Jump to content

கருவிலும் சொல்லி வைப்போம் எங்கள் தமிழ் மொழியின் தனித்துவத்தை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருவிலும் சொல்லி வைப்போம் எங்கள் தமிழ் மொழியின் தனித்துவத்தை - சிறப்பு கட்டுரை

spacer.png

 

தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே, 

தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே...

- புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்.

 

 

கருவிலும் சொல்லி வைப்போம் எங்கள் தமிழ் மொழியின் தனித்துவத்தை

அன்னை  மடியில்  குழந்தையாய்  அறிந்து  கற்ற  முதல்  மொழி  தாய்மொழி. தாயானவள்  குழந்தைக்கு    உணவூட்டுவதோடு  உணர்வையும்  ஊட்டுகின்றாள். அதற்கு  பயன்படுத்துவது  தாய்மொழியே. “தாயிற்சிறந்ததொரு  கோவிலுமில்லை”என்பது  போல “தாய்மொழியிற்  சிறந்த  வேறு  மொழியில்லை.  என்பது அறிஞர்களின்    கருத்தாகும்.    ஒருவன்    எத்தனைமொழிகளையும் கற்றுக்கொள்ளலாம்   அது   தவறில்லை   எனினும்   அறிவு   வளர்ச்சிக்கு தாய்மொழியே அடிப்படையானது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். தாய் மொழி மூலம் கல்வி பயிலும் குழந்தை தனது இயல்பூக்கங்களிற்கு ஏற்ப பூரண  திறன்களை  வெளிக்காட்ட   முடியும்  என்பது  கல்விஉளவியல் அறிஞர்களின்  கருத்தாகும்.  இதனால்  தான்  தாய்மொழி  மூலம்  கல்வி  புகட்ட வேண்டும்  என்று  வலியுறுத்தப்படுகின்றது.  இன்று  உலகஅரங்கில்  வளர்ச்சி பெற்ற  நாடுகளான அமெரிக்கா,  இங்கிலாந்து,  பிரான்ஸ்,  ஜேர்மனி,  ரஸ்யா, ஜப்பான்,  கனடா  போன்ற  நாடுகள்  தத்தம்  சுயமொழி  மூலமே  கல்வி புகட்டுகின்றன.தாய்மொழிமூலம்   கல்விபயின்ற   நிபுணர்களையும் விஞ்ஞானிகளையும்  பெருமளவில்  கொண்டுள்ளன.  தாய்மொழி  மூலம்  கல்வி பயின்றமையினாலே    இவர்கள்    புதிய    புதிய    கண்டுபிடிப்புக்களை கண்டறிந்துள்ளனர். தாய்மொழி  மூலம்  கல்வி  பயில்வதே  சிந்தனை  வளர்ச்சிக்கு  துணை  புரியும் என்பதை  இது  நன்கு  புலப்படுத்துகின்றது.  வளர்முக  நாடுகள்  பலஇன்று பொருளாதார  நிலையில்  பின்தங்கி  இருப்பதற்கு  முக்கிய  காரணம்  அவை வளர்ந்த  நாடுகளால்  அடிமைப்படுத்தப்பட்டு வளங்கள்  சுரண்டப்பட்டமையே. ஆங்கில  மொழியே  உயர்கல்விக்கு  ஏற்ற  மொழி,  தாய்மொழி  மூலம்எதுவும் சாதித்து  விட  முடியாது  என்று  சிலர்  கூறுகின்றனர்.  ஆனால்  ஆங்கில  மொழி மூலம்  கல்வி  பயின்றோரிலும்  பார்க்க  தாய்மொழி  மூலம்  பயின்றோரே  இன்றுஉலகின்   சிறந்த   விஞ்ஞானிகளாகவும்   பொருளியலாளராகவும்   மருத்துவ நிபுணர்களாகவும் விளங்குகின்றனர். 1907ல்  பொதுவுடைமை  புரட்சி  மூலம்  ஆட்சி  அமைத்த  சோவியத்  யூனியனும் 1950ல்  பொதுவுடைமை  புரட்சி  மூலம்  ஆட்சி  அமைத்த  மக்கள்  சீனாவும்  2ம் உலகப்போரின்  பின்  உருப்பெற்ற  ஜப்பானின்  பொருளாதாரத்தில்  முன்னணி வகிக்கின்றது  என்றால்  முக்கிய  காரணம்  தத்தம்  தாய்மொழி  மூலம்  கல்வி புகட்டியமை  ஆகும்.  தாய்மொழி  மூலம்  ஒவ்வொருவனும்  பற்றுக்கொள்ள வேண்டும். அப்பற்று  இல்லாதவன்  தாயை  பழித்தவன்  ஆகின்றான். “பெற்ற தாயை காட்டிலும் தாய்மொழி உயர்ந்தது ஆகும்

spacer.png

 

தாய்மொழியில் கற்பது தாய்ப்பால் பருகுவதைப் போன்றது. பிறமொழில் கற்பது புட்டிப்பால்    பருகுவதைப்    போன்றது.    தாய்ப்பாலே     குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு   உகந்தது.   அது   போன்று   தாய்மொழியில்   கற்பதே குழந்தையின்  இயல்பான  சிந்தனை  வளர்ச்சிக்கு  ஏற்றது.  எனவே  தாய்மொழி மூலம் கற்பதே அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை ஆகும். மேலை   நாட்டினர்   அறிவியல்   துறையில்   முன்னணி   வகிக்க காரணம் அவர்களுக்கு  தேவையான  அனைத்து  நூல்களும்  அவர்களின்  தாய்மொழியில் உள்ளமை   ஆகும்.   தாய்மொழி   வாயிலாக   கல்வி   பெறுதலும்   எல்லா துறைகளிலும்  தாய்மொழியை  பயன்படுத்துவதும்  ஒவ்வொருவரின்  தலையாய கடமையாகும். தாய்மொழி மூலம் பெறப்படும் கல்வியே உள்ளத்தில் அடிபதிந்து அழியாப்   பயன்   நல்கும்.அதுவே   அறிவு   சிந்தனை   வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.   நமது   சமுதாயம்   எழுச்சி   பெறவேண்டுமாயின்   நாடு பொருளாதார  வளத்துடன்  உயர்ந்திட  வேண்டுமாயின்  தாய்மொழிக்  கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.தாய்மொழியிலேயே  சிந்திக்க  முடியும்  சிந்திக்கும்  மொழியிலேயே  சிறப்பாக கல்வி  கற்கவும்முடியும்.  அறிந்ததில்  இருந்தே  அறியாததை  கற்றுக்  கொள்ள முடியும்.    உலகெங்கும்   தாய்மொழியில்   கற்றவர்களே   படைப்பாற்றல் மிக்கவர்களாக தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் மொழியையும் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களாக இருக்க முடியும்.தாய்மொழிக் கல்விக்கு செயல்வடிவம் தரும் நோக்கமாக தாய்தமிழ் பள்ளிகள் வெற்றிகரமாக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கின்றன. இன்று அரசு தாய் தமிழ்க் கல்வியின் அவசியமறிந்து அதை மேம்படுத்த பெரும் தாய்ப்பாலே  குழந்தைக்கு  நல்லூட்டம்  தருகின்றது  என்கிறது  மருத்துவம். தாய்;ப்பால்   அருந்தாத   குழந்தைகள்   நோய்   எதிர்ப்பு   ஆற்றலை   பெற தவறுகின்றன  என  முன்மொழிகின்றது ஆய்வுகள். தாய் பாலூட்டி  குழந்தையின் உடலை   வளர்க்கிறாள்.   அன்பு   சொரிந்த   உரையாடலுடன்   பாலோடும் உணவோடும்  அங்கே  மொழியும்  ஊட்டப்படுகின்றது.  தாய்ப்பாலை  இழக்கும் குழந்தைகள்  உடல்  நலம்  குன்றும்  அதுபோன்று  தாய்மொழியில்  கற்காத குழந்தையின் அறிவுத்திறன் மங்கும். அறிவியல் இன்று வியத்தகு வளர்ச்சி பெறுகின்றது. அது புதிய கண்டுபிடிப்பாக பேசுகின்றது.  குழந்தை  கருவில்  வளரும்போது  தாயின்  மொழியை  அதாவது தாய்மொழியை  கேட்டு  வளர்கின்றது.  கருவிலேயே  குழந்தையின்  மூளையில் தாய்மொழிப்படிமங்கள் பதியத் தொடங்கி வருகின்றன.

 

உலகின்  தலைசிறந்த  குழந்தை  உளவியலாளர்களும்  கல்வியியலாளர்களும் இதனை  உறுதிப்படுத்தி  வருகின்றனர்.  குழந்தையின்  தொடக்க  கல்வி  தாய் மொழியில்  தான்  அமைய  வேண்டும்  என்ற  கருத்தை  இதுவரை  எவரும் மறுக்கவில்லை. உலகின்  முன்னேறிய  நாடுகள்  அனைத்திலும்  தொடர்கல்வி  மட்டுமன்றி உயர்கல்வி   ஆராய்ச்சி   கல்வி   என   அனைத்துமே   தாய்மொழியிலேயே நடைபெறுகின்றன.  பெரும்பாலான  அறிவியல்  கண்டுபிடிப்புக்கள்  அங்குதான் நிகழ்கின்றன.இந்த  அறிவியல்  உண்மைக்கு  இஸ்ரோ  அறிவியலாளர்களும்  சான்றாக திகழ்கின்றனர்.   விண்ணில்   செயற்கை   கோள்களை   ஏவுவதில்   வல்லரசு நாடுகளும்  மூக்கில்  விரலை  வைத்து  வியக்கும்  வண்ணம்  அவர்கள்  சாதனை புரிந்து  வருவது  யாவரும்  அறிந்ததே.  இச்சாதனைக்கு  அடிப்படை  காரணம் இஸ்ரோ  அறிவியலாளர்களில்  பெரும்பாலானோர்தொடக்க  கல்வியை  அவரவர் தாய்மொழியில் கற்றதே என்கின்றார் அதன் தலைமை இயக்குனரான மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.ஐக்கிய  நாடுகள்  கல்வி,  அறிவியல்,  பண்பாட்டு  நிறுவனம்  தாய்மொழிக் கல்வியின்  முக்கியத்துவத்தினை பல்வேறு கொள்கை மற்றும் செயற்றிட்டங்கள் ஊடாக முன்னிறுத்தி வருகின்றது. மொழி    உரிமைகள்    அடிப்படை    மனித    உரிமைகளின்    பாகமாக அமைப்புக்களாலும் சமூகங்களாலும் கருதப்படுகின்றன. சட்ட பிணைப்புஇல்லாத அனைத்துலக மொழிசார் உரிமைகள் தொடர்பான பரிந்துரைகள் தாய்மொழிக் கல்விக்கு   கூடியளவு   ஆதரவு   தரும்   ஆவணங்களாக   அமைகின்றன. அண்மைக்காலமாக  தாய்மொழியில்  கல்வியை  பல்வேறு  ஆபிரிக்க  ஆசிய நாடுகள் அமுல்படுத்தி வருகின்றன.ஒருவரின்  தாய்மொழியில்  தேர்ச்சி  பெறுவது  அந்த  மாணனின்  அறிவுணர்வு வளர்ச்சிக்கும்  பொதுவான  கல்வி  பெறுபேறுகளுக்கும்  முக்கியமானது  என்று பல்வேறு  ஆய்வுகள்  கூறுகின்றன எனவே  அறிவு  வளர்ச்சிக்கு  தாய்மொழிக் கல்வி அடிப்படையாகும்.

 

xGH9dubadiL98bLe9V0Q.jpg

 


-உலக தாய் மொழி தினம்  சிறப்பு கட்டுரை 

-தாரகம் இணையத்திற்காக ஈழநிலா 

 

 

https://www.thaarakam.com/news/070997c1-c967-41e4-9a6d-97e9e3e288e8

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.