Jump to content

சர்வதேச தாய்மொழி நாள் பெப்ரவரி 21 – து.கௌரீஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச தாய்மொழி நாள் பெப்ரவரி 21 – து.கௌரீஸ்வரன்

 
Capture-13-696x296.jpg
 38 Views

இலங்கைத் தமிழர்களும் தாய்மொழித் தினமும் – சில அவதானங்கள்

பின்காலனித்துவ, உலகமயமாக்கற் சூழலில் அடையாள அரசியல் மிகவும் பிரதானமானதாக மேலெழுந்து வந்துள்ளது. இந்த அடையாள அரசியலில் ஆதிக்க முறைமைகளும், தற்காப்பு முறைமைகளும் செல்வாக்குச் செலுத்துவதனைக் காண்கின்றோம்.

பல்வகைமைகளின் வித்தியாசங்களை மதித்து வேற்றுமையில் ஒற்றுமை அல்லது ஒருமைப்பாடு காணும் அடையாள அரசியல் ஒரு வகை. இது ஆக்கபூர்வமான, காத்திரமான அடையாள அரசியல் செயற்பாடாக கவனிப்பிற்குள்ளாகின்றது.

பல்வகைமைகளை மறுதலித்து மேலாதிக்கப் பிரிவினருடைய அடையாளங்களை பொதுமைப்படுத்தும் அடையாள அரசியல் இன்னொரு வகை. இதில் தூய்மைவாதம், அடிப்படைவாதம், வகுப்புவாதம், நிறவாதம், பெரும்பான்மைவாதம் முதலியன மேலோங்கிக் காணப்படுகின்றன.

பெரும்பாலும் அடையாள அரசியலின் ஆதாரமாக மொழி விளங்கி வருவதனைக் காணலாம். ஒரு மனிதக் குழுமத்தின் மொழி வெறுமனே தொடர்பாடலுக்கான ஊடகம் மட்டுமல்ல; மாறாக அக்குழுமத்தின் கலைகள், தத்துவம், விளையாட்டு, நம்பிக்கைகள், பொருளியல், அரசியல், சூழலியல், அறிவியல் என ஒட்டுமொத்தமான பண்பாட்டைக் கட்டி வளர்க்கும் ஆதாரமாக விளங்கி வருகின்றது.

ஆகவே ஆக்கபூர்வமான அடையாள அரசியற் செயற்பாடுகளில் சுதேச அல்லது தாய் மொழிகளின் இருப்பும், தொடர்ச்சியும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

வங்காள மொழியினை அரச கரும மொழியாக ஆக்கக் கோரிய வங்கதேச மாணவர்களின் எழுச்சியும் அதன் போது மரணித்த மாணவர்களின் நினைவும் அது தொடர்பான வங்கதேசத்தின் கோரிக்கைகளும் சருவதேச தாய்மொழித் தினத்தை பிரகடனப்படுத்த யுனெஸ்கோவிற்கு வாய்ப்பினை வழங்கியுள்ளது.

இந்த வகையில் இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இன்றைய உலகமயமாக்கல் சூழலின் சவால்களை எதிர்கொண்டு தமது மொழியை ஆதாரமாகக் கொண்ட தம் பண்பாட்டின் தனித்துவங்களைப் பாதுகாத்து அவற்றை வலுவூட்டி முன்னெடுத்தலுக்கான செயற்பாடுகள் குறித்து ஆர்வஞ்செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

உலகந்தழுவி வேற்றுமைகளுள் ஒற்றுமை கண்டு தமிழ்ப்பண்பாடுகளை வளப்படுத்தி வலுவூட்டி முன்கொண்டு செல்வதற்கான காத்திரமான உரையாடல்களை சர்வதேச தாய்மொழித் தினத்தை மையப்படுத்தி உரையாடுவது பொருத்தமாகும். இவ்வுரையாடல்கள் தமிழ் சூழலில் கிழக்கிலங்கையில் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு காத்திரமான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சருவதேச தாய்மொழி நாள் யுனெஸ்கோவால் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டிலிருந்தே இத்தினத்தினை பிரக்ஞைபூர்வமாகக் கொண்டாடும் நடவடிக்கைகள் கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பில் தொடங்கப்பெற்றுள்ளன. இதில் மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவினரும்,  கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையும், 2015 இன் பின்னர் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பண்பாட்டு பீட மாணவர் அவையின் ஏற்பாட்டில் இந்நாள் கிழக்குப்பல்கலையில் முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. சுதேச மொழிகளின் இருப்பும் முன்னெடுப்பும் குறித்து காத்திரமான உரையாடல்கள் இதில் நடைபெற்றிருந்தன.

மூன்றாவதுகண் நண்பர்கள் குழுவினரின் செயற்பாடுகள்

இதேவேளை (2002 இலிருந்து) மூன்றாவதுகண் நண்பர்கள் தாம் செயற்பட்ட இடங்களில் தமிழ் மொழியில் துறைசார் அறிவு அனுபவ ஆற்றல்களைப் பகிரும் ஆளுமைகளை அடையாளங்கண்டு அவர்களது இல்லம் சென்று மல்லிகை மலர் கொடுத்து வாழ்த்துக் கூறும் செயற்பாட்டை குறித்த தினத்தில் மேற்கொண்டார்கள்.

பண்டிதர்கள், பாரம்பரியக் கலைஞர்கள், அண்ணாவிமார், பாரம்பரிய வைத்தியர்கள், சோதிடர்கள், ஆசிரியர்கள் எனத் தமிழில் அறிவு அனுபவங்களை வழங்கி வரும் ஆளுமைகள் பலர் வாழ்த்திக் கௌரவிக்கப்பட்டார்கள். விசேடமாக சிறுவர் குழுவினர் இச்செயற்பாட்டைச் செய்ய வழிப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

இத்தினத்தில் சிறு சிறு விழாக்களை ஏற்பாடு செய்து நடத்துதல் முக்கியம் பெற்றுள்ளது. இதில் உரையாடல்கள், ஆற்றுகைகள், கௌரவிப்புக்கள் எனப்பல செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

இத்தோடு தாய்மொழி நாள் குறித்த வாழ்த்து மடல்கள், பிரசுரங்கள் தயாரித்து வழங்கும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரசுரங்களில் 21 ஆம் நூற்றாண்டில் தமிழை வளமூட்டி முன்னெடுத்தலுக்கான உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது உலகம் முழுவதும் வெவ்வேறு பண்பாடுகளின் அனுபவங்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தகவல் தொடர்பாடல் இணையவழித் தமிழினூடாக ஒன்றிணைந்து காரியமாற்றுவதற்கான சாத்தியங்கள் தொடர்பாகவும், வெவ்வேறு பண்பாடுகளின் அனுபவங்களை நேரடியாகத் தமிழுக்குத் தரும் நடவடிக்கைகள் மூலமாகத் தமிழ் மொழியை 21 ஆம் நூற்றாண்டில் உலகின் அறிவு அனுபவங்களை உட்கொண்ட மொழிகளுள் ஒன்றாக  வளமூட்டி வலுவூட்டி முன்னெடுப்பதற்கான பொருத்தப்பாடுகள் குறித்தும் முன்மொழியப்பட்டு உரையாடப்பட்டிருந்தது.

அத்தோடு ஆங்கிலம் வழியாக மட்டுமன்றி நேரடியாக உலகின் அனுபவங்களை அந்தந்த மொழிகளின் மூலத்திலிருந்தே தமிழுக்கு கொண்டு வரும் வல்லமை உலகில் பரந்தும் சிதறியும் வாழும் இலங்கைத்தமிழ் புலம்பெயர் தமிழ் சமூகத்தால்  சாத்தியப்படக்கூடிய வல்லமைகள் குறித்தும் உரையாடப்பட்டிருந்தது.

மேலும் தமிழ் மொழியில் உள்ள ஆண் ஆதிக்க, சாதி மேலாதிக்க மொழியாளுகையின் தன்மைகள் தொடர்பான விமர்சனங்களும் அவற்றை நீக்கி அனைத்து மனிதர்களுக்கும் உரிய மொழியாக மீளுருவாக்குவதின் அவசியம் பற்றியும் காத்திரமான உரையாடல்களும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் இவ்வருடம் தமிழிசையால் எழுவோம் என்ற தொனிப்பொருளில் தமிழ் மொழியின் இருப்பிற்கும், வளர்ச்சிக்கும் வரலாறு நெடுகிலும் அடிப்படையாக இருந்து வரும் இசைமொழியின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி தாய்மொழி நாள் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் மூன்றாவதுகண் நண்பர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதாவது தமிழ்ப்பண்பாட்டில் அறிவியலையும், புதிய அனுபவங்களையும் வெகுசனப்படுத்துவதில் இசைமொழியின் வகிபாகம் குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகின்றது. தமிழ்ப்பண்பாட்டில் சவால்கள் பல தோன்றிய போது அச்சவால்களை எதிர்கொண்டு தமிழ்ப்பண்பாடுகளை உயிர்ப்புக் கெடாமல் தழைத்தோங்கச் செய்வதில் தமிழில் உள்ள பல்வேறு இசைமொழிகளும் இதனைக் கையாண்ட இசைக்கலைஞர்களது செயற்பாடுகளும் கவனிப்பிற்குரியவையாகவுள்ளன.

குறிப்பாக இலங்கைத் தமிழ் இசைமொழியின் வரலாற்றில் பல்வேறு வித்தியாச வித்தியாசமான உள்ளுர் இசை வடிவங்களும், இசை ஆற்றுகைகளும் இடம்பெற்று வருவதனைக் காண்கின்றோம். இவற்றை மேற்கொள்ளும் கலைஞர்களும் செயற்பாட்டாளர்களும் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் தத்தமது சொந்த முயற்சியையும் அர்ப்பணிப்பையும் மூலதனமாகக் கொண்டே இத்தகைய முன்னெடுப்புக்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

எனவே இத்தகைய பல்வகையான உள்ளுர்த் தமிழ் இசைமொழியின் முக்கியத்துவத்தையும் உள்ளுர்த் தமிழ் இசைமொழியாளர்களையும் அடையாளங்கண்டு அவர்களினது செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை பொதுவெளியில் உரையாடலுக்குக் கொண்டு வந்து அவர்களை மாண்பு செய்து மேலும் தமிழ் இசைமொழியின் பல்வகைப்பரிமாணங்களுடாக உலகெலாம் தமிழ் மொழி தழைத்தோங்கப் பணி செய்வோம்.

https://www.ilakku.org/?p=42826

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மொழிக்காக உயிர்நீத்தாரை உலகம் போற்றும் நாள் உலகத்தாய்மொழி நாள் எம்மொழிக்காக உயிர்நீத்தாரை நாமும் போற்றுவோம் – சூ.யோ. பற்றிமாகரன்.

 
Capture-2-2.jpg
 30 Views

1952ஆம் ஆண்டில் பெப்ரவரி 21ஆம் நாள் கிழக்கு வங்காளத்தில் (இன்றைய பங்களாதேசத்தில்) தங்கள் தாய்மொழிக்காகப் போராடியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்து போற்றும் முகமாக 1999ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை உலகத்தாய்மொழி நாளைக் கொண்டாடி வருகிறது.

அவ்வகையில் ஈழத்தமிழ் மண்ணிலும் தமிழகத்திலும் உலகெங்கும் எங்கள் தாய்மொழியாம் தமிழுக்காக உழைத்தவர்களையும், உருகி மெழுகாகி உயிர்த்தீபங்களாக தமிழுலகில் ஒளிவீசி நிற்பவர்களையும் இந்நாளில் உலகத்தமிழினம் நன்றியுடன் நினைந்து போற்றுகின்றது. அதிலும் சிறப்பாக எங்கள் ஈழமண்ணில் 11.01.1974ஆம் நாள் அன்று நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டின் பொழுது சிறீலங்கா செய்த பண்பாட்டு இனஅழிப்பின் விளைவாக உயிர்த்தியாகம் செய்த 11பேரையும் நினைந்து எங்கள் தாய்மொழி நாளைக் கொண்டாடத் தொடங்கும் நாம் அன்று தொடங்கிய ஈழத்தமிழர் தேசிய விடுதலை என்னும் புனித பயணத்தில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்தும், சிறீலங்காப் படைகளாலும் இந்திய அமைதி காக்கும் படைகளாலும் உயிரை இழந்தும், எங்கள் தேசத்தின் மொழிக்காவல் ஒளித்தீபங்களாக எந்நாளும் பேரொளி பரப்பி நிற்கும் பல்லாயிரக்கணக்கான இன்தமிழர்களுக்கு இந்நாளில் வீரவணக்கம் செலுத்தி நிற்கின்றோம்.

இன்று உலகில் வழக்கில் உள்ள 6000 மொழிகளில் 43வீதமான மொழிகள் வழக்கு இறந்து இறக்கும் பேரபாயத்தில் உள்ளது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய எச்சரிப்பாக உள்ளது. இதனால் தாய்மொழிக்கல்வி தொட்டில் முதல் பிள்ளைக்கு ஊட்டப்படும் அமுதமாக அமைய வேண்டும் என்பது இன்று ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலகக் கல்வி பண்பாட்டு அறிவியல் மைய அமைப்பின் வேண்டுகோளாக உள்ளது. எனவே பள்ளிக்கல்வி தொடங்கப்பட முன்னமே தாய்மொழியைப் பிள்ளை விளங்கவும் பேசவும், எழுதவும் அறிந்திருக்கச் செய்திடல் முக்கியம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய வேண்டுகோளாக அமைந்துள்ளது.

உலகில் 1.5 மில்லியன் மாணவர்கள் இன்றைய கோவிட்-19 வீரியத் தொற்றால் தனிமைப்படுத்தலால் தாய்மொழிக்கல்வியைப் பெற இயலாத சூழ்நிலையில் உலகில் தவிப்பதையும், உலகெங்கும் பண்பாட்டு விழாக்கள் கொண்டாடப்பட இயலாத சூழ்நிலையைக் கோவிட்-19இன் விரைவுப்பரவல் தோற்றிவித்துள்ள இன்றைய நிலையில் இளையவர்களுக்கு தாய்மொழித்தன்மையை வளர்த்தல் என்பது பெற்றோர்களின் தலையாய கடமையாக மாறியுள்ளது என்பதையும் ஐக்கி நாடுகள் சபை சுட்டிக்காட்டி உள்ளது.

இன்று ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டும் தாய்மொழியைப் பெற்றோர் வளர்க்க இயலாத மனிதஉரிமை அவலநிலையை 1956ஆம் ஆண்டு ஆனி மாதம் 5ஆம் திகதி சிங்களம் மட்டும் சட்டத்தை ஈழத் தமிழர்கள் மேல்  சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் தொடர்ச்சியாக ஒரு மொழிக் கொள்கையைத்  திணித்து வரும் சூழலில் தாயகத் தமிழ்க்கல்விக்கு உதவும் உலகத் தமிழர் திட்டங்கள் வேகப்படுத்தப்பட வேண்டும்.

அதே வேளை இவ்வாண்டின் ஐக்கியநாடுகள் சபை இவ்வாண்டில் கல்வியும் சமூகத்திலும் பன்மொழிப்பண்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் சிறீலங்காவில் ஒரு இனம் ஒரு மொழி ஒரு நாடு என்னும் கிட்லரிசம் இந்த 21ஆம் நூற்றாண்டின் கல்வித் திட்டமாகச் சிறீலங்கா தான் செய்த ஈழத்தமிழின அழிப்புக்கான பொறுப்புக்கூறலும் நிலைமாற்று நீதி வழங்கலும் மறந்தும் கூடச் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களால் எக்காலத்திலும் முன்னெடுக்கப்பட்டு விடக் கூடாதென்பதை ஆழப்படுத்தவெனத் திட்டமிட்ட பண்பாட்டு இனஅழிப்பு நோக்குடன் அரச கொள்கையாக முன்நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதிக்கும், பாதுகாப்புக்குமான அனைத்து முயற்சிகளையும் ஈழத்தமிழர்களுக்குத் தடை செய்து வரும் சிறீலங்காவின் சிங்களப் பெரும்பான்மைப்பாராளுமன்ற ஆட்சியின் ஆதரவுடன் கூடிய சிறீலங்கா அரச அதிபர் சர்வாதிகார ஆட்சியில் இருந்து அவர்களை விடுவிக்கும் ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையை உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் காலதாமதமின்றி முன்னெடுத்தாலே ஈழத்தில் ஈழத்தமிழர்களின் தாய்மொழியாம் தமிழைச் சிறீலங்கா பண்பாட்டு இனஅழிப்புச் செய்வதில் இருந்து காப்பாற்றி ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர்களுக்கான தாய்மொழிப் பாதுகாப்பை உறுதி செய்ய இயலும் என்பதை உலகத் தமிழர்கள் தெளிவாக உலக நாடுகளுக்கும் உலக அமைப்புக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டிய நேரமிது.

 

https://www.ilakku.org/?p=42813

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
    • திங்கள் முதல் நானும் கவனித்தேன். எண்ணை விலை வீழ்ந்துகொண்டே போகிறது. பிட்காயின்ஸ் விலை வீழ்ச்சியோடு தொடர்பிருக்குமோ தெரியவில்லை.
    • 5 ஓ…. 8 ஓ…. 10 ஓ….. சும்மா வாய்க்கு வந்தபடி அண்ணைனை ஏசுவதில் எனக்கும் உடன்பாடில்லை. அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்…… முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.