Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கொரோனா வைரஸ் தாக்கினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தாக்கினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் தாக்கினால் உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால் அவரது நுரையீரலும், இதயமும் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்று முதலில் ஆய்வு தகவல்கள் தெரிவித்தன. பிறகு சிறுநீரகத்தையும் இந்த வைரஸ் மிக வேகமாக தாக்கும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் குணம் அடைந்தாலும் அவர்கள் எதிர்காலத்தில் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஒரு ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்பட்டு ஆண்மைத் தன்மை பறிபோகும் என்ற ‘பகீர்’ தகவல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா வைரசின் பிந்தைய பின் விளைவுகள் பற்றிய மிகப் பெரிய ஆய்வை இந்திய விஞ்ஞானிகள் நடத்தினார்கள். ஐதராபாத், நாக்பூர், பெங்களூர், பாட்னா, சண்டிகரில் உள்ள விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து இந்த ஆய்வை நடத்தினார்கள். அதில் கொரோனா பாதித்தால், அவர்களது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மிக சிறிய உடல் உறுப்புகளையும் வைரஸ் பாதிக்கும் என்று இந்திய விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இருதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றில் மட்டுமின்றி ரத்த நாளங்களையும் கொஞ்சம், கொஞ்சமாக பாதிக்கும் என்கிறார்கள். இத்தகைய பாதிப்புகளில் இருந்து தப்பிக்க தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/02/22110243/2375055/Tamil-News-study-information-Corona-virus-infects.vpf

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கடவுள் வேறு, கடவுள் சிலைகள் வேறு.....வாரியார் சுவாமிகள்......!  🌹
  • இது நுணாவின் வேலையாய்த்தான் இருக்கும்.....இப்ப அவர் அவர்களுடன் தொடர்பில் இருப்பார் என்று நினைக்கிறன்......!  😂
  • நீங்கள் சரியான அல்பமாய் இருக்கிறீங்கள் பிரியன்.....மணமகளுக்கு ஒரு 18ல் இருந்து 20 க்குள் என்று மாற்றி விண்ணப்பிக்கவும்.......!  😁 கணிதம் :  62 - 18 = 44.....!                      18 - 62 = ? 😴.....!
  • உடல்நலம்: காற்று மாசு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை -'நினைத்ததைவிட மோசம்' 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP   படக்குறிப்பு, காற்று மாசின் மோசமான தாக்கம் அதிகமுள்ள உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று தாங்கள் முன்பு கருதியதை விட காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் காற்றை மாசுபடுத்தும் நைட்ரஜன் டை ஆக்ஸைட் போன்ற நச்சுப் பொருட்களின் அதிகபட்ச பாதுகாப்பு அளவை குறைத்துள்ளது. காற்று மாசுபாடு தொடர்புடைய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 70 லட்சம் பேர் தங்கள் வாழ வேண்டிய காலத்துக்கு முன்பே இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் ஏழை நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மரபுசார் எரிபொருட்களை நம்பியுள்ளதால், அவர்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். புகைப் பிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வது போன்ற பிரச்னைகளுக்கு நிகராக காற்று மாசுபாட்டை வைத்திருக்கிறது உலக சுகாதார அமைப்பு. வரும் நவம்பர் மாதம் COP26 உச்சி மாநாடு நடக்கவுள்ளது. அதற்குள், 194 உறுப்பு நாடுகளையும் தங்களின் நச்சுக் காற்று உமிழ்வைக் குறைக்க வலியுறுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு. மேலும் பருவநிலை மாற்றம் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதலில், பி எம் 2.5 நுண்துகள்களின் அதிகபட்சம் சுவாசிக்கத்தக்க அளவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நுண் துகள்கள் மின்சார உற்பத்திக்காக எரிபொருட்கள் எரிக்கப்படுவதாலும், வீடுகளில் வெப்பமூட்டும் அமைப்புகளாலும், வாகனங்களின் இன்ஜின்களாலும் உருவாகின்றன. உங்கள் உணவு ஊட்டச்சத்து மிக்கதா என அறிவது எப்படி? காற்று மாசு மிகுந்த டெல்லியில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் ஆபத்து அதிகம்: ஆய்வு "தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு காற்று மாசுபாடுகள் குறைக்கப்பட்டால், பி எம் 2.5 நுண் துகள்களால் ஏற்படும் மரணங்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தைத் தவிர்க்கலாம்" என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதோடு பி எம் 10 என்கிற நுண் துகள்களின் பரிந்துரைக்கப்பட்டுள்ள அதிகபட்சம் சுவாசிக்கத்தக்க அளவும் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டுக்கும் இதய நோய் மற்றும் மாரடைப்புக்கும் தொடர்புள்ளது. குழந்தைகள் மத்தியில் காற்று மாசுபாடு நுரையீரலின் வளர்ச்சியைக் குறைத்து, ஆஸ்துமாவை அதிகப்படுத்தும். "காற்றின் தரத்தை உயர்த்துவது பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும். நச்சுக் காற்று உமிழ்வைக் குறைப்பது காற்றின் தரத்தை உயர்த்தும்" என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. சுற்றுசூழல் பகுப்பாய்வாளர் ரோஜர் ஹரபினின் பகுப்பாய்வு ஒவ்வொரு தசாப்தத்திலும் மெல்ல பாதுகாப்பான மாசுபாட்டு அளவு குறைக்கப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,REUTERS இதய நோய் மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இது செய்தியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த நச்சுப் பொருட்கள் மற்றும் வாயுக்கள் முன்பு கருதியதை விட குறைந்த வயதிலேயே மக்களை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. மிக ஆபத்தான மாசுபாட்டை ஏற்படுத்தும் பொருட்கள் எவ்வளவு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருப்பதை விட, பிரிட்டனின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது நான்கு மடங்கு அதிகம். கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய துகள்களை, நுரையீரலுக்குள் இழுத்து சுவாசிப்பதை நிறுத்துவது தான் மிகப் பெரிய பிரச்னை. அதை நிறுத்துவது மிகவும் கடினம். வாகனங்கள் மற்றும் வெப்பமூட்டும் அமைப்புகளிலால் காற்று மாசுபடுகிறது. ஆனால் மனிதர்களை பாதிக்கும் நுண் துகள்கள் மற்ற சில வழிகள் மூலமாகவும் காற்றில் கலக்கின்றன அல்லது வேதிப் பொருட்களோடு வேதிவினை ஏற்படும் போது காற்றில் உருவாகிறது. பெயின்ட்கள், சுத்தம் செய்யும் திரவங்கள், சால்வென்ட்கள், வாகனங்களின் டயர்கள், பிரேக் பாகங்கள் போன்றவைகள் நுண் துகள்களின் தோற்றுவாய்களாக இருக்கின்றன. எனவே மின்சார வாகனங்கள் கூட ஒரு கச்சிதமான தீர்வைக் கொடுக்க முடியாது. நீங்கள் நகரத்தில் வாழ்கிறீர்கள் என்றால், என்னதான் முயற்சி செய்தாலும் மாசுபாட்டிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம். https://www.bbc.com/tamil/science-58662495
  • தமிழர் வரலாறு: கேரள, கர்நாடக பகுதிகளில் நடக்கவுள்ள தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வு முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழ்நாட்டிற்கு வெளியில் வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. பாலூர், வேங்கி ஆகிய இடங்களின் குறித்து முந்தைய கட்டுரையில் பார்த்துவிட்ட நிலையில், தலக்காடு, பட்டனம் ஆகிய இடங்களின் பின்னணி குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். கர்நாடக மாநிலத்தின் தலக்காடு தலக்காடு, கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரத்தில் காவிரியின் இடது கரையில் அமைந்திருக்கிறது. தற்போது பாலைவனத்தைப் போலக் காட்சியளிக்கும் தலக்காட்டில் ஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தன. இவற்றில் பெரும்பகுதி தற்போது மணலில் மூழ்கிவிட்டன. தலக்காடு கங்க வம்ச மன்னர்களின் தலைநகரமாக இருந்த பிரதேசம். 11ஆம் நூற்றாண்டுவாக்கில் மேலைக் கங்கர்கள் சோழர்களிடம் தோற்றுப்போயினர். அப்போதிலிருந்து இந்தப் பகுதி ராஜராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. இதற்கு ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, ஹொய்சாள மன்னனான விஷ்ணுவர்தன சோழர்களை மைசூர் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்தான். முந்தைய பகுதி:தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்? இதற்குப் பிறகு தலக்காடு பகுதியில் ஏழு சிறு நகரங்களும் ஐந்து மடங்களும் ஸ்தாபிக்கப்பட்டன. காவிரியின் எதிர்ப்புறத்தில் மலிங்கி என்ற சிறு நகரம் இருந்தது. 14ஆம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதி ஹொய்சாளர்களிடம் இருந்தது. பிறகு விஜயநகரப் பேரரசிற்கு உட்பட்ட சிற்றரசர்கள் வசம் வந்தது. மைசூரை ஆண்ட உடையார்கள் 1630ல் இதனை கைப்பற்றினர். இப்படி அந்தப் பகுதி மைசூர் மன்னர்களால் கைப்பற்றப்பட்டது குறித்தும் அதனால் ஏற்பட்ட சாபம் குறித்தும் ஒரு கதை இப்பகுதியில் பேசப்படுகிறது. தலக்காட்டின் சாபம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக திருமலை ராயன் என்ற மன்னன் ஆண்டுவந்தார். அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படவே, தலக்காட்டில் இருந்த வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வேண்டிக்கொள்ள சென்றார். அவருடைய இரண்டாவது மனைவியான அலமேலம்மாள் ஸ்ரீரங்கப் பட்டனத்தில் இருந்தபடி, நாட்டை நிர்வாகம் செய்துவந்தாள். ஆனால், சீக்கிரத்திலேயே கணவன் இறக்கப்போகிறான் என்பது தெரியவந்தது. இதனால், ஆட்சிப் பொறுப்பை மைசூரை ஆண்ட உடையார்களிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு தலக்காட்டிற்குப் புறப்பட்டார் அலமேலம்மாள். கீழடி நாகரிகம்: "இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும்" - மு.க. ஸ்டாலின் கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது - வியப்பூட்டும் அகழ்வாய்வு முடிவுகள் ஆனால், ராணியிடம் இருந்த நகைகளைப் பறிக்க விரும்பிய மைசூர் மன்னன், அதனைப் பறிக்க ஒரு சிறிய படையை தலக்காட்டிற்கு அனுப்புகிறார். இதையடுத்து நகைகளோடு காவிரியாற்றிற்குள் இறங்கும் அலமேலம்மாள், நகைகளை நதிக்குள் தூக்கி எறிகிறார். தானும் அதில் மூழ்கி இறந்துபோகிறார். உயிர் பிரிவதற்கு முன்பாக ஒரு சாபமிடுகிறார். அந்த சாபம் இதுதான்: "தலக்காடு மண்ணோடு மண்ணாகட்டும், மலிங்கி சுழலில் மூழ்கட்டும், மைசூர் அரசர்களுக்கு பிள்ளையில்லாமல் போகட்டும்". இதற்குப் பிறகு இரண்டு விசித்திர சம்பவங்கள் உண்மையிலேயே நடந்தன. ஒன்று, பல நூற்றாண்டுகளாக துடிப்பு மிக்க நகரமாக இருந்த தலக்காட்டில் பல மீட்டர் உயரத்திற்கு மணல் சேர ஆரம்பித்தது. அதற்குப் பிறகு, உடையார் வம்ச அரசர்களுக்கு பட்டத்திற்கு வரும் வகையில் குழந்தைகளே பிறக்கவில்லை. சமீபத்தில் இறந்த ஸ்ரீ கந்ததத்த உடையார் வரை வாரிசு இல்லாமலேயே இறந்தார்கள் (ஆனால், இப்போதைய மகாராஜாவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது). 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தப் பகுதியில் மணல் சேர்வது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் 9-10 அடி உயரத்திற்கு மணல் சேர்ந்து வருவதால், மக்கள் இந்தப் பகுதியைவிட்டு தொடர்ந்து வெளியேற வேண்டியிருக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்கள் மணலுக்கடியில் மூழ்கியிருக்கும் நிலையில், கீர்த்தி நாராயணா கோயில் மட்டும் அகழாய்வு செய்து மீட்கப்பட்டுள்ளது. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆனந்தேஸ்வரா மற்றும் கௌரி சங்கரா கோவில்கள் மீட்டெடுக்கப்பட்டன. பாதாளேஸ்வரா கோயிலின் சுற்றுச் சுவர்களில் சில கல்வெட்டுகள் தென்பட்டன. இதில் ஒரு கல்வெட்டு கங்கர்கள் காலத்தைச் சேர்ந்த கன்னடக் கல்வெட்டு. மற்ற கல்வெட்டுகள் தமிழில் இருந்தன. கௌரிசங்கரா கோயிலில் உள்ள கல்வெட்டு, அந்தக் கோயிலானது சிக்கதேவராய உடையார் காலத்தில் கட்டப்பட்டதைத் தெரிவிக்கிறது. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 "கங்கர்கள் ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி வரை ஆட்சிசெய்தார்கள். கங்கர்கள் கால கல்வெட்டுகள் கிருஷ்ணகிரியில்கூட கிடைக்கின்றன. ஒரு காலத்தில் மாண்டியா பகுதி தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுதிதான். தலக்காட்டிற்கும் சோழர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆகவே அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக தொல்லியல் துறை விரும்புகிறது" என்கிறார் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியரும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையுடன் இணைந்து செயல்படுபவருமான பேராசிரியர் கே. ராஜன். பட்டனம் (முசிறி) பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம்தான் பட்டனம். இந்தப் பகுதியில் நீண்ட காலமாகவே, பல்வேறு பணிகளுக்காக நிலத்தைத் தொண்டும்போது மேலடுக்கிலேயே பெரிய அளவில் ஓடுகள் போன்றவை கிடைத்துவந்ததையடுத்து இந்தப் பகுதி ஒரு தொல்லியல் தளமாக அடையாளம் காணப்பட்டது. இந்த இடத்தில் வரலாற்று ஆய்வுக்கான கேரளா கவுன்சில் (கேசிஎச்ஆர்) 2007ல் இருந்து 2020வரை பத்து முறை தொல்லியல் ஆய்வுகளை நடத்தியுள்ளது. பதினொன்றாவது ஆய்வு இந்த மாதத் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கி.மு. ஆயிரமாவது ஆண்டிலிருந்து இந்த இடத்தில் மக்கள் வசித்ததற்கான தொல்லியல் பொருட்கள் இங்கிருந்து கிடைத்துள்ளது. கி.மு. 3 மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதி மிகவும் துடிப்பு மிக்க பகுதியாக இருந்திருக்கிறது. பட மூலாதாரம்,KERALA COUNCIL FOR HISTORICAL RESEARCH பாமா என்ற தனியார் அமைப்பு 2006 முதல் 2016 வரை பட்டினம் பகுதியில் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கிடைத்தன. சுமார் ஏழுரை கிலோ மிளகும் கிடைத்தது. சுமார் பத்து ஓடுகளில் தமிழி எழுத்துகள் கிடைத்தன. ஒரு பானை ஓட்டில் ஊர் பா வே ஓ என்றும் ஒரு பானை ஓட்டில் அமண என்ற எழுத்துகளும் கிடைத்திருக்கின்றன. சங்ககால சேர நாட்டு துறைமுகமான முசிறயின் ஒரு பகுதியாகவே பட்டணம் இருக்குமென தமிழக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். "சங்க இலக்கியங்களில் வரும் பேரியாறு என்பது தற்போதைய பெரியாற்றைத்தான் குறிக்கிறது. ஆகவே இந்த இடம் தமிழ்நாட்டோடு தொடர்புடைய இடம்தான். தமிழர்களின் தொடர்புகள் எங்கெங்கு இருந்திருக்குமோ, அந்ததந்த இடங்களிலெல்லாம் அகழாய்வு செய்வது தமிழ்நாடு தொல்லியல் துறையின் நோக்கமாக இருக்கிறது" என்கிறார் கே. ராஜன். வேறு மாநிலங்களில் இருக்கும் தொல்லியல் களங்களில் அகழாய்வை மாநிலத் தொல்லியல் துறை நேரடியாக செய்யாது என்றே தெரிகிறது. அங்குள்ள தொல்லியல் சார்ந்த அமைப்புகள், பல்கலைக்கழக தொல்லியல் துறைகள் ஆகியவற்றுடன் இணைந்தே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் முடிவுகள் மாநிலத் தொல்லியல் துறையால் வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/india-58657621
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.