் உறவுகளே.

https://fourstringfarm.files.wordpress.com/2010/07/tres-hermanas-late.jpg

Edited by விவசாயி விக்
 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

The Corn of the Future Is Hundreds of Years Old and Makes Its Own Mucus

This rare variety of corn has evolved a way to make its own nitrogen, which could revolutionize farming.

Smithsonian Magazine
 • Jason Daley
 

Read when you’ve got time to spare.

 
 
 
 
 
 
Journal.pbio.2006352.g002_cropped.png

The corn variety Sierra Mixe grows aerial roots that produce a sweet mucus that feeds bacteria. The bacteria, in turn, pull nitrogen out of the air and fertilize the corn. If scientists can breed this trait into conventional corn, it could lead to a revolution in agriculture. Photo from Wikimedia Commons / CC BY 4.0.

In the 1980s, Howard-Yana Shapiro, now chief agricultural officer at Mars, Incorporated, was looking for new kinds of corn. He was in the Mixes District of Oaxaca in southern Mexico, the area where the precursors to maize (aka corn) first evolved, when he located some of the strangest corn ever seen. Not only was it 16 to 20 feet tall, dwarfing the 12-foot stuff in American fields, it took six to eight months to mature, far longer than the 3 months needed for conventional corn. Yet it grew to those impressive heights in what can charitably be called poor soil, without the use of fertilizer.. But the strangest part of the corn was its aerial roots--green and rose-colored, finger-like protrusions sticking out of the corn’s stalk, dripping with a clear, syrupy gel.

Shapiro suspected that those mucousy fingers might be the Holy Grail of agriculture. He believed that the roots allowed this unique variety of corn, dubbed Sierra Mixe and locally bred over hundreds or even thousands of years, to produce its own nitrogen, an essential nutrient for crops that is usually applied as fertilizer in epic amounts.

The idea seemed promising, but without DNA tools to look into the specifics of how the corn was making nitrogen, the discovery was shelved. Nearly two decades later, in 2005, Alan B. Bennett of the University of California, Davis—along with Shapiro and other researchers—began using cutting-edge technology to look into the nitrogen-fixing properties of the phlegmy corn, finding that indeed, bacteria living in the mucus were pulling nitrogen from the air, transmuting it into a form the corn could absorb.

Now, in 2018, after over a decade of field research and genetic analysis, the team has published their work in the journal PLOS Biology. If the nitrogen-fixing trait could be bred into conventional corn, allowing it to produce even a portion of its own nitrogen, it could reduce the cost of farming, reduce greenhouse gas emissions and halt one of the major pollutants in lakes, rivers and the ocean. In other words, it could lead to a second nitrogen revolution.

The synthetic production of nitrogen may be the greatest achievement of the 20th century. The discovery of the Haber-Bosch process and its refinements, in which nitrogen is stripped out of the air under high heat and pressure in the presence of a catalyst, has led to three separate Nobel prizes. And they are well deserved. It’s estimated that crop yields more than doubled between 1908 and 2008, with synthetic nitrogen fertilizer responsible for up to half that growth. Some researchers have tied the massive growth in human population in the last seventy years to the increased use of nitrogen fertilizer. Without it, we’d have to farm almost four times as much land or have billions of fewer people in the world.

But producing all that nitrogen has consequences. It’s estimated that making fertilizer via the Haber-Bosch process uses between 1 and 2 percent of the world’s energy, emitting lots of greenhouse gases. And synthetic nitrogen routinely washes off fields into waterways, leading to massive algae blooms that suck up all the oxygen, killing fish and other organisms. So much nitrogen goes into rivers and streams that large dead zones have developed at the mouths of the world’s rivers, including one in the Gulf of Mexico that last year was the size of New Jersey. Mark Sutton of the UK Centre for Ecology and Hydrology calls nitrogen “the Godfather of pollution”—its effects are everywhere, but you never really see the culprit.

But we can’t just quit nitrogen without seeing major reductions in agriculture. While better management and farming practices can help keep it out of waterways, those strategies aren’t enough to fix nitrogen’s ecological problems. That’s why researchers have for decades wondered if there was a way to help cereal crops like corn and wheat produce their own nitrogen.

The idea is not as farfetched as it sounds. Lots of plants, in particular legumes like soybeans, peanuts and clover, have a symbiotic relationship with Rhizobium bacteria, which produce nitrogen for them. The plants grow root nodules where the bacteria take up residence and sip on plant sugars while converting nitrogen in the air into a form the plants can use. If a similar symbiotic relationship could be found that works in cereal crops like corn and wheat, researchers believe we could reduce our use of the pollutant.

That’s why the mucus corn is so important, and why Bennett and his team spent eight years studying and re-studying the bacteria and gel to convince themselves that the corn was indeed able to produce its own nitrogen. Using DNA sequencing, they were able to show the microbes in the slime carried genes for fixing nitrogen and demonstrated the gel the corn excretes, which is high sugar and low oxygen, is perfectly designed to encourage nitrogen fixation. Using five different tests they showed that the nitrogen produced by the microbes then made its way into the corn, providing 30 to 80 percent of the plant’s needs. They then produced a synthetic version of the slime and seeded it with the microbes, finding that they produced nitrogen in that environment as well. They even grew Sierra Mixe in Davis, California, and Madison, Wisconsin, showing that it could perform its special trick outside its home turf in Mexico.

“This mechanism is totally different from what legumes use,” Bennett says, adding it may exist in other crops as well. “It’s certainly conceivable that similar types of systems exist in many cereals. Sorghum, for example, has aerial roots and mucilage. Maybe others have more subtle mechanisms that occur underground that could exist more widely. Now that we’re aware, we can look for them.”

Co-author Jean Michel-Ane from the University of Wisconsin, Madison, agrees that this discovery opens up all types of new possibilities. “Engineering corn to fix nitrogen and form root nodules like legumes has been a dream and struggle of scientists for decades. It turns out that this corn developed a totally different way to solve this nitrogen fixation problem. The scientific community probably underestimated nitrogen fixation in other crops because of its obsession with root nodules,” he says in a statement. “This corn showed us that nature can find solutions to some problems far beyond what scientists could ever imagine.”

It turns out that nature has even more nitrogen-producing tricks up her sleeve that researchers are just getting a handle on. There are several other ongoing projects aimed at getting cereal and vegetable crops to do the Haber-Bosching for us. One of the most promising is the use of endophytes, or microorganisms like bacteria and fungi that live in the intercellular spaces of plants. University of Washington researcher Sharon Doty got interested in the organisms a couple decades ago. She was studying willow and poplar trees, which are among the first trees to grow on disturbed land after events like a volcanic eruption, floods or rockfall. These trees were growing out of river gravel, with hardly any access to nitrogen in the soil. Inside their stems, however, Doty found endophytes that fixed the nitrogen for the trees, no root nodules necessary. Since then, she’s teased out dozens of various endophyte strains, many of which help plants in surprising ways. Some produce nitrogen or phosphorus, another important nutrient, while others improve root growth and some allow plants to survive in drought or high-salt conditions.

“There [are] a whole slew of different microbes that can fix nitrogen and a broad range of plant species impacted by them,” she says. Her tests have shown that the microbes can double the productivity of pepper and tomato plants, improve growth in rice, and impart drought tolerance to trees like Douglas firs. Some even allow trees and plants to suck up and break down industrial contaminants and are now being used to clean up Superfund sites. “The advantage of using endophytes is that it’s a really large group. We’ve found strains that work with rice, maize, tomatoes, peppers and other agriculturally important crop plants.”

In fact, endophytes might make it into farmers’ hands sooner rather than later. The Los Altos, California-based IntrinsyxBio is commercializing some of Doty’s endophytes. Chief Science Officer John L. Freeman says in an interview the company is on track to have a product ready for market in 2019. The goal is to deliver several strains of endophytes into plants, most likely by coating the seeds. After those bacteria take up residence inside the plant, they should pump out about 25 percent of the nitrogen it needs.

 

Another biotech company, called Pivot Bio, recently announced it is beta testing a similar solution, using nitrogen-fixing microbes that grow in the root systems of corn.

 

The newly emerging field of synthetic biology is also taking a crack at the nitrogen problem. Boston-based Joyn Bio, formed last September, is a co-project between Bayer and Ginkgo Bioworks, a biotech company with experience creating custom yeasts and bacteria for the food and flavoring industry, among other “designer microbe” projects. Joyn is currently combing through Bayer’s library of over 100,000 microbes to find a host that can successfully colonize plants, similar to Doty’s endophytes. Then they hope to tweak that “host chassis” with genes that will allow it to fix nitrogen. “Rather than rely on nature and find a magic microbe, which we don’t think exists, we want to find our host microbe and fine tune it to do what we need it to do for corn or wheat,” says Joyn CEO Michael Miille.

The Gates Foundation is also in on the game, supporting projects attempting to impart the nitrogen-fixing abilities of legumes into cereals. Still other teams are hoping that the advent of supercharged quantum computing will open up new realms of chemistry and identify new catalysts that will make the Haber-Bosch process much more efficient.

While it’s unlikely that one solution alone will be able to replace 100 percent of the synthetic fertilizer humans use, perhaps together these projects could make a serious dent in nitrogen pollution. Bennett hopes that Sierra Mixe and what his team has learned from it will be part of the nitrogen revolution, though he admits it’s a very long leap before his slimy corn fingers start producing nitrogen in conventional crops. He now wants to identify the genes that produce the aerial roots and pin down which of the thousands of microbes discovered in the mucilage are actually fixing the nitrogen.

“I think what we’re doing could be complementary to those [endoyphte and synthetic biology] approaches,” he says. “I think we’ll see many divergent strategies, and in 5 to 10 years something will emerge that impacts how corn gets nitrogen."

Jason Daley is a Madison, Wisconsin-based writer specializing in natural history, science, travel, and the environment. His work has appeared in Discover, Popular Science, Outside, Men’s Journal, and other magazines.

https://getpocket.com/explore/item/the-corn-of-the-future-is-hundreds-of-years-old-and-makes-its-own-mucus?utm_source=pocket-newtab

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2021 at 10:02, ஏராளன் said:

60 நாள் போதும் மண்ணை மீட்டெடுக்க/ Nammalwar speech

ஐயாவின் இந்த பேச்சு இத்திரிக்கு பயன்படுமென நினைக்கிறேன்.

சகோ, இப்போது பத்து ஏக்கர் வேலணை தோட்டத்தில் மண்ணை வளப்படுத்த இந்த 20 தானிய முறையை செய்முறை படுத்தி சோதிக்க உத்தேசம்.  

வாகரை பகுதியிலும் சில நிலங்களை இப்போது கண்டறிந்துள்ளோம்.  அங்கேயும் பயிர் செய்கை தொடங்குமுன் இந்த தானிய முறையை சோதிப்போம்.

நம்மாழ்வார் ஐயா தான் எனது குரு.  அவரிடம் நிறைய தமிழ் பண்டைய உணவு விவசாய விடயங்களை படித்துள்ளேன்.  பதிவிற்கு மிக்க நன்றி.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விவசாயி விக் said:

சகோ, இப்போது பத்து ஏக்கர் வேலணை தோட்டத்தில் மண்ணை வளப்படுத்த இந்த 20 தானிய முறையை செய்முறை படுத்தி சோதிக்க உத்தேசம்.  

வாகரை பகுதியிலும் சில நிலங்களை இப்போது கண்டறிந்துள்ளோம்.  அங்கேயும் பயிர் செய்கை தொடங்குமுன் இந்த தானிய முறையை சோதிப்போம்.

நம்மாழ்வார் ஐயா தான் எனது குரு.  அவரிடம் நிறைய தமிழ் பண்டைய உணவு விவசாய விடயங்களை படித்துள்ளேன்.  பதிவிற்கு மிக்க நன்றி.

விக் இது சம்பந்தமாக தமிழ்நாட்டு இயற்கை விவசாயிகளிடமும் தொடர்பு கொள்ளலாமே.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.