Jump to content

பருத்திவீரன்' வெளியாகி 14 ஆண்டுகள்: தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த படம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

'பருத்திவீரன்' வெளியாகி 14 ஆண்டுகள்: தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த  படம்

paruthi-veeran-release-day-special-article

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான 'பராசக்தி' மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்ற மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக நிலைத்து நின்றது. அதேபோல் பல வெற்றிப் படங்களில் நடித்தும் வித்தியாசமான படங்களில் நடிப்பவர் திறமை வாய்ந்த நடிகர் என்றெல்லாம் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றும் திரைவானில் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் கார்த்தியின் அறிமுகப் படம் 'பருத்திவீரன்' பல காரணங்களுக்காகத் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள திரைப்படம்.

மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு தரமான சினிமா, அரிதான வாழ்வியல் படைப்பு என்று ரசிகர்களால் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட 'பருத்திவீரன்' 2007 பிப்ரவரி 23 அன்று வெளியானது. இன்றோடு அந்தப் படம் வெளியாகியும், சினிமா ரசிகர்களுக்கு கார்த்தி அறிமுகமாகியும் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.


மாறுபட்ட காதல் படமான 'மெளனம் பேசியதே', உளவியல் அம்சங்களை உள்ளடக்கிய க்ரைம் த்ரில்லர் படமான 'ராம்' எனத் தன்னுடைய முதல் இரண்டு படங்களிலேயே ரசிகர்கள், விமர்சகர்களின் பெரும் மதிப்பைப் பெற்றுவிட்ட இயக்குநர் அமீர். 'பருத்திவீரன்' இயக்குநராக அவருடைய மூன்றாம் படம் மட்டுமல்ல ஒரு படைப்பாளியாக அவருடைய மாஸ்டர் பீஸ் என்றும் சொல்லலாம். இதற்குப் பிறகு அவர் இயக்கத்தில் 'ஆதிபகவன்' என்னும் ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ளது.

1614070032343.jpg

 

கிராமங்களின் இன்னொரு யதார்த்தம்

மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த தாய்க்கும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்து பெற்றோரை இழந்து சித்தப்பாவிடம் வளர்ந்து அவருடன் சேர்ந்து சண்டித்தனம் செய்துகொண்டு திரியும் இளைஞன் தன் மாமன் மகளின் அப்பழுக்கற்ற காதலால் மதிக்கத்தக்க மனிதனாகக் கனிவதும் அந்தப் பெண்ணைப் பெற்றவர்கள், சுற்றத்தினரின் சாதிய மேட்டிமை உணர்வால் அந்தக் காதலுக்குக் கிடைக்கும் எதிர்ப்பும் அதனால் காதலர்களுக்கு என்ன ஆகிறது என்பதும்தான் 'பருத்திவீரன்' படத்தின் ஒன்லைன். இந்தக் கதைக்கு அனைத்து இயல்பான மனித உணர்வுகளையும் உள்ளடக்கிய உயிர்ப்பும் மிக்க திரைக்கதை அமைத்து மிக மிக யதார்த்தமான உண்மைக்கு மிக நெருக்கமான கிராமிய வாழ்வை தன் திரைமொழியால் பதிவு செய்திருப்பார் இயக்குநர் அமீர்.

மதுரையை ஒட்டிய கந்தக பூமியாக விளங்கும் கிராமங்களின் வெக்கையை உணர வைத்திருப்பார். கிராமங்கள் என்றால் விவசாயம், வயல்காடு, ஆற்றங்கரை, வெள்ளந்தியான மனிதர்கள், ஆலமரத்தடி பஞ்சாயத்து, திண்ணைப் பேச்சுகள் என்றே அதுவரை தமிழ் சினிமாவின் மிகப் பெரும்பாலான கிராமத்துப் படங்கள் காண்பித்துவந்தன. ஆனால், கிராமங்களின் இன்னொரு தவிர்க்க முடியாத யதார்த்தமான சாதி மேட்டிமை உணர்வை, தீண்டாமையை, சாதிய ஒடுக்குமுறைகளை, அதனால் எளிய மனிதர்களின் வாழ்வு தொடங்குவதற்கு முன்பே சிதைவுறுவதை எந்த சமரசமும் இன்றி பதிவு செய்தது என்பதனாலும்தான் 'பருத்திவீரன்' வரலாற்றின் மிக முக்கியமான திரைப்படமாகிறது.

1614070047343.jpg

 

சாதனைபுரிந்த கலைஞர்கள்

மூத்த நடிகர் சிவகுமாரின் மகன், அப்போது நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுவிட்ட நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையில் தடம் பதித்தார். முதல் பட நடிகர் என்று சொன்னால் நம்ப முடியாத அளவு தோற்றம். உடை, கண்பார்வை, உடல் மொழி என அனைத்திலும், ஊதாரியாகத் திரியும், மற்றவர்களை மிரட்டிப் பணம் பறித்து அடாவடி செய்யும் கிராமத்து இளைஞனைக் கண்முன் நிறுத்தினார் கார்த்தி. அன்று முதல் இன்றுவரை நடிப்பில் பல்வேறு பரிமாணங்களைக் காட்டிவருகிறார்.

இயக்குநர், கதாநாயகனுக்கு அடுத்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் திரைவாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் என்று 'பருத்திவீர'னை அடையாளப்படுத்தலாம். அதுவரை மேலைநாட்டுப் பாணியை ஒத்திருக்கும் இசைக்காக மட்டுமே அறியப்பட்டிருந்த யுவன் தன்னால் நாட்டாரியல் இசைக் கருவிகளில் கிராமத்து மண்மனம் வீசும் இசையைக் கச்சிதமாகவும் அற்புதமாகவும் அளிக்க முடியும் என்று பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணி இசை மூலமாகவும் நிரூபித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

'அறியாத வயசு', 'அய்யய்யோ' ஆகிய இரண்டு பாடல்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு தமிழ் சினிமாவின் கிராமத்துக் காதல் பாடல் தொகுப்புகளில் என்றென்றும் தவிர்க்க முடியா இடம் பிடித்தன. 'ஊரோரம் புளியமரம்' பாடல் நாட்டாரியல் இசைக் கருவிகளை சினிமாவுக்கான எந்த மாற்றங்களையும் செய்யாமல் அப்படியே ஒலிக்கச் செய்த அரிதான பாடல். அந்தப் பாடலும் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் பாடல்களில் ஒன்று. படம் முழுக்கவே தமிழ் நாட்டாரியல் இசையை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக யுவன் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப்பெறுவார் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அது நிகழவில்லை.

 

1614070065343.jpg

 

ஆனால் 'பருத்திவீரன்' படத்துக்கும் படத்தில் பணியாற்றியவர்களுக்கும் தேசிய விருது உட்படப் பல விருதுகள் கிடைத்தன. படத்தொகுப்பாளர் ராஜா முகமது சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதை வென்றார். ஒரு எளிய கிராமத்துப் பெண்ணின் சுயநலமற்ற காதலையும் உண்மையான காதல் கொடுக்கும் ஆவேசத்தையும் வைராக்கியத்தையும் வெகு இயல்பாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்தியதற்காகப் படத்தின் நாயகி பிரியாமணி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.

அரிதான விருதைப் பெற்ற நாயகி

1968-லிருந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. லட்சுமி ( 'சில நேரங்களில் சில மனிதர்கள்'), ஷோபா ( 'பசி'), சுஹாசினி ('சிந்து பைரவி'), அர்ச்சனா ('வீடு') ஆகியோர் மட்டுமே பிரியாமணிக்கு முன்பு தமிழ்த் திரைப்படத்துக்காகத் தேசிய விருது வென்ற நடிகைகள். அபார நடிப்புத் திறமை கொண்ட இந்த நடிகைகளின் பட்டியலில் பிரியாமணியும் ஒருவரானார். அதுவும் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்தின் நாயகிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது என்பது பிரியாமணியின் சாதனையை மேலும் சிறப்பானதாக்குகிறது.

மேலும், தமிழக அரசு 'பருத்திவீர'னை அந்த ஆண்டின் சிறந்த படமாகத் தேர்வு செய்து விருதளித்ததோடு பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான விருதையும், கார்த்திக்கு சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசையும் அளித்தது.

இப்படிப் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் விமர்சகர்களின் பாராட்டையும் ரசிக மனங்களில் நீங்கா இடத்தையும் பெற்றுவிட்ட 'பருத்திவீரன்' தமிழ் சினிமாவைத் தலைநிமிரச் செய்த அரிதான திரைப்படங்களில் ஒன்று என்று மிகையின்றிச் சொல்லலாம்.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/637171-paruthi-veeran-release-day-special-article-3.html

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • TKR ன் தாயகத்தில் இருந்தபடி புலத்தின் உறவுகளுக்கு அங்குள்ள யதார்த்த நிலமையினை உறைக்க சொல்லும் கருத்துக்களில் எப்போதுமே உடன்பாடு உண்டு. ஆனால் திடீர் விடிவெள்ளி அரசியல்வாதிகளின்மீது நீங்கள் காட்டும் பரிவு மட்டுமே சுத்தமா பிடிப்பதேயில்லை. முஸ்லீம் சமூகம் ஆளும் வர்க்கத்துடன் ஒட்டியுறவாடியதால்  குப்பை மட்டுமே அள்ள  அங்குள்ள தமிழர்களை தள்ளிவிட பட்டார்கள் என்ற உங்கள் தகவல் ஒரு திரியில் பார்த்தேன்...  தாயகத்தில் குப்பை அள்ளும் தமிழர் பற்றியும் எழுதுகிறீர்கள், தாயகத்துக்கு குட் பாய் சொல்லிவிட்டு போன தமிழர்கள் பற்றியும் எழுதுகிறீர்கள், எழுத்திலும் உங்கள் பெயர் தனிதான்.  
  • அப்படியா எனக்கு தெரியாது.ஆனால் இது இயற்கையாக இருப்தால் ஆரோக்கியம் அதிகமாக இருக்கும். நன்றி சுவி
  • சுதந்திரமாய் வாழ நினைத்ததாலும், சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த முயன்ற ஒரேயொரு குற்றத்தினாலும்தான் எம் தலைமை எம்மைவிட்டு தொலைந்து போனது சுவியண்ணா.
  • கவிதை எழுதுறேன் என்ற பேரில எல்லா மதத்தையும் கழுவி ஊத்தினமாதிரி தெரியுது.. நீங்க மதம் அல்ல, மாதம்.. அதாவது ‘பிர’மாதம்.
  • சொல்லுங்கள் மாமா .........இங்க பார் மகள் எனக்கும் ஓர் பெண் பிள்ளை இருக்குறா நான் பெய்ய சொல்ல விரும்பல உண்மைய சொல்கிறன் நீ என்ற மகனுடன் கதைச்ச நீயா ? தயங்கியவள் இல்ல மாமா நான் கோல் எடுத்த நான் ஆனால் அவர் ஆன்சர் பண்ணல.  ம்ம் தெரியும் அவனுக்கு கல்யாணம் கட்டுற ஐடியா இல்ல. என்ற மனிசி சொன்னது எல்லாம் பொய் அவன் உன்ற வாழ்க்கைக்கு சரிவரமாட்டான். அவன் அந்த நாட்டு வாழ்க்கை வாழ்கிறான் உன் வாழ்வை கெடுத்துக்கொள்ளாதே நல்லா இரு மகள் உனக்கும் கையில் வேலை இருக்கிறது நல்ல பெடியனா பார்த்து கல்யாணம் கட்டு  என ஏக்கத்துடன் . சொல்லிவிட்டு விடைபெறுகிறார்.மாணிக்கவாசகர்  வரும் வழியில் தான் வெளிநாட்டு வாழ்கையில் தன் பிள்ளையைக்கூட ஒழுங்காக வளர்க்க முடியாத நாட்டில் வாழ்ந்து தொலைக்கிறோமே என் எண்ணியும். தனக்கும் ஓர் பெண் பிள்ளை இருப்பதை எண்ணியும். தன் காலில் உள்ள தடத்தையும் எத்தனை கண்டிப்பு எத்தனை அடி தன் தகப்பனின்ற வாங்கி நான் வளர்திருப்பேன். ஆனால் தற்போத்ய வாழ்வில் தங்கள் பேச்சைக்கூட கேட்காத பிள்ளையை வளர்த்த என்னிடம் எந்த பிழையும் இல்லை. நாடும் சட்டமும் நாகரிகமும் நம்மை நமது வாழ்வையும் தொலைத்து தொலைவில் கொண்டுபோய் விடுகிறது என எண்ணி வீடு செல்கிறார். அடுத்த நாள் கொழும்பு விமான நிலையம் வருகிறோம் ஐயர் என்ன சொல்கிறார்? ஐயர் கொஞ்ச பரிகாரம் செய்ய சொல்கிறார் ஓ அப்படியா மனிசி கோல் எடுக்கிறா அந்த பிள்ளையின் வீட்டுக்கு ஹலோ ரம்யாவா ஓம் சொல்லுங்க மாமி ஐயர் வந்து கொஞ்ச பரிகாரம் செய்ய சொல்லுறார் நான் இங்குள்ள ஐயரிட்ட காட்டியும் உங்களுக்கு கல்யாணம் வைக்கிற தேதிய‌ சொல்லுறன் சரியோ சரி மாமி கவனமாக போய்வாருங்கோ ஓம் நான் வைக்கிறன் . சரி  லண்டன் வந்த அவர்கள் மீண்டும் அவர்கள் வந்திறங்கியதை அறிவிக்க அழைப்ப்பு எடுக்கிறார் சாரதா. ரம்யாவின் போண் நிறுத்தப்பட்டு இருந்த்து . இஞ்சாருங்கோ போண் வேலை செய்யுதில்லை பரிமளத்த்க்கு எடுத்து பாரேன் என நான் சொல்ல. பரிமளம் அக்கா ரம்யா போண் வேலைசெய்யுதில்ல ஏன்? ஓ அதுவா அவளுக்கு லண்டன் வர விருப்பம் இல்லையாம் ஏனாம் அவளுக்கு விருப்பம் இல்ல? அவளுக்கு யாரோ என்னவோ சொல்லி இருக்காங்கள் போல கல்யாணத்துல விருப்பம் இல்லெண்டு சொல்லுறாள் . நாம பாவம் என்று பார்த்து வெளிநாட்ட்டுக்கு எடுத்து விடுவோம் என பார்த்தால் கழுதைக்கு விருப்பம் இல்லையாமா? அவள் இல்லாட்டி ஆயிரம் பொட்டைகள் கிடைப்பாள் என கடுங் குரலுடன் போணை வைத்தாள் சாரதா . இஞ்சாருங்க அந்த பெட்டை கல்யாணம் வேணாம் என்று சொல்லுதாம், அவளுக்கு இங்கு வந்து வாழ கொடுத்து வைக்கல ஆரோ  என்னவோ சொல்லி இருக்காங்களாம். நீங்கள் ஏதும் சொன்ன நீங்களோ? நான் என்ன சொல்ல போறன் நான் சில இடங்களை பார்க்கல எண்டு இருக்கன் நீ வேற.... ஓ உங்களுக்கு இடம் பார்க்கிரதுதான் முக்கியம் போல? சரி  சரி விடு வேற யாரையெண்டாலும் பார்ப்போம் என மாணிக்கவாசகரும்... என் மனதிற்குள் நான் செய்தது நன்மையா , தீமையா, நல்லதா, கெட்டதா என என்மனம் ஆயிரம் கேள்விகள் கேட்டு உறுத்திக்கொண்டே இருக்கிறது உறுத்துகிறது நல்லது என நினைத்தால் நல்லது கெட்டது என நினைத்தால் கெட்டது நல்லதுதான் செய்திருக்கிறேன் என உறுதிகொள்கிறார். மகளை வீட்டுக்கு அழைக்க போணை எடுக்கிறார். அப்போது அடுத்த மெசேஞ் வருகிறது காணொளியாக அதை திறந்த போது அங்கு P2P பேரணி சுமந்திரனும் , சாணாக்கியரும் பேரணி நடத்துகிறார்கள்.  சாரதா அந்த குளிசைப்போத்தல எடுத்துவா  பிரசர் கூடுனமாதிரி இருக்கு என்று கூறி போணை ஓவ் செய்கிறார் மாணிக்கவாசகர்.  முற்றும்  கற்பனையும் உண்மையும் சேர்த்து       நன்றி உடையார் உங்கள் கருத்துக்கு 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.