Jump to content

நாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணவதிப்பிள்ளை. அவர்களின் 19ஆவது ஆண்டு நீங்கா நினைவில்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணவதிப்பிள்ளை. அவர்களின் 19ஆவது ஆண்டு நீங்கா நினைவில்.

breaking

19ஆவது ஆண்டு நீங்கா நினைவில்……..

நாட்டுப்பற்றாளர்பண்டிதர் ப.கணவதிப்பிள்ளை.

 

யாழ் மாநகரில் வளங்கள் பல நிறைந்த அரியாலையூரில் பரமானந்தர் பார்வதி தம்பதிகளின் ஏகபுதல்வராக முத்தாக மலர்ந்தவர்தான் நாட்டுப்பற்றாளர் பண்டிதர் ப.கணவதிப்பிள்ளை. அரியாலை ஸ்ரீ/பார்வதி வித்தியாலையத்திலும், யா/கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலையத்திலும் கல்விபயின்றார். ஆசிரியாராகவும், அதிபராகவும் கடமையாற்றி மாணவர்களை நல்வழிப்படுத்தி நற்பிரயைகளாக உருவாக்கியவர். ஏன், எப்படி, எதற்கு என்ற வினாக்களை கிளர்த்தி நிறைவான பதில் கிடைத்தால் மட்டுமே அவற்றைச் சிக்கனப்பற்றிடும் அறிவாளராய் அவர் விளங்கினார்.

 

JSkAReiBdG7t5Y0apcCt.jpg

பிரதேசத்திலுள்ள பல ஆலயங்களில் கூட்டுப்பிராத்தனை, பஞ்சபுராணம் ஒதுதல்,புராணபடனம், திருவாசகம், முற்றோதல், சொற்பொழிவு ஆகிய சிவப்பணிகளில் அயராது ஈடுபட்டு அரும்பணியாற்றியவர். கோவில்கள், சன சமூகநிலையங்கள், திருமுறைமன்றங்கள், இந்துமா மன்றங்கள் ஆகியவற்றில் பல பணிகளை பொறுப்பெடுத்து அதற்கூடக பல சமூக பணிகளை மேற்கொண்டு அவ்வூர் மக்களை நல்வழிப்படுத்தினார்.

 

தந்தை செல்வாவுடன் இணைந்து தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை பெறுவதற்காக முக்கிய பங்கு வகித்தவர். பின்நாளில் எமது தமிழீழ விடுதலைப் போரட்டத்தின் தேவையை உணர்ந்து பல மக்களுக்கு போராட்ட விழிப்புணர்வுகளை அதன் தேவையையும் உணர்த்தியதோடு நல்லுர் வட்டவைத்தலைவராக செயற்பட்டார். ஆயுதம் தாங்கியபடி இன அழிப்புகளை மேற்கொள்ளும் சிங்களத்தை ஆயுதம் கொண்டுதான் அடக்கமுடியும் என்பதை உணர்ந்து துணைப்படை பயிற்சியை பெற்று தன்போன்ற பலருக்கு ஆயுதப்போராட்டத்தின் தேவையை உணர்த்தினார். அதுமட்டுமல்லாது தனது மூத்த இரண்டு மகன்களான 21/10/1987 ல் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர், அவரது அண்ணனான இறுதியுத்தத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட புதியவன் மாஸ்ரர் ஆகியோரை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக கொடுத்தவர் இவ்வாறு தமிழீழத் தேசியத் தலைவரவர்களின் செயற்பாடுகளுக்கு மிக்க உறுதுணையாகவும் செயற்பட்டார். இதனால் தமிழீழத் தேசியத் தலைவரவரது மதிப்புக்குரியவராக திகழ்ந்தார்.

 

uE8NxZBbd9lMUrXY3Gsz.jpg

வாழ்வில் பெற்றுகொண்ட அனுபவங்களையும் போரட்டத்தின் தேவைகளையும் தனது தனிமனித ஆளுமையால் தான் செயற்படுத்திய அனைத்து தளங்களிலும் ஆதாவது கோவில்களிலும், பாடசாலைகளிலும், மன்றங்களிலும் கொண்டுசென்றோதோடு மட்டுமல்லாது எதிர்கால கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு பாடசாலை நிறைவடந்தவுடன் அவ்வவ் வகுப்புகளுக்காகன இலவசக் கல்வியையும் வழங்கிவந்தார் தனது உடல்நிலை இயலாத நிலையிலும் இறுதிவரை மக்களுக்கான பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு அவ்வவ் காலங்களில் மக்களுக்குத் தேவையான போரட்ட அரசியல் தெளிவுகளையும் ஏற்படுத்தி தமிழ் தேசியத்திற்கான போராட்டத்துக்கு அயாரது பாடுப்பட்டுக்கொண்டு வரும் காலத்தில் சுகயீனம் காரணமாக 22.02.2002ல் சாவடைகின்றார். இவரது தேசத்திற்கான தன்னலமற்ற கடமையுணர்வை உணர்ந்துகொண்ட தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் நாட்டுப்பற்றாளர் என்று மதிப்பளிக்கப்பட்டார்.
 

 

https://www.thaarakam.com/news/38e427a4-425a-4089-8593-2413bbe72a21

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை: "அரசியல் உள்நோக்க குற்றச்சாட்டுகளை நிராகரியுங்கள்" 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@MFA_SRILANKA இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை மோசமடைந்து வருவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார். இந்த விவகாரம் தொடர்பான தீர்மானம் மீது இன்றைய நாளின் பிற்பகுதியில் உறுப்பு நாடுகள் அவற்றின்நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் காணொளி வாயிலாக பங்கேற்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பேசினார். "இலங்கை இதுவரை இல்லாத பரப்புரைகளால் இலக்கு வைக்கப்படுகிறது. இலங்கையை இன அடிப்படையில் பிரித்து ஒரு தனி அரசை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், மூன்று தசாப்தங்களாக நீடித்த பயங்கரவாத பிரசாரத்திற்குப் பின்னர், உலகின் இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிலிருந்து ஒற்றையாட்சி அரசு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக, இலங்கையின் ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக வீழ்த்தினர்." "இலங்கையில் பதவியில் இருந்த ஜனாதிபதி மற்றும் இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் தனது பயங்கரவாதத்தை விரிவுபடுத்தி இந்தியாவின் முன்னாள் பிரதமர் என இரண்டு உலக தலைவர்களை கொலை செய்த உலகின் ஒரே பயங்கரவாத அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகும்." "இலங்கையில் பயங்கரவாதத்தின் முடிவானது, அனைத்து உரிமைகளிலும் மிகவும் மதிக்கத்தக்க உரிமையான, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய அனைத்து இலங்கையர்களின் உயிர் வாழ்வதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளித்தது." "கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்புக்களை இலங்கை எதிர்த்துப் போராடியபோதிலும், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சவால்களுக்கு மத்தியிலும், நாங்கள் ஆகஸ்ட் 2020 இல் ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான பொதுத் தேர்தலை நடாத்தி, ஆசியாவின் மிகப் பழமையான நாடாளுமன்ற ஜனநாயக நாடுகளில் ஒன்றான எமது நாட்டில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது." "இலங்கைக்கு எதிராக செயல்படும் சக்திகள், வேறு நாடு சார்ந்த தீர்மானத்தை இங்கே முன்வைக்க விரும்புவது வருந்தத்தக்கது. இந்த அமைப்பு எந்த நோக்கத்துக்காக அமைக்கப்பட்டதா அதன் மதிப்புகள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில், வெறும் அரசியல் உள்நோக்க முயற்சிக்கு இலங்கை இரையாக வேண்டுமா என்பதை இந்த கவுன்சில் தீர்மானிக்க வேண்டும்," என்றார் குணவர்த்தன. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 முன்னதாக, இலங்கை உள்நாட்டுப்போரின்போது போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ராணுவ உயரதிகாரிகள் மற்றும் பிறருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் தலைமை அதிகாரி மிஷெல் பேச்லெட் வலியுறுத்தினார். 2009இல் முடிவுக்கு வந்த 37 ஆண்டுகால போரின் இறுதிகட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதி வழங்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற இலங்கை தவறி விட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார். அணி திரண்ட பிரிட்டிஷ் எம்.பி.க்கள் Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 இந்த வரைவுத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் வெளியிட்ட உடனேயே, பிரிட்டன் எம்.பிக்கள் தலைமையிலான தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு சார்பில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப்பிடம் ஒரு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இலங்கை போர் குற்ற விதி மீறல் தொடர்பான ஆவணங்களை தொகுப்பதுடன், தன்னிச்சையான விசாரணைக்கு பிரிட்டன் சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டு இலங்கையின் முயற்சியை ஆதரிக்குமாறு இந்தியாவுக்கு இலங்கை அழைப்பு விடுத்தது. எனினும் இந்த விவகாரத்தில் இந்தியாவின் கருத்து இதுவரை தெளிவாகவில்லை. ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை: "அரசியல் உள்நோக்க குற்றச்சாட்டுகளை நிராகரியுங்கள்" - BBC News தமிழ்
  • நெடுக்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
  • தமிழ்சிறியின் நகைச்சுவை உணர்வுக்கு இந்த ஆக்கம் கொஞ்சம் சுமார்தான். யாழ்கள உறவுகளை வைத்து நகைச்சுவையாக ஒரு ஆக்கம் உருவாக்குங்கள் எல்லோராலும் விரும்பபடும். அனைவருடனும் நட்பாக பழகும் உங்களை யாரும் கோவித்து கொள்ள மாட்டார்கள்.
  • TKR ன் தாயகத்தில் இருந்தபடி புலத்தின் உறவுகளுக்கு அங்குள்ள யதார்த்த நிலமையினை உறைக்க சொல்லும் கருத்துக்களில் எப்போதுமே உடன்பாடு உண்டு. ஆனால் திடீர் விடிவெள்ளி அரசியல்வாதிகளின்மீது நீங்கள் காட்டும் பரிவு மட்டுமே சுத்தமா பிடிப்பதேயில்லை. முஸ்லீம் சமூகம் ஆளும் வர்க்கத்துடன் ஒட்டியுறவாடியதால்  குப்பை மட்டுமே அள்ள  அங்குள்ள தமிழர்களை தள்ளிவிட பட்டார்கள் என்ற உங்கள் தகவல் ஒரு திரியில் பார்த்தேன்...  தாயகத்தில் குப்பை அள்ளும் தமிழர் பற்றியும் எழுதுகிறீர்கள், தாயகத்துக்கு குட் பாய் சொல்லிவிட்டு போன தமிழர்கள் பற்றியும் எழுதுகிறீர்கள், எழுத்திலும் உங்கள் பெயர் தனிதான்.  
  • அப்படியா எனக்கு தெரியாது.ஆனால் இது இயற்கையாக இருப்தால் ஆரோக்கியம் அதிகமாக இருக்கும். நன்றி சுவி
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.