Jump to content

அல்லாஹ்வின் நீதிமன்றில் மன்னிப்பு இல்லையென்கிறது உலமா சபை: இயேசுவின் நீதிமன்றில் மன்னிப்பில்லை என்கிறார் கர்தினால்- ஞானசார


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)
இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. அளுத்கம தாக்குதல் நடைபெற்றபோதே விசேட ஆணைக்குழுவொன்றின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். எனினும் அதனைச் செய்யவில்லை. எனவே அதன் பின்னர் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்குப் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

 

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் நோக்கில் பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புக்கள் இணைந்து இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், நாட்டில் இயங்கும் தேசிய அமைப்புக்கள் மற்றும் இயக்கங்கள் தாக்குதலுக்கான தூண்டுதல் காரணியாக அமைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் தடைசெய்யப்பட வேண்டும் என அதன் பரிந்துரைகளில் கூறப்பட்டிருப்பதாகவும் ஆங்கிலப்பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் விசாரணை அறிக்கையை வெளியிடுமாறும், இல்லாவிட்டால் சர்வதேசத்தை நாடுவோம் என்றும்கூறி கட்டுப்பிட்டிய தேவாலயத்திற்கு முன்னாள் பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை போராட்டங்களை முன்னெடுக்கின்றார். சில வருடங்களுக்கு முன்னர் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் உருவாகிவருவது பற்றி நாம் எச்சரித்திருந்தோம். அப்போதே இதுகுறித்து கார்டினல் அழுத்தங்களை வழங்கியிருந்தால் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் ஏற்படாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அப்போது கார்டினல் இனநல்லிணக்கம், ஒற்றுமை, மனித உரிமைகள் என்பன தொடர்பிலேயே பேசினார்.

அதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யும் விவகாரத்தில், அதற்கு அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் மன்னிப்பு இல்லை என்று ஜம் இய்யத்துல் உலமா தெரிவித்தது. தற்போது உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விசாரணை அறிக்கை விவகாரத்தில் கார்டினலும் இயேசுவின் நீதிமன்றத்தில் அதற்கு மன்னிப்பில்லை என்றே கூறுகின்றார். எனவே இரு தரப்பினரும் ஒரே கருத்தையே கூறுகின்றார்கள். இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது தெளிவாகின்றது. இதனை நாட்டில் வாழும் பௌத்தர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விசாரணை அறிக்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆணைக்குழுவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமித்தார். ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது சுமார் 8 தடவைகள் முன்னிலையாகி, சாட்சியம் வழங்கிய பௌத்த தேரர் நானாகத்தான் இருப்பேன். எனவே முதலில் விசாரணை அறிக்கையின் பிரதியை எமக்குப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் கடந்த காலங்களில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. 

நாட்டில் இடம்பெறும் கலாசார, பாரம்பரிய ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் முதலில் மதத்தலைவர்களே ஆராய்ந்து, அவதானம் செலுத்தவேண்டும். மாறாக மல்கம் கார்டினல் ரஞ்சித் போன்றவர்கள் சர்வதேச அமைப்புக்களை நாடுவது குறித்துப் பேசத்தேவையில்லை. கார்டினல் அவரது நிலை என்னவென்பதை நன்கு புரிந்துகொண்டு பேசவேண்டும். எனவே இவ்விடயத்தில் தேவையற்ற குழுப்பங்களை ஏற்படுத்துவதை மல்கம் கார்டினல் ரஞ்சித் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

அல்லாஹ்வின் நீதிமன்றில் மன்னிப்பு இல்லையென்கிறது உலமா சபை: இயேசுவின் நீதிமன்றில் மன்னிப்பில்லை என்கிறார் கர்தினால்- ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்கிறார் ஞானசார | Virakesari.lk

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மல்கம் கார்டினல் ரஞ்சித் சரண்டர் ஞானசார தேரரிடம்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அன்று நாம் ஆசிரியர்களின் காலில் விழுந்து கும்பிடவில்லை.ஓரளவு மரியாதையுடன் வாழ்ந்தோம்.ஆசிரியர்கள் ,அதிபர்கள் தங்களை விழுந்து கும்பிட அனுமதிக்கவும் இல்லை .ஆனால் இன்று மேடைகளில் ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்பார்க்கின்றனர் விழுந்து கும்பிட வேணும் என்று.
  • இயற்கையே மாறிப்போச்சு..! ********************* கடல் நீரோ முக்கால் பாகம்-பூமி கால் பாகம் தரையே இங்கு இயற்கையின் செழிப்பு எல்லாம் ஏன் தானோ விறகாய் போச்சு   பாரெல்லாம் வெய்யில் வெக்கை பாலைவனம்போல் காயும் தேசம் நீரெல்லாம் வற்றித்தானே-எம் நிலமெல்லாம் புழுதியாச்சு   மழைவந்து கொட்டித் தாக்கும் மரமெல்லாம் காற்றால் சாயும் நெருப்பெல்லாம் காட்டுத் தீயாய் நிலமெல்லாம் நடுங்கித்தீர்க்கும்.   விஞ்ஞானம் உயர்ந்ததாலே விண் மேகம் கீழேயாச்சு சந்திரனில் கால் பதித்து—பூமி சரித்திரமே பின்னால் போச்சு   நெருப்போடு நீரும் காற்றும் நிலத்தோடு ஆகாய ஐம்பூதம் அத்தனையும் எம்முள் வைத்தே அகிலமே எம் உடலாய்யாச்சு   இயற்கையின் கொந்தளிப்பே-எம் உடலிலும் நோயாய் தோன்றும் அதனோடு இசைந்து வாழ்ந்தால் அனைவர்க்கும் இனிமை வாழ்வே.   அன்புடன் -பசுவூர்க்கோபி-
  • வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தோம். பனை அபிவிருத்தி தொடர்பிலும் ஆராய்ந்தோம் அதேபோல் பனை உற்பத்திகளை எவ்வாறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதையும் ஆராய்ந்தோம் அத்தோடு புகையிலை உற்பத்தி தொடர்பிலும் புகையிலை உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்தோம்.     படகுாகட்டுமானங்கள், விவசாயம் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பிலும் ஆராய்ந்தோம். அரச பொருளாதார ஊக்குவிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பினூடாக சில திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். வடபகுதியிலுள்ள சிறு தொழில் முயற்சியாளர்கள், நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தாமாகவே தமது நிலையை மேம்படுத்தி செல்வது வரவேற்கதக்கது. முதலீட்டாளர்களுக்கு எமது அமைச்சின் ஊடாக பூரண ஒத்துழைப்பினை வழங்க தயாராக இருக்கின்றோம். அத்தோடு மேலும் வடபகுதியில் இவ்வாறான சுயதொழில் முயற்சியாளர்கள் நடுத்தர முயற்சியாளர்களுக்கு எம்மாலான உதவியை ஒத்துழைப்பினை வழங்கி அவர்களை மேம்படுத்துவதன் மூலம் பிரதேங பொருளாதாரத்தை முன்னேற்ற செல்ல முடியும் என்பது எமது நோக்கமாகும். வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறப்பதற்கு நாங்கள் மிகவும் அவதானமாக செயற்பட்டு வருகின்றோம். எனினும் எதிர்காலத்தில் அவற்றை மீள திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். நுண் கடன் திட்டம் என்பது ஒரு பிரச்சினையான விடயமாக காணப்படுகின்றது. குறிப்பாக நுண் கடன் பட்டவர்கள் கடனை மீளச் செலுத்த முடியாத நிலை இங்கே காணப்படுகின்றது அதோடு இந்த நுண்கடன் தொடர்பாக நாடு பூராவும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக கடன் பெற்றவர் பலர் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. சிலர் கடனை பெற்று சில தொழில் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். எனினும் அந்த தொழில் முயற்சியானது, தொழில் சுற்றாடல் மற்றும் அகசூழல் காரணமாக அது சாத்தியப்படாத்தன் காரணமாக பொதுமக்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது” என்றார். யாழில் தொழிற்சாலைகளை மீள திறந்து பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
  • (எம்.மனோசித்ரா)   கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்படும் வரை அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் காணப்படும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,   இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் 800 - 1200 செல்சியஸ் வெப்பநிலையில் தகனம் செய்யப்பட்டது.  தற்போது சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. எனவே தற்போது தகனம் மற்றும் அடக்கம் ஆகிய இரண்டுக்கும் சட்ட பூர்வமாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது.   புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப உரிய அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படும் நிலங்களிலேயே சடலங்களை அடக்கம் செய்ய முடியும்.  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இதற்கான ஆலோசனை வழிகாட்டல்கள் வெளியிடப்படும் வரை , சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து கூறுவதிலும் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல் காணப்படுகிறது.   சடலங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டியை திறக்க முடியுமா ? , எந்தளவு ஆழத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும்? உள்ளிட்ட விடயங்களையும் உள்ளடக்கியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.  அத்தோடு இதுவரையில் உபயோகிக்கப்படுகின்ற நிலங்களிலேயே கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா அல்லது அவற்றுக்காக வேறு இடம் ஒதுக்கப்பட வேண்டுமா என்பவை தொடர்பிலும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றார். கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் | Virakesari.lk
  • நான் கடந்த 8 வருடங்களா மாலையில் நடக்கின்றேன் அந்த மாதிரி நன்மைகள் உண்டு. குளிர் நாடுகளை விட வெயிலில் நடப்பதில் நிறைய பலனுண்டு
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.