கருத்துக்கள உறவுகள் பிழம்பு 383 பதியப்பட்டது February 25 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது February 25 கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மக்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கும் வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்ததாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்திருந்தார். கொரோனா தொற்றால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய தொழில்நுட்ப நிபுணர்கள் குழு அனுமதியளித்துள்ள நிலையிலேயே வர்த்தமானி இன்று இரவு வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றினால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி வெளியானது | Virakesari.lk Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் alvayan 194 Posted February 26 கருத்துக்கள உறவுகள் Share Posted February 26 அப்ப இனி முசுலிம் அரசியல் வாதிகளுக்கு அரசியல் செய்ய விசயம் இல்லை.... Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் கிருபன் 4,466 Posted February 26 கருத்துக்கள உறவுகள் Share Posted February 26 தொற்றால் இறப்போரின் உடலை அடக்கம் செய்ய அனுமதித்து வர்த்தமானி! ‘கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி இன்று (25) சற்றுமுன்னர் 11 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக வர்த்தமானி அச்சுக்கு அனுப்பப்பட்டது என்று தமக்கு சுகாதார அமைச்சர் அறிவித்ததாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்த நிலையில் குறித்த வர்த்தமானி தற்பாேது வெளிவந்துள்ளது. சில நிபந்தனைகளுடன் இவ்வாறு சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க, கொரோனா தொற்றால் இறப்போரின் சடலங்களை அகற்றுவது தொடர்பான நிபுணர்கள் குழு இன்று மாலை கூடிய போது தீர்மானிக்கப்பட்டது. இஸ்லாமிய நாடுகள் இந்த விடயத்தை ஐ.நாவுக்கு கொண்டு வந்த இரு நாட்களில் இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. ஐ.நாவினதும் இஸ்லாமிய நாடுகளினதும் நல்லெண்ணத்தை பெற இந்த விடயத்தை அரசு பயன்படுத்தியுள்ளதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். https://newuthayan.com/தொற்றால்-இறப்போரின்-உடலை/ Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் அக்னியஷ்த்ரா 909 Posted February 26 கருத்துக்கள உறவுகள் Share Posted February 26 (edited) 3 hours ago, கிருபன் said: தொற்றால் இறப்போரின் உடலை அடக்கம் செய்ய அனுமதித்து வர்த்தமானி! ‘கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி இன்று (25) சற்றுமுன்னர் 11 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக வர்த்தமானி அச்சுக்கு அனுப்பப்பட்டது என்று தமக்கு சுகாதார அமைச்சர் அறிவித்ததாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்த நிலையில் குறித்த வர்த்தமானி தற்பாேது வெளிவந்துள்ளது. சில நிபந்தனைகளுடன் இவ்வாறு சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்க, கொரோனா தொற்றால் இறப்போரின் சடலங்களை அகற்றுவது தொடர்பான நிபுணர்கள் குழு இன்று மாலை கூடிய போது தீர்மானிக்கப்பட்டது. இஸ்லாமிய நாடுகள் இந்த விடயத்தை ஐ.நாவுக்கு கொண்டு வந்த இரு நாட்களில் இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. ஐ.நாவினதும் இஸ்லாமிய நாடுகளினதும் நல்லெண்ணத்தை பெற இந்த விடயத்தை அரசு பயன்படுத்தியுள்ளதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். https://newuthayan.com/தொற்றால்-இறப்போரின்-உடலை/ பொலிகண்டி டீமை இனி பொத்துவில் திரும்பிக்கூட பார்க்கமாட்டினம் ....ஐயோ பாவம், தேங்காய்ப்பூ பஞ்சாய்ப்பறந்து போட்டு ஜெனீவாவை வைத்து வருஷக்கணக்காக தமிழர்கள் முக்கிக்கொண்டிருக்க ஒரு கூட்டத்தொடரை வைத்தே தங்களது கோரிக்கையை நிறைவேற்றி ஐஸ் கிரீம் சாப்பிட்டுக்கொண்டு செல்கிறது முஸ்லீம் தரப்பு,இந்திய முதுகில் சவாரிசெய்து நட்டாத்தில் விடப்பட்ட தேசிக்காய் வால்களோ கண்ணிரண்டும் அவிஞ்சுபோய் பே பே என்று பேந்த பேந்த முழிக்கினம் Edited February 26 by அக்னியஷ்த்ரா Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் பிழம்பு 383 Posted February 26 Author கருத்துக்கள உறவுகள் Share Posted February 26 இலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு (எம்.மனோசித்ரா) கொவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்து , சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் வரவேற்றுள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இன்று டுவிட்டர் பதிவொன்றை இட்டு இந்த தீர்மானம் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளனர். ' கொவிட் 19 ல் இறப்பவர்களுக்கு அடக்கம் செய்ய அனுமதிக்கும் இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த தீர்மானத்தை எடுத்தமைக்காக இலங்கை தலைமைத்துவத்திற்கு நன்றி கூறுகிறேன்.' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க தூதுவர் டெப்லிட்ஸ் தனது டுவிட்டர் பதிவில் , ' வரவேற்கத்தக்க செய்தி. நீண்ட கால தாமதம். தமது உறவுகளை இழந்தவர்களை துன்பப்படுத்துவதால் குடும்பங்களின் துயரங்களை சேகரிப்பதை தவிர்ப்பதற்காக இந்த மாற்றம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். பின்னர் அந்த தீர்மானம் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போது அமெரிக்க தூதுவர் அது தொடர்பில் கவலையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு | Virakesari.lk Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் satan 644 Posted February 26 கருத்துக்கள உறவுகள் Share Posted February 26 ஜெனீவா தீர்மானத்தை முன்னிட்டு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு, பொறுத்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமரை வரவழைத்து போடப்பட்ட நாடகம். அடுத்த கூட்டத்தொடரில் பாராட்டுடன் கால அவகாசம் பெறும் நோக்கில் அரங்கேறும் நாடகம். இவர் நாடகம் எதுவரை ரசிக்கப்படும்? தமிழர் பிரிந்து நின்று முண்டு கொடுக்கும்வரை. Quote Link to post Share on other sites
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.