Jump to content

மனித மா கொண்டாடியது மாட்டு பொங்கல்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மனித மா கொண்டாடியது மாட்டு பொங்கல்

NRCSAZ02094_-_Arizona_471NRCS_Photo_Gall

(கற்பனையா நியாமா என்பது அவரவர் கருத்து)

மே 29, 1954  மாண்டபெர்க் நெதர்லாந்து

மாண்டபெர்க் உலக மனித  விவசாயிகள் சங்க சந்திப்பு

உலகின் மனிதரை சொந்தமாக வைத்திருக்கும் 30 உலக பெரும் தோட்ட  விவசாயிகள் 20 பெரு நாடுகளில் இருந்து வட்ட மேசையில் சுத்தி இருந்தனர்.

முதலில் அமெரிக்க பெரிய விவசாயி  கே பி மோகன் தொடங்கினார்.   "உலக மனித விவசாயிகளே நாம் திட்டமிட்டபடி உலக போர் இரண்டு இனிதே ஆறு வருடத்தில் முடிந்தது.   நாம் ஐரோப்பாவில் இருந்த 400 மில்லியன் மாடுகளில் 85 மில்லியன் மாடுகளை களையெடுத்து தோட்டங்களுக்கு புது வேலி போட்டாச்சு"  எல்லோரும் கை  தட்டினர்.


பிரித்தானிய விவசாயி  சோத்துசைல்டு "நான் மாடுகளின் லண்டன் பால் சந்தையை சில்லறைக்கு வாங்கி அமுக்கிவிட்டேன்.  மாடுகளுக்கு கசாப்பு கடை பூட்டினது தெரியாது.  இராணி மாடே என் காலடியில்" எல்லோரும் பெரிதாக சிரித்தார்கள்.

ஜேர்மனிய விவசாயி  பேயர் "நாங்கள் மாட்டுக்கு விச புகை, கிருமிகள் ,  உரம் குண்டுகள் போட்டு  நல்ல வருமானம்.  என்ன இனி நாம் என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட வேண்டும்.  கையை கடிக்க கூடாது"

அமெரிக்க விவசாயி சொக்கர்பாலர் "நாங்கள் இனி அடுத்த 70 வருடங்களுக்கு நல்ல கறவை மாட்டு வளர்ச்சியை கூட்டி உலக பால் உற்பத்தியை கூட்டவேண்டும்.  எங்களுக்கு இந்த மாடுகளை இன்னும் இலகுவாக மேய்த்து கட்டி வைக்க தொழில்நுட்பம் தேவை"

அமெரிக்க விவசாயி கிளிண்ட் "எண்ட ஐ பி மா இயந்திரங்கள் ஒரு மாட்டு கொட்டில் அளவு அதை நாம் 70 வருடத்தில் நுனி விரல் அளவிற்கு கொண்டுவருவோம்.  அதற்கு நிறைய முதலீடு தேவை. "

ஜேர்மனிய விவசாயி  மேர்சல் பன்சு  "என்ன எங்கட திட்லெர் போல மாடு அடிக்க ஆளில்லை.  கிளிண்ட் நீ எங்களுக்கு இந்த யூத மாடுகளை காட்டி தந்ததற்கு நன்றி.   எங்களுக்கு நீ இன்னும் உதவ வேண்டும்"

அமெரிக்க பிரெஞ்சு விவசாயி குடுப்போன்ட் "நாங்கள் கன காலமா வெடிமருந்து மற்றும் இரசாயனம் தயாரித்து நல்ல காசு பாத்திட்டம்.  என்ன இனி பெரும் கசாப்பு கடை இல்லை என்றால் நான் என்ன செய்வது?"

யப்பான் விவசாயி குறுக்கிட்டோ கவலையோடு "என்னை நீங்கள் சீன மாடு, பிலிப்பினோ தோட்டம் எல்லாம் பிடிக்கவிட்டு பிறகு பறிச்சு போட்டீங்கள்"

சீன விவசாயி சாவோ "பயப்படாதே உனக்கு மேல் போர் குற்றம் சுமத்த மாட்டேன்.  மஞ்சூரியாவை அமுக்கி  சீன கான் மாடுகளின் கையில் தந்ததற்கு நன்றி"

ரசிய விவசாயி குருசேவா "இந்த கொம்யூனிச சமத்துவ மாட்டு தொழுவம் நல்லா ஓடுது.  நல்ல பால் கறவை. சும்மா ஒரு கட்டு வைக்கோல் மட்டும் சமத்துவ பேரில் போட்டுவிட்டு ரத்தம் வரும் வரை பால் கறக்கலாம்.  அவை மார்க்சு மார்க்சு என்று கத்தி தாமே கறந்து தருங்கள்.  மற்றோரும் இந்த விவசாய முறையை பயன் படுத்துங்கோ"

சீன விவசாயி சாவோ " ஓம் உண்மை.  தெரு மாடுகளை சேர்த்து சிறு மாட்டு விவசாயிகளை அடித்து துரத்தி இப்ப எல்லா கொட்டிலிலும் இயேசு படத்திற்கு என் படம் தான்.  இப்ப ஒரு தோட்டம்!"  சிரித்தார்கள் எல்லோரும்.

அமெரிக்க விவசாயி வாபர்க் "நானும்  கேபி மோகனோட சேர்ந்து ஒரு தனியார் கூட்டாட்சி வங்கி தொடங்கிவிட்டோம்.  மோகனும் 1920 பெரிய வைக்கோல் தட்டுபாடடை வைத்து எல்லா மாட்டு துறைகளையும் மடக்கிவிட்டார்.  நாங்கள் மாட்டுக்கு  சுதந்திரம் கொடுப்போம் ஆனால் இல்லை"
எல்லோரும் சிரித்தார்கள்.

கனடிய  விவசாயி யோய் பொம்சன்  பெருமையாக "அமைதி.  நாம் 1900ல் தன்சார்பா 90% விகிதமாக பரவி கிடந்து மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை உலக கசப்பு கடை ஒன்று மற்றும் இரண்டில் எமது கொட்டில்களுக்குள் கொண்டுவந்து விட்டோம்.  கனடிய மாடுகளுக்கு இரண்டு கசாப்பு கடை வரியும் போட்டு மூக்கணாங்கண்கயிறு கட்டியாச்சு. இப்ப ஒரு பத்து விகிதம் தான் வெளியே மேயுது"

பிரித்தானிய விவசாயி சோத்துசைல்டு "உலகத்தில் கடந்த 500 வருடங்களாக நாம் பல இலட்ச்சம் சின்ன விவசாய தோட்டங்களை பிடித்து பெரிதாக பால் கறக்காதாக பூர்வ குடிகளை போட்டு தள்ளியாச்சு.  இப்ப எங்கட 200 தோட்டங்கள் தான் மிச்சம்.   இதை இன்னும் இரண்டு தலைமுறைக்கு வளரவிட்டு பின் ஒரு உலக வேலி இல்லா தோட்டம் ஆக்கவேண்டும்.  எல்லா மாடுகளிடம் இருந்து 75% பாலை அதுகளுக்கு தெரியாமல் கறக்கவேண்டும்"

இந்திய பார்சி விவசாயி பாட்டா  " நாங்களும் எங்கட பார்சி  மகாத்மா குந்தியை வைத்து பிரித்தானிய உதவியுடன் இந்திய தோட்டத்தை ஒன்றாக்கிவிட்டோம்.  300 மில்லியன் மாடுகளை ஒரு இலட்ச்சம் பிரித்தானிய மேய்ப்பாளர் இலகுவாக வைத்து கறந்தார்கள்.   எல்லாம் எங்கட குந்தி மாடு முட்ட கூடாது என்று ஏமாற்றி தான் அதுகளை மேய்க்க முடிந்தது"  எல்லோரும் சிரித்து இந்திய மாடுகளை ஏமாற்றியதை புகழ்ந்தார்கள்.

அமெரிக்க விவசாயி சொக்கர்பாலர் "நாம் முக்கியமாக இந்த ஆப்பிரிக்க தென்னமெரிக்க பூர்வீக மாடுகளை கன்று போட விடக்கூடாது.  பாலும் பெரிதாக இருக்காது மற்றும் சொல்வழி கேட்க மாட்டார்கள்.  அதனால் மூன்றாம் கசாப்பு கடை திறப்பிற்கு பின் அவற்றை இயற்கையாக சினை சேர்க்க விடக்கூடாது.  அதன் இனம், கறவை திறம், குணம் பார்க்கவேண்டும்.   அப்படி சினை சேர்த்தாலும் செயற்கையா சோதனை குழாயில் கலந்து பாத்தாயிரம் டொலர் அறவிடவேண்டும் .   அப்போது தான் நல்ல கறவை மாடுகளை கொண்டுவரலாம்.  அவர்களிற்கு சுதந்திரம் இருக்கு ஒரு மாயையை உருவாக்கி வைத்திருக்க வேண்டும்."

அமெரிக்க விவசாயி கிளிண்ட "தொழில்நுட்பத்தை வளர்த்து கரண்ட் கம்பிக்குள்ளால் எல்லா மாட்டு தொழுவத்தையும் கொழுவி நாங்கள் நிய நேரத்தில் எந்த மாடு என்ன செய்யுது,  எவ்வளவு கறக்குது, குழப்படியா என்று கவனிக்கலாம்.  மற்றும் சுவரில் பிம்ப பெட்டி கொழுவி ஆடி பாடி கறக்கும் மாடுகளை வைத்து அவற்றை சும்மா நின்று அசை போட வைக்கலாம்.  இப்ப உள்ள சுதந்திர மாட்டு தாள்களை பின் நாம் வாங்கி பீதி கிளப்பலாம்"

எல்லோரும் எழுந்து நின்று கை தட்டினார்கள்.   கிளிண்ட் பெருமையாக எல்லோருக்கும் தலையாட்டினார்.

அமெரிக்க விவசாயி கேபி மோகன் "இந்த புஸ்லா  எண்டவன் இலவசமாக காற்றால் கரண்ட் அனுப்ப கண்டுபிடிச்சவன்.  நான் அவற்றை அமுக்கி பின் அவனை வைச்சு கரண்ட் கம்பியால் அனுப்பினான்.  இலவசம் முதலில் எப்போதும் மாடுகளுக்கு ருசி பிடிக்க மட்டும் தான் பின் பால் கறந்தால் தான் கிடைக்கும். இலவசமா காடு மேயும் விளையாட்டு வேண்டாம்"


சீன இந்திய விவசாயிகள் பாட்டா மற்றும் சாவோ சேர்ந்து "எங்கட நாட்டில நிறைய தண்டசோறு மாடுகள் இருக்கு கசாப்பிற்கு அனுப்ப வேண்டும்.  70 வருசத்தில் எங்கட தோட்டங்கள் வீங்கி வெடித்துவிடும்"

பிரித்தானிய சோத்துசைல்டு "நாம் 2020 இல் எமது மூன்றாம் கசாப்பு கடையை திறந்து தேவையில்லாத நாண்பன் மாடுகளை போருக்கு அனுப்பி ஒரு பெரும் ரீசெட் செய்வோம்.  உலக மாட்டு தொகையை அரை பாதியாக்கி ஒரு உலக அமைப்பிற்குள் கொண்டுவருவோம்."

இவ்வளவு நேரமும் அமைதியா இருந்த இத்தாலிய விவசாயி மெடிசி "கேள்வி, தொழில்நுட்பம் வளர்ந்து எல்லா மாடுகளும் தொலைத்தொடர்பு கொண்டு கதைத்தால் எங்கட திட்டங்களை கண்டுபிடிக்காதா? விடயம் தெரிந்து வேலியை பிச்சு கொண்டு போகாதா? எப்படி அவற்றை அடக்குவது?"

அமெரிக்க விவசாயி கிளிண்ட் " நாங்கள் நிறைய குப்பைகளை கொட்டி குழப்புவோம்.  கன்றுகளை மேய தெரியாமல், கறவை வரி கணக்கு போட தெரியாமல் செய்து குடும்பங்களை உடைத்து தனி மாடாக்குவோம்.  எல்லா தனி மாட்டுக்கும் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று ஒரு மாயையை உருவாக்குவோம்.   எங்க போகுது என்ன செய்யுது என்று அதன் காலில் கால் பேசியை கட்டி கவனிபோம்.. போலி மாடுநாயகம் தொடக்கி அவர்களை வைத்து எங்கட கைப்பாவை மாட்டை கொண்டு வருவோம் "

சுவிஸ் விவசாயி மெஸ்லே " அடுத்த 70 வருடங்களுக்கு மாட்டு தீவன தரைகளில் குண்டுக்கு பாவித்த யூரியாவை போடுவோம்,  கிருமி நாசினிகளை தெளிப்போம்.  கொஞ்சம் கொஞ்சமா மாடுகளை பலவீன படுத்தி பின் ஏதாவது ஒரு வைரஸை உருவாக்கி மிரட்டுவோம்.  இதனால் இங்கிருக்கும் எல்லாருக்கும் இலாபம்"

இத்தாலிய விவசாயி மெடிசி குறுக்கால "மாடுகளுக்கு நஞ்சை சாப்பிடுகிறோம் என்று கூடவா 2020 இல் தெரியாமல் இருக்கும் நம்ப முடியவில்லையே?"

அமெரிக்க பிரெஞ்சு விவசாயி குடுப்போன்ட் "அது பிரச்சினை இல்லை.  மாடுகளுக்கு சீருடை அணிந்தால் மண்டை மந்தமாகி நம்பிவிடுங்கள்.  வெள்ளை கோட்டை போட்டு மாட்டு வைத்தியரை மற்றும் ஓடலிகளை வைத்து ஏமாற்றலாம்!"

வாடிகன் மாட்டு பூசகர் தங்க நாற்காலியில் இருந்து "நாங்களும் மற்றைய மதங்களோடு சேர்ந்து அவற்றை பால் கறக்கும் பசுக்களாகுவோம்.  எங்களுக்கு எதிரா போனா மாட்டு நரகத்திற்கு போவினம் என்று ஏமாற்றி வெருட்டுவோம்.  அங்க எமன் பேர்கர் ஆக்கிப்போடுவார் என்றால் பதறி தட்டில் நெய்யய் கொட்டுங்கள்"

எல்லோரும் இப்போது திரும்பி உலகின் கால் பங்கு மேய்ச்சல் நிலத்தை பிடிச்சு வைத்திருக்கும் மாட்டு இராணியை பார்க்கிறார்கள்.  "எல்லா திட்டமும் நல்லா இருக்கு.  இந்த உரையாடலை சாத்தம் வீடு சத்தியத்தை செய்து பேசாமல் இருக்கவேண்டும்.  இங்கு ஒருத்தரும் எவ்வளவு உழைக்கிறோம் என்று சொல்ல கூடாது நாம் ஏழை என்று நாடுகளிடம் இருந்து கறந்து இலவசமா எப்போதும் வாழவேண்டும்.   500 வருடத்தில் பத்தாயிரம் பாசை பேசிய பல்லின மாடுகளை ஒரு பாசை பேச வைத்து ஒரு பால் வங்கி வைத்து ஒரு சுகாதார அமைப்பு வைத்து ஒரு உலக தொழுவத்திற்குள் கொண்டுவரவேண்டும். பின் அவற்றை ஒரு கலவை மாடாக்கி 75% பாலை கறக்கவேண்டும்..  இது தான் என் கடைசி ஆசை. "

எல்லோரும் எழும்பி மாட்டு ராணிக்கு தலை வணங்கி சியர்ஸ் சொல்லி விடைபெற்றார்கள்.

 

pigs-in-factory-farm.jpg
**************************************************

ஜனவரி 16 2020 மாட்டு பொங்கல்

மனித மாட்டுக்கு கோவிண்டா வந்து மேய்ச்சல் நிலம் தோட்டங்கள் எல்லாம் வெறிச்சோடி கிடந்தது.

சுவரில் பிம்பம் தொழுவத்திற்குள் அடைந்திருந்து பால் கறக்க சொன்னது.


விக்கியெனும் கனடா மாடு தோய்ந்து வெளிக்கிட்டது.  மற்றைய மாடுகள் ஐயோ கோவிண்டா பிடிக்கும் தொழுவத்தில் இரு என்று மிரட்டியது.  விக்கி மாடும் முகமூடி அணிந்து சென்றது.

முதலில் தனது தோட்டத்திற்கு சென்று தொழுவத்திற்கு  வரி கட்டிவிட்டு பின் வண்டிலுக்கு பலகை வரி  கட்ட சென்றது.

பின் வண்டியைதோட்ட வரி கட்டிய தெருவால் விட்டு மாகாண வரி பெருந்தெருவிற்கு வந்தது.  

வண்டிக்கு இலவசமா நிலத்தில் இருந்து கிடைக்கும் எண்ணெய்க்கு வரி கட்டியது. பின் அந்த எண்ணெய் காற்றை அசுத்தமாக்கிறது என்று காற்றுக்கு வரி கட்டியது.  

கொஞ்சம் புண்ணாக்கு தண்ணி வேண்டி அதற்கும் வரி கட்டியது.  பின் சந்தைக்கு சென்று நஞ்சு தெளிச்ச இரசாயன உரம் போட்ட ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் வாங்கி வரி கட்டியது.  

மாட்டு பொங்கல் கொண்டாட பக்கத்துக்கு தோட்டத்திற்கு செல்லும் போது பனியில் வண்டில் நிக்காமல் சறுக்க சமிஞை விளக்கு கமெரா படமெடுத்து தண்ட  வரி வீட்டுக்கு அனுப்பியது.

வண்டியில் காற்றில் இருந்து மாடுகள் செய்தி  தமக்கு கோவிண்டா ஊசி தேவை எவ்வளவு பால் வேண்டுமென்றாலும் எடுங்கள் என்று வற்புறுத்தின.

தொழுவத்தில் மிருக மாடுகள் அடுக்காக கட்டி 5 அடி பத்தடி கூண்டுக்குள் நின்று ஜி எம் ஓ சோளம் சாப்பிட்டுக்கொண்டிருந்தன.   இரண்டே இன மாடுகள் தான் இருந்தன.

அவைகள் மனித மா கொண்டுவந்த பழங்களின் மணத்தால் ஈர்த்து ஆர்பரித்தன.  

ஒவ்வொன்றாக ரசித்து ரசித்து சாப்பிட்டன.  அதை பார்த்து மகிழ்ச்சியடைந்த மனிதமா மிருகமாட்டு தொழிற்சாலையில் இருந்து வெளியேறி மனித மாட்டு தொழிற்சாலைக்கு சென்றது.

அங்கு அதற்கு ஒரு கடுதாசி பெரிய விவசாய  கறவையாளரிடம் இருந்து "சென்ற வருடம் நீ 400 கலன் பால் கறந்திருக்கிறாய் ஆதலால் உன் பட்டுவாடா கணக்கின் படி எங்களுக்கு 160 கலன் பால் கட்டவேண்டும். கட்டாவிட்டால் பால் வரி கூடிக்கொண்டே போய் சிறை செல்வாய் "

தொலைக்காட்சியில் மாட்டு ஹொக்கி கட்டு தொடங்கமுன் ஒன்று பாடியது கேட்டது.


God keep our land glorious and free!
(கடவுளே எம் மகிமை நிறைந்த நிலத்தை சுதந்திரமா வைத்திரு!)

 

rw061818_factory_farming.jpg

 

 

 

 

 

 • Like 14
 • Thanks 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பலத்த வார்த்தை பிரயோகம்.  பெரியவர்களுக்கு மட்டும்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை போல இருந்தாலும் படித்து முடித்ததும் நெஞ்சை பிசைய வைக்கின்றது.......!

அருமையான எழுத்து நடை மட்டும்தான் உங்களுடையது மற்றும்படி அவ்வளவும் நிஜமானதுதான் விவசாயி விக் .......!   🙏

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நகைச்சுவை போல இருந்தாலும் படித்து முடித்ததும் நெஞ்சை பிசைய வைக்கின்றது.......!

அருமையான எழுத்து நடை மட்டும்தான் உங்களுடையது மற்றும்படி அவ்வளவும் நிஜமானதுதான் விவசாயி விக் .......!   🙏

ஊக்கத்திற்கு மிக்க நன்றி.  

இதை விளங்கினால் எப்படி இலட்ச்சம் பேரை கொன்றவன் சனாதிபதியாகிறான் என்றும் விளங்கும் 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாடு ஒவ்வொரு நாட்டுக்காரன் கையில் கிடைக்கும் போதும் புதிய புதிய எண்ணங்கள் விசித்திரமான எண்ணங்கள்.
அதுசரி விவசாயி இவ்வளவு சிந்தனைகளும் எப்படி உங்களுக்குள் உதயமானது என ஆச்சயமாக இருக்கிறது.
பாராட்டுக்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மனிதர் நன்றாக வாழ கோழியும், மாடும், பன்றியும், ஆடும், வாத்தும் தங்கள் ஊழ்வினைப் பயன்படி உயிர்வாழும் வரை கொஞ்சம் நெருக்கியடித்து வாழத்தானே வேண்டும். பண்ணைகளில் பிறக்கும் காளைக் கன்றுகளையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விவசாயி விக் said:

இந்திய பார்சி விவசாயி பாட்டா  " நாங்களும் எங்கட பார்சி  மகாத்மா குந்தியை வைத்து பிரித்தானிய உதவியுடன் இந்திய தோட்டத்தை ஒன்றாக்கிவிட்டோம்.  300 மில்லியன் மாடுகளை ஒரு இலட்ச்சம் பிரித்தானிய மேய்ப்பாளர் இலகுவாக வைத்து கறந்தார்கள்.   எல்லாம் எங்கட குந்தி மாடு முட்ட கூடாது என்று ஏமாற்றி தான் அதுகளை மேய்க்க முடிந்தது"  எல்லோரும் சிரித்து இந்திய மாடுகளை ஏமாற்றியதை புகழ்ந்தார்கள்.----

விக்கியெனும் கனடா மாடு தோய்ந்து வெளிக்கிட்டது.  மற்றைய மாடுகள் ஐயோ கோவிண்டா பிடிக்கும் தொழுவத்தில் இரு என்று மிரட்டியது.  விக்கி மாடும் முகமூடி அணிந்து சென்றது.----

கற்பனையில்... நகைச்சுவையாக எழுதப் பட்ட உண்மைச் செய்தி. 👍  

விவசாயி விக்...
கனடா மாடு, நாம்பன் மாடு என்று தெரிந்து விட்டது.
இந்திய மாடு, மகாத்மா குந்தி....  நாம்பனா, பசுவா என்று அறிய ஆவலாக  உள்ளது. 🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2021 at 18:08, விவசாயி விக் said:

விக்கியெனும் கனடா மாடு தோய்ந்து வெளிக்கிட்டது.  மற்றைய மாடுகள் ஐயோ கோவிண்டா பிடிக்கும் தொழுவத்தில் இரு என்று மிரட்டியது.  விக்கி மாடும் முகமூடி அணிந்து சென்றது.

முதலில் தனது தோட்டத்திற்கு சென்று தொழுவத்திற்கு  வரி கட்டிவிட்டு பின் வண்டிலுக்கு பலகை வரி  கட்ட சென்றது.

பின் வண்டியைதோட்ட வரி கட்டிய தெருவால் விட்டு மாகாண வரி பெருந்தெருவிற்கு வந்தது.  

வண்டிக்கு இலவசமா நிலத்தில் இருந்து கிடைக்கும் எண்ணெய்க்கு வரி கட்டியது. பின் அந்த எண்ணெய் காற்றை அசுத்தமாக்கிறது என்று காற்றுக்கு வரி கட்டியது.  

கொஞ்சம் புண்ணாக்கு தண்ணி வேண்டி அதற்கும் வரி கட்டியது.  பின் சந்தைக்கு சென்று நஞ்சு தெளிச்ச இரசாயன உரம் போட்ட ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் வாங்கி வரி கட்டியது.  

மாட்டு பொங்கல் கொண்டாட பக்கத்துக்கு தோட்டத்திற்கு செல்லும் போது பனியில் வண்டில் நிக்காமல் சறுக்க சமிஞை விளக்கு கமெரா படமெடுத்து தண்ட  வரி வீட்டுக்கு அனுப்பியது.

வணக்கம், விவசாயி...!

எந்த விதமான கண்ணாடியும் போடாமல்  ...உலகத்தைப் பார்த்திருக்கின்றீர்கள்!

கிட்டத் தட்ட ரோபோக்கள் போலத்தான் எமது வாழ்வு போய்க்கொண்டிருக்கின்றது...!

எழுத்து நடையும்  அழகாக  உள்ளது..!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2021 at 10:06, ஈழப்பிரியன் said:

ஒரு மாடு ஒவ்வொரு நாட்டுக்காரன் கையில் கிடைக்கும் போதும் புதிய புதிய எண்ணங்கள் விசித்திரமான எண்ணங்கள்.
அதுசரி விவசாயி இவ்வளவு சிந்தனைகளும் எப்படி உங்களுக்குள் உதயமானது என ஆச்சயமாக இருக்கிறது.
பாராட்டுக்கள்.

அண்ணா அவ்வளவும் கடந்த 100 வருடங்களில் நடந்த நிகழ்வுகள் பெயர்கள் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன.
எனக்கு விவரண படம், சரித்திர கட்டுரைகள் என்றால் உயிர். 😀

On 21/2/2021 at 14:31, கிருபன் said:

மனிதர் நன்றாக வாழ கோழியும், மாடும், பன்றியும், ஆடும், வாத்தும் தங்கள் ஊழ்வினைப் பயன்படி உயிர்வாழும் வரை கொஞ்சம் நெருக்கியடித்து வாழத்தானே வேண்டும். பண்ணைகளில் பிறக்கும் காளைக் கன்றுகளையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்!

இயற்கையின் நியதி படி எப்போதும் 5% விகிதம் தான் காளைகளாக இருக்கும்.  மனிதன் தான் சமயத்தை தொடக்கி ஒருவருக்கு ஒருவர் என்று சட்டம் போட்டு 50% விகிதமாக இருக்கின்றோம்.   அந்த காலம் மாறுகிறது.  நாங்கள் பெண்களின் யுகத்திற்குள் செல்கின்றோம்.   

கோழிகள் மாடுகளை அடைத்து வைத்து ஒவ்வொரு நாளும் அண்டிபயோடிக் போட்டு  உடல் பருமன் குறையாமல் வைப்பது இலாபம் பார்க்க தான்.   எப்போது ஒரு சமூகம் தனக்கு உணவு அளிக்கும்  உயிர்களை இப்படி கொடுமை படுத்துகிறதோ அந்த சமூகத்தின் ஆன்மாவும் அப்படியே மாறும்.  அவர்களும் அந்த பாவவினையை அனுபவிப்பார்கள்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2021 at 23:22, தமிழ் சிறி said:

கற்பனையில்... நகைச்சுவையாக எழுதப் பட்ட உண்மைச் செய்தி. 👍  

விவசாயி விக்...
கனடா மாடு, நாம்பன் மாடு என்று தெரிந்து விட்டது.
இந்திய மாடு, மகாத்மா குந்தி....  நாம்பனா, பசுவா என்று அறிய ஆவலாக  உள்ளது. 🤣

மாகாத்மா குந்தி ஒரு காராம் பசு! 🤣

On 22/2/2021 at 02:36, புங்கையூரன் said:

வணக்கம், விவசாயி...!

எந்த விதமான கண்ணாடியும் போடாமல்  ...உலகத்தைப் பார்த்திருக்கின்றீர்கள்!

கிட்டத் தட்ட ரோபோக்கள் போலத்தான் எமது வாழ்வு போய்க்கொண்டிருக்கின்றது...!

எழுத்து நடையும்  அழகாக  உள்ளது..!

நன்றி அண்ணா.   இப்ப தான் கணக்கியலாளர் என்னட்ட 160 கலன் பாலை கறந்து அனுப்பினவர்.

இங்க ஒன்டாரியோவில லாண்ட் ட்ரான்ஸ்பெர் வரி இருக்கு எனது வக்கீலே சொல்வார் தனக்கு எங்க இந்த காசு போகுது என்று தெரியாது என்று.  

அதாவது தொழுவம் விட்டு தொழுவம் மாறினாலும் வரி!   

 

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விக் உங்களுடைய வேலைப்பழுவிலையும் இவ்வளவு எழுதநேரம் கிடைத்திருக்கிறது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவசாயி உண்மையிலேயே உங்கள் எழுத்தை வாசித்து பிரமித்துப் போய் நிற்கிறேன். நீங்கள் வேற லெவலய்யா. நமக்குள் இப்படியான எழுத்தை இப்போதுதான் முதல்முதலாக வாசிக்கிறேன். கிண்டலாக பேசலாம் ஒரு சிறிய வட்டத்திற்குள் சிலேடையாக நெளிக்கலாம். உங்கள் படைப்பு பிரமாண்டம். தேர்ந்த உலக அரசியல் அறிவுள்ள ஒருவரால் மட்டுந்தான் இப்படி எழுதலாம். விவசாயி உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உண்மையை உருவகித்து  கோர்வையாக கதை சொன்ன விதம் மிக்க அழகு .உங்கள் திறமையை கண்டு வியந்து போனேன். விபரமான விவசாயி 

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2021 at 11:37, வாதவூரான் said:

விக் உங்களுடைய வேலைப்பழுவிலையும் இவ்வளவு எழுதநேரம் கிடைத்திருக்கிறது

வேலை பளு அழுத்தத்தை குறைக்க யாழில் எழுதி இளைப்பாறுகிறேன்.  இங்கு உறவுகள் தரும் ஊக்கம் இன்னும் தெம்பை கூட்டும்.

On 26/2/2021 at 20:44, வல்வை சகாறா said:

விவசாயி உண்மையிலேயே உங்கள் எழுத்தை வாசித்து பிரமித்துப் போய் நிற்கிறேன். நீங்கள் வேற லெவலய்யா. நமக்குள் இப்படியான எழுத்தை இப்போதுதான் முதல்முதலாக வாசிக்கிறேன். கிண்டலாக பேசலாம் ஒரு சிறிய வட்டத்திற்குள் சிலேடையாக நெளிக்கலாம். உங்கள் படைப்பு பிரமாண்டம். தேர்ந்த உலக அரசியல் அறிவுள்ள ஒருவரால் மட்டுந்தான் இப்படி எழுதலாம். விவசாயி உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன்.

அக்கா எனக்கு தலையில் ஐஸ் கட்டி வைத்ததற்கு நன்றி.  இப்ப தடிமன் வந்தால் கோவிட் என்று பிடிக்கப்போறாங்கள். 

On 26/2/2021 at 21:10, நிலாமதி said:

உண்மையை உருவகித்து  கோர்வையாக கதை சொன்ன விதம் மிக்க அழகு .உங்கள் திறமையை கண்டு வியந்து போனேன். விபரமான விவசாயி 

நன்றி அக்கா.  எழுத்தாளர் ஓஸ்வால்ட் சொன்னது “உண்மையை நகைச்சுவையாக சொல்லு இல்லையோ கொன்றுவிடுவார்கள்.”😅

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2021 at 14:31, கிருபன் said:

மனிதர் நன்றாக வாழ கோழியும், மாடும், பன்றியும், ஆடும், வாத்தும் தங்கள் ஊழ்வினைப் பயன்படி உயிர்வாழும் வரை கொஞ்சம் நெருக்கியடித்து வாழத்தானே வேண்டும். பண்ணைகளில் பிறக்கும் காளைக் கன்றுகளையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்!

வினை விதைத்தால் என்ன அறுவடை என்று உங்களுக்கு சொல்லி தெரிய தேவை இல்லை.

https://www.beefmagazine.com/sites/cet.com/files/Nasal%20swab%20BeefMag_in-article.jpg

https://cdn.wionews.com/sites/default/files/styles/story_page/public/2020/10/02/162781-nasal-swab-test.jpg

Link to post
Share on other sites
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.