Jump to content

பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für lotto gif

பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.

"மிஷேல்"  ஒரு குடும்பத் தலைவன். 👨‍🦰
சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன் 
அவனுக்கு... அன்பான மனைவியும், 💖
பத்து வயதை நெருங்கிய... மகனும், மகளும்  உண்டு.  💗

வாடகை வீட்டில் வசிக்கும் மிஷேலுக்கு... ஒரு கவலை.  ☹️
தனது வருமானத்தால், தன்  குடும்பத்திற்கு, 
சொந்தமாக...  ஒரு வீடு 🏦 வாங்க வேண்டும் என்று,
கிழமைக்கு ஒரு முறை... லொத்தர் போட்டு வருவது வழக்கம்.  🎰

நல்ல மனிதர்களுக்கு...
🙏"கூரையை...  பிச்சுக் கொண்டு கொடுப்பாளாம், லட்சுமி அம்மாள்" 🙏

என்ற மாதிரி... மூன்று மில்லியன் ஐரோ.... பரிசு விழுந்து விட்டது. :)

தான்... கும்பிட்ட தெய்வம், தன்னை  கைவிட வில்லை என்று.... ஆனந்தப்  பட்டு,
தன்னிடம்  அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த,
முதலாளிக்கு...  "நடு  விரலை காட்டி",   🖕
போய்யா... நீயும், உன் சம்பளமும்... 
நானும், உன்னை மாதிரி...  முதலாளி ஆகி காட்டுறேன் என்று...
"சணல் பறக்க"  பேசி விட்டு... வந்து விட்டான். 😎

மிகுதி... அடுத்த... வெள்ளிக் கிழமைக்குள்,  தொடரும்...  :grin:

யாழ். களத்தின்,  சுய ஆக்கத்திற்காக.. தமிழ் சிறி.  🤣

 • Like 16
 • Thanks 1
 • Haha 4
Link to post
Share on other sites
 • Replies 73
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு. "மிஷேல்"  ஒரு குடும்பத் தலைவன். 👨‍🦰 சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன்  அவனுக்கு... அன்பான மனைவியும், 💖 பத்து வயதை நெருங்கிய...

விழுந்த  லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை,  ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த, அவனது  மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும்,  அவன்... ஒரு காதா

மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன்,   அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்... நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖 முதலில்....  அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு அழகிய.. பெரி

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முதலாளிக்கு...  "நடு  விரலை காட்டி",   🖕

அவ்வளவுதான்....... சிறித்தம்பி மிஷேலின்ரை வாழ்க்கை அவ்வளவுதான்.. நடு விரலை எங்கையும் யூஸ் பண்ணக்கூடாது சிறித்தம்பி....:cool:

சரி தொடருங்கோ வாசிப்பம். 😁

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவ்வளவுதான்....... சிறித்தம்பி மிஷேலின்ரை வாழ்க்கை அவ்வளவுதான்.. நடு விரலை எங்கையும் யூஸ் பண்ணக்கூடாது சிறித்தம்பி....:cool:

சரி தொடருங்கோ வாசிப்பம். 😁

குமாரசாமி அண்ணா... 
அந்த... நடு விரலால், என் மூக்கை கூட... நோண்ட முடியாதா ⁉️

என்ன... ஜனநாயகம்..இது?

அமெரிக்க ஜனாதிபதி  ஆபிரஹாம்  லிங்கம் ஐயா...  அவர்கள்...
"என்... மூக்கு, வரை தான், உன் சுதந்திரம்" என்று  சொன்னதை, 
எல்லோரும் இலகுவில் மறந்து விட்டார்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

 

நாதம்ஸ்...  நகைச்சுவை மன்னன்  வடிவேலும்,  
நடிகவேள் சிவாஜி கணேசனும்..  நடிக்காத கதாபாத்திரங்களே...
இல்லை என்று.. சொல்வார்கள்.

இந்தக் கதையில்... அவர்களையும்,  மிஞ்சிய  "கிளைமாக்ஸ்"  இருக்கப்பு.
வெயிட்..... &...  சீ...  :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், நல்ல திருப்பு முனைகள் இருக்குமென நினைக்கின்றேன், பணம் குவிய தொடங்கினல் நல்ல மனமெல்லாம் காற்றில் பறந்துவிடும், வாழ்கை திசை மாறும்

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தன்னிடம்  அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த,
முதலாளிக்கு...  "நடு  விரலை காட்டி",   🖕
போய்யா... நீயும், உன் சம்பளமும்... 
நானும், உன்னை மாதிரி...  முதலாளி ஆகி காட்டுறேன் என்று...
"சணல் பறக்க"  பேசி விட்டு... வந்து விட்டான். 😎

சனியன் தலையில் ஏறி உட்கார்ந்துவிட்டது.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, உடையார் said:

தொடருங்கள், நல்ல திருப்பு முனைகள் இருக்குமென நினைக்கின்றேன், பணம் குவிய தொடங்கினல் நல்ல மனமெல்லாம் காற்றில் பறந்துவிடும், வாழ்கை திசை மாறும்

உடையார்... இந்தக்  கதையின், கருப் பொருளை....
மத்தியான இடைவேளையின், போது... ஒருவர் சொன்னார்.

பயங்கர விவாதம் நடந்தது.

அதன்... முடிவு, வித்தியாசமானது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

சனியன் தலையில் ஏறி உட்கார்ந்துவிட்டது.

ஈழப்பிரியன்... 😎
அப்ப தான்... அவருக்கு, ஏழரை சனியன் ஆரம்பிக்குது.  :grin:  🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

தொடருங்கள், நல்ல திருப்பு முனைகள் இருக்குமென நினைக்கின்றேன், பணம் குவிய தொடங்கினல் நல்ல மனமெல்லாம் காற்றில் பறந்துவிடும், வாழ்கை திசை மாறும்

உடையார்... அடுத்த கட்டம், பயங்கரமானதாய் இருக்கும்.
எழுத்து வடிவில், கோர்வையாக... சேர்ப்பதில் சிரமம் இருந்தாலும்.. 
நிச்சயம்... எழுதி முடிப்பேன்.  :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆம் அத்தத் தன்னம்பிக்கை மிக முக்கியம் சிறியர்.......!

8 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா... 
அந்த... நடு விரலால், என் மூக்கை கூட... நோண்ட முடியாதா ⁉️

என்ன... ஜனநாயகம்..இது?

அமெரிக்க ஜனாதிபதி  ஆபிரஹாம்  லிங்கம் ஐயா...  அவர்கள்...
"என்... மூக்கு, வரை தான், உன் சுதந்திரம்" என்று  சொன்னதை, 
எல்லோரும் இலகுவில் மறந்து விட்டார்கள். 

நாடு விரலால் உங்கள் மூக்கை மட்டுமல்ல அடுத்தவர் மூக்கையும் நோண்ட முடியாது. அது கொஞ்சம் பெரிது. அதுக்கு ஆள்காட்டி சுட்டுவிரல்தான் சரி.(நான் முயற்சித்துப் பார்த்துட்டுத்தான் எழுதுகின்றேன்). ஆனால் பேப்பர் பாவிப்பவர்கள்  அதில் டிஸ்சு சுத்தி காலைகடனின் போது உபயோகிக்கலாம் வாகாக இருக்கும்.......!  😎

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

தன்னிடம்  அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த,
முதலாளிக்கு...  "நடு  விரலை காட்டி",   🖕
போய்யா... நீயும், உன் சம்பளமும்...

வழி இல்லாதபோது அடிமையாக பவ்வியமாக இருப்பதும், திடீரென்று பணக்காரனாகி பவிசு வந்ததும் விரலைக் காட்டுவதும் ஒரு நல்ல மனிதருக்கு அழகில்லை!

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

லொட்டோவில் அதீத பணம் கிடைத்த இருவர் வாழ்வை இன்றுவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உண்மையான அன்புக்காக ஏங்கிக்கொண்டே விரக்தியுடன் காலம் கழிக்கிறார்கள். மனம் விட்டு என்னுடன் பேசுவார்கள். கிட்டத்தட்ட நான் ஒரு கவுன்சிலிங் செய்பவர்போல . அவர்களின் கதைகளைக் கேட்கும்போது தடாலடியாக இப்படி பணம் வரக்கூடாது என்று நினைப்பேன். பணத்தைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு இல்லை.

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலே  முதல் பெரிய $20 மில்லியன்  லொத்தர் விழுந்த தமிழரின் பெயர் "லக்கி".   😁

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எப்பவும் இந்த லொட்டோவில் நம்பிக்கை இல்லை. கஸ்ரப்பட்டு உழைக்கும் காசுதான் எமக்கும் எமது பரம்பரைக்கும் நிலைக்கும். பல ஆண்டுகளுக்கு முன் எமது அயற் கிராமத்தில் ஒருவருக்கு சுவீப் ரிக்கற்றில் முதல் பரிசு கிடைத்தது. அவர் புதுக்கார் வேண்டி ஓடிக்கொண்டுபோய் பண்ணை வீதியில் மரத்துடன் மோதி அதிலேயே அவரது காருடன் அவரது உயிரும் சரி.  
தமிழ்சிறி உங்கள் கதையில் என்னென்ன திருப்பங்கள் வரப்போகுதென்று ஆவலுடன் எதிர்பார்ததிருக்கிறோம் தொடருங்கள்.

 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 அளவோடு பணத்தைத்தேடி ,மகிழ்வோடு , நிம்மதியோடு வாழலாம். ஆனால் அளவின்றி பணம் கிடைத்தால் எல்லாம் தொலைந்து போகும். மகிழ்ச்சி ,நிம்மதி ,உண்மையான உறவு , பாதுகாக்க வேண்டுமென்ற பயம் ,நிம்மதியற்ற உறக்கம். 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

போனால் கிடைக்காது, பொழுது பட்டால் கிட்டாது என்று யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்தில் ஒருவர் எப்போதும் ஸ்வீப் ரிக்கற் வித்த படி இருப்பார்!

ஒவ்வொரு கிழமையும் எனது தகப்பனாரும் வாங்கிக் கொள்வார்! பின்னர் வானொலியில் முடிவுகளைக் கேட்கும் போது...., அட! இரண்டு நம்பரால  சறுக்கிப் போச்சுது என்ற படி.... ரிக்கற்றைக்  கிழித்து  எறிவார்!

இதைப் பார்த்துப் பார்த்து.....நான் ரிக்கற்றே  வாங்குவதில்லை..!😄

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்பவே சணல் பறக்குது

தொடருங்கள் சிறி அதுக்காக அடுத்த வெள்ளி வரை எல்லாம் பொறுக்க முடியாது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, புங்கையூரன் said:

போனால் கிடைக்காது, பொழுது பட்டால் கிட்டாது என்று யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்தில் ஒருவர் எப்போதும் ஸ்வீப் ரிக்கற் வித்த படி இருப்பார்!

யூ மீன் வசந்த மாளிகை? 😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

யூ மீன் வசந்த மாளிகை? 😎

எக்ஸாற்லி....!!!😝

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

போனால் கிடைக்காது, பொழுது பட்டால் கிட்டாது என்று யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்தில் ஒருவர் எப்போதும் ஸ்வீப் ரிக்கற் வித்த படி இருப்பார்!

ஒவ்வொரு கிழமையும் எனது தகப்பனாரும் வாங்கிக் கொள்வார்! பின்னர் வானொலியில் முடிவுகளைக் கேட்கும் போது...., அட! இரண்டு நம்பரால  சறுக்கிப் போச்சுது என்ற படி.... ரிக்கற்றைக்  கிழித்து  எறிவார்!

இதைப் பார்த்துப் பார்த்து.....நான் ரிக்கற்றே  வாங்குவதில்லை..!😄

 

1 hour ago, குமாரசாமி said:

யூ மீன் வசந்த மாளிகை? 😎

 

15 minutes ago, புங்கையூரன் said:

எக்ஸாற்லி....!!!😝

நோ நோ நோ
அது வைரமாளிகை.

 • Like 2
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ
அது வைரமாளிகை.

ஓமோம்...ஓமோம் வைரமளிகை தான் அவர்.......வசந்தமாளிகை பாக்க போனமுட்டம் முதன்முதல் கண்டதாலை கொஞ்ச ரபுள் வந்திட்டுது.😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

நோ நோ நோ
அது வைரமாளிகை.

"அம்மா அவித்த குரக்கன் மா புட்டும்,நல்லெண்ணையில் பொரித்த கத்தரிக்காய் பொரியலும், அதோடு முட்டை பொரியலும் சேர்த்து சட்டிக்குள்ள பிசைந்து சாப்பிட வேண்டும்".......!

வைரமாளிகை........!   😂

 • Haha 1
Link to post
Share on other sites
On 20/2/2021 at 08:26, தமிழ் சிறி said:

கும்பிட்ட தெய்வம், தன்னை  கைவிட வில்லை என்று.... ஆனந்தப்  பட்டு,

இது நியாயம்... நன்றியுணர்வு

On 20/2/2021 at 08:26, தமிழ் சிறி said:

தன்னிடம்  அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த,
முதலாளிக்கு...  "நடு  விரலை காட்டி",   🖕
போய்யா... நீயும், உன் சம்பளமும்... 
நானும், உன்னை மாதிரி...  முதலாளி ஆகி காட்டுறேன் என்று...
"சணல் பறக்க"  பேசி விட்டு... வந்து விட்டான். 😎

இங்க தான் பிரச்சினை ஆரம்பம். பணம் கிடைச்சா மனம் என்னவெல்லாம் சொல்ல, செய்ய தூண்டும். 

கடவுளுக்கு நன்றியுணர்ச்சி, இதுவரை வேலை தந்த முதலாளிக்கு நடுவிரல். 

நல்ல ஆரம்பம் சிறி அண்ணா. தொடருங்கள்...

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில் முதல் முதலாக அறிமுகப்படுத்திய தேசிய லொத்தரின் முதலாவது பரிசு £20மில்லியன் ஒரு இந்திய முஸ்லீம் தம்பதிகளுக்கு கிடைத்தது.

The  largest Indian Take away என்று கூட நக்கலடித்து செய்தியாக போட்டார்கள் சில பத்திரிகைகளில்.

ஆனாலும்,சிலமாதங்களில் அரைவாசி பணத்தினை தருமாறு கோரி மனைவி வழக்கு போட்டு, இருவரும் பிரிந்தார்கள். 

இந்தவகை பணம் மிகவும் துர் அதிஷ்ட்டம் கொண்டது.

இன்னொருவருக்கு £3M  விழுந்தது.... ஆடம்பரமாக செலவழித்து, 2 வருடத்தில், dole (அரசு பிச்சைக்காசு) எடுக்கும் வரிசையில் நின்றார்.

12 hours ago, குமாரசாமி said:

ஓமோம்...ஓமோம் வைரமளிகை தான் அவர்.......வசந்தமாளிகை பாக்க போனமுட்டம் முதன்முதல் கண்டதாலை கொஞ்ச ரபுள் வந்திட்டுது.😁

என்ன, எல்லாருக்கும் ரபுள் ஆக இருக்குது.

மேலே, நடிகர் திலகம் சிவாஜியை, நடிகவேள் என்று சொல்கிறாரே. அது MR ராதா பட்டம் அல்லவா என்று கேள்விக்குறி போட்டு கேட்டிருந்தன்.....

அத கூடவா, காக்கா தூக்கிட்டு போகும்? 

Edited by Nathamuni
Link to post
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.