Jump to content

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றது என யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற மூன்றாம்நிலை, தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறையினை அபிவிருத்தி செய்வதற்கான மாவட்ட செயலக கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் இன்று (25) காலை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

தேசியரீதியாக செயற்படுத்தப்படுகின்ற மூன்றாம் நிலை, தொழில்நுட்பக்கல்வி மற்றும் தொழில்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அங்குரார்ப்பண கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
 

யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்றோர் வீதத்தினை குறைப்பதனை நோக்கமாகக் கொண்டு இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அத்தோடு தற்போது கொரோனா தொற்று நிலமை காரணமாக வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கின்றபோது எமது இளைஞர்களின் வாழ்க்கைத்திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை பிரதேச செயலகங்கள், வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபை, மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழு, தேசிய தொழில் பயிலுநர் மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபை ஆகியன தங்களுடைய பணிகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுத்துத்து வருவதோடு தொழில் நுட்பம் சார்ந்த பலதரப்பட்ட விடயங்களை தொழில்நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மற்றும் துறைசார் நிறுவனங்கள் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,565 பேர் தொழில் வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன எனினும் இவ் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படலாம். இவ் வேலை தேடுவோர் க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த. சாதாரண தரதிற்கும் குறைந்த என்னும் பெறுபேறுகளின் அடிப்படையில் காணப்படுகின்றார்கள்.

மேலும் மூன்றாம் நிலை கல்வி தொடர்பான பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் தற்போது நடைபெற்றுவருகின்றன. அனைத்து பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுகின்ற துறைசார் உத்தியோகத்தர்களை ஒருமுகப்படுத்தி இளைய சமூகத்தை சரியான பாதையில் வழிப்படுத்த இச் செயற்குழுக்கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் இக் கூட்டத்தில் மாவட்ட மட்டத்திற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு ஏழு உப குழுக்களும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது ஆகும்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை தேடுவோம்.

கிடைகிற/இருக்கிற வேலை செய்யமாட்டோம். அல்லது புதிதாக வேலையை உருவாக்க மாட்டோம்.

நாங்கள் விரும்புகின்ற வேலை கிடைத்தால் மட்டும் செய்வோம்.

ஆனா VIP என்று சொல்வோம்.....😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட,கிழக்கில் இருக்கும் மூன்றில் இரண்டு பகுதியினர் கடும் சோம்பேறிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

வேலை தேடுவோம்.

கிடைகிற/இருக்கிற வேலை செய்யமாட்டோம். அல்லது புதிதாக வேலையை உருவாக்க மாட்டோம்.

நாங்கள் விரும்புகின்ற வேலை கிடைத்தால் மட்டும் செய்வோம்.

ஆனா VIP என்று சொல்வோம்.....

பின்ன நீங்க 2 சிப்ட்டடித்து நாயாய் பேயாய் உழைத்து 
பல்சர் 200 RS உம் ஐபோன் 12 Max Pro வும் வாங்க காசனுப்பைக்குள்ள  
நாங்க எதற்கு வேலைக்கு போகணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

பின்ன நீங்க 2 சிப்ட்டடித்து நாயாய் பேயாய் உழைத்து 
பல்சர் 200 RS உம் ஐபோன் 12 Max Pro வும் வாங்க காசனுப்பைக்குள்ள  
நாங்க எதற்கு வேலைக்கு போகணும் 

எங்கள் ஆட்களின், குறிப்பாக வடபகுதி, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்து தொழிலாளர்கள்...... 😡

எழுதும்போதே இரத்த அழுத்தம் கூடுகிறது...

எந்தவித ஒழுக்கமுமற்ற (discipline ) சோம்பேறிகள். 

(எனது சொந்த அனுபவங்கள் அப்படி. கடந்த இரண்டு மாதங்களாக..☹️)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா ..அவைக்கு ஒரு யாழ்ப்பாண  கம்பசு இருக்கு ..அங்கை ஒரு 5 வருசம் எஞோய் பண்ண ..ஒரு  பீஏ ஒரு பிகொம்  படிச்சால் காணும்...வெளிநாட்டு உழைப்பில் ஒரு பல்சரும் ..அப்பில்போனும் காணும்..வெளிக்கிட்டவுடன் ஒரு வாத்தி வேலையோ ...அல்லது அபிவிருத்தி உத்தியோகம் கிடைக்கும்.....

மேலதிக செலவுக்கு டபுளடி உறவு காசனுப்பும்...சந்தோசம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.