Jump to content

சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்

24 பிப்ரவரி 2021
சிங்கப்பூர்

பட மூலாதாரம்,TODAYONLINE,COM

 
படக்குறிப்பு,

காயத்ரி

தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் எனும் கனவோடு சிங்கப்பூரில் பணிப்பெண் வேலைக்கு வந்த 24 வயது மியான்மர் பெண் தொடர்ச்சியாக சித்ரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரை பணியமர்த்தி இந்திய வம்சாவளி பெண்மணி தன் மீதான குற்றச்சாட்டை கடந்த செவ்வாயக்கிழமை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் விரைவில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவிருக்கிறது.

சிங்கப்பூரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2015 முதல் 2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த அந்த துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த கொலை பற்றிய முழு விவரமும் தற்போது வெளியாகியிருக்கிறது.

பிரேதப் பரிசோதனையின்போது அப்பெண்ணின் உடலில் அண்மையில் ஏற்பட்ட 31 காயங்கள் தென்பட்டன என்றும், உடலின் மேற்பரப்பில் மட்டும் 47 காயங்கள் காணப்பட்டதாகவும் சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அவரை தன் வீட்டில் பணியமர்த்தி கொடுமைகள் புரிந்த 40 வயதான இந்திய வம்சாவளிப் பெண் காயத்ரி முருகையனும் அவரது கொடிய செயல்பாட்டுக்கு துணை நின்ற அவரது தாயார் பிரேமா நாராயணசாமியும் கைதாகி உள்ளனர்.

 

காயத்ரியின் கணவரும் காவல்துறை ஊழியருமான கெவின் செல்வம் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளார்.

உயிரிழந்த பணிப்பெண் பியாங் இங்கை டொன், அவ்வப்போது காயத்ரி வீட்டில் தாக்கப்பட்டது தொடர்பான சில காணொளிப் பதிவுகள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. அக்காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்ததாக சிங்கப்பூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நிபந்தனைகளை ஏற்று பணியில் சேர்ந்த பணிப்பெண்

கடந்த 2015ஆம் ஆண்டு மியான்மாரைச் சேர்ந்த பியாங் இங்கை டொன் என்பவர் பணிப்பெண் வேலைக்காக சிங்கப்பூர் வந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இப்பெண் தனது மூன்று வயது மகனை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வருமானம் ஈட்ட சிங்கப்பூர் வந்த நிலையில், காயத்ரியின் வீட்டில் பணியாற்ற ஒப்புக் கொண்டார்.

கைபேசி பயன்படுத்தக் கூடாது, ஒருநாள் கூட விடுப்பு எடுக்கக் கூடாது என காயத்ரி விதித்த சில நிபந்தனைகளிளை ஏற்றுக் கொண்டார் பியாங் டொன். மற்றவர்களுடன் தனது பணிப்பெண் பேசக் கூடாது என்பதே காயத்ரியின் விருப்பம். அதனால் விடுப்பில்லாத நாட்களுக்கும் சேர்த்து பியாங் டொன்னுக்கு அதிக தொகை அளிக்க அவர் முன்வந்துள்ளார்.

காயத்ரி வீட்டில் அவரது கணவர், தாயார், இரு குழந்தைகள், வாடகைக்கு குடியிருக்கும் இருவர் உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.

பணியில் சேர்ந்த சில தினங்களிலேயே பியாங் டொன் சரியாக வேலை பார்க்கவில்லை என அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியுள்ளார் காயத்ரி. சுத்தமாக இல்லை, அதிகமாக சாப்பிடுகிறார், மெதுவாக வேலை செய்கிறார் என்று பணிப்பெண் மீது புகார்களை அடுக்கியுள்ளார்.

தொடக்கத்தில் அவ்வப்போது உரக்க கத்தி பணிப்பெண்ணை திட்டித்தீர்த்த காயத்ரி, பிறகு உடல் ரீதியிலும் பியாங் டொன்னை துன்புறுத்த ஆரம்பித்தார். குறிப்பாக 2015, அக்டோபர் மாதம் முதல் அந்த அப்பாவி பணிப்பெண்ணுக்கு 'கொடுமைக்காலம்' தொடங்கியது.

குப்பைக்கூடையில் கொட்டப்படும் உணவைக் கூட சாப்பிட விடவில்லை

பணிப்பெண் பியாங் டொன் சிறு வயதுப்படம்

பட மூலாதாரம்,HELPING HANDS FOR MIGRANT WORKERS, SINGAPORE-FB

 
படக்குறிப்பு,

பணிப்பெண் பியாங் டொன் சிறு வயதுப்படம்

தமது குழந்தைகளையும் பணிப்பெண்ணையும் கண்காணிப்பதற்காக வீட்டின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி இருந்தார் காயத்ரி. அவற்றில் பதிவான காட்சிகள்தான் பின்னாட்களில் அவரை போலிசில் சிக்க வைத்துள்ளது.

பணியில் சேர்ந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு பியாங் டொன் உடல் ரீதியிலான தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ளார். அடி, உதைக்கு மத்தியில் தண்ணீரில் தோய்க்கப்பட்ட ரொட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவு அல்லது சிறிதளவு சோறு ஆகியவைதான் அவருக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது. அதிகம் சாப்பிடுவதாக குறை கூறிக்கொண்டே உணவின் அளவை வெகுவாக குறைத்து கொடுமைப்படுத்தி உள்ளார் காயத்ரி.

வேறு வழியின்றி வீட்டுக் குப்பைக் கூடையில் கொட்டப்படும் வீணாகிப்போன உணவை சாப்பிடுவதற்கும் தயாராக இருந்துள்ளார் பியாங் டொன். ஆனால் அதையும் கண்டுபிடித்து சாப்பிடவிடாமல் தடுத்துள்ளனர்.

தினமும் இரவு ஐந்து மணி நேரம் மட்டுமே பியாங் டொன் தூங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் உறங்கினால் எட்டி உதைத்து எழுப்புவார் காயத்ரி.

குளிப்பது, கழிவறைக்குச் செல்வது என எதுவாக இருப்பினும் கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் தனது பணிப்பெண்ணுக்கு காயத்ரி பிறப்பித்த கட்டளைகளில் ஒன்று.

14 மாத பணிக்காலத்தில் 15 கிலோ எடை குறைந்து போனார் பியாங் டொன். அதாவது பணிக்கு வரும் முன் இருந்த உடல் எடையில் 38 விழுக்காடு குறைந்து போனது.

பியாங் டொன் சுத்தமாக இல்லை என்று தொடர்ந்து புகார் தெரிவித்த காயத்ரி, ஒரே சமயத்தில் பல முகக்கவசங்களை அணிந்தபடி வீட்டைச் சுத்தப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

தனது பணிப்பெண்ணின் முகத்தைப் பார்க்கக் கூட அவர் விரும்பவில்லை என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக தனது முதலாளி மற்றும் அவரது தாயாரால் பியாங் டொன் தாக்கப்படுவது வாடிக்கையாக இருந்துள்ளது. அதே போல் ஒரே நாளில் பலமுறை தாக்குதலுக்கு ஆளாவதும் நிகழ்ந்தது.

கன்னத்தில் அறைவது, முகத்தில் குத்துவது, தள்ளிவிடுவது, உதைப்பது ஆகிய துன்புறுத்தல்களுடன், படுத்திருக்கும்போது எட்டி உதைப்பதும் கனமான பொருட்களைக் கொண்டு தாக்குவதும் கூட நடந்துள்ளது.

இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு உச்சபட்ச கொடுமை

பியாங் டொன் எதிர்பாராத சமயங்களில் அவரது தலைமுடியை மேல்நோக்கி இழுத்து, அங்குமிங்குமாக குலுக்கி, கொத்து முடியை காயத்ரி பிய்த்தெடுத்துள்ளார். ஒரு பொம்மையைப் போல் தனது பணிப்பெண் கையாண்டுள்ளார்.

கடந்த 2016 ஜூன் மாதம் பணிப்பெண் துணிகளுக்கு இஸ்த்ரி போட்டுக் கொண்டிருந்த போது திடீரென வந்த காயத்ரி, இஸ்த்ரி பெட்டியை எடுத்து அவரது நெற்றியிலும் பிறகு கையிலும் சூடு வைத்துள்ளார்.

இதனால் பியாங் டொன் அலறித் துடிக்க, அப்போதும் அவர் சரியாக வேலை செய்வதில்லை என குத்திக்காட்டி உள்ளார்.

இதுபோன்ற துன்புறுத்தல்கள் நிறைந்த காணொளிப் பதிவுகள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. அதில் பியாங் டொன் பரிதாபகரமான நிலையில் உடல் மெலிந்து எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதும் பதிவாகி இருந்தது.

இறப்பதற்கு 12 தினங்களுக்கு முன்பு பியாங் டொன்னுக்கு உச்சபட்ச கொடுமை நிகழ்ந்துள்ளது. அவரது இரு கைகளையும் ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்துள்ளனர். அவரது காயங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவர் தனது அறையை விட்டு எங்கும் சென்றுவிடக் கூடாது என்பதில்தான் காயத்ரி கவனமாக இருந்துள்ளார்.

2016 ஜூலை 25ஆம் தேதி இரவு சுமார் 11.40 மணியளவில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த பியாங் டொன்னை ஓங்கி குத்திய காயத்ரி, வேகமாக வேலைகளைச் செய்யுமாறு திட்டியுள்ளார்.

பின்னர் கோபம் குறையாமல் அவரது முடியைப் பிடித்து இழுத்தபோது பியாங் டொன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போதும் காயத்ரி விடவில்லை.

பின்புறமாக கீழே விழுந்ததால் எழ முடியாமல் பியாங் டொன் தத்தளிக்க, தனது தாயார் பிரேமாவை அழைத்துள்ளார் காயத்ரி. அதன் பின்னர் இருவருமாகச் சேர்ந்து பணிப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பிரேமா தன் பங்குக்கு பியாங் டொன்னை சமையலறை, வரவேற்பறை, படுக்கையறை என்று வீட்டின் ஒவ்வொரு பகுதிக்குமாக இழுத்துச் சென்றபடியே தாக்கியுள்ளார்.

பியாங் டொன் வயிற்றில் காயத்ரி எட்டி உதைக்க, பிரேமா முகத்தில் குத்தியதுடன் கழுத்தையும் நெரித்துள்ளார்.

ஈரத்துணி, பட்டினி, காயங்களால் ஏற்பட்ட வலியுடன் கண்மூடிய பியாங் டொன்

இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் எந்தவித எதிர்ப்பும் காட்டாத அந்த பணிப்பெண் தனக்கு இரவு உணவு கிடைக்குமா என்று கேட்க, ஏற்கெனவே உணவு கொடுத்தாயிற்று என்று கூறியுள்ளார். மேலும் இரவு தூங்கும் நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று கூறி உரங்கச் செல்லுமாறும் பணித்துள்ளார்.

காணொளிக் குறிப்பு,

சங்கிலியில் கட்டி வைத்து சித்ரவதை: நைஜீரியாவில் 500 பேர் மீட்பு

அன்றிரவும் பியாங் டொன்னின் கைகள் ஜன்னல் கம்பிகளுடன் கட்டப்பட்டன. துணிகளை துவைத்த போது அவர் அணிந்திருந்த ஆடைகள் ஈரமாகிவிட்டன. எனினும் உடை மாற்ற அனுமதிக்கப்படவில்லை. மேலும் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் அந்த நள்ளிரவு வேளையில் அவரது வயிற்றில் எட்டி உதைத்துள்ளார் காயத்ரி.

ஈரத்துணியுடன், பட்டினியுடன், உடல் காயங்களால் ஏற்பட்ட வலி வேதனையுடன் கண் மூடியுள்ளார் பியாங் டொன். மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அவரை எழுப்ப வந்துள்ளார் காயத்ரி.

பியாங் டொன் கண் விழிக்கவில்லை. இதனால் கோபமடைந்த காயத்ரி வழக்கம்போல் எட்டி உதைத்ததுடன், கழுத்திலும் தலையிலும் தொடர்ந்து குத்தியுள்ளார். இறுதியாக பணிப்பெண்ணின் தலைமுடியை தன் கைகளால் சுருட்டி பின்னோக்கி இழுக்க, பியாங் டொன்னின் கழுத்துப் பகுதியும் பின்னோக்கி இழுக்கப்பட்டது.

இந்த சித்ரவதைக்குப் பிறகும் அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லை. தன் தாயார் பிரேமாவை மீண்டும் அழைத்துள்ளார் காயத்ரி. இருவரும் சேர்ந்து பியாங் டொன்னுக்கு காப்பி போன்ற பானம் ஒன்றைப் புகட்ட முயன்றனர். சில்லிட்டுப் போயிருந்த உடலில் கை கால்களைத் தேய்த்துவிட்டு சூடேற்றவும் முயன்றுள்ளனர்.

எதற்கும் பலனின்றிப் போகவே மருத்துவர் அழைக்கப்பட்டுள்ளார். காலை சுமார் 10.50 மணிக்கு வந்த மருத்துவர், பியாங் டொன்னை பரிசோதித்த பின்னர் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளார்.

பணிப்பெண்ணைத் தாக்கினீர்களா, அவருக்கு முறையாக உணவு வழங்கப்பட்டதா என்று மருத்துவர் கேட்ட போது, பியாங் டொன் தவறி கீழே விழுந்ததாகவும், மருத்துவரின் வருகைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை இயல்பாக இருந்ததாகவும் கூறி தாயும் மகளும் சமாளிக்கப் பார்த்துள்ளனர்.

முன்னதாக பியாங் டொன் அணிந்திருந்த உடையை மாற்றி அவரை வீட்டு சோஃபாவில் படுக்க வைத்திருந்தனர். அன்றைய தினம் காயத்ரியின் கணவர் கெவின் செல்வம் பணிக்குச் சென்றுவிட்டார். சம்பவம் நிகழ்ந்தபோது அவர் அங்கு இல்லை.

போலிஸ் விசாரணையை அடுத்து காயத்ரி, அவரது தாயார், கணவர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

பணிப்பெண்ணின் உடலில் அண்மைய 31 காயங்களும் உடலின் மேல்பரப்பில் 47 காயங்களும் இருந்தது பிரேதப் பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

ஜூலை 25 அன்று காலை காயத்ரி, பியாங்கின் கழுத்தை மீண்டும் மீண்டும் பின்னோக்கி இழுத்தத்தில் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவு குறைந்ததால்தான் மரணம் நிகழ்ந்தது எனத் தெரிய வந்துள்ளது.

நோக்கமில்லா மரணம் விளைவித்தது உட்பட 28 குற்றச்சாட்டுகளை காயத்ரி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவருக்கு ஆயுள் தண்டன விதிக்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பணிப்பெண்ணைத் தாக்கியது தொடர்பாக காயத்ரியின் தாயாரும் கணவரும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி உள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது.

தாய்மை அடைந்திருந்தபோது காயத்ரி கடுமையான மன அழுத்தத்துக்கு ஆட்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் 'ஓசிடி' எனப்படும் மனநலப் பிரச்சினையால் அவர் அவதிப்படுவதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி பியாங் டொன் இறந்தபோது அவரது உடல் எடை 24 கிலோ மட்டுமே இருந்தது. எந்த மகனின் எதிர்காலத்துக்காக வருமானம் ஈட்ட சிங்கப்பூர் வந்தாரோ அந்த மூன்று வயது குழந்தையை மீண்டும் பார்க்காமலேயே கண்மூடிவிட்டார் பியாங் டொன்.

https://www.bbc.com/tamil/global-56186920

 • Thanks 1
Link to post
Share on other sites

தமிழச்சி போல இருக்கின்றது ....தூக்கில் போட வேண்டும் ...மகளை இப்படி வளர்த்தற்காகவும் ,இந்த பாதகத்திற்கு துணை நின்றதற்காகவும் தாயாருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தமிழச்சி போல இருக்கின்றது ....தூக்கில் போட வேண்டும் ...மகளை இப்படி வளர்த்தற்காகவும் ,இந்த பாதகத்திற்கு துணை நின்றதற்காகவும் தாயாருக்கும் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் 

அதே...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணையே பிடிக்கவில்லை என்றால், வேளையில் இருந்து நீக்கிவிட்டு, வேறு வேலை நபர்க;லாய் தேர்ந்து இருக்க அல்லவா வேண்டும்.  
 
அந்த பெண் அவரின் அடிமை சொத்தாக வைத்து இருபது என்பது,  அநேகமான தாது நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த தெற்காசியர்களில், அதுவும் உழைத்து முன்னேறியவர்களில் ஓர் மனப்பன்மையாக இருக்கிறது.       

இதில், கொலை செய்தவரை அடுத்து,  கணவருக்கே மிக கூடிய தண்டனை கொடுக்க வேண்டும்.

கொலை செய்தவருக்கு,  மீளாத ஆயுள்  கால கடூழிய சிறைத்தணடனை, மரணதண்டனையை விட  பொருதமாக இருக்கும் அவர் அந்த பெண்ணுக்கு செய்த சித்தரவதை அவருக்கு எப்போது முடியும் என்ற வெதுப்பதில் அனுபவிப்பதற்கு. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு/ இந்திய  தொலைக்காட்சிகளில் வரும் தொடர் நாடக வில்லி வேடங்கள் உண்மை போல் இருக்கின்றது

செல்லமே தொடர் மதுமிதா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

அந்த பெண்ணையே பிடிக்கவில்லை என்றால், வேளையில் இருந்து நீக்கிவிட்டு, வேறு வேலை நபர்க;லாய் தேர்ந்து இருக்க அல்லவா வேண்டும்.  
 
அந்த பெண் அவரின் அடிமை சொத்தாக வைத்து இருபது என்பது,  அநேகமான தாது நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த தெற்காசியர்களில், அதுவும் உழைத்து முன்னேறியவர்களில் ஓர் மனப்பன்மையாக இருக்கிறது.       

இதில், கொலை செய்தவரை அடுத்து,  கணவருக்கே மிக கூடிய தண்டனை கொடுக்க வேண்டும்.

சிங்கையில் குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிடம் பெட்ற இந்திய வம்சாவளியினர் மூர்க்கத்தனமும்,காடைத்தனமும்  அதிகம் கொண்டவர்களாக தான் மற்றய இனங்களால் பார்க்கப்படுகின்றனர், அதுவும் நல்ல செல்வச்செழிப்பான 
குடும்பங்கள் என்றால் கேட்கவே தேவையில்லை அவர்களது பார்வையிலேயே ஒரு தெனாவட்டு குடி கொண்டுவிடும், எனது நிறுவன முதலாளிக்கு இந்தியர்கள் என்றாலே அலர்ஜி ,நான் மட்டும் இந்தியனாக இருந்திருக்க வேண்டும் எப்போதோ வீட்டிற்கு பெட்டியை கட்டியிருப்பேன், தொழிலாளிகளாக வரும் இந்தியர்களை விரும்பும் சிங்கப்பூர் சமூகம் குடியுரிமை,வதிவிட உரிமை பெட்ற இந்திய வம்சாவளியினரை வெறுக்கிறது. அதற்க்கு வலுச்சேர்த்திருக்கிறது இந்த சம்பவம்    

கடவுள் குணமறிந்துதான் கொம்பு கொடுப்பதில்லை என்று கூட சொல்வார்கள் 

 • Like 3
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அதே...

அதே அதே.. 😡

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு/ இந்திய  தொலைக்காட்சிகளில் வரும் தொடர் நாடக வில்லி வேடங்கள் உண்மை போல் இருக்கின்றது

செல்லமே தொடர் மதுமிதா

குமாரசாமி அண்ணா.... நீங்கள், சொல்வது உண்மை.
தமிழ்நாட்டு தொலைக் காட்சிகளில் வரும் வன்மம்,
அந்தக் குடும்பத்து பெண்களிடம்.. அப்படியே பதிந்து விட்டது.
அதனை ஒரு அப்பாவி இளம் தாயிடம், கொடூரமாக... நடந்து கொள்ள வைத்துள்ளது.

அந்தப் பெண்  குளிக்கும் போதும்,  கழிவறைக்குச் செல்லும் போதும்....
கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டது, அருவருப்பின் உச்சம். 😡

இவ்வளவிற்கும்... அந்த வீட்டுக்காரர் காவல் துறையில் வேலை செய்பவராம்.
தனது மனைவியையும், மாமியாரையும் கட்டுப் படுத்தத் தெரியாதவருக்கு...
இந்த உத்தியோகம் பொருத்தமற்றது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

அதனை ஒரு அப்பாவி இளம் தாயிடம், கொடூரமாக... நடந்து கொள்ள வைத்துள்ளது.

அந்தப் பெண்  குளிக்கும் போதும்,  கழிவறைக்குச் செல்லும் போதும்....
கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டது, அருவருப்பின் உச்சம்

அண்ணை அநேகமாக 
இந்தப்பெண் படிப்பறிவற்ற அப்பாவி பெண்போல தான் இருக்க வாய்ப்பிருக்கிறது,
சிங்கையின் தொழிலாளர்களுக்கு ஆதரவான சில சட்ட மூலங்கள் எப்படி தொழிற்படுகிறது என்று தெரிந்திருந்தால்  எஜமானியின் நகம் உடலில் பட்டதற்கே வருடக்கணக்கில் எஜமானியை களி தின்ன வைத்திருக்கலாம், சிங்கைக்கு தொழிலிற்காக வருபவர்கள் இதையெல்லாம் அறிந்திருப்பது அவசியம் 
இங்கு IPA (in principal approval ) கடிதத்தில் குறிப்பிடப்பட்ட சம்பளத்தில் ஒரு வெள்ளி குறைவாக கொடுத்தாலும் முதலாளி அபராதத்துடன் கம்பியென்னும் நிலைக்கு வருவார், எனது நிறுவனத்தில் வீட்டில் கடமை புரிந்த பணிப்பெண்ணிற்கு  அறைந்த குற்றத்திற்காக சிங்கப்பூர் வேலையனுமதியை இரத்துசெய்து அந்தப்பெண்ணிற்கு 5000 வெள்ளி நஷ்டஈடு கொடுக்கவைத்து,இனி எப்போதும் நாட்டிற்குள் வரமுடியாத வாறு கடவுச்சீட்டில் பச்சை குத்தி dependent pass லிருந்த மனைவியையும் சேர்த்து பார்சல் செய்து சொந்த நாட்டிற்கு அனுப்பியது சிங்கப்பூர் அரசு 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே உருவத்தில் சிறிய மியான்மர் பெண்ணை தமிழிச்சிகள் இருவரும் அவருக்கு கொடுக்கும் உணவின் அளவை மேலும் குறைத்து தாக்கி கொடுமைபடுத்தியுள்ளனர் 😡

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அனேகமான இந்தியர்களும், எம்மவர்களும் கூட இப்படித் தான்...!

வாழ்வின் விழுமியங்கள் அனைத்தையும்...இதிகாசப் பெட்டிகளுக்குள் பூட்டி வைத்து விட்டுத் திறப்புகளைத் தொலைத்து விட்டார்கள்!

இந்த இருவருக்கும் கொடுக்கப் போகும் தண்டனையானது ...எல்லா இந்திய வம்சாவளியினருக்கும் மறக்க இயலாத ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பது தான் எனது அவா!

என்ன நடக்கின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!  

 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண் புரிந்த செயல்களை வாசிக்கையில், பெண்ணின் வழக்கறிஞர்கள் இந்த பெண்ணிற்கு postnatal depression என்றுதான் கூறுவார்கள் என நினைத்தேன் அப்படியே ஆகிவிட்டது. 

இந்த பெண்ணிற்கு postnatal depression or obsessive compulsive disorder or insecure behaviours or  whatever.. அதை குணப்படுத்தாமல் இந்த கொலை வரை கொண்டு வந்து நிறுத்தியவர்கள், அந்தப்பெண்ணின் கணவனும் தாயாருமே..மரண தண்டனை கொடுத்தால் எல்லாம் மறந்துவிடும்.. ஆகையால் செய்த குற்றத்தை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படவேண்டும்..

இந்த பெண்ணிற்கு பிறந்த பிள்ளைகளின் உடல்உள வளர்ச்சியில் கூட இது எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என நினைக்கையில் மிகவும் வருத்தத்தை தருகிறது.. 

இறந்த அப்பாவி பெண்ணின் கனவுகள் எல்லாம் வீணாகிவிட்டது.. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கணவர் காவல்துறையில் வேலை பார்ப்பதால் ஒருவகை அதிகார துஸ்பிரயோகமாக தெரிகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது ஆசிய மக்களின்  ஒரு வித  குரோத மனநிலை  என நினைக்கின்றேன்

அதிலும் சிங்கப்பூர் மலேசியாவில்  அதிகம்

அங்கே அநேகமான  வீட்டு வேலைகாரர்களுக்கு முதலாளிகள் போடும்  முதலாவது கண்டிசனே

ஒப்பந்தம்  முடியும்வரை ஊருக்கு  போகமுடியாது

குடும்பத்துடன் தொடர்பு  வைத்துக்கொள்ளக்கூடாது  என்பது  தான்

நாங்கள்  சாப்பிட்ட  முடிய

இவ்வாறு  ஒரு வீட்டு வேலை  செய்யும் பணிப்பெண்ணிடம் என் மனைவி நீங்க சாப்பிட்டு  விட்டீர்களா  என்று  கேட்டதும் அந்த  பெண்ணின்  கண்கணிலிருந்து பொல  பொல  வென்று கண்ணீராக கொட்ட வெளிக்கிட்டு விட்டது (அவரும் தனது குழந்தைக்காகத்தான் வேலைக்கு  வந்திருப்பதாக முதலாளி  சொன்னார்)

விருந்தினராக  போனதால் இதற்கு மேல்  எதுவும்  பேசமுடியவில்லை

ஆனால்  இப்ப நினைத்தாலும் அந்த  கண்ணீர் என் கண்களை  நனைக்கிறது

இதில் முக்கியமான  விடயம் என்னவென்றால் வீட்டு  பெண்களே  அதிகம் கொடுமைப்படுத்துகிறார்கள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

அனேகமான இந்தியர்களும், எம்மவர்களும் கூட இப்படித் தான்...!

 

இப்பவரைக்கும் இருக்கு எம்மவர்களும் சளைத்தவர்கள் அல்ல 

துபாயில் எனக்கொரு சம்பவம்  நடந்தது ஒரு இந்தோனேசியா பெண் என நினைக்கிறன் அவளுக்கும் இதே போல சம்பவங்கள் நடந்ட்கிருக்கும் போல தோன்றியது ஆனால் செய்தது அரபியாக கூட இருக்கலாம் நாங்கள் சென்ற பகுதி அரபிகள் அதிகம் வாழும் பகுதியும் அது .
 நாங்களே வேலை செய்து நொந்து நூலாகி நடந்து போகும் போது ஒரு கட்டிடத்தின் கீழ் இருந்து அழுதாள் புதிதாக வந்திருப்பாள் போல இருக்கிறது  . அள்ளியெல்லாம் கொடுக்க காசில்லை ஒரு ரெக்சியை பிடித்து குறிப்பிட்ட இடத்து போக எவ்வளவு செல்வாகுமென ரைவரிடம் கேட்டு அதற்குரிய பணத்தை கொடுத்து அவளுக்கு மொழி தெரியாது எம்பசியில் இறக்கிவிட சொன்ன நியாபகம் வருகிறது .

 • Like 5
Link to post
Share on other sites

கடந்த சில வருடங்களுக்கு முன் எனக்கு மிகவும் நட்பாக இருநத பிலிப்பீனோ பெண். அவருக்கு கிட்னி பெயிலியரான  நிலையில் தனது தங்கை ஒருவரை வைத்திரின் உதவிக் கடிதத்தோடு இங்கு அழைத்து இருந்தார்..கிட்டத் தட்ட ஓராண்டு அந்த சகோதரியை படுத்தியபாடு கொஞ்ச நஞ்சமல்ல.கூடுதலான நேரம் குளியல் அறையில் இருந்து தான் போண் எடுத்து அழுவா பிலிப்பினோவில் இருந்து வந்த சகோதரி.

 வந்தவருக்கு ஆங்கில அறிவு இருந்தபடியால் தமக்கையின் ஆய்க்கினைகளை மீறி வெளியில் இரவா பகலா வேலைக்கு போய் ரிக்கற்றைப் போட்டுக் கொண்டு தன் நாட்டுக்கே போய் விட்டார்..இப்போ இங்கே இருக்கும் சகோதரி யாரோடும் தொடர்பில்இல்லை.இப்படியானவர்களோடு தொடர்பில் இருப்பதை விட விலகுதல் நன்று தானே.இப்படி எவ்வளவு நடக்கிறது..

 • Sad 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • Tube - மென் சக்கரம் Tyre - வன் சக்கரம் Front wheel - முன் சக்கரம் Rear wheel (or) Back wheel - பின் சக்கரம் Free wheel - வழங்கு சக்கரம் Sprocket - இயக்குச் சக்கரம் Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம் Training wheels - பயிற்சிச் சக்கரங்கள் Hub - சக்கரக் குடம் Front wheel axle - முன் அச்சுக் குடம் Rear wheel axle - பின் அச்சுக் குடம் Rim - சக்கரச் சட்டகம் Gear - பல்சக்கரம் Teeth - பல் Wheel bearing - சக்கர உராய்வி Ball bearing - பந்து உராய்வி Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு Cone cup - கூம்புக் கிண்ணம் Mouth valve - மடிப்பு வாய் Mouth valve cover - மடிப்பு வாய் மூடி Chain - சங்கிலி Chain link - சங்கிலி இணைப்பி Chain pin - இணைப்பி ஒட்டி Adjustable link - நெகிழ்வு இணைப்பி Circlip - வட்டக் கவ்வி Chain lever - சங்கிலி நெம்பி Frame - சட்டகம் Handle bar - பிடி செலுத்தி Gripper - பிடியுறை Cross Bar - குறுக்குத் தண்டு Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு Dynamo - மின் ஆக்கி Head light - முகப்பு விளக்கு Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி Rearview Mirror - பின்காட்டி Back Carrier - பொதி பிடிப்பி Front Carrier Basket - பொதி ஏந்தி Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள் Side box - பக்கவாட்டுப் பெட்டி Stand - நிலை Side stand - சாய்நிலை Speedo meter (Odo meter) - வேகம்காட்டி Fender - வண்டிக் காப்பு Derailleurs - பற்சக்கர மாற்றி Peg - ஆப்பு Air pump - காற்றழுத்தி Shock absorber - அதிர்வு ஏற்பி Break - நிறுத்தி Break shoes - நிறுத்துக்கட்டை Break wire - நிறுத்திழை Break Lever - நிறுத்து நெம்பி Front break ankle - முன் நிறுத்துக் கணு Back break ankle - பின் நிறுத்துக் கணு Disc brake - வட்டு நிறுத்தி Break connecting links - நிறுத்தி இணைப்பிகள் Pedal - மிதிக்கட்டை Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை Pedal cover - மிதிக்கட்டை உறை Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ் Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு Spindle - சுழலும் மிதிக்கூடு Seat (Saddle) - இருக்கை Seat Post - இருக்கை தாங்கி Baby Seat - குழந்தை இருக்கை Seat cover - இருக்கை உறை Leather Seat - தோல் இருக்கை Cushion seat - மெத்திருக்கை Washer - நெருக்கு வில்லை Tension washer - மிகுநெருக்கு வில்லை Screw - திருகுமறை Nut - ஆணி இறுக்கி Bolt - திருகாணி Spring - சுருள் Bush - உள்ளாழி Lever - நெம்பி Rust - துரு Balls - பொடிப்பந்துகள் Crank - வளைவு அச்சு Rivet - கடாவு ஆணி Axle - அச்சு Spring chassis - சுருள் அடிச்சட்டம் Nose spring - சுருள் முனை Fork - கவை Horn - ஒலியெழுப்பி Cable - கம்பியிழை Knuckles - மூட்டுகள் Clamp - கவ்வி Ring - வளையம் Hole - ஓட்டை Hook - கொக்கி Spokes - ஆரக்கால்கள் Spoke guard - ஆரக் காப்பு Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி Spanner - மறைதிருகி Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி Screw driver - திருப்புளி Tools - கருவிகள் Pocket tools - பையடக்கக் கருவிகள் Front Mud Guard - முன் மணல் காப்புறை Back mud guard - பின் மணல் காப்புறை Chain Guard - சங்கிலிக் காப்புறை Dress Guard - ஆடைக் காப்புறை Gloves - கையுறை Head set - தலைக்கவசம் Wrist band - மணிக்கட்டுப் பட்டை Bell - மணி Bell lever - மணி நெம்பி Bell cup - மணி மூடி Bell spring - மணிச் சுருள் Bell frame - மணிச் சட்டகம் Bell rivet - மணி கடாவி Bell fixing clamp - மணிப் பொருத்தி Lock - பூட்டு Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி Key - சாவி Key chain - சாவிக் கொத்து Chain lock - சங்கிலிப் பூட்டு Inner wire - உள்ளிழை Electrical parts - மின்னணுப் பாகங்கள் Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால் Spokes with balls - மணிகோத்த ஆரக்கால் Extra fittings - கூடுதல் பொருத்திகள் Foot rest - கால்தாங்கி Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி Water bottle - தண்ணீர்க் குடுவை Racing cycle - பந்தய மிதிவண்டி Mini cycle - சிறு மிதிவண்டி Mountain cycle - மலை மிதிவண்டி Foldable cycle - மடக்கு மிதிவண்டி Wheel chair - சக்கர நாற்காலி Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி High-tech bike - அதிநுட்ப வண்டி Kid cycle - சிறுவர் மிதிவண்டி Ladies cycle - மகளிர் மிதிவண்டி Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி Cycle with motor - உந்து மிதிவண்டி Inflating - காற்றடித்தல் Patch - பட்டை Patching - பட்டை வைத்தல் Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை Over hauling - முழுச் சீரமைத்தல் Painting - வண்ணம் தீட்டல் Lubrication - எண்ணெய் இடல் Wheel bend removal - கோட்டம் எடுத்தல் Puncture - துளை Puncture closure - துளைமூடல் Puncture lotion - துளைமூடு பசை Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்) Wooden mallet - மரச் சுத்தி Grease - உயவுப் பசை Lubricant oil - உயவு எண்ணெய் Waste oil - கழிவு எண்ணெய் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -
  • பவுத்தம் ஆண் பெண் இடையே பால் அடிப்படையிலான வேறுபாட்டை அகற்றியது. ஆண்களைப் போலவே பெண்கள் பவுத்த சங்கத்தில் துறவிகளாகச் சேர்க்கப் பட்டார்கள். பவுத்தம் மனிதனது வினைக்கு அவனே காரணம் என்று சொல்கிறது. நல்லது செய்தால் நல்வினைப் பயன் கிடைக்கும் என்றும் தீயது செய்தால் தீவினைப் பயன் சேரும் என்று சொல்கிறது. புத்தர் ஞானம் பெற்றபி;ன்னர் நான்கு வாய்மைகளை போதித்தார். முலாவது வாய்மை - பிறத்தல் துன்பம். பிணி துன்பம். தளர்ச்சி துன்பம். மரணம் துன்பம். வேண்டாவற்றோடு பிணிக்கப்பட்டிருப்பதும், வேண்டுவனவற்றிலிருநது பிரிக்கப்பட்டிருப்பதும் துன்பம். விழைவு கூடாமை துன்பம். சுருங்கக் கூறின் உருவம், நுகர்ச்சி, குறிப்பு, பாவனை உள்ளவறிவாகிய விஞ்ஞானம் என்ற ஐந்தும் துன்பம் தருவன. ஆதலால் பிக்குகளே துன்பம் உளது. இரண்டாவது வாய்மை - இந்தத் துன்பங்களுக்குக் காரணம் பிறப்பீனும் வித்தாகிய அவா அல்லது வேட்கை. சிற்றின்பம் விரும்பும் வேட்கை. உயிர்வாழ விரும்பும் வேட்கை. திருஷ்டி என்ற அழிவுத்தன்மையை வேண்டும் வேட்கை. இந்த மூன்றுவித வேட்கையும் துக்கத்துக்கு காரணம். எனவே துக்க காரணம் உளது. மூன்றாவது வாய்மை - தன்னிடத்தில் உண்டான ஆசையை அகற்றினால் துக்க நிவாரணம் உளது. நான்காவது வாய்மை - இந்த துக்க நிவாரணத்துக்கு வழியுண்டு. அதுவே அட்டாங்க துக்க நிவாரண மார்க்கம். அவையாவன நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளதோர் தலைப்பாடு. (இது பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் சாத்தனார் எழுதிய மணிமேகலை காப்பியத்தைப் படிக்கவும்) எல்லாம் வல்ல படைப்புக் கடவுள் ஒருவர் உண்டு என்று பவுத்தம் நம்புவதில்லை. உலகைக் கடவுள் படைத்தார் எனக் கூறுவது கடவுளை யார் படைத்தார் என ஒருவரைக் கேட்க வைக்கும். அண்டத்தைப் படைத்தவர் கடவுள் என்பதை புத்தர் ஒப்புக் கொண்டாரா என்பது கேள்வி. 'இல்லை' என்பதே பதில். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. படைப்பு கடவுளின்றியே உலகம் இருக்கிறது என்பது புத்தரின் வாக்கு. பவுத்தம் சிந்தித்தலை, கேள்வி கேட்பதை மற்றும் பகுத்தறிவை ஊக்குவிக்கிறது. 'என்னால் நிருவாணத்துக்குரிய வழியைத்தான் காட்ட முடியும். அந்தப் பாதையில் நடப்பது உங்கள் பொறுப்பு' என்றார் புத்தர். அரண்மனையில் பிறந்து பட்டாடை உடுத்தி, பொன்னாபரணம் அணிந்து, பால், பழம் பருகி, அறுசுவை விருந்துண்டு, பன்னீரில் கொப்பளித்து, மஞ்சத்தில் படுத்துறங்கி, ஆசை மனையாளோடும், அன்புக் குழந்தையோடும் ஆடிப்பாடி அரச வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தன் அவற்றைத் துறந்து, மஞ்சள் அங்கி அணிந்து, பிச்சா பாத்திரம் ஏந்தி, வீதிதோறும் நடந்து, வீடுதோறும் பிச்சை எடுத்து வாழ்ந்தார். பவுத்தம் போல் அல்லாது இந்து மதத்தில் சாதி புரையோடிப் போய்க் கிடக்கிறது. அது அந்த மதத்தை அரித்துக் கொண்டிருக்கிற புற்று நோய். தொட்டால் தீட்டு, நிழல் பட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு இப்படி எல்லாமே தீட்டுத்தான். இந்தியாவில் 101 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 85 விழுக்காடு இந்துக்கள். அதில் சுமார் 20 விழுக்காடு தலித் மக்கள். எனவே இப்போது நடைபெறும் மதமாற்றம் மழைத் தூவானம் போல் தெரியலாம். ஆனால் அது பெரு மழையாகப் பெய்யலாம்.. ஏற்கனவே மும் மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள், இந்திரன், சந்திரன், வருணன், அக்னி, பிரகஸ்பதி, கின்னரர், கிம்புருடர் என வாழ்ந்த பரந்த கண்டம் சுமார் 700 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டுக் கிடந்ததால் அது மூன்று துண்டாக வெட்டப்பட்டு விட்டது. இதில் இரண்டு துண்டுகளில் இஸ்லாமிய குடியரசுகள். எஞ்சிய இந்தியாவில் 85 விழுக்காடு மட்டும் இந்துக்கள். ++++++++++++++++++ +++++++++++++ ++++++++++ +++ +
  • யாழில், உயிரிழந்த முதியவருக்கு... கொரோனா – இறுதிச் சடங்கில் பதற்றம்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக அன்டிஜன் பரிசோதனை  செய்த போது கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறியப்பட்டுள்ளது. எனினும் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. முதியவர் அன்றைய தினமே 7ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து 9ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை முற்பகல் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சடலம் நேற்று நண்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் நேற்று மாலை வெளியாகிய பிசிஆர் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனால் முதியவரின் உடலை சுகாதார முறைப்படி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1214177
  • கொரோனா – நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்! கொரோனா பாதிப்பு  காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு காலமானார். கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு – குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி நடிகர் பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். அதிமுக கட்சியின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://athavannews.com/2021/1214174
  • மூன்றாம் வகுப்பு, படிச்ச... மோடியே பிரதமரா இருக்கிற நாடுப்பா இது!                  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.