Jump to content

சைவ சமயமும்... வாழைப் பழமும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and fruit

சைவ சமயமும்... வாழைப் பழமும்.

 

எப்போதும் இறைவழிபாட்டுப் பொருட்களில் வாழைப்பழம் தவறாறு இடம் பெற்று விடுகின்றது. பழம் பாக்கு வெத்திலை தேங்காய் என்று சொல்லும் போது கூட அங்கே பழம் என்று சொல்லப்படுவது வாழைப் பழத்தைத் தான் குறிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
 
அப்படி என்ன பெருமை வாழைப்பழத்துக்கு இருக்கின்றது என்று இப்போது நான் சொல்லப் போகின்றேன். சைவ சமயம் பிறவி தான் எல்லாத் துன்பத்துக்கும் காரணம் அதனால் பிறவாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
 
அதனால் தான் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றார் திருவள்ளுவர்.
எல்லாப் பழங்களும் திரும்பவும் மண்ணிலே நட்டால் கன்றாக முளைக்கும். ஆனால் வாழைப்பழம் ஒன்று தான் திரும்ப நட்டால் முளைக்காது. ஒரு பிறவி போதும் இனி வேண்டாம் என்ற தத்துவத்தைக் கடைப்பிடிப்பது வாழைப்பழம். அதுக்கும் கருப்பாக நடுவிலே வித்துக்கள் உண்டு. ஆனால் அவை திரும்பவும் முளைக்க மாட்டா.
 
எனவே தான் மறு பிறப்பை விரும்பாத வாழைப்பழம் சைவ சமய வழிபாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றது. எனவே அன்பர்கள் வாழைப்பழத்தைக் காணும் போது உன்னைப் போல எங்களுக்கும் இனிப் பிறவி இல்லா நிலையை இறைவனிடம் பெற்றுத் தந்து விடு என்று கேட்டு அதை இறைவனுக்குப் படைக்க வேண்டும்,
 
வாரியார் சொற்பொழிவில் இருந்து - இரா.சம்பந்தன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சிறியர்......!

இப்போதெல்லாம் வாழைப்பழ விதையில் இருந்து மரங்களை உருவாக்குகின்றார்கள்.கடைகளில் கிடைக்கின்றது......!

Banana Tissue Culture Plant at Rs 7/plant | Banana Tissue Culture Plants |  ID: 20498178112

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி சிறியர்......!

இப்போதெல்லாம் வாழைப்பழ விதையில் இருந்து மரங்களை உருவாக்குகின்றார்கள்.கடைகளில் கிடைக்கின்றது......!

Banana Tissue Culture Plant at Rs 7/plant | Banana Tissue Culture Plants |  ID: 20498178112

அப்ப இனிமேல் வாழையடி வாழையாக  தழைக்க எண்ட வாழ்த்து வசனம் சரிவராது எண்டுறியள்...😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்ப இனிமேல் வாழையடி வாழையாக  தழைக்க எண்ட வாழ்த்து வசனம் சரிவராது எண்டுறியள்...😀

இருக்கவே இருக்கிறது..

ஆல் போல் தழைத்து, அறுகு போல் வேர்விட்டு..

தமிழில் எதற்குப் பஞ்சம்.. 👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

அப்படி என்ன பெருமை வாழைப்பழத்துக்கு இருக்கின்றது என்று இப்போது நான் சொல்லப் போகின்றேன். சைவ சமயம் பிறவி தான் எல்லாத் துன்பத்துக்கும் காரணம் அதனால் பிறவாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

எல்லாப் பழங்களும் திரும்பவும் மண்ணிலே நட்டால் கன்றாக முளைக்கும். ஆனால் வாழைப்பழம் ஒன்று தான் திரும்ப நட்டால் முளைக்காது. ஒரு பிறவி போதும் இனி வேண்டாம் என்ற தத்துவத்தைக் கடைப்பிடிப்பது வாழைப்பழம்.

வாரியார் சொற்பொழிவில் இருந்து - இரா.சம்பந்தன்

:rolleyes:

மற்ற தாவரங்களுக்குள்ள இன விருத்தி வாழைப்பழத்தை தரும் வாழை மரத்திற்கு இல்லையா? வாழை மரம் எப்படி உலகில் இவ்வளவு பெருகிவந்தது?

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு - திருவள்ளுவர்

 

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.