Jump to content

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா


Recommended Posts

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா

 

Antony-Blinken-720x450.jpg

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையில் கடந்த கால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை தொடர்பாக கொண்டுவரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் வட கொரியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் தென் சூடானின் நிலைமை குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் குறித்தும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு மீண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் இணைந்துகொள்ள அமெரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2018 ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா | Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொறுப்பு கூறலின்மையை முன்னிறுத்திய தீர்மானத்திற்கு அமெரிக்க ஒத்துழைக்கும்: இராஜாங்க செயலர்

(எம்.மனோசித்ரா)
இலங்கையில் கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி இம்முறை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் தெரிவித்தார். அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை ஊக்கப்படுத்த அமெரிக்க மீண்டும் பேரவையில் இணைவதாகவும் அவர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

hiuiiiiiiiiiio.jpg

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உலக நாடுகளின் மனித உரிமைகளை ஊக்கப்படுத்துவதிலும் நிலையான அமைதியை ஏற்படுத்துவதிலும் அமெரிக்க நீண்ட ஈடுபாடுட்டுடன் செயற்பட்டுள்ளது. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் இணைந்து அந்த பணிகளை ஊக்கப்படுத்த அமெரிக்க ஆர்வத்துடன் உள்ளது. பல நாடுகளினதும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அடிப்படை தன்மையை வலியுறுத்தி நிற்கின்றோம். மேலும் பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைதன்மையை வலியுறுத்துவதோடு மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு அமெரிக்க முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.

இலங்கையின் பொறுப்பு கூறலின்மையை முன்னிறுத்திய தீர்மானத்திற்கு அமெரிக்க ஒத்துழைக்கும்: இராஜாங்க செயலர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் -அமெரிக்கத் துாதுவரிடம் யாழ் .மாநகர முதல்வர் வேண்டுகோள்

1-4-2-696x239.jpg
 48 Views
இன்று யாழ் நூலகத்தில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸும் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
May be an image of one or more people, people standing and indoor
இதில் யாழ் மாநகர முதல்வரால், தூதுவரிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறிப்பாகத் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஜெனிவாவின் ஊடாகவும் மற்றும் பல வழிகளிலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமே இல்லாத தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தால்த்தான் என்ன இல்லாவிட்டால்த்தான் என்ன? 

Link to comment
Share on other sites

4 minutes ago, ரஞ்சித் said:

ஒன்றுமே இல்லாத தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தால்த்தான் என்ன இல்லாவிட்டால்த்தான் என்ன? 

உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, ஆதரவு கொடுத்து சீனாவின் பொருளாதார உதவியை இழக்க  விரும்பாத நாடுகளுக்கு வீணாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று எனது அமெரிக்க அரசின் பிரதிநிதிகளிடம் கேட்கவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கற்பகதரு said:

உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, ஆதரவு கொடுத்து சீனாவின் பொருளாதார உதவியை இழக்க  விரும்பாத நாடுகளுக்கு வீணாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று எனது அமெரிக்க அரசின் பிரதிநிதிகளிடம் கேட்கவா? 

 ஏன் கற்பு சும்மா இதையெல்லாம் தூக்கிக்கொண்டு போய் அமெரிக்க இராஜாங்க செயலரிடம் கொட்டி எனர்ஜியை வீணாக்குகிறீர்கள்,  செவ்வாயில் இறங்கிய நாசாவின் ரோவர் வேறென்ன எல்லாம் கண்டுபிடித்திருக்கிறது, Area 51 இல்  என்ன பழைய/புதிய ரகசியங்கள்  என்று கேட்டு சொன்னீர்கள் என்றால் நாங்கள் அறிவியல் அறிவையாவது வளர்த்துக்கொள்ளலாம் வீணாகின  உங்கள் எனர்ஜிக்கும் பயன்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

May be an image of one or more people, people standing and indoor

யாழ். நூலகத்தின், மரபை மதித்து...
வெறுங்காலுடன் நடந்து வந்த, அமெரிக்கத் துாதுவருக்கு பாராட்டுக்கள். 👏

டிஸ்கி: இதனைப் பார்க்கும், வெள்ளைக்கார டமிழர்களுக்கு... கடுப்பாகத்தான் இருக்கும். :grin:
அதுக்கு... நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது. வெறி சொறி.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, ஆதரவு கொடுத்து சீனாவின் பொருளாதார உதவியை இழக்க  விரும்பாத நாடுகளுக்கு வீணாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று எனது அமெரிக்க அரசின் பிரதிநிதிகளிடம் கேட்கவா? 

உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்?

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

யாழ். நூலகத்தின், மரபை மதித்து...
வெறுங்காலுடன் நடந்து வந்த, அமெரிக்கத் துாதுவருக்கு பாராட்டுக்கள். 👏

கவசம் மறைத்த முகம் நாடியதே சிறியரின் நெஞ்சம்

வெறுங்காலை நாடியதே கண். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

ஒன்றுமே இல்லாத தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தால்த்தான் என்ன இல்லாவிட்டால்த்தான் என்ன?

தீர்மானத்தில் ஒன்றும் இல்லை என்றாலும், தீர்மானம் வேண்டும் சிங்களத்தை நிகழ்ச்சி நிரலில் வைத்து இருப்தற்கு.

மற்றது, முக்கியமாக, கிந்தியாவினதும், அமெரிக்காவினதும் முற்றான முரண்பட்ட நிலைப்பாடு. இதுவரையில், அமெரிக்காவே ஆகக்குறைந்தது குறியீடு ஆக சர்வேந்திரா சில்வாவை பயண தடையில் வைத்து உள்ளது.  

சிங்களம் அனுபிபியை கடிததிற்கு, ஹிந்தியா  பதில் இல்லை என்பது வெறும் பிரச்சாரம்.

(பறையா (சாதி அல்ல) டெமுலு) Dr .ஜெய்சங்கர், உரையில் சொல்லிய நிலைப்பாடு முற்றுமுழுதாக சொறி சிங்கள அரசுக்கு சார்பானது என்பதை இங்கு ஒருவரும் கவனிக்கவில்லை.  

எனவே எந்த தீர்மானமும், சொறி சிங்களத்துக்கு முக்கிய, நிரந்தர  பின்னடைவு. சர்வதேச விசாரணை இல்லாத தீர்மானம் தமிழர் தரப்புக்கு தற்கலிக பின்னடைவு. 

தமிழர்கள் எல்லோரும் இந்த விடயத்தை,  நீதி என்ற அடிப்படையில் சிங்களத்தை தண்டிக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்க்க , சிங்களம் அதன் அரசியலுக்கான இறுதி படியான பாதுகாப்பு சபையில் (unsc) கையாள்வதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறது.

இந்த ஏற்பாட்டை ரணில், சீனாவுக்கு அம்பாந்தோட்டையை,port-city எல்லாம் கொடுத்தது பழைய கதை.

சிங்களம், தேயிலை வர்த்தகத்தின் பெரும்பதியை சீனாவின் சந்தைக்கு கொண்டு போயுள்ளது, சர்வதேச தடைகள் வந்தால் வெட்டி ஆட வசதி வேண்டும் என்று.

எனவே தீர்மானம் என்பது, வெறுமனே மனித உரிமை, நீதி அல்ல.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

கவசம் மறைத்த முகம் நாடியதே சிறியரின் நெஞ்சம்

வெறுங்காலை நாடியதே கண். 🤣

சிறித்தம்பியர் ஜெர்மனியிலை பார்க்காத வெறும் கால்களோ எண்டு கேக்கிறன்? :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.