Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für lotto gif

பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.

"மிஷேல்"  ஒரு குடும்பத் தலைவன். 👨‍🦰
சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன் 
அவனுக்கு... அன்பான மனைவியும், 💖
பத்து வயதை நெருங்கிய... மகனும், மகளும்  உண்டு.  💗

வாடகை வீட்டில் வசிக்கும் மிஷேலுக்கு... ஒரு கவலை.  ☹️
தனது வருமானத்தால், தன்  குடும்பத்திற்கு, 
சொந்தமாக...  ஒரு வீடு 🏦 வாங்க வேண்டும் என்று,
கிழமைக்கு ஒரு முறை... லொத்தர் போட்டு வருவது வழக்கம்.  🎰

நல்ல மனிதர்களுக்கு...
🙏"கூரையை...  பிச்சுக் கொண்டு கொடுப்பாளாம், லட்சுமி அம்மாள்" 🙏

என்ற மாதிரி... மூன்று மில்லியன் ஐரோ.... பரிசு விழுந்து விட்டது. :)

தான்... கும்பிட்ட தெய்வம், தன்னை  கைவிட வில்லை என்று.... ஆனந்தப்  பட்டு,
தன்னிடம்  அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த,
முதலாளிக்கு...  "நடு  விரலை காட்டி",   🖕
போய்யா... நீயும், உன் சம்பளமும்... 
நானும், உன்னை மாதிரி...  முதலாளி ஆகி காட்டுறேன் என்று...
"சணல் பறக்க"  பேசி விட்டு... வந்து விட்டான். 😎

மிகுதி... அடுத்த... வெள்ளிக் கிழமைக்குள்,  தொடரும்...  :grin:

யாழ். களத்தின்,  சுய ஆக்கத்திற்காக.. தமிழ் சிறி.  🤣

 • Like 16
 • Thanks 1
 • Haha 4
Link to comment
Share on other sites

 • Replies 73
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு. "மிஷேல்"  ஒரு குடும்பத் தலைவன். 👨‍🦰 சாதாரண... வேலை பார்க்கும், இழகிய மனம் கொண்ட பண்பான மனிதன்  அவனுக்கு... அன்பான மனைவியும், 💖 பத்து வயதை நெருங்கிய...

தமிழ் சிறி

விழுந்த  லொத்தர் பணத்துடன்... மிஷேலின் வாழ்க்கை,  ஒரு வருடமாக.. மிக ஆடம்பரத்துடன், சந்தோசமாக போய்க் கொண்டிருந்தது. அதனைப் பார்த்த, அவனது  மனைவி... அவ்வப் போது கண்டித்தாலும்,  அவன்... ஒரு காதா

தமிழ் சிறி

மிஷேல்... திடீர் பணக்காரன் ஆகியவுடன்,   அவனுக்கு... தன்னுடைய, கனவை எல்லாம்... நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. 💖 முதலில்....  அவனது அன்பு மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு அழகிய.. பெரி

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

முதலாளிக்கு...  "நடு  விரலை காட்டி",   🖕

அவ்வளவுதான்....... சிறித்தம்பி மிஷேலின்ரை வாழ்க்கை அவ்வளவுதான்.. நடு விரலை எங்கையும் யூஸ் பண்ணக்கூடாது சிறித்தம்பி....:cool:

சரி தொடருங்கோ வாசிப்பம். 😁

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவ்வளவுதான்....... சிறித்தம்பி மிஷேலின்ரை வாழ்க்கை அவ்வளவுதான்.. நடு விரலை எங்கையும் யூஸ் பண்ணக்கூடாது சிறித்தம்பி....:cool:

சரி தொடருங்கோ வாசிப்பம். 😁

குமாரசாமி அண்ணா... 
அந்த... நடு விரலால், என் மூக்கை கூட... நோண்ட முடியாதா ⁉️

என்ன... ஜனநாயகம்..இது?

அமெரிக்க ஜனாதிபதி  ஆபிரஹாம்  லிங்கம் ஐயா...  அவர்கள்...
"என்... மூக்கு, வரை தான், உன் சுதந்திரம்" என்று  சொன்னதை, 
எல்லோரும் இலகுவில் மறந்து விட்டார்கள். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

 

நாதம்ஸ்...  நகைச்சுவை மன்னன்  வடிவேலும்,  
நடிகவேள் சிவாஜி கணேசனும்..  நடிக்காத கதாபாத்திரங்களே...
இல்லை என்று.. சொல்வார்கள்.

இந்தக் கதையில்... அவர்களையும்,  மிஞ்சிய  "கிளைமாக்ஸ்"  இருக்கப்பு.
வெயிட்..... &...  சீ...  :grin:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், நல்ல திருப்பு முனைகள் இருக்குமென நினைக்கின்றேன், பணம் குவிய தொடங்கினல் நல்ல மனமெல்லாம் காற்றில் பறந்துவிடும், வாழ்கை திசை மாறும்

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தன்னிடம்  அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த,
முதலாளிக்கு...  "நடு  விரலை காட்டி",   🖕
போய்யா... நீயும், உன் சம்பளமும்... 
நானும், உன்னை மாதிரி...  முதலாளி ஆகி காட்டுறேன் என்று...
"சணல் பறக்க"  பேசி விட்டு... வந்து விட்டான். 😎

சனியன் தலையில் ஏறி உட்கார்ந்துவிட்டது.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, உடையார் said:

தொடருங்கள், நல்ல திருப்பு முனைகள் இருக்குமென நினைக்கின்றேன், பணம் குவிய தொடங்கினல் நல்ல மனமெல்லாம் காற்றில் பறந்துவிடும், வாழ்கை திசை மாறும்

உடையார்... இந்தக்  கதையின், கருப் பொருளை....
மத்தியான இடைவேளையின், போது... ஒருவர் சொன்னார்.

பயங்கர விவாதம் நடந்தது.

அதன்... முடிவு, வித்தியாசமானது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

சனியன் தலையில் ஏறி உட்கார்ந்துவிட்டது.

ஈழப்பிரியன்... 😎
அப்ப தான்... அவருக்கு, ஏழரை சனியன் ஆரம்பிக்குது.  :grin:  🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

தொடருங்கள், நல்ல திருப்பு முனைகள் இருக்குமென நினைக்கின்றேன், பணம் குவிய தொடங்கினல் நல்ல மனமெல்லாம் காற்றில் பறந்துவிடும், வாழ்கை திசை மாறும்

உடையார்... அடுத்த கட்டம், பயங்கரமானதாய் இருக்கும்.
எழுத்து வடிவில், கோர்வையாக... சேர்ப்பதில் சிரமம் இருந்தாலும்.. 
நிச்சயம்... எழுதி முடிப்பேன்.  :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆம் அத்தத் தன்னம்பிக்கை மிக முக்கியம் சிறியர்.......!

8 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணா... 
அந்த... நடு விரலால், என் மூக்கை கூட... நோண்ட முடியாதா ⁉️

என்ன... ஜனநாயகம்..இது?

அமெரிக்க ஜனாதிபதி  ஆபிரஹாம்  லிங்கம் ஐயா...  அவர்கள்...
"என்... மூக்கு, வரை தான், உன் சுதந்திரம்" என்று  சொன்னதை, 
எல்லோரும் இலகுவில் மறந்து விட்டார்கள். 

நாடு விரலால் உங்கள் மூக்கை மட்டுமல்ல அடுத்தவர் மூக்கையும் நோண்ட முடியாது. அது கொஞ்சம் பெரிது. அதுக்கு ஆள்காட்டி சுட்டுவிரல்தான் சரி.(நான் முயற்சித்துப் பார்த்துட்டுத்தான் எழுதுகின்றேன்). ஆனால் பேப்பர் பாவிப்பவர்கள்  அதில் டிஸ்சு சுத்தி காலைகடனின் போது உபயோகிக்கலாம் வாகாக இருக்கும்.......!  😎

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

தன்னிடம்  அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த,
முதலாளிக்கு...  "நடு  விரலை காட்டி",   🖕
போய்யா... நீயும், உன் சம்பளமும்...

வழி இல்லாதபோது அடிமையாக பவ்வியமாக இருப்பதும், திடீரென்று பணக்காரனாகி பவிசு வந்ததும் விரலைக் காட்டுவதும் ஒரு நல்ல மனிதருக்கு அழகில்லை!

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

லொட்டோவில் அதீத பணம் கிடைத்த இருவர் வாழ்வை இன்றுவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உண்மையான அன்புக்காக ஏங்கிக்கொண்டே விரக்தியுடன் காலம் கழிக்கிறார்கள். மனம் விட்டு என்னுடன் பேசுவார்கள். கிட்டத்தட்ட நான் ஒரு கவுன்சிலிங் செய்பவர்போல . அவர்களின் கதைகளைக் கேட்கும்போது தடாலடியாக இப்படி பணம் வரக்கூடாது என்று நினைப்பேன். பணத்தைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு இல்லை.

 

 • Like 1
Link to comment
Share on other sites

கனடாவிலே  முதல் பெரிய $20 மில்லியன்  லொத்தர் விழுந்த தமிழரின் பெயர் "லக்கி".   😁

 • Haha 1
Link to comment
Share on other sites

எனக்கு எப்பவும் இந்த லொட்டோவில் நம்பிக்கை இல்லை. கஸ்ரப்பட்டு உழைக்கும் காசுதான் எமக்கும் எமது பரம்பரைக்கும் நிலைக்கும். பல ஆண்டுகளுக்கு முன் எமது அயற் கிராமத்தில் ஒருவருக்கு சுவீப் ரிக்கற்றில் முதல் பரிசு கிடைத்தது. அவர் புதுக்கார் வேண்டி ஓடிக்கொண்டுபோய் பண்ணை வீதியில் மரத்துடன் மோதி அதிலேயே அவரது காருடன் அவரது உயிரும் சரி.  
தமிழ்சிறி உங்கள் கதையில் என்னென்ன திருப்பங்கள் வரப்போகுதென்று ஆவலுடன் எதிர்பார்ததிருக்கிறோம் தொடருங்கள்.

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 அளவோடு பணத்தைத்தேடி ,மகிழ்வோடு , நிம்மதியோடு வாழலாம். ஆனால் அளவின்றி பணம் கிடைத்தால் எல்லாம் தொலைந்து போகும். மகிழ்ச்சி ,நிம்மதி ,உண்மையான உறவு , பாதுகாக்க வேண்டுமென்ற பயம் ,நிம்மதியற்ற உறக்கம். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

போனால் கிடைக்காது, பொழுது பட்டால் கிட்டாது என்று யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்தில் ஒருவர் எப்போதும் ஸ்வீப் ரிக்கற் வித்த படி இருப்பார்!

ஒவ்வொரு கிழமையும் எனது தகப்பனாரும் வாங்கிக் கொள்வார்! பின்னர் வானொலியில் முடிவுகளைக் கேட்கும் போது...., அட! இரண்டு நம்பரால  சறுக்கிப் போச்சுது என்ற படி.... ரிக்கற்றைக்  கிழித்து  எறிவார்!

இதைப் பார்த்துப் பார்த்து.....நான் ரிக்கற்றே  வாங்குவதில்லை..!😄

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இப்பவே சணல் பறக்குது

தொடருங்கள் சிறி அதுக்காக அடுத்த வெள்ளி வரை எல்லாம் பொறுக்க முடியாது.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, புங்கையூரன் said:

போனால் கிடைக்காது, பொழுது பட்டால் கிட்டாது என்று யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்தில் ஒருவர் எப்போதும் ஸ்வீப் ரிக்கற் வித்த படி இருப்பார்!

யூ மீன் வசந்த மாளிகை? 😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

போனால் கிடைக்காது, பொழுது பட்டால் கிட்டாது என்று யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்தில் ஒருவர் எப்போதும் ஸ்வீப் ரிக்கற் வித்த படி இருப்பார்!

ஒவ்வொரு கிழமையும் எனது தகப்பனாரும் வாங்கிக் கொள்வார்! பின்னர் வானொலியில் முடிவுகளைக் கேட்கும் போது...., அட! இரண்டு நம்பரால  சறுக்கிப் போச்சுது என்ற படி.... ரிக்கற்றைக்  கிழித்து  எறிவார்!

இதைப் பார்த்துப் பார்த்து.....நான் ரிக்கற்றே  வாங்குவதில்லை..!😄

 

1 hour ago, குமாரசாமி said:

யூ மீன் வசந்த மாளிகை? 😎

 

15 minutes ago, புங்கையூரன் said:

எக்ஸாற்லி....!!!😝

நோ நோ நோ
அது வைரமாளிகை.

 • Like 2
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ
அது வைரமாளிகை.

ஓமோம்...ஓமோம் வைரமளிகை தான் அவர்.......வசந்தமாளிகை பாக்க போனமுட்டம் முதன்முதல் கண்டதாலை கொஞ்ச ரபுள் வந்திட்டுது.😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

நோ நோ நோ
அது வைரமாளிகை.

"அம்மா அவித்த குரக்கன் மா புட்டும்,நல்லெண்ணையில் பொரித்த கத்தரிக்காய் பொரியலும், அதோடு முட்டை பொரியலும் சேர்த்து சட்டிக்குள்ள பிசைந்து சாப்பிட வேண்டும்".......!

வைரமாளிகை........!   😂

 • Haha 1
Link to comment
Share on other sites

On 20/2/2021 at 08:26, தமிழ் சிறி said:

கும்பிட்ட தெய்வம், தன்னை  கைவிட வில்லை என்று.... ஆனந்தப்  பட்டு,

இது நியாயம்... நன்றியுணர்வு

On 20/2/2021 at 08:26, தமிழ் சிறி said:

தன்னிடம்  அதிக வேலை வாங்கி... குறைவான சம்பளம் தந்த,
முதலாளிக்கு...  "நடு  விரலை காட்டி",   🖕
போய்யா... நீயும், உன் சம்பளமும்... 
நானும், உன்னை மாதிரி...  முதலாளி ஆகி காட்டுறேன் என்று...
"சணல் பறக்க"  பேசி விட்டு... வந்து விட்டான். 😎

இங்க தான் பிரச்சினை ஆரம்பம். பணம் கிடைச்சா மனம் என்னவெல்லாம் சொல்ல, செய்ய தூண்டும். 

கடவுளுக்கு நன்றியுணர்ச்சி, இதுவரை வேலை தந்த முதலாளிக்கு நடுவிரல். 

நல்ல ஆரம்பம் சிறி அண்ணா. தொடருங்கள்...

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில் முதல் முதலாக அறிமுகப்படுத்திய தேசிய லொத்தரின் முதலாவது பரிசு £20மில்லியன் ஒரு இந்திய முஸ்லீம் தம்பதிகளுக்கு கிடைத்தது.

The  largest Indian Take away என்று கூட நக்கலடித்து செய்தியாக போட்டார்கள் சில பத்திரிகைகளில்.

ஆனாலும்,சிலமாதங்களில் அரைவாசி பணத்தினை தருமாறு கோரி மனைவி வழக்கு போட்டு, இருவரும் பிரிந்தார்கள். 

இந்தவகை பணம் மிகவும் துர் அதிஷ்ட்டம் கொண்டது.

இன்னொருவருக்கு £3M  விழுந்தது.... ஆடம்பரமாக செலவழித்து, 2 வருடத்தில், dole (அரசு பிச்சைக்காசு) எடுக்கும் வரிசையில் நின்றார்.

12 hours ago, குமாரசாமி said:

ஓமோம்...ஓமோம் வைரமளிகை தான் அவர்.......வசந்தமாளிகை பாக்க போனமுட்டம் முதன்முதல் கண்டதாலை கொஞ்ச ரபுள் வந்திட்டுது.😁

என்ன, எல்லாருக்கும் ரபுள் ஆக இருக்குது.

மேலே, நடிகர் திலகம் சிவாஜியை, நடிகவேள் என்று சொல்கிறாரே. அது MR ராதா பட்டம் அல்லவா என்று கேள்விக்குறி போட்டு கேட்டிருந்தன்.....

அத கூடவா, காக்கா தூக்கிட்டு போகும்? 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இலங்கை என்றென்றும் மீள முடியாத கடன் சுமைக்குள், அரசு மக்கள் சொத்துக்களை ஏலம் போடுகின்றது!   இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது .   குறிப்பாக இலங்கையின் வெளிநாட்டு கடன் மட்டும் $70 billion என்கிற நிலையை எட்டி விட்டது. அதே போல சர்வதேச கடன் மதிப்பிட்டு நிறுவனங்கள் கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மதிப்பீடு செய்து இருப்பதால் மேலதிக கடன்களை பெற்றுக்கொள்ளுவதிலும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. இது தவிர, மத்திய வங்கி மோசடியில் இழக்கப்பட்ட $ 268 million , Greek junk bonds முதலீடுகளில் ஏற்பட்ட $6.6 million நட்டம், MIG மிகையொலி விமான கொள்வனவு ஊழல் $6 million, சீனி கொள்வனவு மோசடியால் ஏற்பட்ட இழப்பு $ 83 million, BMW கார் இறக்குமதி வரி மோசடி $ 84 million என வரையற்ற ஊழல் மோசடிகளால் இலங்கையின் நிதி நிலவரம் ஆபத்தான கட்டத்தை நெருங்கி இருக்கின்றது இதுமட்டுமில்லாது அரசியல் நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் , சர்வதேச விமான நிலையம் போன்ற பாரிய முதலீடுகள் தோல்வியடைந்த நிலையில் இலங்கை அரசாங்கம் தனது வருமானத்தை விட ஆண்டு தோறும் மீள செலுத்த வேண்டிய கடன் அதிகரித்து இருக்கின்றது இதன் பிண்ணனியில் Private Public Partnership (PPP) என்கிற திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்கள் , கட்டடங்கள் மற்றும் காணிகளை தனியாருக்கு விற்கும் நிலைப்பாட்டை கோட்டாபயா ராஜபக்சே நிருவாகம் எடுத்து இருக்கின்றது . மேற்குறித்த கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்காக Selendiva Investments Limited என்கிற நிறுவனம் ஒன்றை உருவாக்கியுள்ள கோட்டாபய ராஜபக்சே நிருவாகம் மூன்று கட்டத்தின் கீழ் கொழும்பின் பெருமளவான பிரதேசத்தை விற்கும் தீர்மானத்தை எடுத்து இருக்கின்றது அந்த வகையில் Colombo Fort Heritage Square என்கிற முதல் கட்டத்தின் கீழ், 1. இலங்கை விமானப் படை தலைமையகம் 2. கொம்பனித் தெரு பொலிஸ், கொம்பனித் தெரு பொலிஸ் விளையாட்டு மைதானம், கொம்பனித் தெரு பொலிஸ் விடுதித் தொகுதி. 3. கொழும்பு விமானப் படை முகாம் 4. கொழும்பு விமானப் படை விளையாட்டு மைதானம் (Rifle Green Ground) 5. கொழும்பு சினமன் லேக் சைட் 6. கொழும்பு M.O.D. Cyber Operation Centre 7. இராணுவ தொலைத் தொடர்புகள் மற்றும் உபகரணங்கள் பொறியியல் ரெஜிமென்ட் தலைமையகம் ஆகிய பிரதேசங்கள் தனியார் மயப்படுத்த பட உள்ளன அதே போல Immovable Property Development, என்கிற இரண்டாம் கட்டத்தின் கீழ், 1. கிரேன்ட் ஒரியன்டல் கட்டிடம் 2. கபூர் கட்டிடம் 3. யோர்க் வீதியில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் 4. வௌிவிவகார அமைச்சு கட்டிடம் 5. தபால் திணைக்கள தலைமையகம் 6. பொலிஸ் தலைமையகம் 7. செத்தம் வீதியில் அமைந்துள்ள FICD தலைமையக கட்டிடம் (தற்போது CHEC Port City (Pvt) Ltd என்ற சீன நிறுவனத்தின் பாவனையில் உள்ளது ) 8. ஹில்டன் ஹோட்டல் மற்றும் வீடுகள் 9. ஹயாத் ஹோட்டல் மற்றும் வீடுகள் 10. வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் மற்றும் அதற்கு அருகில் உள்ள 200 ஏக்கர் காணி உட்பட்ட நிலப்பரப்பு தனியார் மயப்படுத்த அமைச்சரவை தீர்மானித்து இருக்கின்றது அரசாங்கம் மேற்கூறிய இடங்களை தனியார்மயப்படுத்த தீர்மானித்து உள்ள நிலையில் பெருமளவான இடங்களை China Communications Construction Company (CCCC) என்கிற சீனா நிறுவனம் வாங்குவதற்கு முன்வந்து இருக்கின்றது . ஆனால் இந்த நிறுவனம் அமெரிக்கா அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டு இருப்பதால் அவர்களது துணை நிறுவனமான CHEC Port City Colombo (PVT) LTD என்ற சீன நிறுவனத்தின் ஊடாக கொடுக்கல் வாங்கல்களை செய்ய முயற்சித்து வருகின்றார்கள் இது தவிர , சீனா அரசின் உதவியுடன் கட்டப்பட்ட தாமரை கோபுரம நட்டம் அடைந்துள்ள நிலையில் மீண்டும் சீனா நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்க பட்டுள்ளது இந்நிலையில் கொழும்பின் பெரும்பகுதி குறிப்பாக Colombo 1 and Colombo 2 ஆகியன சீனா நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால் இலங்கையின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக சீனா எதிர்வரும் காலத்தில் உருவாகும்   http://poovaraasu.blogspot.com  
  • அல்ஜீரியன்ஸ் காரரை பிரான்ஸ் தமிழர், அடையார் என்பார்கள். சீனாக்காரரை கனடா தமிழர் சப்பட்டை என்பார்கள். பிரிட்டனில், ஜயாத்துரை என்றால், அயர்லாந்துக்காரர். கனடாவில் அனேகமாக வெள்ளையளை குறிக்கலாம். ஆபிரிக்கர்களை, கறுவல் என்று சொல்வார்கள்.  
  • ஆப்கன் ஹெராயின்: 3,000 கிலோ சரக்குகளை இறக்குமதி செய்த தம்பதி சென்னையில் கைது - முழு விவரம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து இறக்கி வைக்கப்படும் சரக்குகளை கையாளும் முனையம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ எடையுள்ள சுமார் 15,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் வைத்து ஒரு தம்பதியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த மொத்தம் 40 டன் எடையுள்ள கன்டெய்னர்களை வழக்கமான சோதனை நடைமுறைகளின்படி போதைப்பொருள் பரிசோதனைக்ககு அதிகாரிகள் உட்படுத்தினர். அந்த கன்டெய்னர்கள் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாக பகுதியளவு சோப்புக்கல் இருப்பதாக ஆவணங்கள் கூறின. அந்த சரக்குகளின் எடை ஆயிரக்கணக்கில் இருப்பதால் அவற்றின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதன் தயாரிப்பு உள்ளடக்கம் குறித்து மேலதிக பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்தனர். அந்த கற்கள் இடம்பெற்ற கன்டெய்னர்கள், குஜராத்தின் காந்தி நகரில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் ஒரு கன்டெய்னரில் 1999.579 கிலோ எடையுள்ள ஹெராயின், இரண்டாவது கன்டெய்னரில் 988.64 கிலோ எடையுள்ள ஹெராயின் என மொத்தம் 2,988.219 எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்பட்ட போதைச்செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அவற்றின் சர்வதே மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறிய அதிகாரிகள், தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி அந்த சரக்குகளை பறிமுதல் செய்தனர். தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? இலங்கையில் ஹெராயின் பயன்பாட்டால் 17000க்கும் அதிகமானோர் பாதிப்பு   இதைத்தொடர்ந்து ஆமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஹெராயின் போதைப்பவுடர்கள் சோப்புக்கற்களுக்குள் மறைந்து வைக்கப்பட்டிருப்பதை அவை இடம்பெற்ற கன்டெய்னர்கள் இந்தியாவில் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்த விஜயவாடாவைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் தம்பதி சுதாகர் மற்றும் துர்கா வைஷாலி சென்னையில் இருப்பதை அறிந்து அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை இரு தினங்களுக்கு முன்பே ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அந்த தம்பதி கடந்த திங்கட்கிழமை குஜராத்தின் புஜ் நகரில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பத்து நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி சி.எம். பவார் அனுமதி அளித்துள்ளார். இதன் பிறகே இந்த கைது விவகாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தகவலின் முழு விவரமும் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கை மற்றும் மதிப்பில் கடத்தப்பட்ட போதைப்பொருளை இந்திய அதிகாரிகள் சமீபத்திய ஆண்டுகளில் பறிமுதல் செய்திருக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆளும் அதிகாரத்தை தாலிபன் கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றிய பிறகு அந்த நாட்டில் இருந்து இந்த போதைப்பொருட்கள் இரானுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த போதைப்பொருட்களை இந்தியாவில் அதுவும் விஜயவாடாவில் உள்ள ஒரு டிரேடிங் நிறுவனம் எந்த பின்புலத்தில் இறக்குமதி செய்தது, இதன் பின்னணியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ள என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் அதிகம் விளையும் போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் கடைசியாக ஆட்சியில் இருந்தபோது அபின் தயாரிப்பதற்குத் தேவையான பாப்பிச் செடிகளின் சாகுபடி நிறுத்தப்பட்டு விட்டதாகவும் சட்டவிரோத போதை மருந்துகளின் விற்பனை தடுக்கப்பட்டதாகவும் தாலிபன் கூறுகிறது. ஆனால் தாலிபன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் 2001 -ல் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடியில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் எவ்வளவு அபின் உற்பத்தி செய்யப்படுகிறது? அபின் பாப்பி செடிகளைப் பதப்படுத்தி ஹெராயின் உட்பட பல போதை மருந்துகளுக்கு மூலப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். போதை மற்றும் அது தொடர்பான குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவல் அமைப்பின்படி (UNODC), உலகிலேயே அதிக அளவு அபின் உற்பத்தி செய்யப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. அபின் பற்றி தாலிபன் கூறியிருப்பது என்ன? "நாங்கள் ஆட்சியில்இருந்தபோது எந்தவிதமான போதைமருந்தும் தயாரிக்கப்படவில்லை" என்று காபூலை தாலிபன்களை கைப்பற்றிய பிறகு அதன் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் கூறினார். "அபின் சாகுபடியை மீண்டும் பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவோம்" என்றும் இனி போதைப்பொருள் கடத்தல் இருக்காது என்றும் அவர் கூறினார். தாலிபன்களின் ஆட்சியில் போதைப் பொருள் நிலை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, ஒபியம் சாகுபடி ஆஃப்கனில் 1.2 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறது முதலில், தாலிபன் ஆட்சியில் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடி கணிசமாக உயர்ந்தது. 1998-ஆம் ஆண்டில் சுமார் 41,000 ஹெக்டேர் இருந்து, 2000-ஆவது ஆண்டில் 64,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் அபின் பாப்பிச் செடிகள் சாகுபடி செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவிக்கிறது. இது பெரும்பாலும் தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் பயிரிடப்பட்டது. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டது மட்டும் உலகின் சட்டவிரோத அபினின் 39% ஆகும். ஆனால் 2000-ஆம் ஆண்டு ஜூலையில் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அபின் பாப்பி சாகுபடியைத் தடை செய்தனர். தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாப்பி சாகுபடி முற்றிலுமாக தடை செய்யப்படுவதில் முழு வெற்றி கிடைத்ததாக ஐக்கிய நாடுகள் அவை 2001-ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருக்கிறது. தாலிபன்கள் அபின் பாப்பி விவசாயத்திற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, உலகளவில் 2001 மற்றும் 2002ல் அபின் மற்றும் ஹெராயின் பிடிபடுவது கணிசமாகக் குறைந்தது. ஆயினும், அதன் பிறகு நிலைமை மாறிவிட்டது. இதற்கு முன் இருந்த அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடி கணிசமாக இருந்தது. ஆனால் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில்தான் இது அதிகம். உதாரணமாக, தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் மற்றும் கந்தஹார் மாகாணங்கள் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, 2018ஆம் ஆண்டில் பாப்பி சாகுபடிக்கு அதிக அளவிலான நிலம் பயன்படுத்தப்பட்டது. https://www.bbc.com/tamil/india-58639318
  • கொத்து என்ற சொல்லே தமிழ் சொல் தானே. காத்தான்குடி தான் பிறந்த ஊர் என்று ஒரு வெள்ளை தேடி அங்கே போய், அந்த கடையில வாங்கி சாப்பிட்டு வீடியோ போட்டுது.. 😉
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.