Jump to content

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ்ப் பெண் உண்ணாவிரதப் போராட்டம்


Recommended Posts

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ்ப் பெண் உண்ணாவிரதப் போராட்டம்

(சி.எல்.சிசில்)

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்ப் பெண் ஒருவர் லண்டனில் இன்று சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

ambikai-300x199.png
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பேரவையின் 46ஆவது மனித உரிமைகள் கூடடத் தொடரில், பிரிட்டனால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல், சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்து சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை லண்டனில் ஆரம்பமாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் ‘அம்பிக்கை செல்வகுமார்’ என்ற பெண்
மணியே இந்தப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கின்றார்.

சர்வதேச இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்காடு மையத்தின்
பணிப்பாளராக அம்பிகை பணியாற்றுகின்றார். அத்துடன், தொடர்ச்சியாக
தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் நோக்கத்துடன் செயற்
பட்டு வருகிறார்.

தன்னால் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று கோரிக்கைகளில் ஒன்றாவது
நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் அவர், அதற்கான
சாத்தியங்கள் உள்ளன என்ற நம்பிக்கையுடனேயே இந்தப் போராட்டத்தை தான்
ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார்.

 

Thinakkural.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள ‘தமிழ்பெண்’ - உலகத் தமிழர்களிடம் உருக்கமான வேண்டுகோள்

பிரித்தானியாவில் சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள அம்பிகை உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வேண்டுகோள் வருமாறு,

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம்

நான் திருமதி அம்பிகை செல்வகுமார் தற்போது பிரித்தானியாவில் லண்டனில் வசித்து வருகின்றேன்.

ஈழத்தமிழர்களுக்கு விடுதலை, நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக எமது குடும்பம் நீண்டகாலமாகவே சனநாயக களத்திலே எம்மால் முடிந்த பணிகளை நெஞ்சுக்கு நீதியாக குரல் கொடுத்து வந்திருக்கிறது.

அந்தவகையில் தற்போது ஜெனிவாவில் ஜ.நா மனித உரிமைப் பேரவையில் மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு கால அவகாசத்தை வழங்கி ஸ்ரீலங்காவின் நீதியற்ற உள்ளூர் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்து போகச் செய்யும்.

அதேவேளை தற்போது தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை ஸ்ரீலங்கா பேரினவாத அரசு தொடர்வதற்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் நான் வாழும் பிரித்தானியா நாட்டின் தலைமையில் ஸ்ரீலங்கா குறித்து இணைத்தலைமை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன்வைக்கவுள்ள செய்தி உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும், மனித நேயத்தை நேசிக்கும் அனைவருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக தாயகத்தில் வீதிகளில் இறங்கி நீதிக்காக போராடிவரும் எமது தாய்மார்கள், குழந்தைகள், மற்றும் குடிசார் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எமது உறவுகள் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

எனவே எமது தாய் நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மனிதநேயத்தோடு நான், சாகும் வரையிலான இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை நாளை 27 மாசி மாதம் 2021 ஆண்டு மதியம் 12 மணிக்கு தொடங்கவுள்ளேன்.

எனது இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் பயணத்திற்கு தாயகத்திலும், தமிழகத்திலும், புலம் பெயர்ந்த தேசங்களிலும் வாழும் நான் உயிருக்கு நிகராக நேசிக்கும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக என்னை ஏற்று நீங்கள் அனைவரும் அனைத்துலக சமுகத்தை நோக்கி தீவிரமாக குரல் கொடுத்து இந்தப் போராட்டத்திற்கு முழுமையாக வலுச்சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

நிச்சயம் எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாம் அனைவரும் ஒன்று பட்டு குரல் கொடுப்போம் என்ற வேண்டுகையை உரிமையோடு உங்கள் குடும்பத்தில் ஒரு மகளாக, சகோதரியாக அனைவரிடத்திலும் சிரம் தாழ்த்தி வேண்டிக்கொண்டு எனது பயணத்தை தொடங்குகின்றேன்.

நான் பெரிது நீ பெரிது என்றில்லாது நாடு பெரிது எம் இனவிடுதலை பெரிது என்பதை மனதில் நிறுத்தி நம் நாட்டிற்கான, மக்களுக்கான விடுதலை நோக்கி எம் மனச்சாட்சிக்கும் பொதுநீதிக்கும் கட்டுப்பட்டு சனநாயக வழியில் தொடர்ந்து பயணிப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் - என்றுள்ளது.

அத்துடன் #Hunger4truth_justice எனும் ஹேஸ்டாக்கை பயன்படுத்தி நீதிக்கான போராட்டத்தில் இணையுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

https://www.ibctamil.com/uk/80/160512

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவிடம் நீதிகோரும் லண்டன் போராட்டத்துக்கு ஆதரவாக நல்லூரிலும் போராட்டம்

February 28, 2021

21.jpg

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பிரிட்டனில் வாழும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்த நிலையில் அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நல்லூரில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடன் வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள் இருவர் என ஐந்து பேர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் உள்பட 4 கோரிக்கைகளை முதன்மையாக முன்வைத்து அம்பிகை செல்வகுமார் சாகும்வரை உணவுதவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்தார்.

உலகத்தமிழர்கள் அனைவரும் வேற்றுமைகளின்றி ஆதரவு அளிக்க வேண்டு என அம்பிகை செல்வகுமார் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையிலேயே நல்லூரில் உணவுதவிர்ப்புப் போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது #ஐநா #லண்டன் #போராட்டம் #இனப்படுகொலை #அம்பிகை_செல்வகுமார்
 

 

https://globaltamilnews.net/2021/157449/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

தனியொருவராக அம்பிகை அம்மையார் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆதரவு கொடுத்து, இனத்திற்கான கோரிக்கைகள் வெல்லத் துணைநிற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரித்தானியாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழரான அம்மையார் அம்பிகை அவர்கள், இலங்கையை இனப்படுகொலை குற்றத்திலிருந்து காப்பாற்றும் வகையில், ஆதரவான தீர்மானம் கொண்டுவருவதைப் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கைவிட்டு, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்தி விசாரிக்கும் வகையில் தீர்மானம் கொண்டுவரவேண்டுமென வலியுறுத்தி, சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதை அறிகிறேன். நீதிக்கான அவரது அறப்போராட்டம் வெல்ல வேண்டும்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக இனப்படுகொலைக்கு நீதிகேட்டுப் போராடும் தமிழினத்திற்கு மாபெரும் துரோகத்தைப் புரியும் வகையில் ஐநா மனித உரிமைப் பேரவையில் இனப்படுகொலை செய்த இலங்கையைக் காப்பாற்ற மீண்டும் உள்நாட்டிலேயே நீதி விசாரணையைச் செய்து கொள்ளலாம் என்று பிரிட்டன் தலைமையிலான உலக நாடுகள் தீர்மானம் கொண்டுவரவுள்ள செய்தி உலகத் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறத்தின் பக்கம் நின்று நீதியைப் பெற்றுத்தரவேண்டிய நாடுகள், இனப்படுகொலை குற்றவாளிகளையே விசாரிக்கக் கோருவது எவ்வகையில் நியாயமாகும்?

ஏற்கனவே கடந்த பத்தாண்டுகளில் இலங்கை பேரினவாத அரசிடம் உள்நாட்டு விசாரணை ஒப்படைக்கப்பட்டு அதில் அணுவளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதோடு, தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளும், இனவெறி தாக்குதல்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

மீண்டும் ராஜபக்ச அரசாங்கம் அமைந்தவுடன் சிங்கள பேரினவாத செயல்முறைகள் உச்சத்தை அடைந்துள்ளன. இதை நன்கு உணர்ந்த பிறகே, இலங்கை அரசின் இனவெறிச் செயல்பாடுகளை மிக விரிவாகப் பட்டியலிட்டு இலங்கை மீது பன்னாட்டு நீதி விசாரணை நடத்த உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று ஐநா மனித உரிமை பேரவையே கோரியிருந்தது.

ஐநா மனித உரிமை பேரவை முன்னாள் ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்களும் இலங்கை மீதான உலக நாடுகள் பார்வை இனியாவது மாற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

ஆனால் அவற்றைப் புறந்தள்ளி மீண்டும் இலங்கைக்கு விசாரணைக் காலத்தை நீட்டித்துக் கொடுத்து, உள்நாட்டிலேயே விசாரணை நடத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கும் வகையில் உலக நாடுகள் தீர்மானம் கொண்டுவருவது தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை முற்று முழுதாக நீர்த்துப் போகச்செய்யும் நடவடிக்கையே ஆகும்.

இதனால் ஐநா மனித உரிமை பேரவை அறிக்கைக்குப் பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் இனப்படுகொலைக்கு இனியாவது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த தமிழர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமும், வேதனையையும் அடைந்துள்ளனர்.

தமிழினம் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்கும் தற்காலச் சூழலில், அம்மையார் அம்பிகை முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிக மிக நியாயமானவை என்பதை உலகத்தமிழினம் நன்கு உணரும்.

அவரது அறப்போராட்டம் வெல்ல வேண்டும் என்பதே நம் அனைவருடைய விருப்பம்.

தனியொரு பெண்மணியாகத் தீரத்துடன் அம்மையார் முன்னெடுத்துள்ள போராட்டத்தை எண்ணி உள்ளம் பெருமிதம் கொண்டாலும், அதேசமயம் கடந்தகாலக் கசப்பான அனுபவங்கள் கற்றுத்தந்த பாடங்கள் இப்படியொரு கடினமான முடிவை அம்மையார் எடுத்திருக்க வேண்டாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

இதைப்போன்றதொரு அறப்போராட்டத்தில்தான் அண்ணன் திலீபனையும், அன்னை பூபதி அவர்களையும் நாம் இழந்தோம்.

ஆகவே அம்பிகை அம்மையார் தம்முடைய போராட்ட வடிவத்தை மாற்றவேண்டும் என்று அன்போடு கோருகிறேன்.

இனப்படுகொலைக்கு நீதியைப் பெறவேண்டும் என்ற நோக்கில் தனிமனிதராக அம்மையார் அம்பிகை முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஆதரவு கொடுத்து, இனத்திற்கான கோரிக்கைகள் வெல்லத் துணைநிற்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
 

https://www.ibctamil.com/india/80/160552?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டம்!

AdminFebruary 28, 2021

பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பெண்.

FB_IMG_1614504169881.jpg?resize=640%2C48

அம்பிகை செல்வகுமார் என்ற தமிழ்ப் பெண்மணி நேற்று 27ஆம் திகதி சனிக்கிழமை மதியம் 12 மணியில் இருந்து சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

FB_IMG_1614504001700.jpg?resize=640%2C48

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மீண்டும் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கி இலங்கையின் நீதியற்ற உள்ளூர் பொறிமுறைக்குள் தமிழ் மக்களின் நீதியை முழுமையாக நீர்த்துப் போகச் செய்யும் அதேவேளை தற்போது தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை இலங்கை பேரினவாத அரசு தொடர்வதற்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையில் இலங்கை குறித்து இணைத் தலைமை நாடுகள் இணைந்து தீர்மானத்தை முன் வைக்கவுள்ள செய்தி உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கும், மனித நேயத்தை நேசிக்கும் அனைவருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக தாயகத்தில் வீதிகளில் இறங்கி நீதிக்காக போராடிவரும் எமது தாய்மார்கள், குழந்தைகள், மற்றும் குடிசார் அமைப்புகள், தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எமது உறவுகள் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அம்பிகை, எமது தாய் நிலத்தில் நீதிக்காக ஏங்கித் தவிக்கும் எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மனித நேயத்தோடு சாகும் வரையிலான இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை தான் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றார்.

FB_IMG_1614504166285.jpg?resize=640%2C48

 

 

http://www.errimalai.com/?p=61699

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழில் போராட்டம்

 
IMG_2918-696x322.jpg
 42 Views

இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூரில் சுழற்சிமுறை உணவுதவிற்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

PHOTO-2021-02-27-19-29-34.jpg

இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார் என்பவர் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

IMG_2918.jpg

இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

dbb9b278-6799-4966-b113-4849eb03729b.jpg

இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூரில் சுழற்சிமுறை உணவுதவிற்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் வேலன் சுவாமிகள், யாழ் மாவட்ட குரு முதல்வர், மதகுருக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்துகொண்டனர்.

 

https://www.ilakku.org/?p=43345

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிட்டத் தட்ட ஒரு மாதத்திற்கு முன் (March 19) வந்த தீர்ப்பை இது வரை எந்தத் தமிழ் ஊடகமும் வெளியிடாமல், ஆதவன் கூட தாமதமாகத்தான் வெளியிட்டு இருப்பதன் மர்மம் புரியவில்லை. சும்மா செய்திகளுக்கே இந்த யூ ரியூப் காணொளி தயாரிப்பவர்கள் சலங்கை கட்டி ஆடுவார்கள். அவர்களும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள். 😂
    • இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைத்தவர்கள் அல்ல மனித நேய விடயங்களில்....ஆனால் உலக ஆளுமை இந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள்/இஸ்லாமிய சக்திகளின் போவதை விட அமெரிக்காவிடம் இருப்பது சிறந்தது ...ஒரளவுக்கு மனித நேயம் கடைப்பிடிக்கப்படும்
    • கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர். தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣. செய்தி உண்மைதான். https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/  
    • ரஷ்சியா பாவிக்கிற அதே இராணுவ தந்திரத்தை தான் ஈரானும் பாவித்திருக்கிறது. தெரியப்பட்ட இலக்கு சரியாக தாக்குப்பட கவனக் கலைப்புக்களும் எதிரிக்கு பொருண்மிய செலவைக் கூட்டவல்ல வினைத்திறன் குறைந்த ஆனால் எதிரி சுட்டுவீழ்த்தியே ஆகனும் என்ற கதியிலான உந்துகணைகளையும் ஆளில்லாத தற்கொலை விமானங்களையும் ஏவி இருக்கிறது ஈரான். பிபிசியின் கணிப்புப் படி... ஈரான் ஏவிய வான் வழி இலக்குகளை அழிக்க 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் கரியாகியுள்ளது. ஈரான் ஏவிய மொத்த வான் வழி ஏவுகருவிகள்... இந்த அளவுக்கு பொறுமதியானவை அல்ல.  இதே உக்தியை ரஷ்சியா உக்ரைனில் பாவித்தது. ரஷ்சியா ஏவி குப்பைகளை எல்லாம் உக்ரைனின் விவேகமற்ற போர் உக்தியைப் பாவிக்க வைச்சு.. டமார் டமார் என்று வீசி அழிக்க வைச்சு.. அமெரிக்க.. மேற்குலக ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளை வெறுமையாக்கிவிட்டது ரஷ்சியா. இப்போ.. உக்ரைனின் இலக்குகளை தான் நினைச்ச மாதிரிக்கு தாக்கி வருகிறது. உக்ரைன் அதிபர் மீண்டும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நோக்கி கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.  பிரிட்டன் ஒரு படி மேலே போய்.. எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு பதில் உயர் தொழில்நுட்ப லேசர் ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆக ரஷ்சியா ஏவிய பல குப்பைகள்... எதிரிக்கு அழிவை விட.. செலவீனத்தைக் கூட்டுவதே நோக்காக கொண்டிருந்திருக்கிறது. 
    • பெல்ஜியத்தை சேர்ந்த Tim tense  என்ற  இந்த யூருப்பர் கடந்த வருடமும் இலங்கை சென்று பல வீடியோக்களை தனது யூருயூப்பில் வெளியிட்டிருந்தார். இவ்வருடமும் சென்றுருந்தார். பெரும்பாலான வீடியோக்களில் ஶ்ரீலங்காவையும் அந்நாட்டு மக்களின் hospitality யையும் புகழ்ந்தே உள்ளார்.  ஶ்ரீலங்கா சுற்றுலாவை மேற்குலகில் பிரபல்யப்படுத்தியே உள்ளார்.    இந்த வர்த்தகர் தொடர்பான விடியோவைக் கூட Avoid this man in Kaluthura என்ற தலைப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு பதிவாகவே வெளியிட்டுள்ளார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.