-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
அதிக அளவு பூக்கள் பூத்தும்... மகரந்த சேர்க்கை இல்லாததால், முருங்கை உற்பத்தி பாதிப்பு. -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, மீளமைக்கப்பட்டு இன்று.. திறக்கப்பட்டது! யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் கண்டனங்கள் வெளிவந்திருந்தன. இந்நிலையில், கடும் அழுத்தத்தையடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வந்ததுடன் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா கடந்த ஜனவரி 11ஆம் திகதி தூபிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். தற்போது நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவடைந்ததை தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1211720 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்! தமிழகத்தில் மே மாதம் முதலாம் திகதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில், மே மாதம் முதலாம் திகதி முதல் தடுப்பூசியை வழங்குவதற்காக இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் அனைத்து தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள் என அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1211722 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு! இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வைத்தியர் பால் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகள் மத்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர்களிடம் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் பயோடெக்னோலஜி துறையுடன் சேர்ந்து உருவாக்கப்படும் இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடவடிக்கை விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கொவிஷீல்ட் மற்றும் கொவேக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1211652
Recommended Posts