Jump to content

குப்பைப் பொதியினுள் வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குப்பைப் பொதியினுள் வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

February 22, 2021

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு இடம் பெற்ற நிலையில் 12பவுண் தங்க நகையை தன்னையுமறியாமல் குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் வீசியுள்ளார்.

அப்பொதி சம்மாந்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்த நகையை தேடிய போது  காணாமல் போயிருப்பது கண்டறிப்பட்டது.

தொடர்ந்து, இவ்விடயம் சம்மாந்துறை பிரதேச சபை திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனை தொடாந்து சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களின் பணிபுரைக்கமைவாக உடனடியாக செயற்பட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் வங்களாவடி சேதனைப் பசளை உற்பத்தி நிலையத்தில் ஊழியர்களின் உதவியுடன் குறித்த திண்மக்கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்டிருந்த அனைத்து கழிவுக்குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆராய்ந்து, குறித்த நபரின் 12பவுண்தங்க நகை  தேடிக்கண்டு பிடித்து உரிய நபரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இதன் மூலம் சம்மாந்துறை பிரதேச சபைக்கு  நற்பெயரை ஈட்டிக் கொடுத்துள்ளது #குப்பைப்பொதி #தங்கநகை #ஒப்படைப்பு #சம்மாந்துறை

gold-2.jpg

https://globaltamilnews.net/2021/157219/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்......"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை ".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2021 at 13:26, suvy said:

பாராட்டுக்கள்......"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை ".

அதே போல்தான் கல்முனையில் ஒரு வர்த்தகர் தெரியாமல் 150,000 ரூபாவை குப்பையில் வீசிவிட்டார் மாநகர சபை தொழிலாளிகள் கண்டு எடுத்துக்கொடுத்தார்கள் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார் மாநகர மேயர் அவர்கள் .

இதை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் இந்த சுத்திகரிப்பு தொழில் இருப்பவர்கள் அதிகமானவர்கள் தமிழர்கள் ஏனென்றால் தமிழர்களுக்கு அமைச்சு இல்லை இருந்தால் வேற வேற துறைகளில் தொழில் கிடைக்கும்,கிடைத்திருக்கும்  . முஸ்லீம் அமைச்சர்கள் இருக்கும் துறையில் அவர்கள் அவர் இனத்தினருக்கு அதிகமான ஊழியர் வேலைகளை அள்ளிக்கொடுத்துள்ளார்கள் . தற்போது அவர்கள் அமைச்சில் இல்லையென்ற படியால்  அ து மட்டுப்ப்படுத்தப்பட்டுள்ளது .

சமூகம் அவர்களை குப்பைக்காரர்கள் என்று சொன்னாலும்  அவர்கள் சுத்தக்காரர்கள் குப்பைக்காரர்கள் நாம்தான் என என் மனதுக்குள் தோன்றும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சமூகம் அவர்களை குப்பைக்காரர்கள் என்று சொன்னாலும்  அவர்கள் சுத்தக்காரர்கள் குப்பைக்காரர்கள் நாம்தான்

 👍

மோசடி செய்வதையும் நியாயபடுத்தியும் சொல்கிறோமே 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதே போல்தான் கல்முனையில் ஒரு வர்த்தகர் தெரியாமல் 150,000 ரூபாவை குப்பையில் வீசிவிட்டார் மாநகர சபை தொழிலாளிகள் கண்டு எடுத்துக்கொடுத்தார்கள் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார் மாநகர மேயர் அவர்கள் .

இதை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் இந்த சுத்திகரிப்பு தொழில் இருப்பவர்கள் அதிகமானவர்கள் தமிழர்கள் ஏனென்றால் தமிழர்களுக்கு அமைச்சு இல்லை இருந்தால் வேற வேற துறைகளில் தொழில் கிடைக்கும்,கிடைத்திருக்கும்  . முஸ்லீம் அமைச்சர்கள் இருக்கும் துறையில் அவர்கள் அவர் இனத்தினருக்கு அதிகமான ஊழியர் வேலைகளை அள்ளிக்கொடுத்துள்ளார்கள் . தற்போது அவர்கள் அமைச்சில் இல்லையென்ற படியால்  அ து மட்டுப்ப்படுத்தப்பட்டுள்ளது .

சமூகம் அவர்களை குப்பைக்காரர்கள் என்று சொன்னாலும்  அவர்கள் சுத்தக்காரர்கள் குப்பைக்காரர்கள் நாம்தான் என என் மனதுக்குள் தோன்றும் 

ராசன்! கிழக்கின் விடிவெள்ளிகள் இருக்கிறார்கள்.கவலை வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

ராசன்! கிழக்கின் விடிவெள்ளிகள் இருக்கிறார்கள்.கவலை வேண்டாம்.

அவர்கள் வேற வேலை எடுத்துக்கொடுத்தாலும் வேலையும் அபிருத்தியும் போதுமா என கேட்டு மீண்டும் மலையேறுவீர்கள் அதனால்  அவர்கள் பற்றி எழுத விரும்பல அவர்கள் செய்யுறத செய்யட்டும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.