Jump to content

அல்லாஹ்வின் நீதிமன்றில் மன்னிப்பு இல்லையென்கிறது உலமா சபை: இயேசுவின் நீதிமன்றில் மன்னிப்பில்லை என்கிறார் கர்தினால்- ஞானசார


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)
இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. அளுத்கம தாக்குதல் நடைபெற்றபோதே விசேட ஆணைக்குழுவொன்றின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். எனினும் அதனைச் செய்யவில்லை. எனவே அதன் பின்னர் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்குப் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

 

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் நோக்கில் பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புக்கள் இணைந்து இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தன. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், நாட்டில் இயங்கும் தேசிய அமைப்புக்கள் மற்றும் இயக்கங்கள் தாக்குதலுக்கான தூண்டுதல் காரணியாக அமைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் தடைசெய்யப்பட வேண்டும் என அதன் பரிந்துரைகளில் கூறப்பட்டிருப்பதாகவும் ஆங்கிலப்பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் விசாரணை அறிக்கையை வெளியிடுமாறும், இல்லாவிட்டால் சர்வதேசத்தை நாடுவோம் என்றும்கூறி கட்டுப்பிட்டிய தேவாலயத்திற்கு முன்னாள் பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை போராட்டங்களை முன்னெடுக்கின்றார். சில வருடங்களுக்கு முன்னர் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் உருவாகிவருவது பற்றி நாம் எச்சரித்திருந்தோம். அப்போதே இதுகுறித்து கார்டினல் அழுத்தங்களை வழங்கியிருந்தால் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் ஏற்படாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அப்போது கார்டினல் இனநல்லிணக்கம், ஒற்றுமை, மனித உரிமைகள் என்பன தொடர்பிலேயே பேசினார்.

அதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யும் விவகாரத்தில், அதற்கு அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் மன்னிப்பு இல்லை என்று ஜம் இய்யத்துல் உலமா தெரிவித்தது. தற்போது உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விசாரணை அறிக்கை விவகாரத்தில் கார்டினலும் இயேசுவின் நீதிமன்றத்தில் அதற்கு மன்னிப்பில்லை என்றே கூறுகின்றார். எனவே இரு தரப்பினரும் ஒரே கருத்தையே கூறுகின்றார்கள். இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது தெளிவாகின்றது. இதனை நாட்டில் வாழும் பௌத்தர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விசாரணை அறிக்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆணைக்குழுவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நியமித்தார். ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது சுமார் 8 தடவைகள் முன்னிலையாகி, சாட்சியம் வழங்கிய பௌத்த தேரர் நானாகத்தான் இருப்பேன். எனவே முதலில் விசாரணை அறிக்கையின் பிரதியை எமக்குப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் கடந்த காலங்களில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. 

நாட்டில் இடம்பெறும் கலாசார, பாரம்பரிய ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் முதலில் மதத்தலைவர்களே ஆராய்ந்து, அவதானம் செலுத்தவேண்டும். மாறாக மல்கம் கார்டினல் ரஞ்சித் போன்றவர்கள் சர்வதேச அமைப்புக்களை நாடுவது குறித்துப் பேசத்தேவையில்லை. கார்டினல் அவரது நிலை என்னவென்பதை நன்கு புரிந்துகொண்டு பேசவேண்டும். எனவே இவ்விடயத்தில் தேவையற்ற குழுப்பங்களை ஏற்படுத்துவதை மல்கம் கார்டினல் ரஞ்சித் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

அல்லாஹ்வின் நீதிமன்றில் மன்னிப்பு இல்லையென்கிறது உலமா சபை: இயேசுவின் நீதிமன்றில் மன்னிப்பில்லை என்கிறார் கர்தினால்- ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்கிறார் ஞானசார | Virakesari.lk

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மல்கம் கார்டினல் ரஞ்சித் சரண்டர் ஞானசார தேரரிடம்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் அந்த கணவர் இறந்து விட்டாரா ?....செல்பி எடுப்பதற்கு நேரம் ,காலம், இடம் இல்லையா 
    • பதிலுக்கு நன்றி ...உடம்பை விட வண்டியை குறைப்பது தான் பிரச்சனையாய் இருக்கு ...காலமை எழும்பி கோப்பி குடிக்காட்டி எனக்கு எந்த வேலையும் ஓடாது ...எதற்கும் பார்ப்பம் 
    • இங்கே UK யில் IT காண்ட்ராக்டர்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு மோதல். நாம் ஒரு LTD கம்பெனி ஆரம்பித்து, அதுக்கு தான் எமது பணம் வரும். வருட இறுதியில், வரி கட்டிக்கொள்ளலாம். போனவருடம் ஏப்ரல் 6ம் திகதி முதல், காண்ட்ராட் வேலை செய்பவர்களுக்கு கொடுக்க முதல், நிரந்தர ஊழியர்கள் போல் வரியை கழித்து கொடுக்குமாறு அரசு சொல்லிவிட்டது. அப்படியானால். ஹாலிடே pay, sick pay நிறுவனம் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்க, நிறுவனங்களோ... என்னது..... அது நிரந்தர ஊழியர்களுக்கு தான். உங்களுக்கு இல்லை என்ற.... அப்ப எதுக்கு கழிக்க நிக்குறீர்.... என்று மல்லுக்கட்ட... பிரச்சனை பாராளுமன்று வரை போய், கோரோனோ காரணமாக இந்த வருடம் ஏப்ரல் வரை தள்ளி வைத்துவிட்டார்கள். இந்த இடைபட்ட காலத்தில்,  காண்ட்ராட் வேலை செய்பவர்களுக்கு, linked in, வலைத்தளத்தில், நிரந்தர வேலை செய்வோர்,  இந்த வரிகளை ஒழுங்கா கொடுங்கோ என்று, இவர் நியாயத்தினை கதைப்போம் போல, புத்தி மதிகளை அள்ளி அடித்துக் கொண்டிருந்தார்கள். இது பொதுவாக பொறுமையாகவே கருதப்பட்டது. நாங்கள், சட்டப்படி கம்பெனி திறந்து, சட்டப்படியே வரி செலுத்துகிறோம். சட்டத்தினை பாராளுமன்றத்தில் மாத்தி கொண்டு வாங்கோ... இருக்கிற சட்டப்படி, வரியை, ஒரு முதலாளி, கழித்தால், அவர் holiday pay, sick pay கொடுக்க வேண்டும். அதுவும் தரமுடியாது. வரியினையும் முதலே கழிப்போம் என்றால் நியாயமும் இல்லை. சட்டமும் இல்லை என்று காண்ட்ராட் வேலை செய்பவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். வெள்ளை காண்ட்ராட் வேலை காரர்கள் சங்கம் வேறு அமைத்து விட்டார்கள். கொரோனா தொடர்வதால், அரசு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். அரசு சட்டத்தினை மாத்த முடியாது என்று தெரியும். சட்டத்தின் ஒரு சிறு நூலிலையில் புகுந்து விளையாட பார்க்கிறது. அது காண்ட்ராக்ட்டர்களுக்கும் தெரியும் என்பதால் இந்த மல்லுக்கட்டு. அநேகமாக, நீதிமன்று போகும் என்றே நினைக்கிறேன்.  
    • முகப்புத்தகம் வந்த பிறகு யாழிற்கு வருவது குறைவு. முகநூலில் சொந்தப்பெயரில் இருப்பதால்  எல்லா உறவுகளையும் இணைக்க முடியாது.
    • நல்ல பெற்றோர்கள் கிடைத்தால் தானே நல்ல பிள்ளை உருவாகும் 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.