Jump to content

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு – நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை ஒத்துக்கொண்ட அரச தரப்பு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு – நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை ஒத்துக்கொண்ட அரச தரப்பு

 
1-207.jpg
 45 Views

மட்டக்களப்பு,மைலத்தமடு,மாதவனை பகுதியில் 617பேருக்கு தற்காலிகமாக விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதை அரச தரப்பு சட்டத்தரணி ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அந்த அனுமதியானது இம்மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவுபெற்றதும் அவர்கள் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இதன் காரணமாக வழக்கு விசாரணை மேமாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய அபகரிப்புத் தொடர்பானவழக்கு இன்று (செவ்வாய்கிழமை) கொழும்பு மேன்முறையீட்டுநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே எதிர்வரும் மே மாதத்திற்குவழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி அங்கிருந்து வெளியேறிவிடுவார்கள் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறக்கூடாது என தாம் வலியுறுத்தியதாகவும் அவர் மன்றில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும்  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=43004

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஆம். அர்ஜுன மகேந்திரன் போன்றவர்கள் செய்த பிணைமுறி மோசடியும் இவ்வ‌கையானதென நினக்கின்றேன்.
  • அதிமுக வின் அண்மைய இரண்டு நடவடிக்கைகள் மக்களை கவரக்கூடிய மட்டுமன்றி, வாக்குகளை பெற்றுக் கொடுக்க கூடியன 1. ஒடுக்கப்பட்டவர்களான வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு 2. உபரியாக  கடலில் கலக்கும் காவிரி நீரை சேலம் மாவட்டத்துக்கு பயன் கொடுக்குமாறு நதி நீர்களை இணைத்தமை. இதனால் 4000 இற்கும் மேற்பட்ட ஹெக்டேயர் விவாசாய நிலங்கள் பயன்பெறப் போகின்றன. திமுக இலகுவாக வெல்லலாம் என நினைத்து இருந்தது இனி சரி வராது. அதே போன்று கமலின் கட்சி மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகளின் வாக்குகளும் இதனால் பாதிக்கப்படும்.
  • வார நாட்களில் காலை உணவு: மூன்று நாட்களுக்கு சமன் மீன் துண்டு oven வைத்து bake  பண்ணியதும் முட்டை வெள்ளை பொரியலும். இரண்டு நாட்கள் பிரவுண் பாணும்,Tuna மீன் சண்ட்விச் மதியம்: கின்வாவும் (quinoa) கோழியும், அல்லது இலை குழை சலட்டும் இரவு: பிரவுண் பாணும் மீன் அல்லது கோழிக் கறி. இடைக்கிடை புட்டும் கோழிக்கறியும்.சில நாட்களில் இடியப்பமும் ஒட்டி மீன் அரைச்சு வைச்ச கறியும். இரண்டு முட்டை கட்டாயம் உண்டு எல்லா நாட்களிலும். வெள்ளி இரவில் இருந்து ஞாயிறு இரவு வரை: ஆட்டிறைச்சி, காட்டுப் பன்றி இறைச்சி, ஆட்டுக் குடல், மான், மரை,  நண்டு, கணவாய், இறால், மீன் போன்றவற்றில் ஆகக் குறைந்தது இரண்டாவது. கோழி வார இறுதியில் சாப்பிடுவதில்லை.  மாதத்தில் இரண்டு ஞாயிறு கிழமையில், முழு மரக்கறி சாப்பாடு (8 ஐட்டங்களாவது இருக்க வேண்டும்) அத்துடன் வார இறுதி நாட்களில் தான் சோறு சாப்பிடுவது. பிரியாணி, லம் றைஸ் என்று வகை வகையாக வெட்டுவது.   எனக்கு மொட்டைத் தலையுடன் இருக்கவே விருப்பம். ஆனால் மகளுக்கும், மனைவிக்கும் அதை கண்ணிலும் காட்டக் கூடாது என்றபடியால கொஞ்ச வருசங்களுக்கு தலை மயிருடன் இருக்க வேண்டி இருக்கு.  அறிவாலிகளுக்கு மொட்டை தான் சரியாக இருக்கும் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தன்... நீங்கள் ஒன்றும் அறிவாலி கிடையாது, சும்மா யாழை நோண்டிக் கொண்டு இருந்தால் எல்லாம் அறிவாலி ஆக எடுக்க முடியாது என்று சொல்லிட்டினம். 55 வயதில் இருந்து (உசிருடன் இருந்தால்) மொட்டை தான் என்று இப்பவே சொல்லி விட்டேன். 
  • செனட் சட்டம் வருகிறது என்றால், அது பகிரங்கமாகவே இருக்கும் என்பதால், அது insider trading ல் வராது என்றே நினைக்கிறேன். மேலும் சட்டம் உருவாக்குவோர் தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள். அது வேறு கோணம்.... உண்மையில் insider trading என்பது, ஒரு நிறுவனத்தினுள், இந்த வருடம் நல்ல profit வரப்போகிறது, அல்லது loss வரப்போகிறது என்று உள்ளே வேலை செய்யும் கணக்காளர் முதல், CEO வரை தெரிந்து, அந்த செய்தியினை இரகசியமாக வெளியே சொல்லி, அதுக்கு அமைய, அந்த நிறுவன பங்குகளை, பங்கு சந்தைகளில் வாங்கவோ, விக்கவோ செய்தால், அதுவே insider trading. அதாவது, உள்ளே (insider) இருப்பவர் கொடுக்கும் தகவல் அடிப்படையில், அவருக்கும்  லாபம் வரும் வகையில் செய்யும் பங்கு யாபாரம். அவர் தனக்கு எதுவும் வரவில்லை என்று நிரூபித்தால், இந்த வகை வழக்குகளை நிரூபிக்க முடியாது. ராஜ் வழக்கில், போன் tapping மூலமே சிக்கினார். 
  • தாமரை கிழங்கு விதைத்து அறுவடை செய்யும் பண்ணை.......எப்படியெல்லாம் யோசித்து விவசாயம் செய்கிறார்கள் யப்பானியர்கள்.....!   😁
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.