மீறப்படும் மனித உரிமை மீறல்கள் - ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு

By
nunavilan,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
நான் சிறுவர்களைக் கடத்துவதாகக் கூறுவது புலிகளாலும், புலம்பெயர் தமிழராலும் செய்யப்படும் விஷமப் பிரச்சாரம் : கருணா கருணாவின் கூற்றுப்படி அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழு இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் 16 அலுவலகங்களை நடத்தி வருகிறது. உங்களின் அரசியல் அலுவலகங்களில் கடத்தப்பட்ட சிறுவர்களை அவர்களின் பெற்றோர்கள் கண்டிருக்கிறார்களே என்று கேட்டதற்கு, "எமது அரசியல் அலுவலகங்களுக்குள் எவரும் வரலாம், நாம் எதனையும் மறைக்கவில்லை, ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு நிகரான வெளிப்படைத் தன்மையினை நாம் எமது அரசியல் அலுவலகங்களில் பேணிவருகிறோம். எனது அலுவலகங்களில் 20 வயதிற்குக் குறைந்த எவரையும் நாம் கொண்டிருக்கவில்லையென்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும். எவரும் எமது அலுவலகத்தினை வந்து பார்வையிட முடியும்" என்று அவர் பதிலளித்தார். ஆனால், உங்களின் அமைப்பு பலநூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்திவருவதாக கூறப்படுகிறதே என்று கேட்டபோது, "இது புலிகளாலும், அவர்களுக்குச் சார்பான புலம்பெயர் தமிழர்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் விஷமப் பிரச்சாரமாகும், இதில் உண்மையெதுவுமில்லை" என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார். ஐ நா வின் சிறுவர் நலன்களுக்கான விசேட தூதர் அலன் ரொக் கருணா குழுமீது முன்வைத்திருக்கும் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கேட்டபோது கோபமடைந்த கருணா, "நிச்சயமாக அலன் ரொக் புலிகளின் பின்புலத்துடன் தான் அரசுக்கும் தனக்கும் களங்கத்தினை ஏற்படுத்துகிறார்" என்று கூறினார். "புலிகள் போலியான குடும்பங்களைத் தயார் செய்து அலன் ரொக்கின் முன்னால் கடத்தப்பட்ட சிறுவர்களின் தாய்மார்கள் என்று நாடகமாட வைத்திருக்கின்றனர். அலன் ரொக் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எவையுமே அவரிடம் இல்லை. அவர் எமது அலுவலகத்திற்கு வருகை தந்தபோது இதுபற்றி தெளிவாக அவருக்கு விளக்கியிருக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார். மனிதவுரிமைக் கண்காணிப்பகத்துடனான தனது உரையாடல் நடைபெற்று 5 நாட்களின் பின்னர் யுத்தங்களில் இன்னல்களை அனுபவிக்கும் சிறுவர்கள் நலன் தொடர்பான ஐ நா வின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமியுடன் கருணா பேசியிருந்தார். இந்த பிரதிநிதியால் ஐ நா வின் பாதுகாப்புக் கவுன்சிலில் முன்வைக்கப்பட்ட உள்நாட்டு யுத்தங்களில் சிறுவர்களைப் பாவிக்கும் அமைப்புக்களின் பட்டியலில் கருணாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டதுபற்றிப் பேசவே கருணா ராதிகாவுடன் தொடர்புகொண்டிருந்தார். ஐ நா வின் அறிக்கைப்படி கருணா தான் சிறுவர்களை இணைப்பதைக் கைவிடுவதாகவும், யுனிசெப் அமைப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சிறுவர் நலன் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஒத்துக்கொண்டிருந்தார். சிறுவர் நலன் பேணுதல் தொடர்பாக யுனிசெப் அமைப்பிற்கும் தனது குழுவிற்கும் இடையிலான இணக்கப்பாட்டின்படி பின்வரும் விடயங்களைத் தான் செய்யவிருப்பதாக கருணா ஒத்துக்கொண்டிருந்தார். 1. கருணா குழுவின் அனைத்துத் தளபதிகளுக்கும், பொறுப்பாளர்களுக்கும் சிறுவர்களை இணைப்பதோ, யுத்தத்தில் ஈடுபடுத்துவதோ அனுமதிக்கப்பட முடியாது என்று புதிய கட்டுப்பாடுகளை அறிவிப்பது. 2. சிறுவர் நலன் தொடர்பான பயிற்சிகளை சர்வதேச அமைப்புக்களின் உதவியோடு கருணா குழுவின் பொறுப்பாளர்களுக்கு அளிப்பது. 3. யுனிசெப் மற்றும் ஏனைய மனிதவுரிமை அமைப்புக்களின் உதவியோடு கருணா குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் சிறுவர்களை மீண்டும் அவர்களது குடும்பங்களிடமே கையளிப்பது. 4. தனது முகாம்களை பார்வையிடுவதற்கான அனுமதியினை யுனிசெப் அமைப்பிற்கு வழங்கி எத்தருணத்திலும் தனது அமைப்பில் சிறுவர்கள் அமர்த்தப்படவில்லையென்பதனை உறுதிசெய்தல். கருணாவின் இந்த அறிக்கையினை வரவேற்ற ராதிகா குமாரசாமி, சிறுவர்கள் இலங்கையில் ஆயுதக் குழுக்களால் போரில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக இது காணப்படுவதாகக் கூறியிருந்தார். "களத்தில் இந்த முயற்சிகள் நண்மைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்" என்று அவர் மேலும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராதிகா, புலிகளிடமிருந்து இம்மாதிரியான ஒத்துழைப்பினை தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 2 ஆம் திகதி தனது ராணுவ அமைப்பிற்கான கட்டுப்பாடுகளை கருணா யுனிசெப் அமைப்பிடம் கையளித்தார். அந்த ஆவணத்தின்படி 18 வயதிற்குக் குறைந்தவர்கள் தனது அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றும், இணையவரும் ஒவ்வொருவரிடமிருந்தும் பிறப்பு அத்தாட்சிச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்பட்டு, சுய விருப்பத்துடனேயே இணைகிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்ட பின்னரே இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இந்தச் சட்டங்களை மீறும் தளபதிகளுக்கு முகாமில் சமையலில் ஈடுபடுதல், தோட்ட வேலைகளில் ஈடுபடுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதே ஆவணத்தில் படுகொலைகள், பாலியல் வன்புணர்வுகள், கொள்ளைகள் ஆகியவற்றில் ஈடுபடும் அமைப்பின் உறுப்பினர்களை பொலீஸாரிடம் ஒப்படைத்துவிடுவதாகக் கூறப்பட்டிருந்தது. அத்துடன் புகை பிடித்தல், மது அருந்துதல், பெண்களை இழிவுபடுத்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடும் உறுப்பினர்கள் அமைப்பிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், யுனிசெப் அமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் காலத்திலேயே கருணா குழு புதிதாக குறைந்தது 21 சிறுவர்களைக் கடத்திச்சென்று கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தியிருப்பது எம்மால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் கூறுகிறது.
-
By nunavilan · பதியப்பட்டது
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது என அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளி யிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேர் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் நேற்றைய தினம் 1038 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 140 இலட்சத்து 74 ஆயிரத்து 564 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 124 இலட்சத்து 29 ஆயிரத்து 564 பேர் குணமடைந் துள்ளனர், 14 இலட்சத்து 71 ஆயிரத்து 877 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண் ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Thinakkural.lk <p>இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 140 இலட் சத்தை தாண்டியது என அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளி யிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 […]</p> -
By nunavilan · பதியப்பட்டது
5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் மீண்டும் ஆரம்பம் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா தொற்றால் நிதி நெருக்கடியில் சிக் கியுள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறு வோறுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்றைய முன்தினம் புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை தற் காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் குறித்த நிவாரணத்தை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Thinakkural.lk <p>புத்தாண்டை முன்னிட்டு கொரோனா தொற்றால் நிதி நெருக்கடியில் சிக் கியுள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறு வோறுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் […]</p> இதுவரையில் 18 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களின் சுமார் 75 சதவீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு அடுத்த சில நாட்களில் வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. -
By nunavilan · பதியப்பட்டது
4 நாள்களில் 140 மில்லியன் வருமானம் இலங்கையிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளின்; மொத்த வருமானமானது, கடந்த 4 நாள்களில் 140 மில்லியன் ரூபாய் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய கடந்த 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை, இந்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், 9,10ஆம் திகதிகளில் மாத்திரம் 70 மில்லியன் ரூபாயும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ்- சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்லவும் சுற்றுலா செல்வோர் அதிவேக நெடுங்சாலைகiளைப் பயன்படுத்தியமையாலேயே இந்த வருமானம் கிடைக்கப்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். Tamilmirror Online || 4 நாள்களில் 140 மில்லியன் வருமானம் -
By nunavilan · பதியப்பட்டது
மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்... ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதத்திற்குள் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். மீண்டும் பாராளுமன்றம் செல்லும் ரணில்... (adaderana.lk)
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.