Jump to content

அருகில் நெருங்கும் ஆபத்து! - என்ன செய்யப்போகிறது இந்தியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவைத் தென்முனையில் பலவீனப்படுத்த, இதுவரை இலங்கையை மறைமுகமாகப் பயன்படுத்தி வந்தது சீனா. தற்போதோ இந்தியாவின் எல்லையில் இருந்து 50 கி.மீ தொலைவுக்குள்ளாகவே ‘காற்றாலை மின் திட்டம்’ என்ற பெயரில் கால் பதிக்கிறது.

இலங்கையின் நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய மூன்று தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை சீனாவின் சினோசர் - இடெக்வின் (Sinosar-Etechwin) நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இது ஒரு புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திட்டத்தைப் போன்று தோன்றும். ஆனால், இதன் நோக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது தான்.

அருகில் நெருங்கும் ஆபத்து! - என்ன செய்யப்போகிறது இந்தியா?
 

இந்தத் திட்டத்தின் மதிப்பு வெறும் ரூ.87 கோடிதான். இந்தத் திட்டத்தைக் கைப்பற்றுவதற்காக இந்திய நிறுவனங்களும் போட்டியிட்டன. ஆனால், சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது இலங்கை அரசு.

கலப்பு மின்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய தீவுகளில் மிகவும் பெரியது நெடுந்தீவு. இது ராமேஸ்வரத்திலிருந்து 48 கி.மீ தொலைவில் உள்ளது. இலங்கைக்கு இந்தியா தாரைவார்த்த கச்சத்தீவிலிருந்து இது வெறும் 23 கி.மீ தொலைவில்தான் உள்ளது. இந்தத் தீவுகளில் கலப்பு மின்திட்டத்தைச் செயல்படுத்தி அளவுக்கு அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதோ, கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுவதோ சாத்தியமல்ல. அங்கு தொழில்நுட்பப் பணியாளர்களை அழைத்துச் சென்று தங்க வைப்பதற்கு ஆகும் செலவையும், அவர்களுக்கு அளிக்கும் ஊதியத்தையும் ஒப்பிட்டால், அதைவிடக் குறைவான செலவில் அதிகமான மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். ஆனாலும் சீனா ஆர்வம் காட்டக் காரணம், அத்தீவுகளை இந்தியாவுக்கு எதிரான ராணுவத் தளமாக மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான்.

அருகில் நெருங்கும் ஆபத்து! - என்ன செய்யப்போகிறது இந்தியா?
 

நாட்டின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய இந்த விஷயத்தில் இலங்கை அரசைக் கடுமையாக எச்சரிக்க வேண்டிய இந்தியா, பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘‘இங்கிருந்து சீனா, இந்தியாவை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். இது ராணுவத் தளமாக மாறினால், இந்தியாவைத் தாக்கி நிலைகுலைய வைக்க முடியும். இது சாதாரணமான ஆபத்து அல்ல. வடக்கில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து வரும் சீனா, இங்கிருந்து தமிழகத்திலும் தொல்லை கொடுக்கத் தொடங்கும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை இந்தியா இப்போதே தடுக்க வேண்டும்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்தவரை இலங்கையில் காலூன்ற நினைத்த உலக வல்லரசுகளின் முயற்சிகள் பலிக்கவில்லை. திரிகோணமலையில் தளம் அமைக்க அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள்கூட முறியடிக்கப்பட்டன. இதற்காகவே இலங்கையில் விடுதலைப்புலிகள் வலிமையாக இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி விரும்பினார். ஆனால், அவரது கொள்கைக்கு மாறாக, இலங்கையில் தமிழர்களை ஒடுக்குவதற்கு சிங்கள அரசின் சதிகளுக்குத் துணைபோனதன் விளைவை இப்போது அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம்.இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவைத் திரும்பப்பெறுவது, இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகத்தான் சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க முடியும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

இப்பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமாரிடம் பேசினோம். ‘‘சீனா, பல்வேறு நாடுகளில் வணிக நிறுவனங்கள் என்ற பெயரில் தனது ராணுவ நிலைகளை ஏற்படுத்தி சக நாடுகளைக் கண்காணித்துவருகிறது. இதுபோன்ற செயல்களால்தான் சீனாவின் 50 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதுமட்டுமன்றி இலங்கையில் ஜப்பானுடன் இணைந்து இந்தியா மேற்கொண்ட கிழக்கு சரக்கு முனைய திட்டத்தினை சீனாவின் அச்சுறுத்தலால் இலங்கை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் சீனாவின் கட்டுப்பாட்டில் இலங்கை முழுமையாகச் சென்றுவிடும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சீனாவால் பெரும் அச்சுறுத்தல் எழும். எனவே இலங்கையில் இச்செயலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்கிறார்.


இந்திய-இலங்கை நிரபராதிகள் மீனவர் கூட்டமைப்பின் தமிழகப் பிரதிநிதியான அருளானந்தம், ‘‘தென் சீனக் கடலான பசிபிக் கடல் பகுதியில் 11 கடல் மைல் தொலைவு மட்டுமே சீனாவுக்குச் சொந்தம். இதனால் சீனாவுக்குச் செல்லும் வர்த்தகக் கப்பல்களில் 40% இந்தியப் பெருங்கடல் வழியாகவே செல்கிறது. இந்தியப் பெருங்கடலைப் பயன்படுத்தவே, இலங்கையை முழுமையாக ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏதுவாக இரு மாதங்களுக்கு முன் கிழக்கு முனை எனப்படும் திரிகோணமலை துறைமுகத்தைச் சீனா பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது இலங்கை. அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு இந்தியாவிடம் வாங்கியிருந்த ரூ.3,000 கோடி கடனை இலங்கை திருப்பிக் கொடுத்துவிட்டது. இதனால் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கை வலுத்துள்ளது. பாக் நீரிணையில் உள்ள நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினா தீவு தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளாகும். இப்போது இங்கு சீன நிறுவனங்கள் நுழைவதால் நம் மீனவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்’’ என்றார்.

அருகில் நெருங்கும் ஆபத்து! - என்ன செய்யப்போகிறது இந்தியா?
 

இலங்கையின் இந்த ஒப்பந்தம் குறித்து இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான சிவாஜிலிங்கம், ‘‘இலங்கையின் இத்தகைய நடவடிக்கைகளை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், இந்தியாவை சீனா விழுங்கிவிடும். இந்தியாவிடம் வாங்கிய நிதியைக் கொண்டே எங்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு எதிராகவும் சீனாவைக் களத்தில் இறக்கியுள்ளது இலங்கை. ‘இந்தியாவின் அனுமதி இல்லாமல் இலங்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக் கூடாது’ என்ற ஒப்பந்தத்தை இலங்கை மீறியுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக எங்களால் ஆர்ப்பாட்டம் மட்டுமே செய்ய முடியும். இந்திய அரசுதான் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இந்தியா கண்ணை மூடிக்கொண்டிருந்தால், நாளை இலங்கை வழியாக இந்தியாவின் கழுத்தில் சீனா சுருக்குக் கயிறு மாட்டுவதைத் தடுக்க முடியாது’’ என ஆவேசப்பட்டார்.

நம் கொல்லைப்புறத்துக்கே வந்துவிட்ட அந்நியனை அடக்கிவைக்க என்ன செய்யப் போகிறோம்?

Ananda Vikatan - 24 February 2021 - அருகில் நெருங்கும் ஆபத்து! - என்ன செய்யப்போகிறது இந்தியா? | chinese company to build wind and solar projects in sri lankan What is India going to do?

நன்றி விகடன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

இந்தியாவைத் தென்முனையில் பலவீனப்படுத்த, இதுவரை இலங்கையை மறைமுகமாகப் பயன்படுத்தி வந்தது சீனா. தற்போதோ இந்தியாவின் எல்லையில் இருந்து 50 கி.மீ தொலைவுக்குள்ளாகவே ‘காற்றாலை மின் திட்டம்’ என்ற பெயரில் கால் பதிக்கிறது.

அருகில் நெருங்கும் ஆபத்து! - என்ன செய்யப்போகிறது இந்தியா?

பாதி இந்தியாவை உதுக்கு மேலை எறி நிண்டே நோட்டம் விடலாம்.😜

அது சரி அடுத்த புதுப்படம் என்ன வருது? யார் கதாநாயகி யார் மியூசிக்?இளையராஜா ஏஆர் ரகுமான் எல்லாம் ஓல்டு.....அனிருத்த போடு சார்😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.