Jump to content

கண்டா வர சொல்லுங்க


Recommended Posts

குரலும் வரிகளும் உள்ளே சென்று உசிரை உலுப்புது.

"கண்டா வரச் சொல்லுங்க' என்று நாம் யாரை, எந்த மனிதனை இன்று கூப்பிடுவோம் என்று நினைத்து அவரை இந்த வரிகளினூடாக அணுகும் போது மனசின் பாரம் இன்னும் கூடுது

 

 

 • Like 8
 • Thanks 2
 • Sad 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

குரலும் வரிகளும் உள்ளே சென்று உசிரை உலுப்புது.

"கண்டா வரச் சொல்லுங்க' என்று நாம் யாரை, எந்த மனிதனை இன்று கூப்பிடுவோம் என்று நினைத்து அவரை இந்த வரிகளினூடாக அணுகும் போது மனசின் பாரம் இன்னும் கூடுது

 

 

"கண்டா வரச் சொல்லுங்க' என்று நாம் யாரை, எந்த அண்ணனை  இன்று கூப்பிடுவோம் என்று நினைத்து அவரை இந்த வரிகளினூடாக அணுகும் போது மனசின் பாரம் இன்னும் கூடுது ... 🙏🙏🙏😢😢😢😢🙏🙏🙏

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
எங்கள் தேசியத்தலைவரை, பாட்டுடன் பொருத்திப்பார்க்கும்போது கண்கள் கலங்குவதை தவிர்க்க முடிவதில்லை! நல்ல பாடல்! சிறப்பு!
 
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இழந்தவை, படிக்கற்களாக இருந்தால்...இழப்புக்களின் பரிமாணம் பெரிதாகத் தெரிய மாட்டாது!

ஆனால் அவையே சறுக்கல் கல்களாக மாறும்போது....அதிகம் வலிக்கின்றது...!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஊரெல்லாம் கோயிலப்பா கோயிலெல்லாம் சாமியப்பா 

ஒத்த பூடம் கூட இல்லையப்பா எங்க குடும்பத்தில ஒருத்தனப்பா......!

 

நெகிழ்சியான வரிகள்.நன்றி நிழலி .......!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திமுகாவின் தேர்தல் பரப்புரையில் இந்த பாட்டை ஓடவிடுகிறார்கள் கருணாநிதியை நினைத்து .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடலின் முதல் வரியை கேட்டதுமே நெஞ்சை ஒருகணம் உருக்கி விட்டது. மீதமிருக்கும் வரிகளை கேட்க கேட்க கண்கள் குளமாகி விட்டது.
 இது பற்றிய இணைப்பை நேற்று திண்ணையில் இணைத்திருந்தேன். 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பாடலின் முதல் வரியை கேட்டதுமே நெஞ்சை ஒருகணம் உருக்கி விட்டது. மீதமிருக்கும் வரிகளை கேட்க கேட்க கண்கள் குளமாகி விட்டது.
 இது பற்றிய இணைப்பை நேற்று திண்ணையில் இணைத்திருந்தேன். 

 

ஒருகல்லில்  பல மாங்காய் அடிக்கினம் கருன்சட்டை கூட்டம் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதை விட பகிடி மூலம் முருகனின் பாடல் கொப்பி .

திமுகாவால் பலமுறை ஏமாந்தோம் வரும் தேர்தலில் அவர்கள் வெல்லும் நிலைமை இருக்கும் என்றாலும் நான் திமுக எதிர்ப்பு ஆள் தான் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

திமுகாவின் தேர்தல் பரப்புரையில் இந்த பாட்டை ஓடவிடுகிறார்கள் கருணாநிதியை நினைத்து .

1 minute ago, பெருமாள் said:

இதை விட பகிடி மூலம் முருகனின் பாடல் கொப்பி .

சந்தர்ப்பங்களை பயன்படுத்தி எதையுமே நமதாக்கி காட்டி விட வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தலைவரை நினைத்து எழுதப்பட்ட வரிகள், அந்த அம்மாவின் குரல் மனதை சுட்டி இழுக்கின்றது, பறை இசை அருமை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே உசிரை உலுக்கும் இசையும் பாடல்வரிகளும் பறைஇசையும் பாடும் அம்மாவின் குரல் பாடலுக்கு மேலும் உயிர் கொடுக்கிறது  பகிர்வுக்கு நன்றிகள் நிழலி

Link to post
Share on other sites

ஒவ்வொரு காட்சியும் முகத்தில் அறைவது போன்று நகரும் திரைப்படமான பரியேறும் பெருமாள் படத்தை எழுதிய இயக்கிய மாரி செல்வராஜ் தான் இப்பாடலின் வரிகளையும் எழுதியிருக்கின்றார். பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாக்களில் சாதியம் பற்றி வந்த படங்களில் முதன்மையானதும் சமரசம் இல்லாததுமான அற்புதமான திரைப்படம். இப்பாடலின் வரிகளையும் நன்றாக அதே நேரம் நல்ல தமிழில் எளிமையான வடிவில் எழுதியிருக்கின்றார்.

உடையார் குறிப்பிட்டது போன்று இப் பாடலில் வரும் பறை இசையும் இப்பாடல் மனசை உலுக்கியெடுக்க வைக்கும் காரணங்களில் ஒன்று.

இப்பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கும் போது,இவ் இசைக்கு கொஞ்சம் கூட பரிச்சயம் இல்லாத இசையை பின்னனியாக கொண்ட  பாலே (ballet) நடனம் பயிலும் என் மகளும் அவ் நடனத்துக்குரிய விதத்தில் இப்பாடலுக்கும் தன்னாலேயே நடனம் ஆட முயல்வதையும் அவதானித்தேன்.

 

கண்டா வரச் சொல்லுங்க!
கர்ணன கையோடு கூட்டி வாருங்க

சந்திரனும் சாட்சியில்லை!
பாதகத்தி பெத்த புள்ள!
பஞ்சம் திண்ணு வளர்ந்த புள்ள!

அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக் கிளை!
ஒத்த கிளி நின்னாக் கூட
கத்தும் பாரு அவன் பேர!

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க!

ஊரெல்லாம் கோயிலப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா
ஒத்த பூடங்கூட இல்லையப்பா
எங்கக் குடும்பத்துல ஒருத்தனப்பா!

கவசத்தையும் கண்டதில்ல!
எந்தக் குண்டலமும் கூட இல்ல!
வாள் தூக்கி நின்னான் பாரு!
வந்து சண்ட போட்ட எவனுமில்ல!

கண்டா வரச் சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க!
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2021 at 15:13, நிழலி said:

வாள் தூக்கி நின்னான் பாரு!
வந்து சண்ட போட்ட எவனுமில்ல!

இப்ப மாத்திரம் மனித உரிமை பற்றி கதைக்க நிறைய பேரு அடிபடுகினம் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2021 at 07:13, நிழலி said:

கண்டா வரச் சொல்லுங்க!
கர்ணன கையோடு கூட்டி வாருங்க

சந்திரனும் சாட்சியில்லை!
பாதகத்தி பெத்த புள்ள!
பஞ்சம் திண்ணு வளர்ந்த புள்ள!

 

முக்கிய வரி ஒன்று தவறி விட்டது.

கண்டா வரச் சொல்லுங்க!
கர்ணன கையோடு கூட்டி வாருங்க

சூரியனும் பெக்கவில்லை
சந்திரனும் சாட்சியில்லை!
பாதகத்தி பெத்த புள்ள!
பஞ்சம் திண்ணு வளர்ந்த புள்ள!

Edited by பிரபா
Spelling mistake.
 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Quote

 

கண்டா வரச் சொல்லுங்க!
அவனை கையோடு கூட்டி வாருங்க

சந்திரனும் சாட்சியில்லை!
பார்வதி பெத்த புள்ள!
பஞ்சம் திண்ணு வளர்ந்த புள்ள!

 

எனக்கு இப்பிடித்தான் விளங்கினது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"பார்த்தா" என்ற சொல்லே தமிழகத்து பேச்சு வழக்கு.

ஈழத்தில் தான், "கண்டா" பேச்சு வழக்கு

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல்.

இதேபோல தலைவரை எண்ணவைக்கும் இன்னொரு பாடல். 

 

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2021 at 03:40, உடையார் said:
தற்போது - 
10,052,579 views
Premiered Feb 18, 2021
 
 
 

பெரும் சாதனை புரிந்த "கண்டா வரச்சொல்லுங்க' பாடல்.! இத்தனை மில்லியன் பார்வையாளர்களா.!?

இயக்குனர் மாரிசெல்வராஜ் கர்ணன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். 

வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கண்டா வரச்சொல்லுங்க பாடல் வெளியாகியது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த பாடல் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது.

பாடல் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் கிடக்குழி மாரியம்மாள் இருவரும் இந்த, :கண்டா வரச்சொல்லுங்க" பாடலை பாடியுள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்தகைய சூழலில், இந்த பாடல் பல்வேறு தரப்பினரும் விரும்பும் விதமாக இருப்பதால், ரசிகர்கள் அனைவரும் தங்களது தலைவர்கள், பிடித்த கிரிக்கெட் வீரர்கள், பிடித்த நடிகர்களுக்கு பொருத்தி பார்த்து ஆனந்தம் அடைகின்றனர். அந்த வகையில், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, மகேந்திர சிங் தோனி, நடிகர்கள் ரஜினி, அஜித் மற்றும் விஜய் ஆகியோருக்கு எடிட் செய்து வீடியோ வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். 

கிரியேட்டிவிட்டியுடனும், வித்தியாசமான முயற்சியினாலும் இது ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது. தற்போது இந்த பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://www.seithipunal.com/cinema/kanda-vara-sollunga-songs-upon-6m-views-on-youtube

11,013,958 views
Link to post
Share on other sites
On 2/22/2021 at 21:28, Nathamuni said:

"பார்த்தா" என்ற சொல்லே தமிழகத்து பேச்சு வழக்கு.

ஈழத்தில் தான், "கண்டா" பேச்சு வழக்கு

'கண்டா வரச் சொல்லுங்கோ' என்ற வரிகள் தமிழக  கோவில்களில் பாடப்படும் தமிழ் பக்திப் பாடலில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள். 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

மறைமுகமாக எதோ சொல்ல வருகின்றார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

+

 

On 28/2/2021 at 21:01, நிழலி said:

'கண்டா வரச் சொல்லுங்கோ' என்ற வரிகள் தமிழக  கோவில்களில் பாடப்படும் தமிழ் பக்திப் பாடலில் இருந்து எடுக்கப்பட்ட வரிகள். 

 

கண்டா வரச்சொல்லுங்க மணிகண்டன என்ற பாடலைப் பாடியுள்ள தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் மிகச்சிறந்த நாட்டுப்புறப் பாடகர். நாட்டார் தெய்வங்கள் மீது பல சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அவர் பாராளுமன்றத்தில்.... கன்னிப் பேச்சு கூட நிகழ்த்தவில்லையாம் என்று பட்சி சொல்லுது. 😁
  • ஆஸ்ட்ரா ஜெனிகா, ஸ்புட்னிக் 5, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய 3 தடுப்பூசிகளும் தற்போது இவ்வகை ரத்தம் உறைதல் பாதிப்பை அளிப்பதாக அறிவியல் தரவுகள் சொல்கின்றன. இது ஏன் ஏற்படுகிறது? கடந்த சில நாள்களாக மக்களிடையே பெருகிவரும் அச்சம், கோவிட் தடுப்பூசியால் மனிதர்களுக்கு ஏற்படும் ரத்த உறைவு ஏற்படுமா என்பதுதான். காரணம், அது தொடர்பான ஊடகச் செய்திகள். உலகில் பல்வேறு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி ஆய்வில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதை நாம் அறிவோம். உலகின் முன்னணி மருத்துவ நிறுவனங்களான ஃபைஸர், ஜான்சன் அண்ட் ஜான்சன் எனப் பல நிறுவனங்கள் அவர்களுடைய இணை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடனோ, தம் மருத்துவ ஆய்வகத்தின் உதவியுடனோ தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து மக்கள் நலனுக்காகச் சந்தைப்படுத்துகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு விதமான அணுகுமுறை கொண்டு தடுப்பூசியை வடிவமைத்திருக்கிறது.   கொரோனா தடுப்பூசி கொரோனாவுக்கான தடுப்புசிகள் 3 வகையாகத் தற்போது வழங்கப்படுகின்றன. 1. mRNA எனப்படும் கொரோனா வைரஸின் மரபணு பிரித்தறியும் தொழில்நுட்பம் வாயிலாக நமக்கு நோய் பாதுகாவல் தரும் முறை. 2. வெக்டார் எனும் அணுகுமுறை. இதுதான் பல நிறுவனங்கள் உபயோகிக்கும் முறை. அதாவது, வேற்று இன (மனிதக் குரங்கு) செல்களில் உருவகப்படுத்திய செயலிழக்கச் செய்த அடினோ வைரஸுக்குள் கொரோனா மரபணுவைப் புகுத்தி, அதை நம் உடலுக்குள் செலுத்தி அதன் மூலம் நம் செல்களை இந்த கொரோனா நோய்க்கு எதிராகப் பாதுகாக்க வைக்கும் முறை. 3. செயலிழக்கப்பட்ட முழுமையான வைரஸை நம் உடலுக்குள் செலுத்தி, அதன் வாயிலாக முழுமையான நோய் பாதுகாவல் தேட முயல்வது. இதில் mRNA வழியாக நமக்குப் பாதுகாவல் தேடுபவை, ஃபைஸர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள். மாடர்னா தடுப்பூசியை அமெரிக்க வாழ் மக்களுக்கென அந்நாட்டு அரசு இந்த நிறுவனத்தின் மொத்த உற்பத்தியையும் கேட்டுப் பெற்றிருக்கிறது.   அடுத்ததாக ஃபைஸர் தடுப்பூசி, mRNA வழியாக நமக்கு நோய் பாதுகாவல் தரும் ஆன்டிபாடி அணுக்களை உருவாக்கும் முறையில் செயல்படுகிறது. ஆனால், நம் நாட்டின் தட்பவெட்பம் இந்த ஊசிக்கான - 60 டிகிரி குளிர் பிணைப்பைக் கொடுக்க இயலாது என்பதால் நம்மால் ஃபைஸர் தடுப்பூசியைத் தாராளமாகவும் தைரியமாகவும் பெற்று உபயோக்க இயலாமல் இருக்கிறது. சரி... ரத்தம் உறைதல் விஷயத்துக்கு வருவோம். அடினோ வைரஸ் எனும் வெக்டார் மூலம் உருவாகும் கீழ்க்காணும் ஆஸ்ட்ரா ஜெனிகா, ஸ்புட்னிக் 5, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய 3 தடுப்பூசிகளும் தற்போது இவ்வகை ரத்தம் உறைதல் பாதிப்பை அளிப்பதாக அறிவியல் தரவுகள் சொல்கின்றன. அதில் இந்தியாவில் தற்சமயம் உபயோகிக்கும் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி சுமார் 39 பேருக்கு இந்தப் பாதிப்பை பிரேசில் நாடு உட்பட பல இடங்களில் அளித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.   கொரோனா தடுப்பூசி அதே நேரம் இந்தியாவில் இதுபோன்ற எந்தப் பாதிப்பும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதே உண்மை. சில நாள்களாகப் பேசுபொருளாக இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனியின் தடுப்பூசி என்பது கொரோனா தடுப்பூசி வகைகளிலேயே வித்தியாசமானது. ஆம், நான் முன்னர் கூறியதுபோல் இதுவும் வெக்டார் வகை தடுப்பூசி என்றாலும், இந்தத் தடுப்பூசியை ஒருமுறை நம் உடலில் செலுத்திக்கொண்டால் போதும், அடுத்த தவணை தேவையில்லை. ஒரு தவணையில் கிடைக்கும் ஒரே கொரோனா தடுப்பூசி இது மட்டுமே. இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 9 நாள்களில் இருந்து, 28 நாள்களுக்குள் நோய் பாதுகாவல் முழுமை பெறுகிறது. உலகம் முழுவதும் இதுவரை 69 லட்சம் பேருக்கு இந்தத் தடுப்பூசி வெற்றிகரமாக இடப்பட்டுள்ளது. அவர்கள் யாவரும் ஒரே தவணையுடன் உரிய பாதுகாப்பை அடைந்து இருக்கின்றனர்.   ஆனால் அதில் 6 பேருக்கு, அதாவது 69 லட்சம் பேரில் 6 பேருக்கு மட்டும் ரத்தம் உறைந்துபோய் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் இறந்ததும், மற்றொருவர் கவலைக்கிடமாக இருப்பதும் அறியப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள 4 பேருக்கு பெரிய பாதிப்புகள் இல்லை என்றே தகவல்கள் சொல்கின்றன. அதென்ன ரத்தம் உறைதல்? நம் உடலில் ரத்தக்குழாய்களில் பரிமாற்றம் நடைபெறும் ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் எனப் பல வகை அணுக்கள் உள்ளன. ஒவ்வோர் அணுவுக்கும் வெவ்வேறு பணிகள் உண்டு. இதில் நாம் தட்டணுக்கள் பற்றி அறிய வேண்டியது அவசியம். இதை ஆங்கிலத்தில் பிளேட்லெட்ஸ் (Platelets) எனச் சொல்கிறோம். நம் உடலில் ஏதேனும் சிராய்ப்போ, காயமோ ஏற்படுமாயின் அதில் ஏற்படும் ரத்தக்கசிவு சில மணித்துளிகளில் காய்ந்து உலர்ந்து உறைந்து போகிறதல்லவா, இதற்கான காரணம் இந்தத் தட்டணுக்கள்தான். இந்தத் தட்டணுக்கள், தாம் சார்ந்த மனிதனுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து ஏற்படுமானால், ரத்தப்போக்கை நிறுத்தி, அவரது உயிரைப் பிழைக்க வைத்திட உடனே தம்மை ஒன்றுசேர்த்து, ரத்தக்குழாய் சுவர்களில் ஒட்டிப்பிடித்து, தம் சகாக்களை உடன் அழைத்து, அந்த ரத்தக்கசிவை குறைக்கவும், அங்கே ரத்தத்தின் அடர்த்தியை அதிகப்படுத்தி, அதன் ஓட்டத்தை தாமதப்படுத்தவும் செய்கின்றன. இதே விஷயம்தான் இங்கே நம் உடலின் தவறான புரிந்துணர்வால் மாறுபடுகிறது. அதாவது, இவ்வகையான சில தடுப்பூசிகள் நம் உடலில் நோய்க்கு எதிரான ஆன்டிபாடி செல்களை உருவாக்குகின்றன. ஆனால், நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சில நேரம் அடுத்த செல்களை போன்ற வடிவமைப்பில் இருக்கக்கூடும். அவ்வாறு இருக்கும் ஒற்றை வகை செல்களுக்கு எதிராக நம் உடல் எதிர்வினைகளை பாகுபாடில்லாது காட்டும். இதைப் பொதுவாக Autoimmune Phenomenon எனச் சொல்வோம். அவ்வகை செயல்பாடுதான் இந்தத் தடுப்பூசியால் வெகு சிலருக்குச் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.   நம் தட்டணுக்களில் இருக்கும் Platelet 4 Receptors எனப்படும் பகுதிக்குள் இவ்வகை தடுப்பூசி உருவாக்கிய ஆன்டிபாடிகள் வந்து சேர்ந்து நம் தட்டணுக்கள் செயல்பாட்டைத் தவறுதலாகத் தூண்டலாம், அந்தப் பிறழ்வான தூண்டுதல் வெகு சிலருக்கு மட்டும் மிக பயங்கரமாக இருக்கலாம். அந்தத் தூண்டுதல் நான் முன்னர் கூறியதுபோல தட்டணுக்களை ஒன்றுசேரச் செய்து, உடல் பரிமாற்றத்தில் இருக்கும் ரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து, மெதுவாக ரத்த உறைதலைத் தூண்டலாம். இதனால் நம் உடல் பாகத்தில் முக்கிய உறுப்புகளில் ரத்தம் சென்று சேர இயலாது அல்லது உறைந்த ரத்தமாக (Thrombosis) சென்றடைந்து அந்தந்த உறுப்பைச் செயலிழக்கச் செய்யும் (Embolus induced infarction). இதன் கூடவே, தட்டணுக்களின் இந்தச் செயல்பாட்டால், உடலில் இருக்கும் தட்டணுக்களில் பெரும்பாலானவை ஒருசேர இருக்கையில் உடலில் ஓடிக்கொண்டு இருக்கும் மீதமுள்ள ரத்தத்தில் குறைவாகக் காணப்படலாம் (Immune Thrombocytopenia). இதுபோன்ற தட்டணுக்கள் குறைபாட்டைத்தான் டெங்கு காய்ச்சலிலும் நாம் காண நேர்கிறது. அது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பினால் ஏற்படும் தட்டணுக்கள் செயல் குறைபாடு, எனவே, இந்தத் தட்டணுக்கள் தட்டுப்பாட்டால் நம் உடலில் அவசியமான ரத்தம் உறைதல் தன்மை இழந்து ஆங்காங்கே ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, இந்த வெக்டார் அணுகு தடுப்பூசிகளால் வெகு சிலருக்கு ரத்த உறைதல் மற்றும் ( VIPIT - Vaccine Induced Prothrombotic Immune Thrombocytopenia) எனப்படும் நிலையும் Activation of PAF 4 leading to Platelet Aggregation and Thrombosis எனப்படும் நிலையும் வரலாம். அதாவது, தட்டணுக்கள் உட்சுவரில் உள்ள தட்டணுக்கள் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தும் செல்களைத் தூண்டும் ஆன்டிபாடிக்களை இவ்வகை ஊசிகள் உருவாக்கலாம் எனப்படுகிறது.   இதனால் CVT - Central Venous Thrombosis எனப்படும் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் வரும் உறைபடிதல் பாதிப்பு சிலருக்கும், இன்னும் சிலருக்கு Peripheral Venous Thrombosis எனப்படும் உடல் உறுப்புகளுக்கான ரத்தக்குழாய்கள் உறைபடிதல் பாதிப்பும் ஏற்படட வாய்ப்புகள் உண்டு என்கின்றனர். இந்தப் பாதிப்பை அறிகுறிகளைக் கொண்டு எப்படி அறியலாம்? இவ்வகை வெக்டார் அணுகு தடுப்பூசிகள் போடப்பட்டு 5 நாள்களில் இருந்து 3 வாரங்களுக்குள்தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இந்த ஊசியால் ஆன்டிபாடி எனும் நோய் பாதுகாவல் அணுக்கள் உருவாகும். எனவே, வெக்டார் வகை தடுப்பூசி இடப்பட்ட அனைவரும் இந்த நாள்களில், மூக்கில் ரத்தக்கசிவு, பற்களில் ரத்தக்கசிவு, காரணமற்ற உடல் சிராய்ப்புகள், உடலில் சிவப்பு புள்ளிகள், தீராத கால்வலி, குடைச்சல், தீராத தலைவலி, கண்வலி, பார்வை குறைதல் என ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உடலில் உள்ள மொத்த ரத்த அணுக்கள் அளவு, தட்டணுக்கள் அளவு, தட்டணுக்கள் செயல்திறன் ஆய்வு, Platelet Factor 4 antibodies எனும் சிறப்புப் பரிசோதனை, ரத்தம் கசியும் நேர கணக்கு, ரத்தம் உறைதல் நேர கணக்கு, கால்களுக்கான ரத்த ஓட்டம் அறியும் Peripheral Arteriovenous Doppler போன்று தேவைப்படும் பரிசோதனைகளைச் செய்துகொண்டால் பாதிக்கப்பட்ட நபரை உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிவிடலாம்.   அதே நேரத்தில் தடுப்பூசியால் வரும் இந்த ரத்தம் உறைதல் பாதிப்புகள் போலவே நிஜமான கோவிட்-19 நோயிலும் நாங்கள் கண்டதுண்டு. தடுப்பூசியால் 4 முதல் 6 சதவிகிதம் இதுபோன்ற VIPIT நோய்கள் வரும் என எண்ணும் நமக்குத் தெரிய வேண்டிய முக்கியமான விஷயம், கொரானா தொற்று, தீவிர (WILD COVID19 DISEASE) நோயாக மாறினால் 19% முதல் 22% வரை இதே பாதிப்பால் நோயாளிகள் இறக்கலாம் என்பதுதான். மேலும், நோய் பாதித்து வரும் இந்த ரத்த உறைதல் விளைவில் இருந்து பல உயிர்களைக் காக்க முடியாமலும் போகிறது என்பதே மருத்துவ உண்மை. எனவே, நோய் பாதித்து வரும் இவ்வகை ரத்தம் உறைதல்தான் மிக ஆபத்தானதுமாகும். எனவே நோயிலிருந்து தப்பிக்க தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வதே சிறந்த தற்காப்பு. தடுப்பூசிகளால் அரிதாக நடக்கும் ரத்தம் உறைதல் விளைவு... ஏன் ஏற்படுகிறது? #ExpertExplains | why some rare blood clot incidents happen after getting the covid 19 vaccine - Vikatan
  • அரசியலில இது சாதாரணமப்பா. என்றாவது, பாராளுமன்றில், மாவை முழங்கினார் எண்டு கேட்டிருக்கிறீர்களா? சும்மா நானும் ரவுடி தான் என்று, எம்பியாக இருந்தவர் மாவை. அவர், முதல் அமைச்சர் ஆக இல்லை, விதானையாராக இருக்க கூடிய தகுதியே இல்லை என்கிறார் ஒரு யாழ்ப்பாணத்தவர்.
  • நாதமுனியரின் கெடும் இதோ: 😁 கத்தியில்லா மட்டும் கெடும் விவாதமில்லா யாளும் கெடும் மப்பிலா  சாமியும் கெடும்  வெள்ளி-பியரில்லா தமிழ் சிறியும் கெடும் மின்னம்பலமில்லா கிருபனும் கெடும். 
  • தமிழக அரசியல் குட்டையில் இறங்கி, சேறாக்கும் அனந்தி எழிலன்  வின்ஸ்டன் சேர்ச்சில் இடம் வந்த ஒருவர், ஐயா ஒரு நிகழ்வில் பேச வரமுடியுமா என்றார். எவ்வளவு நேரம் பேசணும் என்றார் சேர்ச்சில். ஐந்து நிமிடம் போதுமானது என்றார் வந்தவர்.  அப்படியா, ஒரு மாதம் ஆகுமே என்றார் சேர்ச்சில். வந்தவருக்கு, சேர்ச்சில் குறும்புத்தனம் தெரியும் என்பதால், அப்படியானால் 30 நிமிடத்துக்கு பேசலாமே என்றார். அதுக்கு ஒருவாரம் வேண்டுமே என்றார் சேர்ச்சில். வந்தவரும் அசராமல், ஒரு மணித்தியாலம் என்றால், என்றார.  நான் இப்பவே ரெடி, போகலாமே என்றார் சேர்ச்சில். ஒரு மேடைப்பேச்சாளர் அல்லது ஒரு நேர்முகத்தில் பேசுபவர் எப்படி தயாராக வேண்டும் என்று இன்றளவும் உலகளாவிய உதாரணமாக காட்டப்படுகின்றனது. அதாவது, தயாராக இல்லாவிடில், வாயில் வரும் எதனையுமே அலம்பலாம் என்பதனை தான் சேர்ச்சில் சொல்லி இருந்தார். எழிலன் என்னும் ஒரு போராளியின் மனைவியாக, தனது கணவரை ஒப்படைத்து தேடும் ஒரு விதவையாக அனுதாபம் பெற்று அரசியல் வந்த, அனந்தி சசிதரன், தன்னை ஒரு ஆளுமையாக வெளிப்படுத்தாத காரணத்தால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெல்ல முடியவில்லை. தமிழக யூடீயூப் விண்ணாதிகளின் நேர்முக கோரிக்கை வந்ததும், எதுவித தயாராதல் இல்லாமல், அலம்பறை பண்ணி, இன்று அதனை சமாளிக்கிறேன் என்று மேலும், மேலும் அலம்பறை பண்ணி, புலிகளையும் இழுத்து, ஏதோதோ சொல்கிறார். சம்பலும் சோறும் சாப்பிட்டு இருந்து விடுவோம், என்று தமிழகத்தில் சம்பல் என்றால் என்ன என்று புரியுமா என்ற தெளிவே இல்லாத ஒரு அரசியல்வாதியாகவே இருக்கிறார் அவர். இன்று மூன்றாவது யூடீயூப் வந்துள்ளது. பார்க்கும் போதே, கேள்விகளுக்கு, இழுத்து... அலம்பும் போதே, அய்யோ என்னத்தை சொல்லி முடிக்கப்போகிறாவோ என்று நமக்கே பதை பதைக்கிறது. பத்தாததுக்கு சிவாஜிலிங்கம் வேறு தொடங்கி விட்டார். தமிழக அரசியலினுள், பக்கசார்பாக எம்ஜிஆர் பக்கம் புலிகள் நின்றதை, கலைஞர் கடைசிவரை ஜீரணிக்கவில்லை. முள்ளிவாய்க்கால் துயரம் வரை நீண்டது. இப்போதும், பக்க சார்பாக நிலை எடுக்காமல், யாராவது அவர்களிடம்  சொல்லி, இந்த ஒரு இழவும் புரியாத அலம்பறைகளை நிறுத்த சொல்லவிடுங்களேன். புண்ணியமாக போகும். புலம்பெயர் முகம் தெரியாதவர்கள் வேறு, நமது மண்ணில் உள்ள அரசியல்வாதிகள் வேறு. அவர்கள் தமது பேச்சில், நடுநிலைமையில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை, புலிகளின், எம்ஜிஆர், கலைஞர் அனுபவமே உணர்த்தி உள்ளது. இவர்கள் மக்களினால், தேர்தல் அரசியலில் தெரிவாகாமல், விடுபட்டத்துக்கு ஒரு காரணம் உண்டு, அந்த காரணத்தினை, தமிகத்துக்கும் சொல்கிறார்கள் என்பதே கவலைக்குரியது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.